வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சரியும் சந்தை, ஆகஸ்ட் முதலீடு போர்ட்போலியோ அறிவிப்பு

பத்தாயிரம் நிப்டி புள்ளிகளை தொட்ட சந்தையில் முதலீடு செய்ய இடம் இல்லாமல் இருந்தது.


பங்குசந்தை பிரபலங்கள் கூற்று படி, உச்சத்தில் இருக்கும் போது விற்றும், கீழ் இருக்கும் போதும் வாங்க வேண்டும்.ஆனால் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தைக்கு உள்ளே வரும் பணமும், பெரிய அளவில் எதிர்மறை காரணிகள் இல்லாததும் சந்தையை கீழே வராமல் தடுத்து வந்தன.

இந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு செபி 331 நிறுவனங்களின் தினசரி பங்கு வர்த்தகத்தை தடை செய்தது ஒரு வித பதற்றத்தை தோற்றுவித்துள்ளது என்றே சொல்லலாம்.

பார்க்க:
331 நிறுவன பங்குகளை தடை செய்த செபி, பாதிப்பு யாருக்கு?

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும், வட கொரியாவும் வாய் சண்டையை விட்டு விட்டு போரில் ஈடுபடுமோ என்ற ஐயமும் உலக அளவில் வந்துள்ளது.

அடுத்து, ஜூன் மாத காலாண்டில் நிதி நிலை கொடுத்து வரும் நிறுவனங்கள் ஓரளவு பரவாயில்லை என்ற விதத்தில் தான் தந்து வருகின்றன. இது நிப்டியின் 10,000 என்ற இலக்கிற்கு ஈடு கொடுக்கும் அளவு என்றே சொல்லலாம்.

இப்படி பல்வேறு காரனங்களிளால் தான் சந்தை தற்போது தொடர்ந்து வீழ்ச்சியில் உள்ளது.

இன்னும் நிப்டி 9700 புள்ளிகளை தொடலாம் என்று கூட சொல்லப்படுகிறது.

ஆனாலும்  இன்னும் நீண்ட கால நோக்கில் இந்திய சந்தை ஒரு முதலீட்டிற்கான வாய்ப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை.

தொடர்ச்சியாக உயரும் சந்தையில் எல்லா தினங்களிலும் பரிந்துரைகளை கொடுத்து கொண்டு இருந்தால் அது சரியான மதிப்பீடலில் இருக்காது.

அதனால் சந்தை சரிவுகளில் மட்டும் இனி போர்ட்போலியோ சேவையினை கொடுக்கலாம் என்று நினைக்கிறோம்.

இந்த நிலையில் நாம் ஆகஸ்ட் மாத போர்ட்போலியோவினை அறிவிக்கிறோம். தற்போதைய பரிந்துரைகள் இன்டெக்ஸ் சாராமல் பங்கு சார்ந்த போர்ட்போலியோவாக இருக்கும்.

தொடர்பான இணைப்பு: முதலீடு கட்டண  சேவை 

கடந்த மாதம் போல் எமது வழக்கமான கட்டணங்களில் இருந்து 10% சலுகையினை அளிக்கிறோம்.

அதாவது
  • முழு போர்ட்போலியோ - 1170 ரூபாய், (வழக்கமான கட்டணம்: 1300 ரூபாய்)
  • மினி போர்ட்போலியோ - 630 ரூபாய்,  (வழக்கமான கட்டணம்: 700 ரூபாய்)
  • பென்னி பங்கு போர்ட்போலியோ - 720 ரூபாய். (வழக்கமான கட்டணம்: 800 ரூபாய்)

போர்ட்போலியோவானது வரும் ஞாயிறு (ஆகஸ்ட் 13) அன்று பகிரப்படும். அது வரை மட்டுமே இந்த சலுகையும் கூட.

இது முழுக்க குறைந்த பட்சம் ஒன்றரை முதல் இரண்டு வருடங்களுக்கு முதலீடு திட்டம் வைத்து இருப்பவர்களுக்கானது. அதனால் டிரேடர்கள் தவிர்க்கவும்!

தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கீழே உள்ள படிவத்தை நிரப்பிக் கொள்ளலாம். அல்லது மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக