வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இது எமது பங்கு நஷ்டக் கணக்கு

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது அதில் நஷ்டம் வராதவர்கள் மிகக் குறைவு. நீண்ட நாள் இருந்தவர்கள் எதாவது ஒரு பங்கையாவது நஷ்டத்தில் விற்றிருப்பார்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

Mutual Fund தொடரின் முந்தைய பாகத்தில் எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? என்பது பற்றி எழுதி இருந்தோம்.

200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட் நிதிகள் இருக்கும் சூழ்நிலையில் அதில் 20 நிதிகளை பிரித்தெடுப்பதற்கு நமக்கு எது தேவை? என்பதை சரியாக உணர்ந்து கொண்டாலே போதும்.


முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக சில கேள்விகளை நமக்கு நாமாகவே எழுப்பிக் கொள்வது என்பது மிகவும் அவசியமானது. ஏனென்றால் நமது தேவை என்பது மற்றவர்களை விட நமக்கு தான் அதிகம் தெரிந்திருக்கும்.

பங்குகளை delist செய்யும் போது நாம் என்ன செய்வது?

நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று, தங்கள் கையில் நிதி குறைவாக இருக்கும் நிறுவனங்கள் கூடுதல் நிதியை திரட்டுவதற்காக பங்குச்சந்தையில் நுழைகின்றன.

இரண்டாவது, பன்னாட்டு நிறுவனங்கள் அரசின் சில கொள்கைகள் காரணமாக அவர்களால் 100% முதலீடு செய்ய முடியாது.  குறிப்பிட்ட சதவீதம் தங்கள் பங்குகளை உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது பொது மக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அதனால் சில பங்குகளை பொது பங்குகளாக பங்குச்சந்தையில் வைத்திருப்பார்கள்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?

கடந்த பதிவில் டாலர் எப்படி உலக பொது நாணயமானது என்பது பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவு அதனுடன் நெருங்கிய தொடர்புடையதால் அதைப் படித்துவிட்டு இதை படியுங்கள்.

முந்தைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்.
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

வியாழன், 19 செப்டம்பர், 2013

அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

ஓரிரு வாரத்திற்கு முன்னர் நமது பெட்ரோலிய துறை அமைச்சர் மொய்லி அவர்கள் ரூபாய் மதிப்பைக் கூட்டுவதற்கு அவரது துறை சார்பில் இரண்டு ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? - 2

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் பற்றிய இந்த தொடரின் முந்தைய பாகத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் பற்றிய அறிமுகத்தினை பார்த்தோம்.

இனி 200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட்கள் சந்தையில் இருக்கும் சூழ்நிலையில் அவற்றில் எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் வரலாம். அதனை பார்ப்போம்.

அதற்கு முன் செல்வதற்கு நமக்கு எந்த மாதிரியான முதலீடு தேவை என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.எந்தவொரு முதலீட்டிலும் RISK மற்றும் RETURN என்ற இரண்டும் இருக்கும். ரிஸ்க் அதிகமாக இருக்கும் இடங்களில் முதலீடு செய்தால் ரிடர்ன் அதிகமாக இருக்கும். அதே போல் மோசமான காலங்களில் இழப்பும் அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக இருக்குமிடத்தில் முதலீடு செய்தால் ரிடர்ன் குறைவாக இருக்கும். இழப்பும் குறைவாக இருக்கும்.

இதில் நாம் எங்கு வருகிறோம் என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். பல சமயங்களில் இடையில் இருக்கும் ஏஜென்ட் பேச்சை கேட்டே நாம் முதலீடுகளை தீர்மானிக்கிறோம். அது சரியானதல்ல.

Mutual Fund முறையிலும் மேல் சொன்ன ரிஸ்க் மற்றும் ரிடர்ன் என்பதனை அடிப்படையாக வைத்து பல பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள். அதில் நாம் எங்கு வருகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Equity Fund

இந்த நிதியில் பெரும்பாலான முதலீடுகளை மியூச்சல் பண்ட் நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்வார்கள். பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க்கான முதலீடுகளில் வருவதால் இந்த நிதிகள் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்றது.

இதுவும் முதலீடு செய்யப்பட்ட பங்குகளில் பரவலாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

பல துறைகள், பெரிய, சிறிய நிறுவனங்களில் சமநிலை செய்யப்பட்டிருந்தால் Diversified Fund என்பார்கள். இதில் சராசரியான ரிடர்ன் மற்றும் குறைவான ரிஸ்க் இருக்கும். ஆரம்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.

நடுத்தர, சிறிய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்திருந்தால் Midcap Fund என்பார்கள். இதில் அதிகமான ரிடர்ன் மற்றும் அதிகமான ரிஸ்க் இருக்கும். நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.

ஒரே துறை சார்ந்து முதலீடு செய்து இருந்தால் Sector Specific Fund என்பார்கள். இதில் ரிடர்ன் மற்றும் ரிஸ்க் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து இருக்கும். FMCG, Pharma, IT போன்ற துறை சார்ந்த மியூச்சல் பண்ட்களை அதிகம் பார்க்க முடியும். ஆனாலும் இத்தகைய நிதிகளை நாம் பரிந்துரை செய்வதல்ல.

மியூச்சல் பண்ட்களை ஒரு பாதுகாப்பிற்காக தான் நாம் முதலீடு  செல்கிறோம். அந்த சூழ்நிலையில் இப்படி ஒரே துறையில் முதலீடு செய்யும் பண்ட்களுக்கு  பதிலாக நாமே நேரடியாக சந்தையில் முதலீடு செய்து விடலாம். இரண்டிலும் பெரிய வித்தியாசம் அல்ல.

மேற்சொன்ன எல்லா நிதிகளை எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கி விற்று கொள்ளலாம்.

இது போக வரி சலுகை பெறுவதற்காக உள்ள பரஸ்பர நிதிகளுக்கு ELSS Tax Saving Fund(ELSS) என்று பெயர். இந்த நிதிகளில் முதலீடு செய்யப்படும் நிதியை குறைந்தது 3 வருட காலத்திற்கு எடுக்க முடியாது. இதில் வருமான வரி சலுகை லாபமும் கிடைக்கிறது.

பார்க்க: வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

Debt Fund

இந்த பரஸ்பர நிதி அரசு, தனியார் நிறுவங்கள் சார்ந்த கடன் பத்திரங்களில் (Bond) முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக நிலையான வருமானம் கொடுக்கவை. Fixed Deposit என்பதை விட சிறிது அதிக வருமானம் கொடுக்கும்.

ஓய்வூதியம் பலன் முதியவர்கள் Fixed Deposit முறையில் குறைந்த வட்டி கிடைக்குமாயின் இத்தகைய நிதியினை முயற்சிக்கலாம். அதிலும் குறிப்பாக அரசு துறை சார்ந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருக்கும் மியூச்சல் பண்ட்கள் அதிக பாதுகாப்பானது.

மேலும் அதிகமான விவரங்களை நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund கட்டுரையில் பார்க்க.

Balanced Fund

இங்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலும் சில விகிதங்களில் பகிர்ந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஓரளவு சராசரியான வருமானம் மற்றும் சராசரியான ரிஸ்கும் இருக்கும். பொதுவாக மியூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு புதிதாக வருபவர்கள் இந்த பிரிவினை தேர்ந்தெடுக்கலாம்.

நமது தேவை என்ன என்பதனை பொறுத்து அதற்கேற்றவாறு முதலீடு செய்ய மியூச்சல் பண்ட்களில் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்த பதிவில் CheckList போன்ற  கேள்விகளை தருகிறோம். அதற்கு பதில் அளிக்கும் போது நமக்கு எந்த பிரிவு மியூச்சல் பண்ட் தேவைப்படும் என்பது தெரிந்து விடும்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

பங்குச்சந்தை எப்படி தொடங்குவது?

நமக்கு பல மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் இவ்வாறு வருகின்றன.
  1. முதலீட்டு ஆலோசகரை பரிந்துரை செய்யுங்கள்.
  2. பங்குச்சந்தை பற்றி சொல்லிக் கொடுக்கும் வகுப்புகளை பரிந்துரை செய்யுங்கள்.
  3. கட்டண முதலீட்டு ஆலோசகராக இருங்கள். நாம் பணத்தை முதலீடு செய்ய தொடர்பு கொள்கிறோம்.
சில ஆண்டுகள் வெளியே இருந்து விட்டதால் முழுமையான தகவல்கள் தெரியாமல் மேற்படி கேட்ட பரிந்துரைகளை செய்வது கடினமாக உள்ளது.

சனி, 14 செப்டம்பர், 2013

Astra Microwave: ஏன் பரிந்துரைக்கிறோம்?

கடந்த பதிவில் Astra Microwave நிறுவனத்தின் அறிமுகத்தையும், நிதி நிலை அறிக்கையும் பார்த்தோம். இந்த பதிவில் பரிந்துரைப்பதன் காரணங்களையும் கூறுகிறோம்.

கடந்த பதிவினைக் காண இங்கு அழுத்துங்கள்.

பங்கு ஒரு பார்வை: Astra Microwave

கடந்த ஒரு பதிவில் இந்த பங்கினைப் பற்றி வினா கேட்டிருந்தோம். சரியான விடை "Astra Microwave Products(AMP)". கலந்து கொண்டவர்களுக்கு நன்றி!

இந்த பங்கினை நமது போர்ட் போலியோவில் பரிந்துரைக்கிறோம். இந்த நிறுவனம் "GROWTH" அடிப்படையில் சிறிய நிறுவனங்கள், பொறியியல் பிரிவில் பரிந்துரைக்கப்படுகிறது.

HIGH RISK முதலீட்டார்களுக்கு ஏற்றது. அதனால் தங்கள் போர்ட் போலியோவில் 5% க்குள் வைத்துக் கொள்ளுவது நல்லது. 2 அல்லது 3 வருடங்களில் இரண்டு மடங்கு "RETURN" கொடுக்க வாய்ப்புள்ளது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பொருளாதார செய்தி துளிகள் (14/09)


இது கடந்த வாரத்தில்(07/09 ~ 14/09) வெளிவந்த சில பொருளாதார செய்திகள். இத்தகைய செய்திகளைக் கண்காணிப்பது பங்குச்சந்தை முதலீட்டர்களுக்கு பயனளிக்கும் என்பதால் பகிர்கிறோம்.

வாரந்தோறும் நம்மைக் கடந்து செல்லும் முக்கிய பொருளாதார செய்திகளை பகிர முயற்சிக்கிறோம்.

சுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது? -2


முந்தைய பதிவின் தொடர்ச்சி..(கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது?)


மேலே உள்ள சேவைகளை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரம் அடியுங்கள். அதை அனைவருக்கும் விநியோகம் செய்யுங்கள்....

சுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது? - 1

இது ஒரு சுய தொழிலுக்கான ஆலோசனை. இந்த பதிவின் சாராம்சம் முகநூலில் எமக்கு கிடைக்கப் பெற்றது. நண்பர் டிமிடித் பெட்கோவ்ஸ்கி அவர்களுக்கு நன்றி!  இதனைப் பகிர்ந்து கொள்வது நிறைய பேருக்கு பயனாக இருக்கும். தற்போதைய உலகில் வாய்ப்புகள் பரந்து கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்வோம்!

கால் டாக்ஸி போல் கால் பைக் ஆரம்பிப்பதே இந்த ஆலோசனை. நாமும் பெங்களூரில் இருந்த போது இந்த சிந்தனை இருந்தது. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறோம். நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்! - 3


நமது பங்கு பரிந்துரையில் அடுத்த பங்காக வரும் சனியன்று ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறோம். அதற்கு முன் அந்த பங்கினை பற்றிய சில குறிப்புகள் கொடுக்கிறோம். அந்த பங்கினை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

முதலீடுகளை எப்பொழுதுமே ஒரே இடத்தில் முதலீடு செய்யக் கூடாது. சில சமயங்களில் சில முதலீடுகள் நல்ல லாபத்தை தரலாம். எந்தவொரு முதலீடும் நிரந்தரமாக தொடர்ந்து லாபத்தை தந்து கொண்டிருப்பதில்லை.

ஒரு நடுத்தர பொருளாதார வர்க்கத்தில் இருக்கும் நமக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு சமநிலை பெற்ற வருமானம் என்பதும் அவசியமாகிறது.

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? என்ற எமது தொடர் போன்ற கட்டுரையில் இதனை விரிவாக விளக்கி உள்ளோம். அப்படியொரு முதலீடுகளை பிரித்து போடும் சூழ்நிலையில் தங்கம், ரியல் எஸ்டேட் போன்று பங்குசந்தையும் குறிப்பிடலாம்.பங்குசந்தை என்பதை சூதாட்ட காரர்களின் சங்கமம் தான். ஏனென்றால் இங்கு ட்ரேடிங் முறையில் விரைவாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு சந்தையை ஏற்றி, இறக்கி கொண்டிருப்பார்கள். ஒரு தனி மனிதனாக இந்த ஏற்ற, இறக்கங்களை தினசரி பார்த்து கொண்டிருந்தால் ரத்த அழுத்தம் தான் அதிகரிக்கும்.

அதிலும் சந்தைக்கு புதிதாக வருபவர்கள் நேரடி பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

அதற்கு ஒரு மாற்று வழி தான் Mutual Fund.

Mutual Fund என்பதும் பங்குச்சந்தை அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடு தான். பங்குசந்தையில் புதிதாக வரும் அனுபவமில்லாதவர்களுக்கு நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்பது கடினமான செயல்.

அதற்காக தேர்ச்சி பெற்ற பொருளாதார அறிவுடையவர்களை வைத்து ம்யூச்சல் பண்ட் மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்கென்று Franklin, HDFC, SBI என்று  பல நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாடிககையாளர்கள் தேவைக்கேற்ப பல நிதிகளை மேலாண்மை செய்யும்.

அடிப்படையில் ம்யூச்சல் பண்ட் என்பது ஏதேனும் ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்யாமல் பல துறைகளை சார்ந்த, சிறிய, பெரிய நிறுவனங்கள் என்று கலந்து முதலீடு செய்வார்கள். இது போக நிலையான வருமானம் கொடுக்கும் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள்.

இதனால் முதலீட்டில் ஒரு வித ரிஸ்க் சமநிலை ஏற்படுகிறது. அது நமது முதலீட்டிற்கு நேரடி பங்குகளை விட ஒரு வித பாதுகாப்பு கொடுக்கிறது.

Mutual Fundன் செயல் திறன் Net Asset Value(NAV) என்ற அலகினை பொருத்து அளவிடுவார்கள். இது சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு பங்கு யூனிட்டிற்கும்  ஒரு விலை இருப்பது போல ம்யூச்சல் பண்ட்டின் ஒரு யூனிட் தான் NAV.

உதாரணத்துக்கு ஒரு பரஸ்பர நிதியின் ஒரு NAV யூனிட் 50 ரூபாய் என்றால், நாம் 10000 ரூபாய் முதலீடு செய்வதாக கருதிக் கொண்டால் நமக்கு 200 யூனிட் கிடைக்கும்.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து NAV அலகு 55 ரூபாய்க்கு சென்றால் நமது முதலீட்டின் மதிப்பு 200*55=11000 ரூபாயாக மாறியிருக்கும்.

பொதுவாக Fixed Deposit கணக்கை விட ம்யூச்சல் பண்ட்டில் அதிக ரிடர்ன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது சராசரியாக வருடத்திற்கு 12%க்கும் மேல் எதிர் பார்க்கலாம். ஆனாலும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Mutual Fund நிதிகளும் பங்குகளை போன்று SEBI அமைப்பு மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.  இந்தியாவில் ம்யூச்சல் பண்ட் என்பது 1963ல் அரசு துறை சார்ந்த UTI வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு SBI, Canara Bank, Punjab National Bank போன்ற வங்கிகளும் அறிமுகம் செய்தார்கள். 1993 பிறகு Franklin போன்ற தனியார் நிறுவனங்களும் அறிமுகம் செய்தார்கள்.

இந்தியாவில் தற்போது 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. நாம் இந்த வருடங்களை கூறக் காரணம் ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனம் சார்ந்த வரலாறினை(Past History) அறிந்து கொள்வதும் மிக முக்கியம்.

ஏற்கனவே சொன்னது போல் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட ம்யூச்சல் பண்ட்களை நடத்தி வருகிறார்கள் என்றால் அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வருவது இயற்கை. அதனால் ம்யூச்சல் பண்ட் நிதிகளை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இந்த தொடரின் அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.

ம்யூச்சல் பண்ட் தொடரின் அடுத்த பாகத்தினை எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? என்ற கட்டுரையில் பார்க்கலாம்.


தடங்கலுக்கு வருந்துகிறோம்

கடந்த 2 நாட்களாக பிளாக்கரில் ஏற்பட்ட பிரச்சினையால் பதிவிட முடியாமல் போய் விட்டது.  இது பிளாக்கர் அப்டேட்டால் வந்த பிரச்சினையாக அறியப் படுகிறது. யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தவும். ஒரு சின்ன பழுது பார்த்தல் மட்டும் தேவைப்படும்.

சனி, 7 செப்டம்பர், 2013

நாமும் எரிகிற வீட்டை அணைப்போம்


நாம் எம்முடைய பதிவுகளில் பல நேரங்களில் தற்போதைய மத்திய அரசை விமர்சித்துள்ளோம். ஆனால் சில அரசியல் வாதிகள், ஆட்சியாளர்கள் பண்ணும் தவறுகளால் 100 கோடி பாமர மக்களும் பாதிக்கப்படுவது கொடுமையானதே. கிட்டத்தட்ட 1991ல் இருந்த கடுமையான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சூழ்நிலையை மிக எளிமையாக சொல்லும் ரத்தன் டாடா

ஒரு செய்தி தளத்தில் ரத்தன் டாடாவின் இந்த பேட்டி வாசிக்க நேரிட்டது. தற்போதைய இந்திய பொருளாதார சூழ்நிலையை மிக எளிமையாக கூறியுள்ளார். எமக்கு மிகவும் பிடித்திருந்ததால் பகிருகிறோம்.

"நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிதி நெருக்கடியின் போதும் இந்தியாவின் மரியாதையை உயர்த்தியவர் ஆனால் சமீப காலத்தில் நாம் அந்த மரியாதையை இழந்து விட்டோம்"

எமது ஒரு சிறிய அறிமுகம்

பல நேரங்களில் இந்த தளத்தில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது எமது வாசர்கள் பதிவிற்கான தலைப்பைக் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்  தான் இது வரை ஒரு ஐந்து பதிவுகளாவது எழுதப்பட்டிருக்கும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

இந்திய மருந்து விலை கட்டுப்பாடு யாரை எப்படிப் பாதிக்கும்?

இந்திய அரசு கடந்த வருடம் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கையை(Drug Price Control Policy) அறிமுகப்படுத்தியது. அதன் படி 334 அடிப்படை மருந்துகளின் விலை 70% வரை குறைக்கப்படும்.

ஒரு இந்திய குடிமகனாக இந்த நடவடிக்கை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்க வேண்டிய நடவடிக்கை.

இது தான் இந்திய GDP வளர்ச்சி (FY14 Q1)

2013-14 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு GDP தரவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. மொத்த GDP 4.4% என்ற அளவில் வளர்ந்துள்ளது.கடந்த வருடம் இதே சமயத்தில் 4.8% என்ற அளவில் இருந்துள்ளது. 

திங்கள், 2 செப்டம்பர், 2013

தரை உயரம் குறைக்கப்படும் மகிந்திரா XUV-500

முந்தைய பதிவுகளில் ஆட்டோ பிரிவில் மகிந்திரா & மகிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனத்தின் பங்குகளை  பரிந்துரை செய்திருந்தோம். இந்த பதிவு இந்நிறுவனத்தின் வியாபார தொடர்புடைய ஒரு முக்கிய நடவடிக்கை பற்றிய செய்தி. அதனை பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.