(இந்த கட்டுரை 10-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)
தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கு கணிசமாக செலவழிக்க வேண்டி வரும். இதற்கு மட்டும் 15 முதல் 20% வரை தேவையில்லாமல் போக வாய்ப்பு உண்டு.
தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு இந்த செய்கூலி, சேதாரம் என்பது தேவையில்லாத செலவுகள் தான்.
அதனை தவிர்ப்பதற்கு மத்திய அரசே தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு Sovereign Gold Bonds என்று பெயர்.
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது அன்றைய சந்தை விலையைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவாக தங்கத்தை பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம். தங்க விலை ஏற, ஏற இந்த முதலீட்டு பத்திரங்களின் மதிப்பும் கூடி விடும்.