புதன், 25 செப்டம்பர், 2013

Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி?

எமது முந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம் பற்றியும், உட்பிரிவுகள் பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தோம். அதனை இங்கு பார்க்க.

Mutual Fund : ஒரு அறிமுகம்
Mutual Fund: இத்தனை உட்பிரிவுகள்

இனி அடுத்த பிரச்சினை என்னவென்றால் எப்படி தேர்ந்தெடுப்பது?. சில சமயங்களில் அதிகப்படியான தகவல்கள் அல்லது நிறைய வாய்ப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும். Mutual Fundல் இது சரியானது.


ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் Mutual Fund எண்ணிக்கை பத்துக்குள்ளாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது நூறைத் தாண்டியிருக்கும். இதில் ஒன்றை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.

யப்பா..இத்தனை Mutual Fund ஆஆஆ?

முதலில் நிறைய ஏஜெண்ட்கள் சொல்வதை அப்படியே நாம் நம்ப வேண்டாம். அவர்கள் சொல்லிய கருத்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இணையத்தில் உள்ள தளங்களில் நல்ல சரி பார்த்து கொள்ளுங்கள்.

Mutual Fundல் உறுதியாக நிலையான வருமானம் கிடைக்கும் என்று. கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டாம். இதுவும் ஒரு வகையில் பங்கு சந்தை சார்ந்த முதலீடே. அதனால் சந்தைக்கேற்ப லாபங்களும் மாறலாம்.


அதன் பிறகு உங்கள் தேவை என்ன என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். ஒருவர் வருடத்திற்கு 50% கூட லாபம் எதிர் பார்க்கலாம். ஆனால் அதற்கான "RISK" பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். சில சமயங்களில் 50% குறையவும் செய்யலாம்.
அதனால் உங்களை நோக்கம் என்ன என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிடுங்கள்.

1) லாபம்: 
குறைந்த லாபம் (1௦~15%)
இவர்களுக்கு ஏற்றது "Debt Fund"

மத்திம லாபம் (20~25%)
இவர்களுக்கு ஏற்றது "Balanced Fund"

அதிக லாபம் (30~35%)
இவர்களுக்கு ஏற்றது "Bluechip fund", "Index Fund" மற்றும் "Midcap fund"

3) பயன்
வரி சேமிப்புக்கு?
"ELSS Tax Saving Funds" தேர்ந்தெடுக்க.

வழமையான வருமானம் (regular income)?
"Dividend" முறையைத் தேர்ந்தெடுக்க.

நீண்ட கால திட்டமிடல்?
"Growth" முறையைத் தேர்ந்தெடுக்க.

2) காலம்: 
நீண்ட காலம்(,10 வருடம்)
இவர்கள் கொஞ்சம் RISK எடுக்கலாம். காலத்தோடு சேர்ந்து RISK சமநிலைப்படுத்தப்படும்..

மத்திம காலம்(,5 வருடம்)
இவர்கள் "Medium RISK" எடுக்கலாம்.

குறுகிய காலம், (2~3 வருடம்)
இவர்கள் குறைந்த RISK எடுக்கலாம்.

4)எப்படி கட்டப் போகிறீர்கள்?
ஒரே தவணை
இதற்கு "Long term saving fund" தேர்ந்தெடுக்கலாம்.

மாதந்தோறும்
இதற்கு "Systemtic Investment Plan (SIP)" தேர்ந்தெடுக்கலாம்

இப்பொழுது எந்த வகை "Mutual Fund" வாங்கலாம் என்று முடிவு எடுத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் ஒவ்வொரு வகையிலும் பல வங்கிகள், பல நிறுவனங்கள் "Mutual Fund" வெளியுட்டள்ளன. அவற்றில் ஒன்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?.

சரி..இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடர்ச்சியினை இங்கு பார்க்கலாம்..

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

13 கருத்துகள்:

 1. பயனுள்ள அருமையான பதிவு
  அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக
  சுருக்கமாகச் சொல்லிப்போவது கூடுதல் சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்கள் கருத்துகள் மிகுந்த உற்சாகம் கொடுக்கிறது. நன்றி!

  பதிலளிநீக்கு
 3. மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுப்பது எனக்கு எப்போதும் குழப்பமானது. உங்கள் பதிவு அதைத் தெளிவாக்குகிறது. தொடரின் இறுதியில் நீங்களே சில நல்ல ஃபண்ட்களை பரிந்துரைக்கவும்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பரே! கண்டிப்பாக தொடரின் இறுதியில் சில ஃபண்ட்களை பரிந்துரை செய்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. Your way of telling everything in this piece of writing is in fact nice, all be capable of effortlessly know
  it, Thanks a lot.

  My weblog: medical coding jobs from home

  பதிலளிநீக்கு
 6. I drop a comment when I especially enjoy a article on a blog or
  if I have something to add to the conversation.

  Usually it is caused by the sincerness communicated
  in the post I read. And on this article "Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி?".
  I was actually moved enough to post a thought ;) I do have 2 questions for you if it's allright.

  Could it be simply me or do a few of the comments look as if they
  are coming from brain dead folks? :-P And, if you are posting
  on other places, I would like to keep up with everything fresh you have to post.
  Would you list all of your community pages like your twitter feed,
  Facebook page or linkedin profile?

  Here is my web blog: http://www.youtube.com/watch?v=DHxd7hX2fzs

  பதிலளிநீக்கு
 7. Thanks for your comments!

  This is our community page list.


  மின் அஞ்சல்:
  muthaleedu@gmail.com

  முகநூல் (Facebook)
  https://www.facebook.com/muthaleedu

  முகநூல் குழுமம் (Facebook Group):
  muthaleedu

  ட்விட்டர்
  https://twitter.com/muthaleedu


  பதிலளிநீக்கு
 8. அடுத்த பாகம் போடுங்க சார்

  Rvi

  பதிலளிநீக்கு
 9. நண்பரே! இன்னும் ஓரிரு நாளில் அடுத்த பாகத்தினை பதிவிடுகிறேன்..தாமதத்துக்கு மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு