வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தற்போதைய பங்குச்சந்தை சரிவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

கடந்த பதிவில் பங்குசந்தையை பதற வைத்த காரணிகளை பற்றி எழுதி இருந்தோம்.

திங்கள், 25 செப்டம்பர், 2017

பங்குச்சந்தையின் தொடர்ச்சியான சரிவின் பின் பல காரணிகள்

இன்றுடன் தொடர்ந்து ஐந்து நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வருகிறது.

புதன், 20 செப்டம்பர், 2017

அமைதிபடுத்த அதிக அளவு செலவழிக்க தயாராகும் அரசு

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐபிஒக்கள் வெளிவந்ததால் நாமும் அது தொடர்பாகவே அதிகமாக எழுத வேண்டி இருந்தது.

அதனால் பங்குச்சந்தை நிகழ்வுகளை பற்றி அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.



 ஆனால்  ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது.

காளையின் பிடியில் இருக்கும் பங்குச்சந்தையில் திவாலான கம்பெனியைக் கூட மார்க்கெட் உள்ளது என்று சொன்னால் வாங்கி விட ஆட்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக ஐபிஒக்கள் என்பது சந்தைக்கு வரும் போது மலிவான பங்கு விலையில் வரும். அதனால் ஒரு செயற்கையாக டிமேண்ட் உருவாக்கப்பட்டு பங்கு விலை கூடுவது தான் காலங்காலமாக நடந்து வருகிறது.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ICICI Lombard IPOவை வாங்கலாமா?

இந்த மாதம் முழுவதும் IPOக்களை பற்றி எழுதுவதில் வேறு நிகழ்வுகள் தொடர்பாக அதிக கட்டுரைகளை எழுத முடியவில்லை.

வியாழன், 14 செப்டம்பர், 2017

கட்டணமே இல்லாமல் டிமேட் கணக்கு திறக்க எளிய வழி

பங்குச்சந்தையில் பங்குகள் வாங்குவதற்கு டிமேட் கணக்கு அவசியம் என்பது நமக்கு தெரிந்தது தான்.

புதன், 13 செப்டம்பர், 2017

Capacit’e Infra IPOவை வாங்கலாமா?

உச்சத்தில் இருக்கும் சந்தையில் ஐபிஒக்களின் எண்ணிக்கை வரிசையில் நிற்கிறது.

திங்கள், 11 செப்டம்பர், 2017

Matrimony.com IPOவை வாங்கலாமா?

காளையின் பிடியில் இருக்கும் சந்தையில் தொடர்ச்சியாக ஐபிஒக்கள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்து, இன்று  செப்டம்பர் 11  முதல் matrimony.com நிறுவனத்தின் ஐபிஒ வரவுள்ளது.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நல்ல முதலீடு வாய்ப்பு - பெட்ரோல், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (2)

இந்த கட்டுரையின் முந்தைய தொடர்ச்சியை இங்கு காணலாம்.
பார்க்க:
நல்ல முதலீடு வாய்ப்பு - கச்சா எண்ணெய், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (1)

இதில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு இனி மின்சாரத்தை பயன்படுத்த ஊக்கவிக்க ஆரம்பிக்கும்.

நல்ல முதலீடு வாய்ப்பு - பெட்ரோல், மின் சேமிப்பு, பேட்டரி கார், தொடர்புபடுத்துக! (1)

இதற்கு முன்பு ஒரு கட்டுரையில் விப்ரோ நிறுவனத்தில் 1000 ரூபாய்  முன்பு முதலீடு செய்து இருந்தால் இப்பொழுது 43 கோடியாக  திரும்ப பெற்றிருப்போம் என்று எழுதி இருந்தோம்.

புதன், 6 செப்டம்பர், 2017

Bharat Road Network IPOவை வாங்கலாமா?

நேற்று தான் Dixon Technologies நிறுவனத்தின் ஐபிஒவை பற்றிய எமது பார்வையை வைத்து இருந்தோம்.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

Dixon Technologies IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் Apex Frozen Foods ஐபிஒவை வாங்க பரிந்துரை செய்து இருந்தோம்.

நேற்று முதல் பட்டியலிடப்பட்ட நாளிலே 20%க்கும் மேல் லாபம் அளித்தது. நமது வாசகர்கள் பயனடைந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

வாழ்த்துக்கள்!



அடுத்து நாளை, செப்டெம்பர் 06 முதல் Dixon Technologies, Bharat Road Networks என்ற இரண்டு நிறுவனங்களின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இதில் Dixon Technologies நிறுவனத்தைப் பற்றி இன்று பார்ப்போம்.

Dixon என்பது ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். LED பல்புகள், திரைகள் போன்றவற்றை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

Panasonics, Philips போன்ற பெரிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் மொபைல், தொலைகாட்சி போன்றவற்றிற்கு தேவையான LED திரைகளை காண்ட்ராக்ட் முறையில் செய்து வருகிறது.

இது தவிர, வாஷிங் மெசின் போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறது.

தற்போது ஐபிஒ மூலம் 600 கோடி ரூபாயை திரட்ட வருகிறது. இதில் பெரும்பகுதி ஏற்கனவே இருக்கும் பெரிய முதலீட்டாளர்கள் வெளியேற ஒரு வாய்ப்பாக கொடுக்கப்படுகிறது.

மீதி கொஞ்சம் நூறு கோடி ரூபாய் அளவு தான் நிறுவன விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேற விரும்புவதை பெரிய அளவில் எதிர்மறை நிலையாக தான் பார்க்க வேண்டி உள்ளது.

அதே போல், நிறுவனத்தின் பெரும்பாலான வியாபாரம் மொபைல் விற்பனையை சார்ந்தே உள்ளது. அதனால் அவற்றில் வீழ்ச்சி ஏற்படும் போது நிறுவனத்தையும் பாதிக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் வியாபாரம் 1000 கோடியில் இருந்து 2500 கொடியாக உயர்ந்து உள்ளது.

அதே போல் லாபமும் 14 கோடியில் இருந்து 50 கொடியாக உயர்ந்து உள்ளது.

இது ஒரு நல்ல நேர்மறை வளர்ச்சி என்று குறிப்பிடலாம்.

ஆனால் இந்த நிலையில் ஐபிஓவில் குறிப்பிடும் 1760 ரூபாய் பங்கு விலை என்பது நிறுவனத்தின் P/E மதிப்பை 40க்கு அருகில் கொண்டு செல்கிறது.

இந்த மதிப்பு கொஞ்சம் அதிகம். அதனால்  மேலும் பங்கு விலை அதிக அளவில் உயரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அதனால் Dixon ஐபிஒவை நண்பர்கள் தவிர்க்கலாம்!

அடுத்து நாளை Bharat Road Networks ஐபிஒ தொடர்பாக சந்திக்கலாம்!