ஞாயிறு, 29 ஜனவரி, 2017

எதிர்பார்ப்பு தவறினால் வீழ காத்திருக்கும் சந்தை

கடந்த இரு வாரங்களாக சந்தையில் காளையின் பிடி நன்றாகவே உள்ளது.

வியாழன், 26 ஜனவரி, 2017

சேமிப்பு மூலம் வருமான வரி விலக்கு பெறும் நேரம்

மாத ஊதியம் பெறுபவர்கள் குறைவாக வருமான வரி கட்ட வேண்டும் என்றால் அதற்கான சேமிப்பு ஆதாரங்களை காட்ட வேண்டிய நேரமிது.


ஏற்கனவே வருமான வரி தொடர்பாக எழுதிய பதிவுகளை மீண்டும் பகிர்வது இந்த நேரத்தில் உபயோகமாக இருக்கும் என்பதால் தொடர்கிறோம்.தற்போதைய நிலவரப்படி 2,.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்தால் வரி கிடையாது. பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2.5 முதல் 5 லட்சம் வரை 10% வரி விதிக்கப்படுகிறது.

அடுத்து 5 முதல் 10 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படுகிறது.

திங்கள், 23 ஜனவரி, 2017

BSE IPOவை வாங்கலாமா?


Bombary Stock Exchange (BSE) யின் ஐபிஒ பங்குசந்தைக்கு வெளிவருகிறது.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

மானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு

ரூபாய் ஒழிப்பு நடவடிககைகளால் நொந்து போய் இருக்கும் ரியல் எஸ்டேட்  துறை ஆறுதலுக்க்காக பிரதம மந்திரி மோடி அவர்கள் இந்த வருட புத்தாண்டு நிகழ்வாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் அரசு மானியம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் Pradhan Mantri Awas Yojana 2017 (PMAY).


இந்த திட்டமானது குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்கும் மக்களுக்கு அதிக பலனைத் தரவல்லது.

அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தான். இதில் மூன்று லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், ஆறு லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்.


இந்த திட்டம் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தீட்டப்பற்ற திட்டம். அதனால்   தங்களுக்கோ, அல்லது உடனடியான குடும்ப உறவுகளான மனைவி, மணமாகாத மக்கள் பெயரிலோ எந்த வித வீடும் வைத்து இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்கும் சந்தை


நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!