வியாழன், 7 டிசம்பர், 2017

BITCOIN நாணயத்தில் முதலீடு செய்யலாமா? (3)

கடந்த பதிவில் BITCOIN நாணயம் எவ்வாறு வேலை செய்கிறது? என்று பார்த்தோம்.


அந்த பதிவில் பிட்காயின் நாணய விவரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.



RBI போன்று சில தன்னிச்சையான அமைப்புகளை மட்டும் சாராமல் பிட்காயின் வைத்து இருக்கும் ஒவ்வோருமே நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

பிட்காயின் என்பது எந்த அரசின் ஆதரவோடும் செயல்படவில்லை. அதனை ஒரு எதிரியாகத் தான் பார்க்கிறார்கள்.

Wikileaks வெளிவந்த உலக நாடுகளின் ரகசியம் வெளிவந்த போது சில சர்வர்களை முடங்க வைத்து தளத்தை செயல்பட விடாமல் தடுத்து விட்டார்கள்.

Torrent மூலம் நாம் படம் டவுன்லோட் செய்து இருப்போம். இதில் ஒவ்வொருவர் திரைப்படம் டவுன்லோட்  செய்ய, அது மற்றோருவருக்கு டவுன்லோட் செய்யும் சர்வராக பயன்படுத்தப்படும். இதே மெக்கானிசம் தான் பிட்காயினிலும் பின்பற்றப்படுகிறது.

அதனால் பிட்காயின் வைத்து இருக்கும் ஒவ்வோருமே ஒரு குட்டி சர்வர் தான்.

அவ்வளவு பேர் மீதும் நடவடிக்கை எடுத்து தடை செய்வது என்பது கடினமான காரியம். அதனால் தடை செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

அதே நேரத்தில் BITCOIN நாணயத்தை தரும் எக்ஸ்சேஞ்களான CoinBase
UNOCOINCOINSECUREBITXOXO போன்றவற்றின் மூலம் ஏதாவது செய்யவும் சில வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும் பிட்காயினுக்கு போட்டியாக இன்னொரு CryptoCurrency பிரபலமாகும் வரும் வரையில் முற்றிலும் ஒழிப்பது என்பது கடினம் தான்.

இந்த நிலையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியே Lakshmi என்ற பெயரில் CryptoCurrency உருவாக்க விரும்பியுள்ளது.

அமெரிக்காவில் BITCOIN நாணயமானது பங்குச்சந்தை கரென்சி FUTURES வர்த்தகத்தில் அனுமதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

அதனால் ஒவ்வொரு நாடும் CryptoCurrency என்ற கருத்தியலை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலாக பார்த்தால்,

பிட்காயின் ஒவ்வொரு BlockChain என்பதை பத்து நிமிடத்திற்கு ஒரு முறை உருவாக்க முடியும். தற்போதைய நிலையில் ஒரு BlockChain 1700 பரிமாற்றங்களை மட்டுமே கையாள தகுதியானது.

அதாவது பத்து நிமிடத்திற்கு 1700 பரிமாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். இது VISA, MASTERCARD போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது.

இனி வரும் காலங்களில் இந்த நிலையில் Upgrade செய்வது என்பது அவசியமானது.

அடுத்து,

நாணயம் என்பது பரிமாற்றத்திற்கு உதவும் ஒரு பண்டமாற்று முறை. ஆனால் பிட்காயின் வாங்குபவர்கள் இன்னும் முதலீட்டு முறையில் தான் வாங்குகிறார்கள்.

அதாவது என்றாவது ஒரு நாள் பிட்காயின் மதிப்பு பல மடங்குகளில் கூடும் என்றதொரு நம்பிக்கை.

அது தான் தற்போது பிட்காயின் ராக்கெட் வேகத்தில் செல்வதற்கு உதவுகிறது.

அதனால் இந்த முதலீட்டு முறையில் வாங்குபவர்கள் ஒரு நாள் லாபத்திற்காக விற்கும் போது ஒரு பெரிய குமிழ் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அடுத்து பிட்காயின் 20,000 டாலரை தொடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

ஆம். இருக்கிறது. அதே நேரத்தில் BITCOIN நாணயத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதே வேகத்தில் கூட வேண்டும்.

பயபடுத்துபவர்கள் என்றால் பொருளை விற்பவர்கள் பிட்காயினை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை வாங்குபவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் பெரிய அளவின் மாற்றம் ஏற்படின், பிட்காயின் உயர்வையும் நியாயப்படுத்த முடியும்.

அதே நேரத்தில் தற்போது போல் தினமும் ஆயிரம் டாலர்கள் உயர்ந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது. ஒரு குமிழில் திருத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆக, மதிப்பீடலில் சில குறைகள் உள்ளன. ஆனால் முற்றிலும் புறந்தள்ள முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதியாக,

தற்போது ஒரு பிட்காயின் என்பது பத்து லட்சத்திற்கு வர்த்தகமாகி வருகிறது.இது பிட்காயினின் மதிப்பை அதிகமாகவே காட்டுகிறது. அதனால் தற்போது முதலீடு செய்வதை பரிந்துரை செய்யவில்லை.

அதே நேரத்தில் கால மாற்றங்களில் பிட்காயின் மதிப்பு குறையும் போது 0.001 BTC, 0.002 BTC என்று ஒரு சிறிய தொகையில் பிட்காயினை வாங்கி வைத்துக் கொண்டால் பின்னால் உதவுதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

தற்போது 0.001 பிட்காயின் மதிப்பு என்பது பத்தாயிரம் ரூபாயாகும்.

இந்தியாவில் பிட்காயினை வாங்குவதற்கு CoinBase, UNOCOIN, COINSECURE, BITXOXO போன்ற எக்சேஞ்சுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த பதிவில் பிட்காயினை எவ்வாறு வாங்குவது? என்பது பற்றி விவரமாக பார்ப்போம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: