புதன், 26 பிப்ரவரி, 2014

CERC பரிந்துரை, 15% சரிந்த NTPC, பயன்பெறும் TATA

CERC அமைப்பின் பரிந்துரை பங்குச்சந்தையில் மின் துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு நேர்மறை, எதிர்மறை என்று இரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைப பற்றிய விரிவான பதிவே இந்த கட்டுரை.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்?

கடந்த வெள்ளியில் சிவநாடார் HCL நிறுவனத்தில் இருந்து விலகி விடுவார் என்று ஒரு செய்தி வந்தது. அதனால் HCL நிறுவன பங்கு ஒரே நாளில் 4% அளவு அதிகரித்தது. அதனைப் பற்றிய எமது பார்வையை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி, 22 பிப்ரவரி, 2014

வளர்ச்சியை எதிர்பார்க்கும் வங்கி பங்குகள்

இந்த பதிவானது வங்கித் துறைக்கு இந்த ஆண்டில் வந்துள்ள நேர்மறை செய்திகளின் தொகுப்பையும், அதனால் ஏற்படும் பலன்களையும் விவரிக்கிறது.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

அதிர வைத்த ஒரு லட்சம் கோடி பேஸ்புக் டீல்

இந்த பதிவு நேற்று பேஸ்புக் நிறுவனம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு whatsapp நிறுவனத்தை வாங்கியது பற்றியது.

புதன், 19 பிப்ரவரி, 2014

வருமான வரியும் சின்ன வீடும்..

இந்த கட்டுரையில் வீட்டுக் கடன் மூலம் எப்படி அதிக பட்ச வருமான வரி பலனைப் பெறலாம் என்று பார்ப்போம்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இலவசத்தில் வீழும் தமிழகம்..

சில நாட்களாக பதிவு எழுதமுடியவில்லை. சோம்பலும், ஒரு வகை அலுப்பும் தான் காரணம். அதனால் தான் மொக்கைப் பதிவுகளை எழுதுவதற்கு பதிலாக கொஞ்சம் பொறுத்து இருந்து எழுதலாம் என்று இருந்து விட்டேன்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

(16-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

இந்த கட்டுரை வருமான வரியை சேமித்து, அதே நேரத்தில் அதிக ரிடர்ன் தந்து உதவும் ELSS Mutual Fund பற்றியது.

வருமான வரி சேமிப்பதற்கு 80Cயின் படி அரசு சில சேமிப்பு வழிகளை கொடுத்துள்ளது. இந்த சேமிப்பில் இருக்கும் தொகைக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

உதாரணத்திற்கு 10% வருமான வரி படியில் வருபவர் 15,000 ரூபாயும், 20% வருமான வரி படியில் வருபவர் 30,000 ரூபாயும், 30% விகிதத்தில் வருபவர் 45,000 ஒரே வருடத்தில் சேமிக்க முடியும்.

பார்க்க: வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?
இந்த சேமிப்பானது இன்சூரன்ஸ் திட்டங்கள், பிக்ஸ்ட் டெபாசிட், NSC, மியூச்சல் பண்ட் என்று பலவற்றிற்கும் வரும். இதில் மியூச்சல் பண்ட் தவிர மற்ற எல்லாவையும் குறைந்தது ஐந்து வருட முதலீடுகளாகும்.

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு மட்டும் மூன்று ஆண்டுகளே லாக்-இன் டைம். அதனால் குறைந்த காலம் மட்டுமே வரி விலக்கு முதலீடுகளை வைத்துக் கொள்பவர்கள் மியூச்சல் பண்ட்டை விரும்பலாம்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்

இந்த பதிவு அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய வேலை வாய்ப்பு சந்தையை ஆக்கிரமிக்க இருக்கும் வங்கித்துறை நிகழ்வுகளைப் பற்றியது.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?

இந்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறும் வழி முறைகளைப் பற்றி விவரமாக பார்ப்போம்.


கடந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்று எழுதி இருந்தோம். நல்ல ரெஸ்பான்ஸ். நன்றி!

அந்த கட்டுரையைக் காண இங்கு செல்லவும்.
வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வங்கிகளின் காப்பீடு, முதலீடு முகவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவசர கோலத்தில் ஏதாவது ஒரு முதலீடு செய்து வரியை சேமிக்கலாம் என்று நிறைய பேர் இந்த திட்டங்களில் சேருவார்கள். அப்புறம் தான் அதில் உள்ள எதிர்மறைகள் தெரிய வரும்.


எமக்கும் சில அனுபவங்கள் உண்டு. ஆரம்ப காலங்களில் சில முகவர்களிடம் வரி சேமிக்க சில முதலீடுகள் செய்து ஏமாற்றம் அடைந்தது உண்டு. அதில் ஒன்று ULIP Insurance என்ற திட்டம். அதன் பிறகு தான் தெரிந்தது. இதனை விட FDல் அதிக பலன் உள்ளது. இதனைப் பற்றி தனியாக கட்டுரை எழுதுகிறோம்.

இந்த பதிவில் வரியைக் குறைப்பதற்காக உள்ள வழிமுறைகளை விரிவாக பார்ப்போம்.

புதன், 5 பிப்ரவரி, 2014

வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.


அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். அடுத்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம்.

ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்?

வருமான வரி பதிவு செய்யும் காலம் நெருங்கி வருவதால் இந்த வாரம் வருமான வரி தொடர்பான பதிவுகளை அதிகமாக எழுதுகிறோம்.


இந்திய அரசின் புள்ளி விவரப்படி, வெறும் 3% மக்களே வருமான வரி கட்டுகிறார்கள். அப்படி என்றால் மீதி  97% பேரும் இரண்டு லட்சம் வருட வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்களா? இல்லை..அமெரிக்காவில் 45% மக்கள் வரி கட்டுகிறார்களாம். எப்படி இவ்வளவு வரி ஏய்ப்பு எளிதாக நடக்கிறது?

முதலில் நமது நிதி கட்டமைப்பு ஒன்றும் அந்த அளவு சரியாக இல்லை. யாருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது மிக கஷ்டமாக உள்ளது.


தற்போதைய கணினி யகத்தில் இதனை செயல்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதற்கு முதலில் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சந்தை சரிகிறது..வாங்கி போடுங்க..

இன்று சென்செக்ஸ் இருபதாயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க உற்பத்தி துறை புள்ளி விவரங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

விடுமுறை அனுபவங்கள்...

கடந்த மூன்று வார கால விடுமுறை நேற்று முடிந்தது. சொந்த ஊரில் உறவுகளுடன், நண்பர்களுடன் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலம் இருந்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் சொந்த ஊர் தான்..