ஞாயிறு, 30 நவம்பர், 2014

முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்

பெட்ரோல் விலை ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்து கொண்டே செல்கிறது. இது போக, கடந்த சனியன்று பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடர்வோம் என்றும் அறிவித்துள்ளது.

வெள்ளி, 28 நவம்பர், 2014

சென்னையில் டாடாவின் பட்ஜெட் விலை அபார்ட்மெண்ட்

சென்னை மற்றும் பெங்களூரில் டாடா நிறுவனம் பட்ஜெட் அபார்ட்மெண்ட் வீடுகளை கட்டித் தரும் பணியில் இறங்கியுள்ளது. சென்னையில் பூந்தமல்லி மற்றும் OMR போன்ற இடங்களில் இந்த அபார்ட்மெண்ட்கள் வருகின்றன.

வியாழன், 27 நவம்பர், 2014

அதிக காசு உள்ளவர்கள் MRF டயரோடு பங்குகளையும் வாங்கலாம்.

இன்று ஒரு புதிய பங்கை இலவசமாக பரிந்துரை செய்கிறோம். MRF Tyres என்ற நிறுவனத்தை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமது சென்னையை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான். இதன் முழு விரிவாக்கம் Madras Rubber Factory.

புதன், 26 நவம்பர், 2014

தனது வியாபர எல்லையை சுருக்கும் சாம்சங்

சாம்சங் என்பது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக நமக்கு அறியப்பட்டு இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இன்ஜினியரிங், மருத்துவம், சில்லறை வர்த்தகம், பாதுகாப்பு ஆயுதங்கள், கப்பல் கட்டுதல், கெமிக்கல் என்று பல பரிமாணங்கள் சாம்சங் குழுமத்திற்கு உள்ளது.

கோடக் வங்கியின் மெகா டீலுக்கு வந்த சுவராஸ்ய பிரச்சினை

எமது முந்தைய ஒரு கட்டுரையில் கோடக் மகிந்திரா வங்கி இங்க் வைஸ்யா வங்கியை வாங்குவதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இதில் இங்க்கை விட கோடக்கிற்கு இந்த டீல் லாபகரமானது என்றும் எழுதி இருந்தோம்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி போடலாம்

நேற்று இந்திய சந்தையில் இருநூறு புள்ளிகளுக்கும்  மேல் சரிவு காணப்பட்டது. இறுதியாக 160 புள்ளிகளில் சரிவடைந்து முடிவடைந்தது.

திங்கள், 24 நவம்பர், 2014

வளர்ச்சியை மகிழ்ச்சியை வைத்து அளவிடும் பூடான் (ப.ஆ - 35)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

தற்போது சந்தை அதற்கும் மேலே மேலே என்று பறந்து கொண்டு இருப்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து தான் உள்ளது. இதனால் நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டி உள்ளது.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

GDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

கடந்த வாரம் ஒரு கட்டுரையில் பொருளாதார சரிவிற்குள் நுழையும் ஜப்பான் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். அதில் GDP தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்று கொண்டு இருந்தால் பொருளாதாரம் தேக்க நிலைக்கு செல்வதாக கருதலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

வியாழன், 20 நவம்பர், 2014

கோடக் மகிந்திரா வங்கியுடன் இங்க் வைஸ்யா இணைந்தது

நேற்று இந்திய வங்கித் துறையில் ஒரு பெரிய டீல் நடந்து முடிந்தது. இந்த டீல் மூலம் கோடக் மகிந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக மாறுகிறது. (KOTAK MAHINDRA BANK)

தவறான வர்த்தகத்தை தடுக்க உதவும் INSIDER TRADING (ப.ஆ - 33)

இந்த கட்டுரை பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் ஒரு பகுதி.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

பங்குச்சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பாக அண்மைய காலங்களில் நடந்து இருக்கும் பங்கு பரிவர்த்தனைகளை பார்ப்பது வழக்கம்.

புதன், 19 நவம்பர், 2014

100 மாதங்களில் இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ்

பொருளாதார வீழ்ச்சிகளின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சேமிக்கும் தன்மை மக்களிடம் நன்கு குறைந்து விட்டது. அதாவது 36 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைந்து விட்டது.

திங்கள், 17 நவம்பர், 2014

பொருளாதார வீழ்ச்சிக்குள் நுழையும் ஜப்பான்

ஒரு நாட்டின் தொழில் உற்பத்தி (GDP) தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்றால் அந்த பொருளாதாரம் தேக்க நிலைக்கு (RECESSION) செல்கிறது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த வரையறையின் படி, ஜப்பான் தற்போது பொருளாதார தேக்க நிலைக்கு சென்றுள்ளது.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இன்னும் சந்தை சரிய வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரத்திலே சந்தையில் ஒரு சிறிய திருத்தம் எதிர்பார்க்கப்படுவதாக கூறி இருந்தோம். ஆனால் சில நாட்கள் மட்டும் குறைந்து மீண்டும் சந்தை 28,000 புள்ளிகளிலே நிலை கொண்டுள்ளது.

முதலீடு தளத்தில் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன

Revmuthal.com தளத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வியாழன், 13 நவம்பர், 2014

தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்

முதலீடு' தளத்தின் ஆரம்ப கால கட்டுரையில் முதலீடுகளை பிரிப்பது எப்படி? என்று ஒரு சிறு தொடரை சுருக்கமாக எழுதி இருந்தோம். அதில் முதலீடுகளை ஒரே இடத்தில முதலீடு செய்யாமல் பரவலாக முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

புதன், 12 நவம்பர், 2014

குழப்பத்தில் முடிந்த ஏர்டெல்லின் லூப் டீல்

இந்தியாவில் முதன் முதலில் டெலிகாம் தொழிலை ஆரம்பித்தது யாரென்று பார்த்தால் BPL மொபைல் நிறுவனம் தான். ஆனால் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக BPL வளர முடியாமல் பொய் விட்டது.

செவ்வாய், 11 நவம்பர், 2014

ராஜீவ் பங்கு முதலீட்டுத் திட்டம் - ஒரு விமர்சனம்

கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பல பங்குகள் 50% அளவு ரிடர்ன் கொடுத்துள்ளன. ஆனால் இந்த லாபம் முழுவதும் இந்தியர்களுக்கு கிடைத்து இருக்குமா என்றால் இல்லை. இந்த லாபத்தின் பெரும்பங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தான் சென்று உள்ளது.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கலாம்?

தற்போது சந்தை 28,000 புள்ளிகளைத் தொட்டு சிறிய திருத்த நிலைக்கு வந்துள்ளது. இந்த சமயத்தில் அடுத்தக் கட்ட நகர்வுகள் எதனை அடிப்படையாக வைத்து இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

சனி, 8 நவம்பர், 2014

'முதலீடு' சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்கிறது

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்!

நாம் முந்தைய ஒரு கட்டுரையில் (செய்நன்றி கூறும் தருணம்) எமது கட்டண போர்ட்போலியோ சேவையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை(5%) சமூக உதவிக்கு பயன்படுத்துவதாக கூறி இருந்தோம். அந்த கடமையை இன்று நிறைவு செய்தோம்.

இவங்க வேலை பார்த்தால் அவ்வளவு ஆச்சர்யம்

சில வருடங்களுக்கு முன்னர் படித்த செய்தி நியாபகம் வருகிறது. பெங்களூரில் இருந்து கௌஹாத்திக்கு செல்லும் ரயில் இது வரை ஒரு முறை கூட சரியான சமயத்திற்கு சென்றது கிடையாதாம். அதனால் வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த ரயில் சரியான நேரத்திற்கு சென்று விட்டால் அதனைப் பொறித்து வைப்பதற்கு நாம் ஒரு கல்வெட்டை தேட வேண்டி வரும்.

புதன், 5 நவம்பர், 2014

பெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுயதொழில் தொடர்புடைய கட்டுரையை எழுதுகிறோம்.


கடந்த சில நாட்கள் முன்னர் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் டீலர்களுக்கு விண்ணப்பங்கள் கேட்டுஇருந்தார்கள். இதற்கான கடைசி தேதி நவம்பர் 12, 2014.

நாமும் ஆர்வமாக இருந்ததால் சில தகவல்களை சேகரிக்க முற்பட்டோம். இறுதியில் சில தனிப்பட்ட காரணங்களால் தொடர முடியாமல் போய் விட்டது. ஆனாலும் சேகரித்த தகவல்களைப் பகிர்வது நமது வாசகர்களுக்கு பலனாக இருக்கும் என்று நம்புகிறோம்.



இந்த டீலர்களுக்கான விளம்பரம் ஏற்கனவே நமது செய்தி தாள்களில் தமிழ்லும் ஆங்கிலத்திலும் வெளிவந்து விட்டது. அதே போல் ஆன்லைன் தளத்திலும் முழு விவரங்கள் உள்ளன.

இந்த முறை தமிழ்நாட்டில் பரவலாக டீலர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன என்று தெரிகிறது. அதனால் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 3 நவம்பர், 2014

CROSS HOLDING: முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நரித்தந்திரம்

நாம் முன்னர் நேர்மையில்லாத CAIRN பங்கை வாங்கலாமா? என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம். CAIRN நிறுவனம் தனது தாய் நிறுவனத்திற்கு மற்ற முதலீட்டாளர்கள் விருப்பம் இல்லாமலே ஒரு மிகப் பெரிய தொகையை வெறும் 3% வருடாந்திர வட்டிக்கு கொடுத்தது. அதனால் அந்த பங்கை விட்டு விலகி விடலாம் என்று கூறி இருந்தோம்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

வீட்டு லோன் மூலம் பங்குச்சந்தையில் சரியான நேரத்தில் முதலீடு செய்வது எப்படி?

பங்குச்சந்தையில் LIQUIDITY என்ற ஒரு பிரபலமான வார்த்தை உண்டு. இதனை கையிருப்பு பணம் என்று கருதிக் கொள்ளலாம்.