சனி, 31 ஆகஸ்ட், 2013

நமது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்று இந்த தளத்தைப் பார்த்தோர் எண்ணிக்கை(Page Views) 15000 தாண்டியது. மிக்க மகிச்சி!

பொதுவாக பொருளாதாரம் சார்ந்த பதிவுகளுக்கு மற்ற திரை, அரசியல் சார்ந்த பதிவுகளை விட வரவேற்பு குறைவாகவே இருக்கும். அதற்கு பொருளாதார பதிவுகளின் புரிதல் கடினத்தன்மையே காரணமாக இருக்கும்.

இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott

முந்தைய பதிவில் மருந்து நிறுவன பங்கு(pharmaceutical) பற்றி வினா கேட்டிருந்தோம். அதில் நண்பர் ஜீவன்சிவம் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு எமது நன்றிகள்! இது போல் ஒரு நண்பர் பெயரில்லாமல் Piramal என்று பின்னுட்டம் போட்டிருந்தார். கிட்டத்தட்ட அவரது விடை சில மாற்றங்களுடன் சரியானது. நண்பரே! உங்கள் பெயரை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்!

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்

இந்த வாரம் பங்குசந்தையில் ஒரு செய்தி பார்க்க நேரிட்டது. VIP Industries பங்குகள் ஒரே நாளில் 7% கூடி விட்டது. அதற்கு காரணம் யாரென்றால் ஒரு தனி மனிதன். அவர் பெயர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

இந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்! - 2

நமது பங்கு பரிந்துரையில் அடுத்த பங்காக வரும் சனியன்று ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறோம். அதற்கு முன் அந்த பங்கினை பற்றிய சில குறிப்புகள் கொடுக்கிறோம். அந்த பங்கினை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இது முதல்வன் ஸ்டைல்: 60 நாளில் 1.9 லட்சம் கோடி மதிப்பு திட்டங்களுக்கு அனுமதி

நமது தற்போதைய அரசின் நிலக்கரி சுரங்க ஊழல்களினால் சுரங்க அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளாமான நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

செய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் "பிளாட்" வாங்க ஆளின்றி வீண்

"கரும்பு, வாழை, நெல் என, ஆண்டு முழுவதும், சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்களை, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி, பல ஆண்டுகளாகியும், வாங்க ஆளில்லாமல் வீணாகி வருகின்றன. பெரு நகரங்களில் சிறப்பாக இயங்கி வந்த, ரியல் எஸ்டேட் தொழில், 2008 முதல், சிறிய நகரங்கள், கிராமங்களில் ஊடுருவின. மேடான, விவசாயத்திற்கு, அதிகம் பயன்படாத நிலங்கள் மட்டுமே, Real Estateக்கு பயன்படுத்தப்பட்டன.

சனி, 24 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 70% ஏழை மக்களுக்கு மாதம் தோறும் மூன்று ரூபாய்க்குள் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்க வழி செய்கிறது.இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒரு வருடத்திற்கு அரசுக்கு 1,25,000 கோடி ரூபாய் செலவாகும். இது இந்திய உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: HDFC வங்கி

நமது கடந்த பதிவில் (இந்த பங்கை கண்டு பிடியுங்கள்!) ஒரு சிறிய வினாவைக் கேட்டிருந்தோம்.

இது தான் வினா
இந்த பங்கு வங்கி துறையை சார்ந்தது. கடந்த 40 காலாண்டுகளாக அதாவது 10 வருடங்களாக குறைந்தபட்சம் 30% லாபம் ஈட்டி வந்துள்ளது. நிகர NPA 0.5% க்கும் குறைவாக உள்ளது."

புதன், 21 ஆகஸ்ட், 2013

இந்த பங்கை கண்டு பிடியுங்கள்! -1

இன்று எமது தளத்தின் மொத்த வருகை எண்ணிக்கை பத்தாயிரத்தை எதிர் பார்த்ததை விட குறைந்த தினங்களில் தாண்டியுள்ளது. நமது பதிவுகளுக்கு கிடைத்த வருகை எண்ணிக்கையும் அதனின் கிடைத்த பின்னூட்டங்களும் ஒரு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தன.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி



தலைப்பை பார்த்தவுடன் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை. அதனால் நீங்களும் ஒரு தடவை இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

1980ல் விப்ரோவின்(Wipro) 10 பங்குகளை 100 ரூபாய்க்கு வாங்கி, அதாவது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது அதனுடைய மதிப்பு 43.6 கோடியாக மாறி இருக்கும்.



இதில் DIVIDEND வருமானம் என்பது தனி. அது கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தங்கம் இப்பொழுது வாங்கலாமா?


இன்றைய தினசரியில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. இதற்கான தொடர்பு இங்கே: "டிசம்பருக்குள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்ப்பு. "

"அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.அதனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. "பொதுமக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டது. இதன் பயனாக, ஜூன் மாதம், தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது."" (தினமலர்)

சனி, 17 ஆகஸ்ட், 2013

டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா

நாம் பங்கு ஒரு பார்வை: மகிந்திரா-மகிந்திரா என்ற பதிவில் மகிந்திரா & மகிந்திரா நிறுவன பங்குகளை பரிந்துரை செய்திருந்தோம்.

இந்த பதிவின் சுருங்கிய சாராம்சம்
"இந்த வருட பருவ மழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விவசாய வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிராக்டர் மற்றும் இதர கனரக வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும். இந்த பிரிவில் மகிந்திரா நிறுவனம் குறிப்பிட்டதக்க சந்தையை கொண்டிருப்பதால் லாபம் உயரலாம்."

அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய இந்திய விவசாயம்

இந்த பதிவு மற்ற பதிவுகளில் இருந்து சிறிது மாறுபட்டது. இன்றைய நாகரிகமான இளைய தலைமுறை செய்ய மதிப்பில்லாது கூச்சமாக கருதும் விவசாயத்தைப் பற்றிய பதிவு இது. இதனை இன்றைய தொழில் நுட்பங்கள் மூலம் நாகரிகமான தொழிலாகவும் மாற்றலாம்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சிறு முதலீட்டார்களுக்கு பங்கு சந்தையில் சில டிப்ஸ்

நாம் பங்குசந்தையில் நுழைந்த போது நண்பர்கள், பெற்றோர் என்று நிறைய பேர் அது ஒரு சூதாட்டம் என்று தடுத்தனர். பல நேரங்களில் அது உண்மை என்றே தோன்றியது. ஏனென்றால் 2008-09 அமெரிக்க பொருளாதார பின்னடைதல் ஏற்பட்ட போதும் சத்யம் ஊழல் நடைபெற்ற போதும் பல பேர் நம் கண் முன் பங்குச்சந்தை இழப்புகளால் கஷ்டப்படுவதைப் பார்க்க முடிந்தது.

இந்த கடுமையான தருணங்களில் FII போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்கள் தப்பி விடுவார்கள். ஆனால் பாதிக்கப்படுவது பங்குச்சந்தை பற்றி சரி வர தெரியாமல் முதலீடு செய்யும் சிறு முதலீட்டார்கள் தான். சிறு முதலீட்டர்களின் நஷ்டமே பெரிய தலைகளுக்கு லாபமாக செல்கிறது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?

இந்த வாரம் இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று குறைவாக 1US$ = 61 ரூபாய் என்ற விகிதத்தில் மாற்றப்பட்டு வருகிறது.


கீழே உள்ள அட்டவணை 1996லிருந்து இந்திய ரூபாயின் மதிப்பினை சொல்கிறது.

Currencycode199620002004200620072008200920102013
USDUSD35.44444.95245.34043.95439.548.7611245.33545859.878

புதன், 14 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: BRITANNIA

BRITANNIA:
பிஸ்கட், கேக், ரஸ்க், என்று பொதிக்கப்பட்ட உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக தயிர், நெய்  என்று பால் சார்ந்த உணவு பொருட்களையும் தயாரித்து தமது சந்தையை வேகத்துடன் விரிவாக்கி வருகிறது . Good day, Marie, Tiger என்று இதனுடைய பிராண்ட்கள் மிக பிரபலமாக இருப்பது இதற்கு மிகப்பெரிய பலம்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

SBIன் லாபம் சரிந்தது ஏன்?

இந்திய வங்கி துறையில் முதுகெலும்பாக உள்ள SBI வங்கி இந்த காலாண்டின் முடிவுகளை நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட நிகர லாபம் 14% குறைந்துள்ளது. (ஜூன்'13).

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM

ASHAPURA நிறுவனம் Bentonite, Bauxite, Kaolin போன்ற பல தாதுக்கள்  உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.  இவை சிமெண்ட், காகிதம், கிளீனிங் பொருட்கள், ஒய்ன் போன்றவை தயாரிப்பதில் பயன்பட்டு வருகின்றன. உலக சந்தையில் 10% கொண்டுள்ளது. SENSEXல் MIDCAP பிரிவில் உள்ளது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

பண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது?

சில செய்திகளில் பார்த்திருப்போம். CRR விகிதம் மாற்றப்பட்டுள்ளது என்று செய்தி வந்த உடனே தொழில் துறையில் இருப்பவர்கள் அலறுவார்கள்.SENSEX ஒரு அடி குறையும்.  அதனால் பங்கு சந்தை சார்ந்த முதலீட்டில் இருப்பவர்கள் இதை அறிந்து கொள்வது  மிக அவசியமானது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தமிழ் பதிவில் விளம்பர வருமானம் பெற ...

இன்று இணையம் ஒரு மிகப்பெரிய வருமான சந்தையாக மாறி விட்டது.ஆனாலும் Ad Network இணைய தளங்களான google adsense, adchoice போன்றவற்றில் தமிழ் பதிவுகள் ஏற்றுகொள்ளப்படாதது ஒரு பெரிய குறை தான்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா?

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மாத சம்பளத்தில் 12% PFக்கு பிடித்தம் செய்யபடுகிறது. அதே போல் நிறுவனங்களும் 12% பங்களிப்பு வழங்குகின்றன.

இதில் பகுதி (12%+3.67%) வருங்கால வைப்பு நிதி(PF)க்கும் பகுதி(8.33%) ஓய்வூதியம்(Pension) என்று செல்கிறது.

புதன், 7 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

நிறைய பேருக்கு பரிச்சயமான ஒரு நிறுவனம். இந்தியாவின் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. கார், கனரக வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 

தற்போதைய இந்திய பொருளாதர தேக்கம் காரணமாக கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதர தேக்கம் மற்றும் தற்போதைய பங்குசத்தை சரிவுகளால் குறைந்த விலையில் (850 ரூபாய்க்கு) கிடைக்கிறது. 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்

அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்து அசந்து போனேன்.

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ் பக் ஷி ஷேர் மார்கெட் பற்றி சொல்லிய பல விஷயங்கள் அவசியம் பகிர தோன்றியது !