வெள்ளி, 31 மார்ச், 2017

இந்திய பங்குச்சந்தை எதிர்நோக்கும் பாதகமான இரு காரணிகள்

தற்போதைய சந்தை காளையின் பிடியில் இருந்து அவ்வளவு எளிதில் கீழே வராது போல் தான் தெரிகிறது.

ஞாயிறு, 26 மார்ச், 2017

வோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்?

இந்தக் கட்டுரை சில நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சில வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.

சனி, 25 மார்ச், 2017

உள்வர்த்தக கூத்தில் மாட்டிக் கொண்ட ரிலையன்ஸ்

கடந்த ஒரு மாதமாக ஜியோ என்ற ஒற்றை பதத்தில் ரிலையன்ஸ் பங்கு கடுமையான ஏற்றத்தைக் கண்டு இருந்தது.

திங்கள், 20 மார்ச், 2017

SANKARA IPOவை வாங்கலாமா?

நேற்று தான் CL Educate IPOவை பற்றி எழுதி இருந்தோம். அந்த IPOவின் மூன்று நாட்கள் விண்ணப்பிக்கும் தேதி முடியும் முன்னரே அடுத்த ஐபிஒ வெளிவந்து விட்டது.

ஞாயிறு, 19 மார்ச், 2017

CL Educate IPOவை வாங்கலாமா?

இன்று முதல் (மார்ச் 20) CL Educate நிறுவனத்தின் ஐபிஒ வெளிவருகிறது.

வெள்ளி, 17 மார்ச், 2017

காளையின் சந்தையில் எந்த துறை பங்குகளில் முதலீடு செய்யலாம்?

தற்போது சந்தை 29,500 சென்செக்ஸ் புள்ளிகளையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டார்ட் அப்பும், மன்னாரன் கம்பெனியும்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கட்டுரை.

கடந்த மூன்று நாட்களாக பதிவு எழுத முடியவில்லை.


நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் என்ற தொழில்முனையும் நிலையை நோக்கி பயணிக்க இருப்பதால் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை துறக்க வேண்டிய சூழ்நிலை.



அதனால் கடைசி நேர வேலைப்பளு அலுவலத்தில் அதிகமாக இருக்க, நமது தளத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இனி எமது கவனம் அதிக அளவில் முதலீடு தளத்திலும் இருக்கும். அதனால் தொய்வில்லாமல் எமது கட்டுரைகள் வர முயற்சிக்கிறோம். அத்துடன் விரைவில் எமது கட்டண சேவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து அறிவிக்கிறோம்.

திங்கள், 13 மார்ச், 2017

IPOவில் பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது?

கடந்த வாரம் D-Mart ஐபிஒவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்து இருந்தோம். ஆனால் இந்த ஐபிஒ மட்டும் கிட்டத்தட்ட 108 மடங்குகள் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 12 மார்ச், 2017

உ.பி.யால் துள்ளிக் கொண்டிருந்த சந்தை தாவ ஆரம்பிக்கிறது

இந்த வருடம் தமிழகத்திற்கு குழப்பமாக இருக்க, அம்மா சமாதி தியான மடமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய பங்குச்சந்தைக்கு அமர்க்களமாக இருக்கிறது.

வெள்ளி, 10 மார்ச், 2017

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 2

ராதாகிருஷ்னன் தமணியின் பங்குசந்தை வெற்றி தொடரின் முந்தைய பகுதியை இங்கு பார்க்கலாம்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1


இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே ஒரு தனி நபர் வெறும் பங்குச்சந்தையில் புழலும் பங்குகளை மட்டும் வாங்கி ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயன்றார் என்றால் ஆர்.கே.தமணியாகத் தான் இருக்கும்.




2000த்தின் தொடக்கத்தில் VST Industries என்ற ஒரு நிறுவனம் தான் ITC நிறுவனத்திற்கு போட்டியாக சிகரெட் தயாரித்துக் கொண்டிருந்தது.

VST நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்த தமணி பங்குச்சந்தையில் கிடைத்த பங்குகளைக் கொண்டே நிறுவனத்தின் 15% பங்குகளை கைப்பற்றிக் கொண்டார்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1

இதற்கு முன் பங்குச்சந்தையில் வெற்றியை தொட்டவர்கள் என்ற வரிசையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன்  பபெட் போன்றவர்கள் பற்றி எழுதி இருக்கிறோம்.


ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை பார்த்தால் 5000 ரூபாயில் ஆரம்பித்து இன்று 13,000 கோடியைத் தொட்டுள்ளார்.


Prof M என்று சொல்லப்படும் மற்றதொரு பேராசிரியர் பங்குசந்தையில் மட்டும் ஆயிரம் கோடியை  தாண்டியுள்ளார்.

பார்க்க:

இதையெல்லாம் பேராசையை தூண்டும் விதத்தில் இருந்தாலும் ஒரு நம்பிக்கையை தரும் விதத்தில் எடுத்துக் கொண்டால் நமக்கும் பங்குச்சந்தை வெற்றி என்பது தூரமல்ல.

ஏனென்றால் இவர்கள் அனைவருமே பரம்பரை பணக்காரர்கள் அல்ல. சிறிய முதலீட்டில் ஆரம்பித்து அதிக பொறுமையுடன் இருந்ததால் வெற்றியை சுவைத்தவர்கள்.

வியாழன், 2 மார்ச், 2017

ஏற்றம் காணும் சந்தையில் என்ன செய்வது?

நாமும் பல நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக காத்திருக்கிறோம்.