செவ்வாய், 22 அக்டோபர், 2019

நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund

எம்முடைய தெரிவை விட வாசகர்களின் வேண்டுதலுக்கிணங்க கட்டுரைகள் எழுதும் போது அந்த கட்டுரை மிக பிரபலமாகி விடுகிறது.

அந்த வகையில் நண்பர் ராஜா கேள்விக்கேற்ப  Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

அது அதிக அளவு பார்வையாளர்களை ஈர்த்து இருந்தது.



அதன் விளைவு Quoraவில் கேள்வி பதில்களுக்கு கூட தமிழில் பதிலளிக்க ஆரம்பித்தோம்.

நான்கு நாட்களில் நான்காயிரம் பார்வைகளை பெற்று நல்ல ஆதரவு கிடைத்து இருந்தது.

எமது பதில்களை இங்கு பார்க்கலாம். MUTHALEEDU.IN Quora கேள்வி பதில்கள்

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரையில் Comment பகுதியில் நண்பர் சந்துரு அவர்கள் Gilt Fund பற்றி எழுதுமாறு கேட்டு இருந்தார்.

திங்கள், 21 அக்டோபர், 2019

BREXIT - சந்தையின் மிகை நடிப்பு?

பங்குசந்தைகள் மும்பையை மையமாக வைத்து செயல்படுவதால் இன்று மகராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய பங்குசந்தைக்கு விடுமுறை.

நாளை பல விளைவுகளையும் சந்தையில் காண முடியும்.



கடந்த வாரத்தின் கடைசி இறுதி இரண்டு நாட்களிலும் BREXIT என்பது சந்தையில் எதிரொலித்தது.

ஐரோப்பியன் யூனியனில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் பிரதமர் ஒரு புதிய டீலை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

அதனால் இந்திய சந்தையும் நேர்மறையாக மேலே சென்றது.

ஒரு வித்தியாசமாக FIIகளிடம் வாங்கும் முயற்சியை பார்க்க முடிந்தது.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா? - Video

PMC வங்கி ஊழல்கள் வந்திருந்த போதே எழுதி  வேண்டிய கட்டுரை.

நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை.



அதன் பிறகு Fixed Deposits குறித்து மக்களிடம் ஒரு பதற்றம் வந்த போதே வீடியோ வடிவத்தில் கொடுக்கலாம் என்று கருதினோம் .

தற்போது கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா?  என்ற தலைப்பில் வீடியோ வடிவத்தில் பகிர்கிறோம்.


இதில் PMC வங்கி ஊழல், கூட்டுறவு வங்கியில்  முதலீடு செய்யலாமா?, திவாலானால்  எவ்வளவு கிடைக்கும்? போன்றவை குறித்து உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளது.





செவ்வாய், 15 அக்டோபர், 2019

அடுத்து ரியல் எஸ்டேட் தேக்கம் ?

இது வரைக்கும் உற்பத்தி மற்றும் தொழில் துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் தான் வங்கிகளுக்கு தண்ணி காட்டி வந்தன.

அதனால் தான் வங்கிகளின் வாராக் கடன் விகிதமும் அதிகரித்து இருந்தது.



அரசு இந்த பிரச்சினை எல்லாம் குறைந்து இந்த வருடம் சரியாகி வரும் என்று எதிர்பார்த்து இருந்தது.

ஆனால் பிரச்சினை தற்போது வேறு வடிவத்தில் வந்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் வங்கிகளிடம் கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் பில்டர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா?

நண்பர் ஒருவர் Liquid Funds நிதியில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? என்று கேட்டு இருந்தார்.

அதனை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.



தற்போது நம்மிடம் இருக்கும் முதலீடு சூழ்நிலை என்பது வித்தியாசமானது.

இந்தியாவில் இது வரை பார்த்து இராத நிலையாக கூட இருக்கலாம்.

பங்குகளில் முதலீடு செய்தால் கொட்டும் அருவி போல் வீழ்கின்றன.

வங்கிகளில் FDயில் வைத்தால் வட்டி குறைவு. போதா குறைக்கு கூட்டுறவு வங்கிகளே திவாலாகி வருகின்றன.

LIC முதலீடுகள் மீது கூட தற்போது சந்தேகம் வைக்கப்படுகிறது.

புதன், 2 அக்டோபர், 2019

நம்பிக்கை இல்லா சமூகம்

நண்பர்கள் நிறைய பேர் IRCTC ஐபிஒவை வாங்கலாமா? என்று கேட்டு இருந்தார்கள்.

தற்போது நிறைய எழுதுவதற்கு தலைப்புகள் ஏகப்பட்ட வந்து கொண்டு தான் இருக்கின்றன.



ஆனால் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு வந்திருப்பதால் சில வேலைகள் காரணமாக அமைதியில் இருந்தோம்.

ஒரே வரியில், IRCTC ஐபிஒவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.

இந்தியன் ரயில்வேயின் எதிர்காலமே IRCTCவை நம்பி தான் இருக்கிறது.

அதே போல் நிர்ணயித்த பங்கு விலையும் மலிவானது.