திங்கள், 30 டிசம்பர், 2013

புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள்!

நண்பர்களுக்கு எமது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உங்கள் பங்கு வர்த்தகம் மற்றும் முதலீடு மடங்குகளில் பெருகவும் எமது வாழ்த்துக்கள்!

பங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்?-2

கடந்தப் பதிவில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்து இருந்தோம். அதன் அடுத்த பாகம் இங்கே தொடர்கிறது.

பங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்?-1

இந்த கட்டுரையில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்கிறோம். எமது போர்ட்போலியோ போல் இதுவும் வாசகர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறோம்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

இந்த பங்குகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்

கடந்த வாரத்தில் மத்திய அரசு எடுத்த சில முடிவுகள் சில பங்குகள் மீது நீண்ட கால நோக்கில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் உள்ளது. இதனை இங்கு பகிர்கிறோம்.

வியாழன், 26 டிசம்பர், 2013

பங்குசந்தையிலும் ஒரு பெரியார் புரட்சி தேவை

தற்பொழுது பங்குச்சந்தையில் ஜோதிடம்(Astrlogy) பார்த்து முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனைப் பற்றிய விமர்சனம் தான் இந்த கட்டுரை.

திரும்பிப் பார்க்கிறோம்! ஒரு லட்சம் கடந்த பொருளாதாரப் பதிவு,

நேற்று முன்தினம் எமது தளத்தில் இது வரை பார்க்கப்பட்ட பக்கங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. இந்த தருணத்தில் சில நிகழ்வுகளைத் திரும்பி பார்க்க விரும்புகிறோம்.

புதன், 25 டிசம்பர், 2013

வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி

பல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சில டீல்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

நண்பர்களுக்கு எமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

நாளை கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சில இணையதளங்கள் சலுகைகள் வழங்கியுள்ளன. இதனை எமது வாசகர்களுக்காக இங்கு தொகுத்து உள்ளோம்.

திங்கள், 23 டிசம்பர், 2013

தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ்

இந்த கட்டுரை 2013 ஆண்டு முழுவதும் பல பிரச்சனைகளில் உழன்று கொண்டு இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தைப் பற்றியது. அதாவது ஒரு சரியான அடுத்த தலைமுறை கிடைக்காமல் தவித்து வருவதைப் பற்றியது.

சனி, 21 டிசம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள் - 5

இந்த கட்டுரை எமது மியூச்சல் பண்ட் தொடரின் செயலாக்க கட்டுரையே.

முந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம், நமக்கு எது தேவை?, சில சுய கேள்விகள், மியூச்சல் பண்ட்டை அளவிடுதல் என்று பல பிரிவுகளை பார்த்தோம்.

அதனை நிகழ் வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் சுருக்கமாக பார்ப்போம். இதனால் இந்த தொடரின் முதல் பாகத்தில் இருந்து படித்து வருவது அதிக பலனை தரும்.

பார்க்க: ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1




எமது நெருங்கிய நண்பர் ஒருவர் ஏஜென்ட் சொல் கேட்டு ஒரு மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தார். அதுவும் வருமான வரி கட்டுவதற்காக அவசரம் அவசரமாக செய்த ELSS முதலீடு.

அடுத்து மூன்று வருடம் கழித்து பார்த்தால் நெகடிவ் ரிடர்ன். நஷ்டத்தில் எடுக்க மனதில்லாமல் அடுத்து வருடம் வரை வைத்து பார்க்கலாம் என்றால் அதிலும் மீளவில்லை.

இவ்வளவிற்கும் அவர் படித்து ஐடி துறையில் இருப்பவர் தான். இணையம் எளிதில் கிடைக்கும் வசதிகள் உள்ளது. ஆனாலும் அந்த தவறிற்கு காரணம் என்று பார்த்தால் அவசரத்தில் தவறாக முதலீடு செய்தது, ஏஜென்ட் பேச்சை அப்படியே நம்பியது என்பது தான்.

பொதுவாக நமது ஊரில் பார்த்தால் நிதி மேலாண்மை செய்யும் ஏஜெண்ட்களுக்கு முதலீடு தொடர்பான ஆழ்ந்த அறிவு என்பது குறைவு தான். எந்த பாலிசி, முதலீடு என்றாலும் இவ்வளவு போட்டால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கிடைக்கும் என்ற பேராசை காட்டுவது தான் முதல் படி. அதில் பல பேர் விழுவார்கள்.

அது எப்படி நிலையான வருமானம் வரும்? என்று மேலும் கேள்வி கேட்டால் அதன் பின் மேல் உள்ள மேலாளரை காட்டுவார்கள். அவர் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் விளக்கி எப்படியும் முதலீடு செய்ய வைத்து விடுவார்.

அதன் பின் நாம் முதலீடு செய்யும் வரை அவர்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். அது எத்தனை வருடங்கள் சென்றாலும் சரி தான்.அதனால் கமிஷன் அதிகம் தரும் மியூச்சல் பண்ட்களை தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள். அது நல்ல நிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியின் முதலீட்டு காலம் முடியும் போது யாரும் திருப்பி கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.

எம்மிடம் கேட்டால் Mutual Fund ஒன்றும் ராக்கெட் அறிவியல் போன்று புரியாத ஒன்று அல்ல. பங்குச்சந்தைக்கு நேரடியாக போவதற்கு பதிலாக Mutual Fund ஒரு ஏஜென்ட் போன்று செயல்படுகிறது. அதற்கும் நாம் ஏஜென்ட் ஒருவரை வைத்துக் கொள்வது அவசியமற்றது.

அடுத்து அவசர அவசரமாக வருமான வரிக்காக அலுவலகத்தில் கேட்கும் போது முதலீடு செய்வது. அதிக தவறுகள் இதில் தான் வருகிறது. இதற்கு மாதந்தோறும் SIP முறையில் முதலீடு செய்து வரலாம். டிமேட் ஸ்டேட்மென்ட்களே அலுவலகத்தில் சமர்ப்பிக்க போதுமானது. வருமான வரி பலனும் கிடைத்து விடும்.

சில எளிய அடிப்படை வழிகளை கூறுகிறோம்.

மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களை பார்த்தால் மூன்று பிரிவினர் தான். கண்டிப்பாக இதில் ஏதாவது ஒன்றில் நாம் வந்திருவோம்.

ஒன்று, 
இளமை துள்ளல் கொண்ட இப்பொழுது தான் வேலை கிடைத்து முதலீட்டை ஆரம்பிப்பாவார்கள். இவர்களுக்கு குறைந்தது இன்னும் 30 வருடங்கள் வேலை பார்க்க அளவு நேரம் இருக்கிறது. அதனாக கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம். அதிக அளவு பங்குசந்தையில் முதலீடு செய்யப்படும் Equity Fund ஏற்றது. 20% அளவு வருட  ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது,
35 வயதில் குடும்பம், குழந்தை என்று சுமைகளை சுமககும் நேரம். இந்த நேரத்தில் வருமானமும் தேவைப்படும். ஆனால் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க முடியாது. அவர்கள் Balanced Fund நிதியில் முதலீடு செய்யலாம். 15% அளவு ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

மூன்றாவது,
50 வயது கடந்து பென்ஷன் அல்லது Fixed Deposit வட்டியை நம்பி இருப்பவர்கள். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க முடியாது. இவர்கள் Debt Fund வகையில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 10% அளவு ரிட்டர்ன் எதிர்பார்க்கலாம்.

பார்க்க: 

எந்த நிறுவனம்?


அடுத்து எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்று. கேட்டால் பெரிய வங்கி துறை சார்ந்த SBI, HDFC, Axis Bank போன்றவற்றின் நிதிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. 

மற்ற மியூச்சல் பண்ட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏதேனும் சூழ்நிலையில் நிறுவனத்தையே விற்று விடுகிறார்கள். அதன் பின் வேறொரு பண்ட்டில் இணைக்கிறார்கள். நிர்வாக சிக்கலும் ஏற்படுகிறது. இங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் ஏற்பட்டு விடுகிறது.

எந்த மியூச்சல் பண்ட்?

இறுதியாக இந்த கட்டத்தில் வரும் போது குறைந்த பட்சம் உங்கள் மியூச்சல் பண்ட் பட்டியல் ஐந்து என்ற எண்ணிக்கையில் சுருங்கி இருக்கும். இதில் எந்த முதலீடும் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆனாலும் அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி?  -4 என்ற கட்டுரையை படியுங்கள். அதில் பல டெக்னிக்கல் தகவல்கள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும்.

என்ன தான் தியரி போன்று விளக்கினாலும் அனுபவமாக எதுவும் வராது. அதனால் ஒரு சிறிய தொகையில் நீங்களே ஒரு நிதியை மேற் சொன்ன அடிப்படைகளை வைத்து தேர்ந்தெடுங்கள். MoneyControl தளத்தில் சென்று மியூச்சல் பண்ட் பட்டியலை முழுவதுமாக பார்க்க முடியும்.

அதன் பின் Paper Investing முறையில் ரிடர்ன் மற்றும் தவறுகளை குறித்து வரலாம். அதனை அடுத்து வரும் முதலீடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த தொடரின் அணைத்து பாகங்களையும் E-Book வடிவில் பின்னர் பகிர்கிறோம். ஈமெயில் வழியாக இணைந்து இருங்கள்.


மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி? -4

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் தொடரின் கடந்த பாகங்களில் எந்த பிரிவு மியூச்சல் பண்ட் நமககு உகந்தது? என்பதை முடிவு செய்வது பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

தற்பொழுது எந்த பிரிவு நமக்கு தேவை என்று முடிவு செய்யப்பட்டதால் சந்தையில் இருக்கும் 200 மியூச்சல் பண்ட்களில் 20 நிதிகளாக பில்டர் செய்யப்பட்டு இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதனை பார்ப்போம். அதற்கு தனிப்பட்ட நிதிகளை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றி தெரிந்திருத்தல் நலம்.



நடத்தும் நிறுவனம்?


எந்த நிறுவனம் அந்த மியூச்சல் பண்டை நடத்துகிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாக Mutual Fund முதலீடுகள் என்பது ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் வகையாகும்.

அந்த சூழ்நிலையில் அந்த நிதியை நடத்தும் நிறுவனங்கள் நன்றாக இருப்பதும் அவசியமாகும். அண்மையில் கூட பிரபலமான Franklin Templeton நிறுவனத்தின் நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டு எப்பொழுது முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்ற நிலையும் வந்தது.

பார்க்க:
மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து 
சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

அதனால் மியூச்சல் பண்ட் சார்ந்து இருக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் கடந்த பத்து வருடங்களில் இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்காமல் இருத்தல் அவசியம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

SBI, HDFC வீட்டுக்கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது

இந்த மாதத்தில் RBI வங்கிகளுக்கான Repo Rate, Reverse Repo Rate என்று எதிலும் மாற்றம் செய்யவில்லை.

வியாழன், 19 டிசம்பர், 2013

இது காமெடி டைம்...

எப்பவும் பொருளாதாரம் என்று நமது பதிவுகளைப் பார்த்து போரடித்துப் போன வாசகர்களுக்கு ஒரு சின்ன காமெடி ப்ரேக்..

புதன், 18 டிசம்பர், 2013

உலக அரங்கில் கேலியாகும் இந்திய அரசின் நியாயம்

கடந்த சில நாட்களாக தேவயானி பிரச்சினையை படிக்காமல் விட்டு விட்டேன். இன்றைக்கு தினமலர் பார்த்தால் நம்ம சல்மான் குர்ஷீத் தேவயானியை மீட்காமல் நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்கிறார்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

இந்திய நுகர்வோரைக் குறிவைக்கும் அந்நிய நிறுவனங்கள்(GSK Offer)

GlaxoSmithkline Pharmaceuticals என்ற நிறுவனம் சந்தையில் தமது பங்குகளை 26% அதிகம் கொடுத்து வாங்குவதாக அறிவித்துள்ளது.

திங்கள், 16 டிசம்பர், 2013

அந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC

இன்று RBI அந்நிய முதலீட்டார்கள் HDFC வங்கி பங்குகளை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்தது.

டிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க?(ப.ஆ- 6)

கடந்தப் பதிவில் டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5) என்பது பற்றி எழுதி இருந்தோம்.

சில நண்பர்கள் டிமேட் கணக்கு ஆரம்பிப்பது எப்படி என்று கேட்டு இருந்தார்கள்.

சனி, 14 டிசம்பர், 2013

ஒரு விவசாயியின் அனுபவம்

இந்த கட்டுரை விவசாயிகளின் அவல நிலையை உண்மையான தகவல்களுடன் மிக எளிமையாக கூறுகிறது. நன்றி அமுதா, முகநூல்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஊழியர்களை வைத்து விளையாடும் நோக்கியா

சென்னை நோக்கியா நிறுவனத்தின் வரி ஏய்ப்பு விவகாரத்தில் இந்திய அரசு திணறி வருகிறது.

வியாழன், 12 டிசம்பர், 2013

டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் இந்த பாகத்தில் நடைமுறையில் டிமேட் கணக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

புதன், 11 டிசம்பர், 2013

சென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது?

இன்று சென்செக்ஸ் மீண்டும் 21000 புள்ளிகளுக்கு கீழே வந்து கொண்டு இருக்கிறது. இருபதாயிரத்தையும் தொடலாம் என்கிறார்கள். இந்த சமயத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

இணைய வணிக திருவிழா (Great Online Shopping Festival )

டிசம்பர் மாதம் 11, 12, 13 தினங்களில் இணைய வணிக தளங்களின் பண்டிகை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சில இணையதளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கியுள்ளன.

கோல் இந்தியா நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம்

தரமற்ற நிலக்கரியை சப்ளை செய்ததற்காக COAL INDIA நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ

' REVMUTHAL' போர்ட்போலியோ நேற்றைய நிலவரப்படி 22% லாபம் கொடுத்துள்ளது. இது சராசரியாக மூன்று மாதங்களில் கிடைத்த லாபம் ஆகும்.

வரிவிலக்கு போனதால் சரிவை சந்தித்த NTPC

பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை நீக்க சொல்லி பரிந்துரைக்கப்பட்டதால் இன்று NTPC பங்குகள் 10% சரிவை சந்தித்தன.

திங்கள், 9 டிசம்பர், 2013

3 மாதத்தில் 67% லாபம் கொடுத்த ASHAPURA

எமது போர்ட்போலியோவில் ASHAPURA MINECHEM என்ற நிறுவனத்தை 40 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். இன்று இந்த பங்கின் மதிப்பு 67 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் நமக்கு கிடைத்த லாபம் 67%. இது மூன்று மாதங்களில் கிடைத்துள்ளது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லிக்கு ஒரு சலாம்

மது, பிரியாணி இல்லை. ஓட்டுக்கு பணம் இல்லை, ஆனாலும் டெல்லி தேர்தலில் இரண்டு பெரிய சக்திகளை எதிர்த்து ஒரு நல்ல வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொடுதததற்க்காக டெல்லி மக்களுக்கு ஒரு சலாம் போடலாம்.

இன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

இன்று பங்குச்சந்தை பிஜேபி பெற்ற மாநிலத் தேர்தல்கள் வெற்றியால் பங்குச்சந்தை உணர்ச்சிவசப்பட்டு அதிக உயரம் செல்ல வாய்ப்புள்ளது.

சனி, 7 டிசம்பர், 2013

PFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்

PFC நிறுவனத்தின் FPO Offer 5 மடங்கு அளவு அதிகமாக வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் நேற்று 2.5% பங்கு விலை அதிகரித்தது.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

50% லாபம் கொடுத்த Finolex பங்கு

நமது போர்ட் போலியோவில் "FINOLEX CABLES" என்ற பொறியியல் நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :

இந்த நிறுவனம் 52 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 78 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது நமக்கு இரண்டு மாதங்களில் 50% லாபம் கொடுத்து உள்ளது.

40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்

இந்த வாரத்திற்கான ஹாட் டீல்..

அமேசான் தளத்தில் பொறியியல் மேற்படிப்பு தொடர்பான GATE புத்தகங்கள் 40% சலுகை விலையில் கிடைக்கின்றது.

வியாழன், 5 டிசம்பர், 2013

ஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா?

இந்த கட்டுரை கெயில் என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த அளவுக்கு மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களைப் பிடுங்க முயலுகிறது என்பதைப் பற்றியது.

கருத்துக் கணிப்புக்கே துள்ளிக் குதித்த பங்குச்சந்தை

இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் வரை அதிகரித்து இறுதியில் 250 புள்ளி உயர்வில் நிலை நின்றது. நிப்டி 80 புள்ளிகள் வரை அதிகரித்தது.

புதன், 4 டிசம்பர், 2013

வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி

HDFC வங்கியில் வீட்டு கடன் திட்டமிடுபவர்களுக்காக இந்த பகிர்வு. HDFC வங்கி தனது வீட்டுக் கடன் வட்டியை 0.10% அதிகப்படுத்தி உள்ளது.

18% லாப வளர்ச்சி கண்ட Abbott India

நமது போர்ட் போலியோவில் "ABBOTT INDIA" என்ற மருந்து நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott

திங்கள், 2 டிசம்பர், 2013

பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது? (ப.ஆ - 4)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின்  நான்காம் பகுதி இது.

இந்த பதிவை  'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் சரியான தொடர்ச்சிக்காக அடுத்த சில பதிவுகளில் தான் எழுதுவதாக இருந்தோம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஜான் கெர்ரி என்ன இந்தியாவின் வெளியறவு அமைச்சரா?

எமது தளத்தில் டாலர் வலுவடையக் காரணமான petrodollar முறை பற்றியும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பெரிதாக குறைக்கலாம் என்பது பற்றியும் விரிவான கட்டுரைகள் எழுதி இருந்தோம்.

சனி, 30 நவம்பர், 2013

ஒரே நாளில் 20% உயர்ந்த Ashapura Mine

நமது போர்ட் போலியோவில் Ashapura Mine என்ற நிறுவனத்தை 40 ரூபாய் அளவில் பரிந்துரை செய்து இருந்தோம். அதனுடைய நிதி நிலை அறிக்கை ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியானது. அதில் கடந்த வருட காலாண்டை விட 229% அதிக லாபம் கொடுத்து இருந்தது.

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது? (ப.ஆ - 3)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின்  மூன்றாவது பகுதி இது.

இந்த தொடரின் முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்.
அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது, விற்பது என்ற நிகழ்வுகளோடு சேர்த்து IPO, Delisting, Buy Back என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பங்குச்சந்தையில் ஈடுபடுவர்கள் இந்த நிகழ்வுகளையும் கண்காணித்து வருவது மிக அவசியமானது.

திங்கள், 25 நவம்பர், 2013

தேர்தல் பிரச்சாரங்களுக்கு வேற டாபிக்கே இல்லையா?

தற்போது இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள்  வியக்க வைக்கிறது.

ஆளுங்கட்சிக்கு தான் சொல்லும்படியாக பேச ஒன்றும் இல்லை என்றால் எதிர் கட்சிகளுக்கு விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கம், வேலைவாய்ப்பு குறைவு என்று பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நிறையவே இருக்கின்றன.

வெள்ளி, 22 நவம்பர், 2013

AEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?

எமது முந்தைய பதிவுகளில் AEGIS Logistics என்ற நிறுவனத்தை 130 ரூபாயில் எரிசக்தி துறையில் பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது பங்கு விலை 150 ரூபாய் அருகே சென்று விட்டது.

புதன், 20 நவம்பர், 2013

முதலீடு தளமும் அமேசானும் சேர்ந்து வழங்கும் 26% தமிழ் புத்தக சலுகை

எமது வாசகர்களுக்கு ஒரு பலன் தரும் செய்தி.

சில முயற்சிகளுக்கு பிறகு அமேசான் தளம் எமது வாசகர்களுக்காக ஒரு சலுகையை வழங்கியுள்ளது.

AMARA RAJA நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?

நமது போர்ட் போலியோவில் இருந்து மகிந்திரா நிறுவனத்தை நீக்குவதைப் பற்றி கடந்த பதிவில் எழுதி இருந்தோம்.

விவரங்களுக்கு இந்த பதிவைப் பார்க்க..

திங்கள், 18 நவம்பர், 2013

மகிந்திரா பங்கை விற்று விடலாம்

மகிந்திரா நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை கடந்த வாரம் வெளிவந்துள்ளது. பங்குச்சந்தை, வாகன விற்பனை குறைவு காரணாமாக போன வருடத்தை விட லாபம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தது.

ஆனால் நிதி நிலை அறிக்கை முடிவின் படி கடந்த காலாண்டை விட லாபம் 10% உயர்ந்து ஆச்சரியம் அளித்தது.

24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ

நமது போர்ட் போலியோ தற்பொழுது 12% லாபம் கொடுத்துள்ளது. அதாவது இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு 24000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.


ஞாயிறு, 17 நவம்பர், 2013

இப்படியும் வேலை வாங்கலாம்...

மேலாண்மையில் உள்ளவர்களுக்கு ஒரு எளிய விளக்கம்...

ஒரு யானை தன உணவுக்காக,ஒரு தோட்டத்தில் நுழைந்தால்,அது அங்கு உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும்.

புதன், 13 நவம்பர், 2013

பங்குசந்தையை கலக்கிய BRITANNIA (66% லாபம் உயர்வு)

நமது போர்ட் போலியோவில் "BRITANNIA" நிறுவனத்தை ஆகஸ்ட் 14 அன்று பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
பங்கு ஒரு பார்வை: BRITANNIA

நுகர்வோர் துறையில் பிரபலமான இந்த நிறுவனம் நமக்கு இது வரை 22% லாபம் கொடுத்துள்ளது. மூன்று மாதங்களில் 22% லாபம் கொடுத்து பொன் முட்டையிடும் வாத்து போல் நமது போர்ட் போலியோவில் உள்ளது.

கடந்த சில தினங்கள் முன் காலாண்டு நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. சந்தை தரகர்களின் எதிர் பார்ப்பை விட அதிகமாக லாபம் கொடுத்துள்ளது.

சனி, 9 நவம்பர், 2013

Nokia Lumia 29% சலுகையில் 8000 ரூபாயில்

இது பொருளாதார பதிவல்ல..வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பகிர்கிறோம்.

Nokia Lumia 520 (Black) 8000 ரூபாயில் அமேசான் தளத்தில் 29% சலுகையில் வழங்கப்படுகிறது.

வெள்ளி, 8 நவம்பர், 2013

அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம் (ப.ஆ - 2)

கடந்த பதிவில் பங்குச்சந்தை ஆரம்பம் என்ற தொடர் எழுதுவதாக கூறி இருந்தோம். இங்கு பார்க்க..
பங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம்

'பங்குச்சந்தை அறிமுகம்' தொடரின் முதல் பகுதியாக ஒரு புத்தகத்தை
பரிந்துரைக்கிறோம்.

வியாழன், 7 நவம்பர், 2013

பங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம் (ப.ஆ - 1)

எமது பதிவுகளில் பங்குச்சந்தையில் மிக ஆரம்ப நிலை முதலீட்டார்களுக்கான தகவல்கள் அதிகம் வேண்டும்  என்று சில மின்னஞ்சல்களில் கருத்துகள் வந்திருந்தன.

இது உண்மை தான். இது வரை எமது தளத்தில் ஆரம்ப நிலை முதலீட்டார்கள் பற்றிய பதிவுகள் இடம் பெறவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

புதன், 6 நவம்பர், 2013

229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE

நமது போர்ட் போலியோவில் "ASHAPURA MINECHEM" என்ற நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :

இந்த நிறுவனம் சுரங்கத் துறையில் அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனம். தற்பொழுது இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி மாறிக் கொண்டு இருக்கிறது.

திங்கள், 4 நவம்பர், 2013

94% லாப உயர்வு சந்தித்த ASTRA MICROWAVE

நமது போர்ட் போலியோவில் "ASTRA MICROWAVE" என்ற நிறுவனத்தை 35 ரூபாயில் பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :

ஞாயிறு, 3 நவம்பர், 2013

முஹுரத் வர்த்தகம் - ஒரு அறிமுகம்

இது நேற்றே எழுத வேண்டிய பதிவு. நேரமின்மை காரணமாக இன்று எழுதியுள்ளோம்.

நேற்றைய தினம் ஞாயிறு. ஆனாலும் பங்கு சந்தையில் வர்த்தகம் நடந்தது. அதற்கு காரணம் ஒரு நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சுவராஸ்யமான பழக்கம்..

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஒரு தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது?

நாம் ஒரு பதிவில் CRR எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று எழுதி இருந்தோம்? அதில் ஒரு நண்பர் இவ்வாறு பின்னூட்டம் இட்டிருந்தார். தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது? என்று கேட்டிருந்தார். நல்ல கேள்வி. பதில் கொடுப்பது மிக கடினமானது.

நம்மை ஆளும் அரசுக்கு பல வழிகள் உள்ளன. CRR, Repo rate, Reverse Repo rate என்று பல விகிதங்களை கூட்டுவார்கள், கழிப்பார்கள்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நிலையான வருமானம் பெற ஒரு வழி..Debt Funds

சில நண்பர்கள் நிலையான வருமானம் வர சில வழிகளைக் கூறுமாறு பின்னூட்டம்  இட்டிருந்தார்கள். இப்படி ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட விரும்பவர்களுக்காக இந்த பதிவு.

வழக்கமாக நிலையான வருமானம் என்றால் நமக்கு தெரிந்தது Fixed Deopsit. அது தவிர சில முதலீடுகள் உள்ளன. அதிலொன்று நிறுவனங்கள் வழங்கும் "Tax Free Debt Fund" முதலீடுகள்.

சனி, 26 அக்டோபர், 2013

இது சிரிக்கும் நேரம்..

வீட்டுல தான் மனைவி வீடு வாங்கு என்று நச்சரிசிட்டு இருந்தா நீயும் இப்படி பணம், முதலீடு என்று எழுதி எங்களை டென்ஷன் ஆக்காதே என்று நம்மைப் பார்த்து கோபக்கணைகளை வீசுபவர்களுக்காக இந்த பதிவு.. 

வெள்ளி, 25 அக்டோபர், 2013

உங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர...

இந்த மாதத்தில் இருந்து GAS சிலிண்டருக்கான மானியம் நமது வங்கி கணக்கில் நேரடியாக தரப்படுகிறது. அதனால் இனி அணைத்து சிலிண்டர்களுக்கும் ஒரே விலை தான்.

இது ஒரு வகையில் நல்ல திட்டம் தான். கள்ளசந்தையில் மானியங்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இருந்தாலும் ஆதார் அட்டை அனைவரும் பெறாததால் இன்னும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பல சவால்கள் உள்ளன.

புதன், 23 அக்டோபர், 2013

ஏன் HCL Technologies பங்கைப் பரிந்துரை செய்கிறோம்?

நமது போர்ட்போலியோ நன்றாக சென்று கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி. குறைந்தது 8% லாபம் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் அதனை பகிர்கிறோம்.

எமது முந்தைய ஒரு பதிவில் HCL Technologies பங்கினைப் பரிந்துரைத்து இருந்தோம். நேரம் இல்லாததால் விரிவாக எழுத முடியவில்லை. அதற்கான விரிவான பதிவே இது.

திங்கள், 21 அக்டோபர், 2013

முதலீடைத் தொடர...

நாம் எதிர்பார்த்ததை விட தளம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. நான்கு மாதங்களில் அறுபதாயிரம் முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன.

72 பதிவுகளில் 280 பின்னூட்டங்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலான பின்னூட்டங்கள் எமக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளன.

சனி, 19 அக்டோபர், 2013

உங்க PF கணக்கில காசு இருக்குதா? சீக்கிரம் போய் பாருங்க..

நேற்று இரவு ஒரு வட இந்திய நண்பர் ஹிந்தி செய்தித்தாளில் வந்த PF கணக்கில் நடந்த ஊழலைப் பற்றி சொன்னார்.

அந்த  செய்தியின் சுருங்கிய சாராம்சம் இது தான்.

மொத்தமுள்ள 8.15 கோடி PF கணக்குகளில் 30 சதவீத, அதாவது  2.5 கோடி கணக்குகளில் பணம் எதிர்மறை இருப்பைக் காட்டியுள்ளது.

வியாழன், 17 அக்டோபர், 2013

ரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்! ஓர் அதிரடி ரிப்போர்ட்

இது விகடனில் வந்த ஒரு மிக நல்ல கட்டுரை.

நன்றி விகடன் மற்றும் கட்டுரை ஆசிரியர் சரவணன் அவர்களுக்கு.
மூலம்ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்

HCL Technologies பங்கினை பரிந்துரைக்கிறோம்

தற்போதைய விலையில்(Rs.1100) HCL Technologies நமது போர்ட்போலியோவில் பங்கினைப் பரிந்துரைக்க விரும்புகிறோம்.

இன்று வெளியிடப்பட்ட நிதி நிலை முடிவுகள் நன்றாகவே உள்ளன. சந்தை புறக்காரணிகள் மற்றும் நீண்ட நாளாக உயர்ந்து வந்ததால் பங்கு விலை இன்று 'Correction' ஆகியுள்ளது.

புதன், 16 அக்டோபர், 2013

HDFC வங்கியின் லாபம் 27% உயர்ந்தது

எமது போர்ட் போலியோவில் HDFC Bank பங்கினைப் பரிந்துரை செய்து இருந்தோம்.

அதற்கான தொடர்பு இங்கே.
பங்கு ஒரு பார்வை: HDFC வங்கி

HDFC வங்கியின் இரண்டாவது காலாண்டு ( 2013, 2Q ) நிதி முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

திங்கள், 14 அக்டோபர், 2013

7% லாபத்தில் நமது போர்ட் போலியோ

நமது போர்ட் போலியோவின் தற்போதைய நிலை விவரம் கீழே உள்ளது.

தற்பொழுது போர்ட் போலியோ 7% லாபத்தில் இயங்கி வருகிறது.

அதாவது கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்து 1,35,500 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 9500 ரூபாய் லாபம் அடைந்து இன்றைக்கு 1,45,000 ரூபாயாக இருந்து இருக்கும்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்

"The Weekend Leader" பத்திரிக்கை மூலமாக 23 வயது ஒரு இளம் சாதனை தமிழரைப் பற்றி அறிய முடிந்தது. அவர் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் என்ற இளம் உயிர் தொழில்நுட்ப (Bio-Technology) விஞ்ஞானி.

அதன் பின் அவரிடம் மேலும் தகவல்கள் அறிவதற்காக தொடர்பு கொண்டோம். அவரைப் பற்றிய கட்டுரைகள் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று பலவேறு மொழிகளில் வந்திருப்பதை பகிர்ந்து கொண்டார்.

அவரைப் பற்றி இங்கு எழுதுவது நமக்கு பயனாகவும், அவருக்கு உற்சாகமாகவும் இருக்கும்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

Mahindra பங்கு: சில நல்ல செய்திகள்

கடந்த ஆறு மாதமாக இந்திய பங்குச் சந்தையில் வாகன துறையும், வங்கித் துறையும் பயங்கர வீழ்ச்சி கண்டு வந்தன. தற்பொழுது நிலைமை ஓரளவு மாறத் தொடங்கியதாக எதிர் பார்க்கப்படுகிறது.

தொடர்பான பதிவு:
பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

நாம் எமது பங்கு பரிந்துரையில் Mahindra & Mahindra நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம். அதனால் தற்போதைய மாற்றம் இந்த பங்கிலும் எதிரொலிக்கும் என்று நினைக்கிறோம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா?

கடந்த வாரம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் தலைமயில் அமைக்கப்பட்ட ஒரு குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஒரு புதிய முறையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி அவர்கள் மாநிலங்களை வளர்ச்சியின் அடிப்படையில் பிரித்துள்ளார்கள். பீகார், உத்திரப்ரதேசம் போன்ற சில மாநிலங்கள் மிக குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்றும், அடுத்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைவான வளர்ச்சி அடைந்தவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன,

வெள்ளி, 4 அக்டோபர், 2013

பங்கு ஒரு பார்வை: Finolex Cables

நாம் பரிந்துரை செய்த பங்குகளில் Britannia ஒரு மாதத்தில் 15% வரை லாபம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி. நாம் நீண்ட கால நோக்கில் பரிந்துரை செய்தது. அதனால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் பங்கு விலை ஆயிரம் தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அடுத்த மாதம் காலாண்டு முடிவுகள் வந்த பிறகு அதன் நிதி நிலை செய்திகளை பகிர்கிறோம்.

நமது போர்ட் போலியோவின் அடுத்த பங்காக Finolex Cables என்ற பங்கை இந்த பதிவில் பரிந்துரைக்கிறோம்.

வியாழன், 3 அக்டோபர், 2013

கொஞ்சம் சிரிக்கலாம்

சீரியஸ்ஸா போன நம்ம பதிவுகளுக்கு ஒரு சின்ன பிரேக்.

மன்மோகன் ஜிங்கு உண்மையிலேயே ராசிக்காரர்தான்.அமெரிக்க டாலருக்கு நிகரா இந்திய ரூபாய் மதிப்பு சரியுது என நாம கவலைப் பட்டுக்கொண்டிருந்தோம்.நம்ம சிங்கம் அமெரிக்காவுக்கு லேட்டஸ்ட்டா போய்ட்டு வந்தது.இப்போ அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் காணுது!

புதன், 2 அக்டோபர், 2013

இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)

பதிவு பெரிதாகி விட்டதால் கடந்த பதிவை இரண்டாக பிரித்து இருந்தோம். அதனுடைய தொடர்ச்சி இந்த பதிவு..

முந்தைய பதிவினைக் காண,
இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்

கடந்த பதிவில் வாரன் பப்பெட் வாழ்வின் முதல் கட்டத்தைப் பார்த்தோம். இந்த பதிவில் அவரது அசுர வேக வளர்ச்சியைப் பற்றிய விடயங்கள் தொடர்கிறது.

இப்படி Berkshire Hathaway நிறுவனம் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளில் வாரன் பஃபட் முதலீடு மதிப்பு 1100% சதவீதம் அதிகரித்தது. இப்படி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.

இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்

பங்குச் சந்தை என்றாலே சூதாட்டம் என்று பலர் ஒதுங்கிய காலத்தில்., இல்லை அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு என்று சொல்லி, அதை நிருபித்து பணமும் சம்பாதித்து காட்டியவர் வாரன் பஃபட்.

இவர் தான் இருபதாம் நூற்றாண்டின் பணக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். 100 டாலரில் முதலீடை ஆரம்பித்து இன்று பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இது எமது பங்கு நஷ்டக் கணக்கு

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது அதில் நஷ்டம் வராதவர்கள் மிகக் குறைவு. நீண்ட நாள் இருந்தவர்கள் எதாவது ஒரு பங்கையாவது நஷ்டத்தில் விற்றிருப்பார்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

Mutual Fund தொடரின் முந்தைய பாகத்தில் எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? என்பது பற்றி எழுதி இருந்தோம்.

200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட் நிதிகள் இருக்கும் சூழ்நிலையில் அதில் 20 நிதிகளை பிரித்தெடுப்பதற்கு நமக்கு எது தேவை? என்பதை சரியாக உணர்ந்து கொண்டாலே போதும்.


முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக சில கேள்விகளை நமக்கு நாமாகவே எழுப்பிக் கொள்வது என்பது மிகவும் அவசியமானது. ஏனென்றால் நமது தேவை என்பது மற்றவர்களை விட நமக்கு தான் அதிகம் தெரிந்திருக்கும்.

பங்குகளை delist செய்யும் போது நாம் என்ன செய்வது?

நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று, தங்கள் கையில் நிதி குறைவாக இருக்கும் நிறுவனங்கள் கூடுதல் நிதியை திரட்டுவதற்காக பங்குச்சந்தையில் நுழைகின்றன.

இரண்டாவது, பன்னாட்டு நிறுவனங்கள் அரசின் சில கொள்கைகள் காரணமாக அவர்களால் 100% முதலீடு செய்ய முடியாது.  குறிப்பிட்ட சதவீதம் தங்கள் பங்குகளை உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது பொது மக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அதனால் சில பங்குகளை பொது பங்குகளாக பங்குச்சந்தையில் வைத்திருப்பார்கள்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?

கடந்த பதிவில் டாலர் எப்படி உலக பொது நாணயமானது என்பது பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவு அதனுடன் நெருங்கிய தொடர்புடையதால் அதைப் படித்துவிட்டு இதை படியுங்கள்.

முந்தைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்.
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

வியாழன், 19 செப்டம்பர், 2013

அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

ஓரிரு வாரத்திற்கு முன்னர் நமது பெட்ரோலிய துறை அமைச்சர் மொய்லி அவர்கள் ரூபாய் மதிப்பைக் கூட்டுவதற்கு அவரது துறை சார்பில் இரண்டு ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? - 2

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் பற்றிய இந்த தொடரின் முந்தைய பாகத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் பற்றிய அறிமுகத்தினை பார்த்தோம்.

இனி 200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட்கள் சந்தையில் இருக்கும் சூழ்நிலையில் அவற்றில் எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் வரலாம். அதனை பார்ப்போம்.

அதற்கு முன் செல்வதற்கு நமக்கு எந்த மாதிரியான முதலீடு தேவை என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.



எந்தவொரு முதலீட்டிலும் RISK மற்றும் RETURN என்ற இரண்டும் இருக்கும். ரிஸ்க் அதிகமாக இருக்கும் இடங்களில் முதலீடு செய்தால் ரிடர்ன் அதிகமாக இருக்கும். அதே போல் மோசமான காலங்களில் இழப்பும் அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக இருக்குமிடத்தில் முதலீடு செய்தால் ரிடர்ன் குறைவாக இருக்கும். இழப்பும் குறைவாக இருக்கும்.

இதில் நாம் எங்கு வருகிறோம் என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். பல சமயங்களில் இடையில் இருக்கும் ஏஜென்ட் பேச்சை கேட்டே நாம் முதலீடுகளை தீர்மானிக்கிறோம். அது சரியானதல்ல.

Mutual Fund முறையிலும் மேல் சொன்ன ரிஸ்க் மற்றும் ரிடர்ன் என்பதனை அடிப்படையாக வைத்து பல பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள். அதில் நாம் எங்கு வருகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.





Equity Fund

இந்த நிதியில் பெரும்பாலான முதலீடுகளை மியூச்சல் பண்ட் நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்வார்கள். பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க்கான முதலீடுகளில் வருவதால் இந்த நிதிகள் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்றது.

இதுவும் முதலீடு செய்யப்பட்ட பங்குகளில் பரவலாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

பல துறைகள், பெரிய, சிறிய நிறுவனங்களில் சமநிலை செய்யப்பட்டிருந்தால் Diversified Fund என்பார்கள். இதில் சராசரியான ரிடர்ன் மற்றும் குறைவான ரிஸ்க் இருக்கும். ஆரம்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.

நடுத்தர, சிறிய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்திருந்தால் Midcap Fund என்பார்கள். இதில் அதிகமான ரிடர்ன் மற்றும் அதிகமான ரிஸ்க் இருக்கும். நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.

ஒரே துறை சார்ந்து முதலீடு செய்து இருந்தால் Sector Specific Fund என்பார்கள். இதில் ரிடர்ன் மற்றும் ரிஸ்க் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து இருக்கும். FMCG, Pharma, IT போன்ற துறை சார்ந்த மியூச்சல் பண்ட்களை அதிகம் பார்க்க முடியும். ஆனாலும் இத்தகைய நிதிகளை நாம் பரிந்துரை செய்வதல்ல.

மியூச்சல் பண்ட்களை ஒரு பாதுகாப்பிற்காக தான் நாம் முதலீடு  செல்கிறோம். அந்த சூழ்நிலையில் இப்படி ஒரே துறையில் முதலீடு செய்யும் பண்ட்களுக்கு  பதிலாக நாமே நேரடியாக சந்தையில் முதலீடு செய்து விடலாம். இரண்டிலும் பெரிய வித்தியாசம் அல்ல.

மேற்சொன்ன எல்லா நிதிகளை எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கி விற்று கொள்ளலாம்.

இது போக வரி சலுகை பெறுவதற்காக உள்ள பரஸ்பர நிதிகளுக்கு ELSS Tax Saving Fund(ELSS) என்று பெயர். இந்த நிதிகளில் முதலீடு செய்யப்படும் நிதியை குறைந்தது 3 வருட காலத்திற்கு எடுக்க முடியாது. இதில் வருமான வரி சலுகை லாபமும் கிடைக்கிறது.

பார்க்க: வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

Debt Fund

இந்த பரஸ்பர நிதி அரசு, தனியார் நிறுவங்கள் சார்ந்த கடன் பத்திரங்களில் (Bond) முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக நிலையான வருமானம் கொடுக்கவை. Fixed Deposit என்பதை விட சிறிது அதிக வருமானம் கொடுக்கும்.

ஓய்வூதியம் பலன் முதியவர்கள் Fixed Deposit முறையில் குறைந்த வட்டி கிடைக்குமாயின் இத்தகைய நிதியினை முயற்சிக்கலாம். அதிலும் குறிப்பாக அரசு துறை சார்ந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருக்கும் மியூச்சல் பண்ட்கள் அதிக பாதுகாப்பானது.

மேலும் அதிகமான விவரங்களை நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund கட்டுரையில் பார்க்க.

Balanced Fund

இங்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலும் சில விகிதங்களில் பகிர்ந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஓரளவு சராசரியான வருமானம் மற்றும் சராசரியான ரிஸ்கும் இருக்கும். பொதுவாக மியூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு புதிதாக வருபவர்கள் இந்த பிரிவினை தேர்ந்தெடுக்கலாம்.

நமது தேவை என்ன என்பதனை பொறுத்து அதற்கேற்றவாறு முதலீடு செய்ய மியூச்சல் பண்ட்களில் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்த பதிவில் CheckList போன்ற  கேள்விகளை தருகிறோம். அதற்கு பதில் அளிக்கும் போது நமக்கு எந்த பிரிவு மியூச்சல் பண்ட் தேவைப்படும் என்பது தெரிந்து விடும்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

பங்குச்சந்தை எப்படி தொடங்குவது?

நமக்கு பல மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் இவ்வாறு வருகின்றன.
  1. முதலீட்டு ஆலோசகரை பரிந்துரை செய்யுங்கள்.
  2. பங்குச்சந்தை பற்றி சொல்லிக் கொடுக்கும் வகுப்புகளை பரிந்துரை செய்யுங்கள்.
  3. கட்டண முதலீட்டு ஆலோசகராக இருங்கள். நாம் பணத்தை முதலீடு செய்ய தொடர்பு கொள்கிறோம்.
சில ஆண்டுகள் வெளியே இருந்து விட்டதால் முழுமையான தகவல்கள் தெரியாமல் மேற்படி கேட்ட பரிந்துரைகளை செய்வது கடினமாக உள்ளது.

சனி, 14 செப்டம்பர், 2013

Astra Microwave: ஏன் பரிந்துரைக்கிறோம்?

கடந்த பதிவில் Astra Microwave நிறுவனத்தின் அறிமுகத்தையும், நிதி நிலை அறிக்கையும் பார்த்தோம். இந்த பதிவில் பரிந்துரைப்பதன் காரணங்களையும் கூறுகிறோம்.

கடந்த பதிவினைக் காண இங்கு அழுத்துங்கள்.

பங்கு ஒரு பார்வை: Astra Microwave

கடந்த ஒரு பதிவில் இந்த பங்கினைப் பற்றி வினா கேட்டிருந்தோம். சரியான விடை "Astra Microwave Products(AMP)". கலந்து கொண்டவர்களுக்கு நன்றி!

இந்த பங்கினை நமது போர்ட் போலியோவில் பரிந்துரைக்கிறோம். இந்த நிறுவனம் "GROWTH" அடிப்படையில் சிறிய நிறுவனங்கள், பொறியியல் பிரிவில் பரிந்துரைக்கப்படுகிறது.

HIGH RISK முதலீட்டார்களுக்கு ஏற்றது. அதனால் தங்கள் போர்ட் போலியோவில் 5% க்குள் வைத்துக் கொள்ளுவது நல்லது. 2 அல்லது 3 வருடங்களில் இரண்டு மடங்கு "RETURN" கொடுக்க வாய்ப்புள்ளது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பொருளாதார செய்தி துளிகள் (14/09)


இது கடந்த வாரத்தில்(07/09 ~ 14/09) வெளிவந்த சில பொருளாதார செய்திகள். இத்தகைய செய்திகளைக் கண்காணிப்பது பங்குச்சந்தை முதலீட்டர்களுக்கு பயனளிக்கும் என்பதால் பகிர்கிறோம்.

வாரந்தோறும் நம்மைக் கடந்து செல்லும் முக்கிய பொருளாதார செய்திகளை பகிர முயற்சிக்கிறோம்.

சுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது? -2


முந்தைய பதிவின் தொடர்ச்சி..(கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது?)


மேலே உள்ள சேவைகளை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரம் அடியுங்கள். அதை அனைவருக்கும் விநியோகம் செய்யுங்கள்....

சுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது? - 1

இது ஒரு சுய தொழிலுக்கான ஆலோசனை. இந்த பதிவின் சாராம்சம் முகநூலில் எமக்கு கிடைக்கப் பெற்றது. நண்பர் டிமிடித் பெட்கோவ்ஸ்கி அவர்களுக்கு நன்றி!  இதனைப் பகிர்ந்து கொள்வது நிறைய பேருக்கு பயனாக இருக்கும். தற்போதைய உலகில் வாய்ப்புகள் பரந்து கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்வோம்!

கால் டாக்ஸி போல் கால் பைக் ஆரம்பிப்பதே இந்த ஆலோசனை. நாமும் பெங்களூரில் இருந்த போது இந்த சிந்தனை இருந்தது. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறோம். நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்! - 3


நமது பங்கு பரிந்துரையில் அடுத்த பங்காக வரும் சனியன்று ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறோம். அதற்கு முன் அந்த பங்கினை பற்றிய சில குறிப்புகள் கொடுக்கிறோம். அந்த பங்கினை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

முதலீடுகளை எப்பொழுதுமே ஒரே இடத்தில் முதலீடு செய்யக் கூடாது. சில சமயங்களில் சில முதலீடுகள் நல்ல லாபத்தை தரலாம். எந்தவொரு முதலீடும் நிரந்தரமாக தொடர்ந்து லாபத்தை தந்து கொண்டிருப்பதில்லை.

ஒரு நடுத்தர பொருளாதார வர்க்கத்தில் இருக்கும் நமக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு சமநிலை பெற்ற வருமானம் என்பதும் அவசியமாகிறது.

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? என்ற எமது தொடர் போன்ற கட்டுரையில் இதனை விரிவாக விளக்கி உள்ளோம். அப்படியொரு முதலீடுகளை பிரித்து போடும் சூழ்நிலையில் தங்கம், ரியல் எஸ்டேட் போன்று பங்குசந்தையும் குறிப்பிடலாம்.



பங்குசந்தை என்பதை சூதாட்ட காரர்களின் சங்கமம் தான். ஏனென்றால் இங்கு ட்ரேடிங் முறையில் விரைவாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு சந்தையை ஏற்றி, இறக்கி கொண்டிருப்பார்கள். ஒரு தனி மனிதனாக இந்த ஏற்ற, இறக்கங்களை தினசரி பார்த்து கொண்டிருந்தால் ரத்த அழுத்தம் தான் அதிகரிக்கும்.

அதிலும் சந்தைக்கு புதிதாக வருபவர்கள் நேரடி பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

அதற்கு ஒரு மாற்று வழி தான் Mutual Fund.

Mutual Fund என்பதும் பங்குச்சந்தை அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடு தான். பங்குசந்தையில் புதிதாக வரும் அனுபவமில்லாதவர்களுக்கு நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்பது கடினமான செயல்.

அதற்காக தேர்ச்சி பெற்ற பொருளாதார அறிவுடையவர்களை வைத்து ம்யூச்சல் பண்ட் மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்கென்று Franklin, HDFC, SBI என்று  பல நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாடிககையாளர்கள் தேவைக்கேற்ப பல நிதிகளை மேலாண்மை செய்யும்.

அடிப்படையில் ம்யூச்சல் பண்ட் என்பது ஏதேனும் ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்யாமல் பல துறைகளை சார்ந்த, சிறிய, பெரிய நிறுவனங்கள் என்று கலந்து முதலீடு செய்வார்கள். இது போக நிலையான வருமானம் கொடுக்கும் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள்.

இதனால் முதலீட்டில் ஒரு வித ரிஸ்க் சமநிலை ஏற்படுகிறது. அது நமது முதலீட்டிற்கு நேரடி பங்குகளை விட ஒரு வித பாதுகாப்பு கொடுக்கிறது.

Mutual Fundன் செயல் திறன் Net Asset Value(NAV) என்ற அலகினை பொருத்து அளவிடுவார்கள். இது சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு பங்கு யூனிட்டிற்கும்  ஒரு விலை இருப்பது போல ம்யூச்சல் பண்ட்டின் ஒரு யூனிட் தான் NAV.

உதாரணத்துக்கு ஒரு பரஸ்பர நிதியின் ஒரு NAV யூனிட் 50 ரூபாய் என்றால், நாம் 10000 ரூபாய் முதலீடு செய்வதாக கருதிக் கொண்டால் நமக்கு 200 யூனிட் கிடைக்கும்.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து NAV அலகு 55 ரூபாய்க்கு சென்றால் நமது முதலீட்டின் மதிப்பு 200*55=11000 ரூபாயாக மாறியிருக்கும்.

பொதுவாக Fixed Deposit கணக்கை விட ம்யூச்சல் பண்ட்டில் அதிக ரிடர்ன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது சராசரியாக வருடத்திற்கு 12%க்கும் மேல் எதிர் பார்க்கலாம். ஆனாலும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Mutual Fund நிதிகளும் பங்குகளை போன்று SEBI அமைப்பு மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.  இந்தியாவில் ம்யூச்சல் பண்ட் என்பது 1963ல் அரசு துறை சார்ந்த UTI வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு SBI, Canara Bank, Punjab National Bank போன்ற வங்கிகளும் அறிமுகம் செய்தார்கள். 1993 பிறகு Franklin போன்ற தனியார் நிறுவனங்களும் அறிமுகம் செய்தார்கள்.

இந்தியாவில் தற்போது 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. நாம் இந்த வருடங்களை கூறக் காரணம் ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனம் சார்ந்த வரலாறினை(Past History) அறிந்து கொள்வதும் மிக முக்கியம்.

ஏற்கனவே சொன்னது போல் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட ம்யூச்சல் பண்ட்களை நடத்தி வருகிறார்கள் என்றால் அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வருவது இயற்கை. அதனால் ம்யூச்சல் பண்ட் நிதிகளை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இந்த தொடரின் அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.

ம்யூச்சல் பண்ட் தொடரின் அடுத்த பாகத்தினை எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? என்ற கட்டுரையில் பார்க்கலாம்.


தடங்கலுக்கு வருந்துகிறோம்

கடந்த 2 நாட்களாக பிளாக்கரில் ஏற்பட்ட பிரச்சினையால் பதிவிட முடியாமல் போய் விட்டது.  இது பிளாக்கர் அப்டேட்டால் வந்த பிரச்சினையாக அறியப் படுகிறது. யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தவும். ஒரு சின்ன பழுது பார்த்தல் மட்டும் தேவைப்படும்.

சனி, 7 செப்டம்பர், 2013

நாமும் எரிகிற வீட்டை அணைப்போம்


நாம் எம்முடைய பதிவுகளில் பல நேரங்களில் தற்போதைய மத்திய அரசை விமர்சித்துள்ளோம். ஆனால் சில அரசியல் வாதிகள், ஆட்சியாளர்கள் பண்ணும் தவறுகளால் 100 கோடி பாமர மக்களும் பாதிக்கப்படுவது கொடுமையானதே. கிட்டத்தட்ட 1991ல் இருந்த கடுமையான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சூழ்நிலையை மிக எளிமையாக சொல்லும் ரத்தன் டாடா

ஒரு செய்தி தளத்தில் ரத்தன் டாடாவின் இந்த பேட்டி வாசிக்க நேரிட்டது. தற்போதைய இந்திய பொருளாதார சூழ்நிலையை மிக எளிமையாக கூறியுள்ளார். எமக்கு மிகவும் பிடித்திருந்ததால் பகிருகிறோம்.

"நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிதி நெருக்கடியின் போதும் இந்தியாவின் மரியாதையை உயர்த்தியவர் ஆனால் சமீப காலத்தில் நாம் அந்த மரியாதையை இழந்து விட்டோம்"

எமது ஒரு சிறிய அறிமுகம்

பல நேரங்களில் இந்த தளத்தில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது எமது வாசர்கள் பதிவிற்கான தலைப்பைக் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்  தான் இது வரை ஒரு ஐந்து பதிவுகளாவது எழுதப்பட்டிருக்கும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

இந்திய மருந்து விலை கட்டுப்பாடு யாரை எப்படிப் பாதிக்கும்?

இந்திய அரசு கடந்த வருடம் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கையை(Drug Price Control Policy) அறிமுகப்படுத்தியது. அதன் படி 334 அடிப்படை மருந்துகளின் விலை 70% வரை குறைக்கப்படும்.

ஒரு இந்திய குடிமகனாக இந்த நடவடிக்கை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்க வேண்டிய நடவடிக்கை.

இது தான் இந்திய GDP வளர்ச்சி (FY14 Q1)

2013-14 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு GDP தரவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. மொத்த GDP 4.4% என்ற அளவில் வளர்ந்துள்ளது.கடந்த வருடம் இதே சமயத்தில் 4.8% என்ற அளவில் இருந்துள்ளது. 

திங்கள், 2 செப்டம்பர், 2013

தரை உயரம் குறைக்கப்படும் மகிந்திரா XUV-500

முந்தைய பதிவுகளில் ஆட்டோ பிரிவில் மகிந்திரா & மகிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனத்தின் பங்குகளை  பரிந்துரை செய்திருந்தோம். இந்த பதிவு இந்நிறுவனத்தின் வியாபார தொடர்புடைய ஒரு முக்கிய நடவடிக்கை பற்றிய செய்தி. அதனை பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

நமது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்று இந்த தளத்தைப் பார்த்தோர் எண்ணிக்கை(Page Views) 15000 தாண்டியது. மிக்க மகிச்சி!

பொதுவாக பொருளாதாரம் சார்ந்த பதிவுகளுக்கு மற்ற திரை, அரசியல் சார்ந்த பதிவுகளை விட வரவேற்பு குறைவாகவே இருக்கும். அதற்கு பொருளாதார பதிவுகளின் புரிதல் கடினத்தன்மையே காரணமாக இருக்கும்.

இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott

முந்தைய பதிவில் மருந்து நிறுவன பங்கு(pharmaceutical) பற்றி வினா கேட்டிருந்தோம். அதில் நண்பர் ஜீவன்சிவம் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு எமது நன்றிகள்! இது போல் ஒரு நண்பர் பெயரில்லாமல் Piramal என்று பின்னுட்டம் போட்டிருந்தார். கிட்டத்தட்ட அவரது விடை சில மாற்றங்களுடன் சரியானது. நண்பரே! உங்கள் பெயரை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்!

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்

இந்த வாரம் பங்குசந்தையில் ஒரு செய்தி பார்க்க நேரிட்டது. VIP Industries பங்குகள் ஒரே நாளில் 7% கூடி விட்டது. அதற்கு காரணம் யாரென்றால் ஒரு தனி மனிதன். அவர் பெயர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

இந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்! - 2

நமது பங்கு பரிந்துரையில் அடுத்த பங்காக வரும் சனியன்று ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறோம். அதற்கு முன் அந்த பங்கினை பற்றிய சில குறிப்புகள் கொடுக்கிறோம். அந்த பங்கினை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இது முதல்வன் ஸ்டைல்: 60 நாளில் 1.9 லட்சம் கோடி மதிப்பு திட்டங்களுக்கு அனுமதி

நமது தற்போதைய அரசின் நிலக்கரி சுரங்க ஊழல்களினால் சுரங்க அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளாமான நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

செய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் "பிளாட்" வாங்க ஆளின்றி வீண்

"கரும்பு, வாழை, நெல் என, ஆண்டு முழுவதும், சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்களை, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி, பல ஆண்டுகளாகியும், வாங்க ஆளில்லாமல் வீணாகி வருகின்றன. பெரு நகரங்களில் சிறப்பாக இயங்கி வந்த, ரியல் எஸ்டேட் தொழில், 2008 முதல், சிறிய நகரங்கள், கிராமங்களில் ஊடுருவின. மேடான, விவசாயத்திற்கு, அதிகம் பயன்படாத நிலங்கள் மட்டுமே, Real Estateக்கு பயன்படுத்தப்பட்டன.

சனி, 24 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 70% ஏழை மக்களுக்கு மாதம் தோறும் மூன்று ரூபாய்க்குள் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்க வழி செய்கிறது.இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒரு வருடத்திற்கு அரசுக்கு 1,25,000 கோடி ரூபாய் செலவாகும். இது இந்திய உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: HDFC வங்கி

நமது கடந்த பதிவில் (இந்த பங்கை கண்டு பிடியுங்கள்!) ஒரு சிறிய வினாவைக் கேட்டிருந்தோம்.

இது தான் வினா
இந்த பங்கு வங்கி துறையை சார்ந்தது. கடந்த 40 காலாண்டுகளாக அதாவது 10 வருடங்களாக குறைந்தபட்சம் 30% லாபம் ஈட்டி வந்துள்ளது. நிகர NPA 0.5% க்கும் குறைவாக உள்ளது."

புதன், 21 ஆகஸ்ட், 2013

இந்த பங்கை கண்டு பிடியுங்கள்! -1

இன்று எமது தளத்தின் மொத்த வருகை எண்ணிக்கை பத்தாயிரத்தை எதிர் பார்த்ததை விட குறைந்த தினங்களில் தாண்டியுள்ளது. நமது பதிவுகளுக்கு கிடைத்த வருகை எண்ணிக்கையும் அதனின் கிடைத்த பின்னூட்டங்களும் ஒரு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தன.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி



தலைப்பை பார்த்தவுடன் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை. அதனால் நீங்களும் ஒரு தடவை இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

1980ல் விப்ரோவின்(Wipro) 10 பங்குகளை 100 ரூபாய்க்கு வாங்கி, அதாவது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது அதனுடைய மதிப்பு 43.6 கோடியாக மாறி இருக்கும்.



இதில் DIVIDEND வருமானம் என்பது தனி. அது கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தங்கம் இப்பொழுது வாங்கலாமா?


இன்றைய தினசரியில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. இதற்கான தொடர்பு இங்கே: "டிசம்பருக்குள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்ப்பு. "

"அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.அதனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. "பொதுமக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டது. இதன் பயனாக, ஜூன் மாதம், தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது."" (தினமலர்)

சனி, 17 ஆகஸ்ட், 2013

டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா

நாம் பங்கு ஒரு பார்வை: மகிந்திரா-மகிந்திரா என்ற பதிவில் மகிந்திரா & மகிந்திரா நிறுவன பங்குகளை பரிந்துரை செய்திருந்தோம்.

இந்த பதிவின் சுருங்கிய சாராம்சம்
"இந்த வருட பருவ மழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விவசாய வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிராக்டர் மற்றும் இதர கனரக வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும். இந்த பிரிவில் மகிந்திரா நிறுவனம் குறிப்பிட்டதக்க சந்தையை கொண்டிருப்பதால் லாபம் உயரலாம்."

அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய இந்திய விவசாயம்

இந்த பதிவு மற்ற பதிவுகளில் இருந்து சிறிது மாறுபட்டது. இன்றைய நாகரிகமான இளைய தலைமுறை செய்ய மதிப்பில்லாது கூச்சமாக கருதும் விவசாயத்தைப் பற்றிய பதிவு இது. இதனை இன்றைய தொழில் நுட்பங்கள் மூலம் நாகரிகமான தொழிலாகவும் மாற்றலாம்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சிறு முதலீட்டார்களுக்கு பங்கு சந்தையில் சில டிப்ஸ்

நாம் பங்குசந்தையில் நுழைந்த போது நண்பர்கள், பெற்றோர் என்று நிறைய பேர் அது ஒரு சூதாட்டம் என்று தடுத்தனர். பல நேரங்களில் அது உண்மை என்றே தோன்றியது. ஏனென்றால் 2008-09 அமெரிக்க பொருளாதார பின்னடைதல் ஏற்பட்ட போதும் சத்யம் ஊழல் நடைபெற்ற போதும் பல பேர் நம் கண் முன் பங்குச்சந்தை இழப்புகளால் கஷ்டப்படுவதைப் பார்க்க முடிந்தது.

இந்த கடுமையான தருணங்களில் FII போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்கள் தப்பி விடுவார்கள். ஆனால் பாதிக்கப்படுவது பங்குச்சந்தை பற்றி சரி வர தெரியாமல் முதலீடு செய்யும் சிறு முதலீட்டார்கள் தான். சிறு முதலீட்டர்களின் நஷ்டமே பெரிய தலைகளுக்கு லாபமாக செல்கிறது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?

இந்த வாரம் இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று குறைவாக 1US$ = 61 ரூபாய் என்ற விகிதத்தில் மாற்றப்பட்டு வருகிறது.


கீழே உள்ள அட்டவணை 1996லிருந்து இந்திய ரூபாயின் மதிப்பினை சொல்கிறது.

Currencycode199620002004200620072008200920102013
USDUSD35.44444.95245.34043.95439.548.7611245.33545859.878

புதன், 14 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: BRITANNIA

BRITANNIA:
பிஸ்கட், கேக், ரஸ்க், என்று பொதிக்கப்பட்ட உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக தயிர், நெய்  என்று பால் சார்ந்த உணவு பொருட்களையும் தயாரித்து தமது சந்தையை வேகத்துடன் விரிவாக்கி வருகிறது . Good day, Marie, Tiger என்று இதனுடைய பிராண்ட்கள் மிக பிரபலமாக இருப்பது இதற்கு மிகப்பெரிய பலம்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

SBIன் லாபம் சரிந்தது ஏன்?

இந்திய வங்கி துறையில் முதுகெலும்பாக உள்ள SBI வங்கி இந்த காலாண்டின் முடிவுகளை நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட நிகர லாபம் 14% குறைந்துள்ளது. (ஜூன்'13).

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM

ASHAPURA நிறுவனம் Bentonite, Bauxite, Kaolin போன்ற பல தாதுக்கள்  உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.  இவை சிமெண்ட், காகிதம், கிளீனிங் பொருட்கள், ஒய்ன் போன்றவை தயாரிப்பதில் பயன்பட்டு வருகின்றன. உலக சந்தையில் 10% கொண்டுள்ளது. SENSEXல் MIDCAP பிரிவில் உள்ளது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

பண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது?

சில செய்திகளில் பார்த்திருப்போம். CRR விகிதம் மாற்றப்பட்டுள்ளது என்று செய்தி வந்த உடனே தொழில் துறையில் இருப்பவர்கள் அலறுவார்கள்.SENSEX ஒரு அடி குறையும்.  அதனால் பங்கு சந்தை சார்ந்த முதலீட்டில் இருப்பவர்கள் இதை அறிந்து கொள்வது  மிக அவசியமானது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தமிழ் பதிவில் விளம்பர வருமானம் பெற ...

இன்று இணையம் ஒரு மிகப்பெரிய வருமான சந்தையாக மாறி விட்டது.ஆனாலும் Ad Network இணைய தளங்களான google adsense, adchoice போன்றவற்றில் தமிழ் பதிவுகள் ஏற்றுகொள்ளப்படாதது ஒரு பெரிய குறை தான்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா?

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மாத சம்பளத்தில் 12% PFக்கு பிடித்தம் செய்யபடுகிறது. அதே போல் நிறுவனங்களும் 12% பங்களிப்பு வழங்குகின்றன.

இதில் பகுதி (12%+3.67%) வருங்கால வைப்பு நிதி(PF)க்கும் பகுதி(8.33%) ஓய்வூதியம்(Pension) என்று செல்கிறது.

புதன், 7 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

நிறைய பேருக்கு பரிச்சயமான ஒரு நிறுவனம். இந்தியாவின் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. கார், கனரக வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 

தற்போதைய இந்திய பொருளாதர தேக்கம் காரணமாக கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதர தேக்கம் மற்றும் தற்போதைய பங்குசத்தை சரிவுகளால் குறைந்த விலையில் (850 ரூபாய்க்கு) கிடைக்கிறது. 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்

அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்து அசந்து போனேன்.

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ் பக் ஷி ஷேர் மார்கெட் பற்றி சொல்லிய பல விஷயங்கள் அவசியம் பகிர தோன்றியது !

புதன், 31 ஜூலை, 2013

பங்கின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 2

பங்குகளின் சரியான விலையைக் கண்டுபிடிப்பதற்கான எமது முந்தைய பதிவின் தொடர்ச்சியை பார்த்த பின் இங்கு தொடரவும்.


பங்கின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 1

"எந்த ஒரு முதலீட்டின் லாபம் அதனை வாங்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது - ராபர்ட் கொயொசகி"

வெள்ளி, 26 ஜூலை, 2013

வெற்று வாய் ஜாலம் வேலைக்காகாது

"இந்திய பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கிறது - மன்மோகன் சிங் "

எதையுமே பண்ணாமல் எப்படி தான் இவரால் எதிர்பார்க்க முடியுது?

வியாழன், 11 ஜூலை, 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 5

முந்தைய பதிவின் தொடர்ச்சி..

முந்தைய பதிவில் MUTUAL FUND வரை பார்த்தோம். இனி பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்று பார்போம்.இது மிகவும் RISK ஆனது. கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால் நம்முடைய முதலீட்டின் மதிப்பை கணிசமாக உயர்த்திவிடும் 

அதற்கு முன் அடிப்படை விதியான "ஒரே கூடையில் அணைத்து முட்டைகளையும் போடுவதை" தவிர்க்க வேண்டும். அதாவது ஒரே பங்கில் மட்டும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதனால் எதிர்பாராத சில பங்கு இழப்புகள் மற்ற பங்குகளின் லாபத்தில் சமன் பெற்று விடும்.

புதன், 10 ஜூலை, 2013

அதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்

வீட்டுக்கடனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SBI MAXGAIN ஒரு நல்ல தேர்வு. 

வெள்ளி, 28 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 4

முந்தைய பதிவின் தொடர்ச்சி..



மேல் உள்ள படத்தில் உள்ளவாறு ஒரு பகுதியினை பங்கு சார்ந்தவற்றில் முதலீடு செய்யுங்கள்.

பங்குச்சந்தை சார்ந்த முதலீடை இரண்டு வகையாக பிரிக்கலாம் 
1. Mutual Fund.
2. Direct to Stocks

வியாழன், 27 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 3

முந்தைய பதிவின் தொடர்ச்சி..

இந்த பதிவில் RISK அதிகமுள்ள பங்குசந்தையை பார்க்கலாம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் அது என்ன என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகிறது.

வெள்ளி, 21 ஜூன், 2013

பங்குச்சந்தை: இப்ப என்ன செய்யலாம்?

நிறைய பங்குகள் 52 வார குறைவு நிலையை அடைந்துள்ளன. பங்குசந்தையில் நீண்ட கால முதலீட்டில் (குறைந்தது 1 வருடம்) ஆர்வம் உள்ளவர்கள் தற்போது முதலீடு செய்யலாம்.

வியாழன், 20 ஜூன், 2013

சில நீண்ட கால வைப்பு முதலீடுகள் (FD)

தற்போதைய நிலவரத்தில்இந்த வங்கிகள் சிறந்த வட்டி விகிதங்கள் அளிக்கின்றன.

ஞாயிறு, 16 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி..
அதாவது உங்களிடம் 30 லட்சம் ரூபாய் இருப்பின் இவ்வாறு முதலீடு செய்யலாம்.

வியாழன், 13 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1


நமக்கு பெரும்பாலும் தெரிந்த ஒரே முதலீடு நீண்ட கால வைப்பு என்ற Fixed Deposit தான். எங்க அப்பா காலத்துல அவருக்கு சம்பளம் அதிகபட்சம் 3500 தான். அதனால் பண புழக்கம் ரொம்ப குறைவாக இருந்தது. அவங்க மீதி இருக்கிற 5~10% வருமானத்தை RD, FD என்று சேமித்தார்கள்.

திங்கள், 10 ஜூன், 2013

வருமான வரி பதிவு: 2013-14

வருமான வரி பதிவு செய்ய இறுதி நாள் ஜூலை 31.

இதற்கு முன் ஒரு முகவரை பிடிக்கணும். அவரு 250 ரூபாய் கேட்பார். 'return'ம்  ஒழுங்காக வந்து சேராது.


தற்போதைய online system மிகவும் எளிதாக்கியுள்ளது.