வியாழன், 28 டிசம்பர், 2017

இன்சுரன்ஸ் நிறுவனங்களின் தந்திர ஏமாற்று வேலைகள்

வேலைக்காரன், அருவி படங்களை பார்த்த தாக்கமோ என்னவோ தெரியவில்லை. சிந்தனைகள் நடப்பு வாழ்வியலை நோக்கித் தான் அதிகமாக செல்கிறது.


வேலைக்காரன் படத்தில் சிவ கார்த்திகேயனின் அம்மா புதிதாக Water Purifier மாத தவணையில் வாங்கி இருப்பார்கள். அங்கிருந்து தான் கதை மாற ஆரம்பிக்கும்.நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு டார்கெட் இலக்கு வைத்துக் கொள்ள, மார்கெட்டிங் வேலை பார்ப்பவர்கள் எப்படியாவது ஏமாற்றி பொருளை வாங்க வைப்பார்கள் என்பதை உணர வைக்கும் காட்சி அது.

அது பொருட்களுக்கு மட்டுமல்லாமல், நிதி தொடர்பான முதலீடு திட்டங்களிலும் அதிகமாகவே தொடர்கிறது.

புதன், 20 டிசம்பர், 2017

வங்கியில் போடும் பணத்திற்கு எவ்வளவு உத்தரவாதம்?

வங்கி வைப்பு திட்டங்கள் தொடர்பாக அரசு திட்டங்கள் புதிய அணுகுமுறையைக் கொண்டு வரவுள்ளது. இதனால் வைப்பு நிதி பற்றி தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


பல நண்பர்களிடம் இருந்து இது தொடர்பாக எழுதுமாறு மின் அஞ்சல்கள் வந்தன. அவ்வாறு வராவிட்டாலும் கூட இது தொடர்பாக எழுதுவது என்பது எமது கடமையே. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.பணமாக வைத்து இருப்பது என்றால் இந்தியர்கள் அதிகம் விரும்புவது Fixed Deposit என்று சொல்லப்படும் வைப்பு நிதிகள் தான்.

ஒரு பக்கம் வட்டி விகிதங்கள் குறைந்தாலும், இன்னும் பலர் நம்பிக்கையுடன் வைத்து இருப்பது இங்கே தான்.

அதற்கு காரணம் இந்திராகாந்தி வங்கிகளை நாட்டுடமையாக்கிய பிறகு மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்பட்ட ஒரு அபரிமிதமான நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

திங்கள், 18 டிசம்பர், 2017

முதலீட்டு பார்வையில் குஜராத் தேர்தல் முடிவுகள் ...

இதற்கு முன் குஜராத் தேர்தலை எவ்வாறு அணுகுவது? என்று ஒரு பதிவு எழுதி இருந்தோம்.

வியாழன், 7 டிசம்பர், 2017

BITCOIN நாணயத்தில் முதலீடு செய்யலாமா? (3)

கடந்த பதிவில் BITCOIN நாணயம் எவ்வாறு வேலை செய்கிறது? என்று பார்த்தோம்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

BITCOIN எவ்வாறு வேலை செய்கிறது? (2)

கடந்த பதிவில் ஏன் BITCOIN நாணயத்தின் தேவை ஏற்பட்டது? என்பது பற்றி பார்த்தோம்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

BITCOIN நாணயத்தின் அவசிய தேவை ஏன் வந்தது? (1)

நீண்ட நாட்களுக்கு பின் ஒன்றை தொடர் வடிவில் தருகிறோம். பயனுள்ளதாக இருக்கிறோம் என்று நம்புகிறோம்.

திங்கள், 27 நவம்பர், 2017

லாஜிஸ்டிக்ஸ் பங்குகளை வாங்கும் தருணமிது..

ப்ளிப்கார்ட்டிற்கு பத்து வருடங்களுக்கு முன்னரே அமேசான் இந்தியாவில் கால் பதித்தது.

வியாழன், 23 நவம்பர், 2017

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்க வேண்டுமா?

கடந்த சில மாதங்களாக கந்து வட்டியால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

செவ்வாய், 21 நவம்பர், 2017

பங்குசந்தையில் குஜராத் தேர்தலை எவ்வாறு அணுகுவது?

கடந்த கட்டுரையில் மூடி ரேட்டிங் உயர்வு எவ்வாறு பலன் கொடுக்கும்? என்பதை பார்த்தோம்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

மூடியின் ரேட்டிங் உயர்வு எப்படி பலன் தரும்?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் எளிதில் வியாபாரம் செய்யும் தரத்தை உலக வங்கி உயர்த்தியது.

திங்கள், 13 நவம்பர், 2017

GST வரி குறைப்பு, கச்சா எண்ணெய், சந்தை சரிவு - என்ன செய்வது?

கடந்த கட்டுரை எழுதிய பின் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

செவ்வாய், 7 நவம்பர், 2017

பங்குசந்தையின் இன்றைய சரிவிற்கு காரணம் என்ன?

இன்று சந்தையில் திடீர் பதற்றம்.

சனி, 4 நவம்பர், 2017

பங்குச்சந்தை உச்சத்தில் கட்டாயம் பங்குகளை விற்க வேண்டுமா?

தற்போதைய பங்குச்சந்தையில் இரு விதமாக தவிப்பவர்கள் உண்டு.

வியாழன், 2 நவம்பர், 2017

பங்குச்சந்தையில் ஒரு Rights Issue அனுபவம்

இன்று Karur Vysya Bank மூலம் Rights Issue வழியாக பங்குகளை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது.


அதனை அனுபவம் மற்றும் படிப்பினை கட்டுரையாக இங்கு பகிர்கிறோம்.பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு இன்னும் அதிகமாக நிதி தேவைப்படின், பங்கு பத்திரங்கள், கடன்கள் என்று பல வழிகளில் நிதியை திரட்டும்.

அதில் ஒன்று தான் Rights Issue.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

அருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது?

இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டினார்.

திங்கள், 23 அக்டோபர், 2017

ஐபிஒ மோகத்தை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள்

இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே இந்த வருடம் தான் அதிக அளவில் நிறுவனங்கள் மிக அதிக அளவு நிதியை திரட்டி உள்ளன.


அதில் சில ஐபிஒக்கள் நல்ல ரிடர்ன் கொடுக்க, பாதிக்கும் மேற்பட்ட ஐபிஒக்கள் லிஸ்ட் ஆன விலையிலே வர்த்தகமாகி வருகின்றன.பங்கு விலை மேலே உயரவில்லை என்பதற்காக அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் இல்லை என்று சொல்லி விட முடியாதி,

ஆனால் அவர்கள் ஒரு பங்கிற்கான விலை என்பது மிக அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.

அவர்கள் சும்மா பங்கிற்கு இவ்வளவு விலை வைக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.

புதன், 11 அக்டோபர், 2017

புதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா?

கடந்த ஒரு கட்டுரையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்திய அரசு தயாரவதால் முதலீடு செய்ய கிடைக்கும் பங்கு வாய்ப்புகளை பற்றி எழுதி இருந்தோம்.


திங்கள், 9 அக்டோபர், 2017

திசை அறியாமல் தடுமாறும் சந்தை

கடந்த ஒரு வாரமாக சில அலுவல் பளு காரணமாக பதிவுகளை எழுத முடியவில்லை.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தற்போதைய பங்குச்சந்தை சரிவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

கடந்த பதிவில் பங்குசந்தையை பதற வைத்த காரணிகளை பற்றி எழுதி இருந்தோம்.

திங்கள், 25 செப்டம்பர், 2017

பங்குச்சந்தையின் தொடர்ச்சியான சரிவின் பின் பல காரணிகள்

இன்றுடன் தொடர்ந்து ஐந்து நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வருகிறது.

புதன், 20 செப்டம்பர், 2017

அமைதிபடுத்த அதிக அளவு செலவழிக்க தயாராகும் அரசு

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐபிஒக்கள் வெளிவந்ததால் நாமும் அது தொடர்பாகவே அதிகமாக எழுத வேண்டி இருந்தது.

அதனால் பங்குச்சந்தை நிகழ்வுகளை பற்றி அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால்  ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது.

காளையின் பிடியில் இருக்கும் பங்குச்சந்தையில் திவாலான கம்பெனியைக் கூட மார்க்கெட் உள்ளது என்று சொன்னால் வாங்கி விட ஆட்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக ஐபிஒக்கள் என்பது சந்தைக்கு வரும் போது மலிவான பங்கு விலையில் வரும். அதனால் ஒரு செயற்கையாக டிமேண்ட் உருவாக்கப்பட்டு பங்கு விலை கூடுவது தான் காலங்காலமாக நடந்து வருகிறது.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ICICI Lombard IPOவை வாங்கலாமா?

இந்த மாதம் முழுவதும் IPOக்களை பற்றி எழுதுவதில் வேறு நிகழ்வுகள் தொடர்பாக அதிக கட்டுரைகளை எழுத முடியவில்லை.

வியாழன், 14 செப்டம்பர், 2017

கட்டணமே இல்லாமல் டிமேட் கணக்கு திறக்க எளிய வழி

பங்குச்சந்தையில் பங்குகள் வாங்குவதற்கு டிமேட் கணக்கு அவசியம் என்பது நமக்கு தெரிந்தது தான்.

புதன், 13 செப்டம்பர், 2017

Capacit’e Infra IPOவை வாங்கலாமா?

உச்சத்தில் இருக்கும் சந்தையில் ஐபிஒக்களின் எண்ணிக்கை வரிசையில் நிற்கிறது.

திங்கள், 11 செப்டம்பர், 2017

Matrimony.com IPOவை வாங்கலாமா?

காளையின் பிடியில் இருக்கும் சந்தையில் தொடர்ச்சியாக ஐபிஒக்கள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்து, இன்று  செப்டம்பர் 11  முதல் matrimony.com நிறுவனத்தின் ஐபிஒ வரவுள்ளது.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நல்ல முதலீடு வாய்ப்பு - பெட்ரோல், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (2)

இந்த கட்டுரையின் முந்தைய தொடர்ச்சியை இங்கு காணலாம்.
பார்க்க:
நல்ல முதலீடு வாய்ப்பு - கச்சா எண்ணெய், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (1)

இதில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு இனி மின்சாரத்தை பயன்படுத்த ஊக்கவிக்க ஆரம்பிக்கும்.

நல்ல முதலீடு வாய்ப்பு - பெட்ரோல், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (1)

இதற்கு முன்பு ஒரு கட்டுரையில் விப்ரோ நிறுவனத்தில் 1000 ரூபாய்  முன்பு முதலீடு செய்து இருந்தால் இப்பொழுது 43 கோடியாக  திரும்ப பெற்றிருப்போம் என்று எழுதி இருந்தோம்.

புதன், 6 செப்டம்பர், 2017

Bharat Road Network IPOவை வாங்கலாமா?

நேற்று தான் Dixon Technologies நிறுவனத்தின் ஐபிஒவை பற்றிய எமது பார்வையை வைத்து இருந்தோம்.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

Dixon Technologies IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் Apex Frozen Foods ஐபிஒவை வாங்க பரிந்துரை செய்து இருந்தோம்.

நேற்று முதல் பட்டியலிடப்பட்ட நாளிலே 20%க்கும் மேல் லாபம் அளித்தது. நமது வாசகர்கள் பயனடைந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

வாழ்த்துக்கள்!அடுத்து நாளை, செப்டெம்பர் 06 முதல் Dixon Technologies, Bharat Road Networks என்ற இரண்டு நிறுவனங்களின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இதில் Dixon Technologies நிறுவனத்தைப் பற்றி இன்று பார்ப்போம்.

Dixon என்பது ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். LED பல்புகள், திரைகள் போன்றவற்றை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

Panasonics, Philips போன்ற பெரிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் மொபைல், தொலைகாட்சி போன்றவற்றிற்கு தேவையான LED திரைகளை காண்ட்ராக்ட் முறையில் செய்து வருகிறது.

இது தவிர, வாஷிங் மெசின் போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறது.

தற்போது ஐபிஒ மூலம் 600 கோடி ரூபாயை திரட்ட வருகிறது. இதில் பெரும்பகுதி ஏற்கனவே இருக்கும் பெரிய முதலீட்டாளர்கள் வெளியேற ஒரு வாய்ப்பாக கொடுக்கப்படுகிறது.

மீதி கொஞ்சம் நூறு கோடி ரூபாய் அளவு தான் நிறுவன விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேற விரும்புவதை பெரிய அளவில் எதிர்மறை நிலையாக தான் பார்க்க வேண்டி உள்ளது.

அதே போல், நிறுவனத்தின் பெரும்பாலான வியாபாரம் மொபைல் விற்பனையை சார்ந்தே உள்ளது. அதனால் அவற்றில் வீழ்ச்சி ஏற்படும் போது நிறுவனத்தையும் பாதிக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் வியாபாரம் 1000 கோடியில் இருந்து 2500 கொடியாக உயர்ந்து உள்ளது.

அதே போல் லாபமும் 14 கோடியில் இருந்து 50 கொடியாக உயர்ந்து உள்ளது.

இது ஒரு நல்ல நேர்மறை வளர்ச்சி என்று குறிப்பிடலாம்.

ஆனால் இந்த நிலையில் ஐபிஓவில் குறிப்பிடும் 1760 ரூபாய் பங்கு விலை என்பது நிறுவனத்தின் P/E மதிப்பை 40க்கு அருகில் கொண்டு செல்கிறது.

இந்த மதிப்பு கொஞ்சம் அதிகம். அதனால்  மேலும் பங்கு விலை அதிக அளவில் உயரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அதனால் Dixon ஐபிஒவை நண்பர்கள் தவிர்க்கலாம்!

அடுத்து நாளை Bharat Road Networks ஐபிஒ தொடர்பாக சந்திக்கலாம்!

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

குழந்தையின் ராக்கெட் விளையாட்டால் குழப்பத்தில் சந்தை

பொதுவாக பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணம் என்பது தெரிந்தாலும் அதற்கான தெளிவும் ஓரளவு ஊகிக்க முடியும்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

Apex Frozen Foods IPOவை வாங்கலாமா?

இன்று ஆகஸ்ட் 22 முதல் Apex Frozen Foods நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் தொடங்குகின்றன.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

விஷால் சிக்கா விலகலும், தொடரும் குழாயடி சண்டையும்

இன்போசிஸ் நேற்று தான் தமது பங்குகளை BuyBack முறையில் வாங்குவதாக அறிவித்து இருந்தது.

ஜெய்பேயின் கட்டி முடிக்காத பிளாட், யாருக்கு சொந்தம்?

பெரு நகரங்களில் இது மிகவும் சாதாராணமான விடயம் தான்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

குறையும் மின் கட்டணம், பவர் பங்குகளில் கவனம் தேவை

இரு வருடங்கள் முன்பு வரை மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு இருந்தோம்.

புதன், 9 ஆகஸ்ட், 2017

331 நிறுவன பங்குகளை தடை செய்த செபி, பாதிப்பு யாருக்கு?

நேற்று முதல் செபி 331 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாவதை தடை செய்து உள்ளது.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

Bharat 22, அரசே வழங்கும் ம்யூச்சல் பண்ட், வாங்கலாமா?

தற்போதைய மத்திய அரசு பொது துறை நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்று நிதி திரட்டி வருகிறது என்பது நாம் அறிந்ததே.


பொதுவாக இந்த நிதியை பங்குச்சந்தை வழியாக தான் திரட்ட வேண்டி உள்ளது.ஆனால் பல வித எதிர்ப்புகள் காரணமாக பங்குச்சந்தை வழியாக நிதி திரட்டுதல் என்பது பெரும்பான்மையாக தோல்வியிலே முடிந்து வருகிறது.

அதனை சரி கட்ட அரசு கொண்டு வந்த திட்டம் தான் Bharat 22.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் ஜெட்லி இந்த திட்டத்தை பற்றி அறிவித்தார்.

புதன், 2 ஆகஸ்ட், 2017

Cochin Shipyard ஐபிஒவை வாங்கலாமா?

ஏற்கனவே SIS நிறுவன ஐபிஒவை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

SIS India ஐபிஒவை வாங்கலாமா?

இந்திய பங்குசந்தையில் SIS என்ற நிறுவனம் பட்டியலிடப்படுகிறது.

செவ்வாய், 25 ஜூலை, 2017

ஆயுர்வேதத்தால் சரியும் கோல்கேட் சாம்ராஜ்யம்

பல தசாப்தங்களாக பற்பசை மாறும் பிரஷ் பிரிவில் கோல்கேட் நிறுவனம் தான் இந்தியா மற்றும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

புதன், 19 ஜூலை, 2017

சிகரெட்டிற்கு GSTயில் அதிக வரி, பதம் பார்க்கப்பட்ட ITC

GST புயல் அவ்வளவு எளிதில் விடாது போல் தான் தெரிகிறது.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

வரலாற்று குறைவு பணவீக்கத்தால் துள்ளும் சந்தை, என்ன செய்வது?

கடந்த வாரம் வெளிவந்த பணவீக்க தரவுகள் சந்தைக்கு உற்சாகத்தை அளித்தன.

ஞாயிறு, 9 ஜூலை, 2017

IDFC - ஸ்ரீராம் வங்கி இணைப்பு, யாருக்கு லாபம்?

இந்தியா ஒரு வேகமான போட்டி பொருளாதரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

திங்கள், 26 ஜூன், 2017

சாதகமான சூழ்நிலைகளை நோக்கி விமான பங்குகள்

இரண்டு, மூன்று வருடங்கள் பின் நோக்கினால் விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட திவால் நிலைக்கே சென்றன.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அப்படியே நிலைமை மாறி விட்டது.

புதன், 21 ஜூன், 2017

ஜூன் மாத முதலீடு போர்ட்போலியோ அறிவிப்பு

நண்பர்களுக்கு,

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் புதிய மாத போர்ட்போலியோவினை அறிவிக்கிறோம்.

வெள்ளி, 16 ஜூன், 2017

CDSL IPO பங்கை வாங்கலாமா?

வரும் ஜூன் 19 முதல் CDSL நிறுவனத்தின் IPO பங்கு வெளிவருகிறது.

சனி, 10 ஜூன், 2017

GST வரியை வருமுன் விரிவாக தெரிந்து கொள்வோம்

ஜூலை 1 முதல் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக வரி விதிப்பில் பெரிய அளவில் மாற்றம் வரவிருக்கிறது. அது தான் GST என்று சொல்லப்படும் Goods and Services Tax.

புதன், 7 ஜூன், 2017

ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கை சொல்வது என்ன?

சந்தை இன்று வெளியாகி இருந்த ரிசர்வ் வங்கியின் நிதி நிலை அறிக்கையை அதிக அளவு எதிர்பார்த்து இருந்தது.

ஞாயிறு, 4 ஜூன், 2017

PAN எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது?

மத்திய அரசின் வருமான வரித் துறை அணைத்து வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைத்து வருகிறது.


இந்த நேரம் ஆதார் எண் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் ஆக்டிவ் நிலையில் இருந்து மாறி இருக்கலாம். அவ்வாறு இருப்பின் தொடர்புடைய வங்கி கிளையை அணுக வேண்டும்.அடுத்து, PAN எண்ணை ஆதாருடன் இணைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அவ்வாறு இணைக்காவிட்டால் இந்த வருடம் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரு வழிகள் உள்ளன.

வியாழன், 1 ஜூன், 2017

மாட்டு இறைச்சிக்கு தடை, எந்த பங்குகளை பாதிக்கலாம்?

தற்போது மோடி அரசு மாட்டினை இறைச்சிக்கு விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. அதாவது மறைமுகமாக, மாட்டு இறைச்சி உண்பதை தடை செய்து உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

புதன், 31 மே, 2017

மோசமான ஜிடிபி தரவுகளால் கரடியின் பார்வையில் பங்குச்சந்தை

கடந்த ஒரு வாரமாக சில வேலைப் பளு இருந்ததால் பதிவுகள் எழுத முடியவில்லை.

வியாழன், 18 மே, 2017

சத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை?

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ராமலிங்க ராஜூ செய்த தவறால் சத்யம் நிறுவனமே இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

புதன், 17 மே, 2017

InvIT Fund IPO பற்றிய விரிவான விளக்கம்

இன்று IndiaGrid InvIT IPO வெளியீட்டிற்கு வருகிறது. இந்த ஐபிஒவிற்கும் நிறுவனங்களின் ஐபிஒவிற்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.

செவ்வாய், 16 மே, 2017

PSP Projects ஐபிஒவை வாங்கலாமா?

இன்று (17-05-2017) முதல் PSP Projects நிறுவனத்தின் ஐபிஒ வெளியிடப்பட இருக்கிறது.

ஞாயிறு, 14 மே, 2017

ஸ்டீல் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பு

கடந்த இரு வாரங்களாக எமது ஸ்டார்ட் அப் மற்றும் முதலீடு தள போர்ட்போலியோ வேலைகள் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை. மன்னிக்க!

புதன், 26 ஏப்ரல், 2017

விளம்பர வருவாய் மூலம் முகம் மாறும் ரயில்வே, எதை வாங்கலாம்?

காலங்காலமாக இந்தியன் ரயில்வே நஷ்டத்தை தான் காட்டி வந்தது. இடையில் லல்லு பிரசாத் காலத்தில் லாபம் வெளியே தெரிய வந்தது.

திங்கள், 24 ஏப்ரல், 2017

அதிக வட்டி தரும் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து வருகிறது.


பொதுவாக வளர்ச்சி அதிகரிக்கும் என்ற சூழ்நிலையில் வைப்பு வட்டி விகிதம் குறைந்து அதன் முதலீடுகள் பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு திருப்பி விடுவது இயற்கை. அது தான் தற்போது நடந்து வருகிறது.இன்னும் வட்டி விகிதங்கள் குறைய கூட வாய்ப்பு உள்ளது. அதனால் வட்டி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சென்றால் கூட ஆச்சர்யம் இல்லை.

ஆனால் மாதந்தோறும் வட்டியை பெற்று அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்து வருபவர்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு என்பது மிகவும் கஷ்டமான நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

S.Chand IPOவை வாங்கலாமா?

ஏப்ரல் 26 அன்று S Chand நிறுவனத்தின் IPO வெளிவருகிறது.

வியாழன், 20 ஏப்ரல், 2017

ஜெய் பிரகாஷ் நிறுவனத்தால் இறக்கத்தில் வங்கி பங்குகள்

சிமெண்ட் உற்பத்தியில் வட இந்தியாவில் புகழ் பெற்ற நிறுவனம் ஜெய் பிரகாஷ் அசொசியட்ஸ்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அமெரிக்கா - வட கொரியா மோதல், சந்தையில் என்ன செய்வது?

நேற்று சில நண்பர்கள் வட கொரியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் மோதல் சந்தையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேட்டு இருந்தனர்.

சனி, 15 ஏப்ரல், 2017

நிதி முடிவுகளை எதிர்நோக்கும் சந்தை, திருத்தத்திற்கு வாய்ப்பு

இரண்டு மாதங்களுக்கும் மேலாக சந்தை காளையின் பிடியில் உள்ளதால் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.

திங்கள், 10 ஏப்ரல், 2017

சாலையோர மதுவிற்கு தடை, எந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு?

எதையும் கண்டு கொள்ளாத தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் காரணமாக நீதி மன்றமே நிர்வாக முடிவுகளில் தலையிடும் விடயம் அதிகமாகிக் கொண்டு தான் உள்ளது.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ரிசர்வ் வங்கி அறிக்கை தரும் சில உண்மைகள்

நேற்று ரிசர்வ் வங்கி தமது கால் வருட நிதி கொள்கைகளை அறிவித்தது.

புதன், 5 ஏப்ரல், 2017

விசா கட்டுப்பாடுகளால் போராடும் இந்திய ஐடி துறை

இந்திய ஐடி துறை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியை இழந்து வந்தது. ஆனால் இவ்வளவு விரைவில் பெரிய தேக்க நிலைக்கு செல்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

திங்கள், 3 ஏப்ரல், 2017

BS-3 தடை, ஆட்டோ நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கலாம்?

இரு தினங்கள் முன் நீதி மன்றம் BS-III விதி முறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தடை விதித்து விட்டது.

வெள்ளி, 31 மார்ச், 2017

இந்திய பங்குச்சந்தை எதிர்நோக்கும் பாதகமான இரு காரணிகள்

தற்போதைய சந்தை காளையின் பிடியில் இருந்து அவ்வளவு எளிதில் கீழே வராது போல் தான் தெரிகிறது.

ஞாயிறு, 26 மார்ச், 2017

வோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்?

இந்தக் கட்டுரை சில நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சில வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.

சனி, 25 மார்ச், 2017

உள்வர்த்தக கூத்தில் மாட்டிக் கொண்ட ரிலையன்ஸ்

கடந்த ஒரு மாதமாக ஜியோ என்ற ஒற்றை பதத்தில் ரிலையன்ஸ் பங்கு கடுமையான ஏற்றத்தைக் கண்டு இருந்தது.

திங்கள், 20 மார்ச், 2017

SANKARA IPOவை வாங்கலாமா?

நேற்று தான் CL Educate IPOவை பற்றி எழுதி இருந்தோம். அந்த IPOவின் மூன்று நாட்கள் விண்ணப்பிக்கும் தேதி முடியும் முன்னரே அடுத்த ஐபிஒ வெளிவந்து விட்டது.

ஞாயிறு, 19 மார்ச், 2017

CL Educate IPOவை வாங்கலாமா?

இன்று முதல் (மார்ச் 20) CL Educate நிறுவனத்தின் ஐபிஒ வெளிவருகிறது.

வெள்ளி, 17 மார்ச், 2017

காளையின் சந்தையில் எந்த துறை பங்குகளில் முதலீடு செய்யலாம்?

தற்போது சந்தை 29,500 சென்செக்ஸ் புள்ளிகளையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டார்ட் அப்பும், மன்னாரன் கம்பெனியும்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கட்டுரை.

கடந்த மூன்று நாட்களாக பதிவு எழுத முடியவில்லை.


நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் என்ற தொழில்முனையும் நிலையை நோக்கி பயணிக்க இருப்பதால் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை துறக்க வேண்டிய சூழ்நிலை.அதனால் கடைசி நேர வேலைப்பளு அலுவலத்தில் அதிகமாக இருக்க, நமது தளத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இனி எமது கவனம் அதிக அளவில் முதலீடு தளத்திலும் இருக்கும். அதனால் தொய்வில்லாமல் எமது கட்டுரைகள் வர முயற்சிக்கிறோம். அத்துடன் விரைவில் எமது கட்டண சேவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து அறிவிக்கிறோம்.

திங்கள், 13 மார்ச், 2017

IPOவில் பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது?

கடந்த வாரம் D-Mart ஐபிஒவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்து இருந்தோம். ஆனால் இந்த ஐபிஒ மட்டும் கிட்டத்தட்ட 108 மடங்குகள் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 12 மார்ச், 2017

உ.பி.யால் துள்ளிக் கொண்டிருந்த சந்தை தாவ ஆரம்பிக்கிறது

இந்த வருடம் தமிழகத்திற்கு குழப்பமாக இருக்க, அம்மா சமாதி தியான மடமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய பங்குச்சந்தைக்கு அமர்க்களமாக இருக்கிறது.

வெள்ளி, 10 மார்ச், 2017

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 2

ராதாகிருஷ்னன் தமணியின் பங்குசந்தை வெற்றி தொடரின் முந்தைய பகுதியை இங்கு பார்க்கலாம்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1


இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே ஒரு தனி நபர் வெறும் பங்குச்சந்தையில் புழலும் பங்குகளை மட்டும் வாங்கி ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயன்றார் என்றால் ஆர்.கே.தமணியாகத் தான் இருக்கும்.
2000த்தின் தொடக்கத்தில் VST Industries என்ற ஒரு நிறுவனம் தான் ITC நிறுவனத்திற்கு போட்டியாக சிகரெட் தயாரித்துக் கொண்டிருந்தது.

VST நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்த தமணி பங்குச்சந்தையில் கிடைத்த பங்குகளைக் கொண்டே நிறுவனத்தின் 15% பங்குகளை கைப்பற்றிக் கொண்டார்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1

இதற்கு முன் பங்குச்சந்தையில் வெற்றியை தொட்டவர்கள் என்ற வரிசையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன்  பபெட் போன்றவர்கள் பற்றி எழுதி இருக்கிறோம்.


ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை பார்த்தால் 5000 ரூபாயில் ஆரம்பித்து இன்று 13,000 கோடியைத் தொட்டுள்ளார்.


Prof M என்று சொல்லப்படும் மற்றதொரு பேராசிரியர் பங்குசந்தையில் மட்டும் ஆயிரம் கோடியை  தாண்டியுள்ளார்.

பார்க்க:

இதையெல்லாம் பேராசையை தூண்டும் விதத்தில் இருந்தாலும் ஒரு நம்பிக்கையை தரும் விதத்தில் எடுத்துக் கொண்டால் நமக்கும் பங்குச்சந்தை வெற்றி என்பது தூரமல்ல.

ஏனென்றால் இவர்கள் அனைவருமே பரம்பரை பணக்காரர்கள் அல்ல. சிறிய முதலீட்டில் ஆரம்பித்து அதிக பொறுமையுடன் இருந்ததால் வெற்றியை சுவைத்தவர்கள்.

வியாழன், 2 மார்ச், 2017

ஏற்றம் காணும் சந்தையில் என்ன செய்வது?

நாமும் பல நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக காத்திருக்கிறோம்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

Avenue Supermarts IPOவை வாங்கலாமா?

நாம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை பற்றி எழுதி இருந்தோம். இந்திய பங்குசந்தையில் வாறன் பப்பெட் போன்று நீண்ட கால முதலீட்டில் வெற்றி அடைந்தவர்.

பார்க்க: இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்

திங்கள், 27 பிப்ரவரி, 2017

மத்திய அரசின் தங்க முதலீட்டு திட்டத்தில் ஒரு வாய்ப்பு

(இந்த கட்டுரை 10-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கு கணிசமாக செலவழிக்க வேண்டி வரும். இதற்கு மட்டும் 15 முதல் 20% வரை தேவையில்லாமல் போக வாய்ப்பு உண்டு.

தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு இந்த செய்கூலி, சேதாரம் என்பது தேவையில்லாத செலவுகள் தான்.அதனை தவிர்ப்பதற்கு மத்திய அரசே தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு Sovereign Gold Bonds என்று பெயர்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது அன்றைய சந்தை விலையைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவாக தங்கத்தை பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம்.  தங்க விலை ஏற, ஏற இந்த முதலீட்டு பத்திரங்களின் மதிப்பும் கூடி விடும்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

குழந்தைகளின் படிப்பிற்கு ஏற்றதொரு LIC பாலிசி

ஒவ்வொருவரும் அன்றாட தேவைகளுக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் கொடுப்பது குழந்தைகளின் எதிர்கால நலன் தான்.முன்னர் பெண் குழந்தைகள் என்றால் திருமண செலவு, ஆண் என்றால் படிப்பு செலவு என்பது அதி முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது இரு பாலருக்கும் படிப்பு செலவும் முக்கியத் துவம் பெருகிறது.பணவீக்கம் என்பது இங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இன்று மேற்படிப்புக்கு வருடத்திற்கு ஒரு  லட்ச ரூபாய் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னும் இருபது வருடங்கள் கழித்து சராசரியாக 8% பணவீக்கம் இருப்பின் ஐந்து லட்ச ரூபாய் வருடத்திற்கு ஆக வேண்டி வரலாம். அதற்கும் நாம் தயார் படுத்திக்க கொள்ள வேண்டும்

அதே நேரத்தில் இன்றைய விலைவாசி மிகுந்த உலகில் செலவு போக சேமிப்பு என்பதே சொற்பம் தான் மிஞ்சுகிறது. அதுவும் முறையாக பராமரிக்கப்படா விட்டால் ஏதேனும் வழியில் செலவாகி விடும். அதற்கு நாம் இன்சூரன்ஸ் பாலிசிகளை நாடுவது சரியானதாக இருக்கும்.

பல மடங்கு ரிடர்னுக்காக பிரகாசிக்கும் பாதுகாப்பு துறை முதலீடு

முன்பொரு பதிவில் விப்ரோவில் 1000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது 43 கோடி ரூபாய் கூடி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

பார்க்க: விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி


ஆனால் அதே மடங்கு தற்போது கூடும் என்று எதிர்பார்த்தால் நடக்காது.


மென்பொருள் துறை அதிக அளவில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்த்து எண்பதுகளிலே கணிசமான ரிஸ்க் எடுத்து முதலீடை செய்தவர்களுக்கு கிடைத்த வெகுமதி தான் அந்த பல மடங்கு வளர்ச்சி.அதே போல் ஒரு துறையை நாம் இப்பொழுது பகிர்கிறோம்.

நாம் முன்னர் சொன்னது போல் ரிஸ்க் என்பது அதிகம் தான். கடந்து ஏழு வருடங்களில் L&T நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்தால் சராசரிக்கும் கீழ் தான். அதற்கு ஒரு முக்கிய காரணம் பாதுகாப்பு துறையில் 10,000 கோடி அளவு டாங்கிகளை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு முதலீடு செய்து இருந்தார்கள்.

புதன், 22 பிப்ரவரி, 2017

ரிலையன்ஸ் பங்கை மகிழ்வித்த Jio 303 அறிவிப்பு, நீடிக்குமா?

நேற்று முகேஷ் அம்பானி ஒரு அறிவிப்பை வெளியிட ரிலையன்ஸ் பங்கு ஒரே நாளில் எட்டு வருட உயர்வை சந்தித்தது.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பங்குகளை திருப்பி வாங்கும் TCS, என்ன செய்வது?

TCS நிறுவனம் இன்று தமது BuyBack திட்டத்தை அறிவித்துள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

லிமிட்டை தாண்டிய HDFC பங்கு, திணறும் செபி

கடந்த சில நாட்களாக HDFC வங்கியின் பங்கு அதிக அளவு ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது. என்ன காரணம் என்பதை கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஐடி நிறுவனங்களின் BuyBack எந்த அளவு பலனளிக்கும்?

நேற்று TCS நிறுவனம் பங்குகளை ஒரு குறிப்பிட்ட அளவு சந்தையில் வாங்கி கொள்வதற்காக முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.

புதன், 15 பிப்ரவரி, 2017

ஜியோவால் வேலை இழக்க போகும் டெலிகாம் ஊழியர்கள்


முகேஷ் அம்பானி ஜியோ பெயரில் தனது நீண்ட கால கனவான டெலிகாம் சேவையில் இறங்கினார்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

உ.பி தேர்தல் முடிவை எதிர்பார்த்து இந்திய பங்குசந்தை


மோடியின் ரூபாய் மதிப்பு இழப்பு கொள்கை பெரிதளவில் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

ட்ரம்ப் அடியில் ஆங்கிலம் பேசாத நாடுகளை பார்க்கும் இந்திய ஐடி துறை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முரட்டு அடிகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தலைமுறை மோதலில் தவிக்கும் இன்போசிஸ், என்ன நடக்கிறது?

அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை நிர்வகிக்கும் முழு அனுமதி பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்காது.

புதன், 1 பிப்ரவரி, 2017

எதிர்பார்ப்பை விடாமல் பார்த்துக் கொண்ட ஜெட்லீ பட்ஜெட்

நேற்று முன்பு தான் எதிர்பார்ப்பு தவறினால் வீழ காத்திருக்கும்  சந்தை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

எதிர்பார்ப்பு தவறினால் வீழ காத்திருக்கும் சந்தை

கடந்த இரு வாரங்களாக சந்தையில் காளையின் பிடி நன்றாகவே உள்ளது.

வியாழன், 26 ஜனவரி, 2017

சேமிப்பு மூலம் வருமான வரி விலக்கு பெறும் நேரம்

மாத ஊதியம் பெறுபவர்கள் குறைவாக வருமான வரி கட்ட வேண்டும் என்றால் அதற்கான சேமிப்பு ஆதாரங்களை காட்ட வேண்டிய நேரமிது.


ஏற்கனவே வருமான வரி தொடர்பாக எழுதிய பதிவுகளை மீண்டும் பகிர்வது இந்த நேரத்தில் உபயோகமாக இருக்கும் என்பதால் தொடர்கிறோம்.தற்போதைய நிலவரப்படி 2,.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்தால் வரி கிடையாது. பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2.5 முதல் 5 லட்சம் வரை 10% வரி விதிக்கப்படுகிறது.

அடுத்து 5 முதல் 10 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படுகிறது.

திங்கள், 23 ஜனவரி, 2017

BSE IPOவை வாங்கலாமா?


Bombary Stock Exchange (BSE) யின் ஐபிஒ பங்குசந்தைக்கு வெளிவருகிறது.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

மானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு

ரூபாய் ஒழிப்பு நடவடிககைகளால் நொந்து போய் இருக்கும் ரியல் எஸ்டேட்  துறை ஆறுதலுக்க்காக பிரதம மந்திரி மோடி அவர்கள் இந்த வருட புத்தாண்டு நிகழ்வாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் அரசு மானியம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் Pradhan Mantri Awas Yojana 2017 (PMAY).


இந்த திட்டமானது குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்கும் மக்களுக்கு அதிக பலனைத் தரவல்லது.

அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தான். இதில் மூன்று லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், ஆறு லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்.


இந்த திட்டம் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தீட்டப்பற்ற திட்டம். அதனால்   தங்களுக்கோ, அல்லது உடனடியான குடும்ப உறவுகளான மனைவி, மணமாகாத மக்கள் பெயரிலோ எந்த வித வீடும் வைத்து இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்கும் சந்தை


நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!