புதன், 12 ஜூன், 2024

Technical Analysis வைத்து பங்கு முதலீடுகள் செய்வது எப்படி? - 1

இந்த தளத்தில் இது வரை Fundamental Analysis என்பதனை அடிப்படையாக வைத்து முதலீடுகளை எவ்வாறு செய்வது? என்பது பற்றி எழுதி இருக்கிறோம்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற தொடராக Muthaleedu.IN தளத்தில் வந்த கட்டுரைகளை கவனிக்க. 

பங்குச்சந்தை ஆரம்பம் - முதலீடு தள தொடர்

Fundamentals அடிப்படையில் பார்த்தால் P/E, P/B, Debt Ratio என்று பல விகிதங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க உதவுகிறது.


ஆனால் பெரும்பாலும் சந்தையில் Forward Earning Ratio என்பது தான் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம். அதாவது இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து பங்கு சரியான விலையில் இருக்குமா? என்பதை அடிப்படையாக வைத்து முதலீடுகள் செய்யப்படுகின்றன. .

செவ்வாய், 11 ஜூன், 2024

மீண்டும் முதலீடு தளத்தில்..

சில தனிப்பட்ட மற்றும் அலுவலக வேலை பளு காரணமாக முதலீடு தளத்தில்  எழுத முடியாமல் போனது. வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலீடு தளத்தில் எழுதுகிறோம். 

இது ஒரு நீண்ட இடைவெளி. ஆனாலும் தொடர்பில் இருந்து விசாரித்த நண்பர்களுக்கு நன்றி!


பொதுவாக Muthaleedu.IN தளத்தில் Stock Fundamentals என்பதை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதி வந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் Stock Technical என்பதிலும் அதிக அளவு அனுபவம் கிடைத்தது. அதையும் கலந்து இனி வரும் கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறோம்.