Wednesday, August 13, 2014

குறைந்த ரிஸ்க் எடுப்பவர்களுக்காக ஒரு போர்ட்போலியோ சேவை

ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜன் அவர்களின் எச்சரிக்கை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.

அந்தக் கட்டுரையில் பங்குச்சந்தைக்குள் வருபவர்கள் கடினமான காலக் கட்டங்களில் பங்குச்சந்தையில் விலகி இருப்பதை விட, சந்தையுடன் சேர்ந்து நாமும் நமது போர்ட்போலியோ சதவீதங்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.


அப்பொழுது தான் நீண்ட நாளைய பங்குச்சந்தை லாபத்தை நாமும் பகிர முடியும் என்று கூறி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த போர்ட்போலியோ சேவையை பகிர்கிறோம்.

நேற்று ஜூன் மாதம் வெளிவந்த தொழில் துறை தரவுகள் மே மாதத்தை விட மிக நன்றாக அமையவில்லை. இது போக பண வீக்கமும் எதிர்பார்த்த அளவு குறைய வில்லை. ஆனாலும் இரண்டுமே மோசம் இல்லாத அளவு வந்துள்ளது. அந்த வகையில் ஒரு திருப்தி தான்.

Low Risk Means Reduce Risk


ராஜன் எச்சரிக்கையின் காரணமாக நாம் எழுதிய கட்டுரையின் விளைவாக சில மெயில்கள் நமக்கு வந்தன. அதில் பொருளாதார தேக்கத்திலும் அதிகம் பாதிக்காதவாறு ஒரு போர்ட்போலியோவை பரிந்துரை செய்யுமாறு எழுதப்பட்டிருந்தது. இதுவும் ஒரு நல்ல ஐடியா தான்.

இதனால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு பயன்படும் வகையில் ஒரு போர்ட்போலியோ சேவையைக் கொடுக்கிறோம்.

இதன் பெயர் "LOW RISK PORTFOLIO" என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் குறைந்த பீட்டா மதிப்புள்ள பங்குகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும். குறைந்த பீட்டா என்றால், சந்தை நிலவரங்களுக்கேற்ப அதிக அளவில் மாற்றமடையாமல் இருக்கும் பங்குகள்.

உதாரணத்திற்கு, சென்செக்ஸ் ஒரு வருடத்தில் 20% உயர்ந்தால் இந்த பங்குகள் 13% அளவு உயரும். அதே நேரத்தில் சென்செக்ஸ் 20% சரிந்தால் இந்த பங்குகள் 10% அளவு சரியும். இதனால் கொஞ்சம் பாதுகாப்பான பங்குகளாக கருதப்படும்.

ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாதவர்கள், சில நீண்ட கால தேவைகளுக்காக பணத்தை முதலீடு செய்பவர்கள், ஓய்வு பெறும் வயதில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த போர்ட்போலியோ பொருத்தமானதாக இருக்கும்.

இந்த போர்ட்போலியோவில் நுகர்வோர், மருந்து, அரசு துறை சார்ந்த பங்குகளே அதிக அளவில் இருக்கும். இரண்டு வருடங்களில் 35% லாபம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த போர்ட்போலியோ சேவை பயன்படும்.

அடுத்த வாரத்தில் சந்தையில் ஒரு சிறிய தாழ்வுகள் ஏற்படலாம் என்று கணிக்கிறோம். அதனால் ஆகஸ்ட் 24 அன்று போர்ட்போலியோ பகிரப்படும்.

இந்த போர்ட்போலியோவிற்கும் மற்றவை போல அதே கட்டணம் தான். அதாவது, 8 பங்குகள் கொண்ட போர்ட்போலியோ 1200 ரூபாய், 4 பங்குகள் கொண்ட மினி போர்ட்போலியோ 650 ரூபாய்,

இந்த போர்ட்போலியோ வழங்கும் நோக்கம் என்பது எமது வாசகர்களின் ஒவ்வொரு பிரிவினரின் தேவையை பூர்த்தி செய்வதே ஆகும்.

அதனால் மற்ற பங்கு முதலீட்டாளர்களை பதற்றப்பட வேண்டாம். இன்னும் பொருளாதார தேக்கம் ஏற்படக் கூடிய ஒரு சிறு அறிகுறி கூட தெரிய வரவில்லை என்பதே உண்மை.

நடுத்தர மற்றும் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு இந்த போர்ட்போலியோ தேவை இல்லை என்றே கருதுகிறோம். அவர்கள் எமது இதர கட்டண சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் muthaleedu@gmail.com முகவரியில் கேட்டுக் கொள்ளலாம்.

English Summary:
Stock portfolio for low risk takers in share market with mixture of different capital companies. 


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com


No comments:

Post a Comment