வெள்ளி, 31 ஜூலை, 2020

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வதை பார்த்தால் பாமர மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டா கனி தான்.

ஏன் இப்படி உயர்கிறது என்று தெரிந்து கொள்வது என்பதும் இந்த சூழ்நிலையில் அவசியமாகிறது.தங்கத்தை பொறுத்தவரை, அட்சய  திருதி அன்று கூடும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூடும். முஹூர்த்த தினங்கள் இல்லாத ஆடி போன்ற மாதங்களில் குறையும் என்பது தான் பாமர சூழ்நிலையில் உள்ள பேச்சு வழக்குகள்.

அப்படி பார்த்தால் இந்த வருட ஆடி மாதம் தங்கம் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பல சதவீதங்கள் கணிசமாக கூடியுள்ளது.

உலக அளவில் தங்கம் 2 லட்சம் டன் அளவு தங்கம் தரைக்கு மேல் புழங்கி கொண்டிருக்கிறது. அதில் 20,000 டன் அளவு தங்கம் தான் இந்தியாவில் நகைகளாக இருக்கிறது. அதனால் நமது பங்களிப்பு என்பது உலக அளவில் இன்னும் குறைவு தான்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் தருணம்

தற்போதைய பங்குச்சந்தை உயர்விற்கு எமது முந்தைய சந்தேகத்தில் நிற்கும் சந்தை கட்டுரையில் Liquidity Driven Market என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். 

அதன்படி பார்த்தாலும் கடந்த ஜூனில் நிகரமாக 2500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர். தற்போதைய ஜூலையில் நேற்று வரை 3500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர். 

Bull Market என்பதில் கடந்த கால வரலாற்றை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய தொகையல்ல. ஆனாலும் சந்தை ஏன் உயர்கிறது என்று பார்த்தால் அங்கு Robinhood Investors என்று சொல்லப்படும் புதிய முதலீட்டாளர்கள் வந்து நிற்கின்றனர்.முதலில் Robinhood Investors யார் என்று பார்ப்போம்.

அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தை முதலீடு என்பது மிகவும் காஸ்டிலியானது. ஆமாம். ஒரு 50$மதிப்புடைய பங்கு வாங்குவதற்கு 10$ புரோக்கர் கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. நமது முதலீட்டில் 20% அளவு கமிஷனாக போகும் போது ஆரம்பத்திலே முதலீட்டின் ஒரு பகுதி சென்று விடுகிறது. அதனை மீட்டு எடுப்பதே ஒரு பெரிய வேலை.

இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் 2014ம் வருடத்தில் Robinhood என்ற Stock Brokerage நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இருப்பவர்களிடம் இருந்து  இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் பிரபலமான ராபின்ஹூட் அவர்களது வேலை. அது போல் இந்த நிறுவனத்தில் Retail Investors என்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு மலிவாக பங்கு வாங்கும் வசதியை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இந்தியாவில் நமது Zerodha புரோக்கர் நிறுவனத்திற்கு முன்னோடி என்றும் சொல்லி கொள்ளலாம். 


புதன், 22 ஜூலை, 2020

தோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்

எப்பொழுதுமே ரிசர்வ் வங்கியில் கவர்னர்களாக இருப்பவர்களுக்கும், மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

சுப்பா ராவ்,  ரகுராம் ராஜன், படேல் என்று தொடர்ந்து பல கவர்னர்களுக்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.

இதில் மத்திய அரசு என்பது பிஜேபி, காங்கிரஸ் என்று இரண்டு அரசுகளையுமே குறிக்கும். சிதம்பரம் சுபபா ராவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தற்போதைய அரசு அடுத்த இருவர்களிடமும் மோதியது.கருத்து வேறுபாடுகள் எங்கு வருகிறது என்றால் வட்டி குறைப்பில் தான் அதிகம் வரும். இது போக, பிஜேபி காலத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கையிருப்பு தொகையிலும் இருந்து வந்தது. 

இதற்காக தான் சக்தி காந்த் தாசையும் கொண்டு வந்தார்கள். ரிசர்வ் வங்கியின் அவசர காலத்திற்கு வைத்து இருந்த கையிருப்பு தொகையை வாங்கி செலவு செய்தார்கள். தற்போது அவசர காலத்தில் பெரிதளவு பணம் நம்மிடம் இல்லை என்பதையும் கவனிக்க.

இது போக, சக்தி காந்த் தாஸ் செய்தது என்னவென்றால் வங்கிகளின் Repo Rate என்பதை குறைத்து கொண்டே வந்தது தான். அதாவது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கால் சதவீதமாவது குறைத்து விடுவார். தற்போது ரெபோ விகிதம் என்பது கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவு 4% குறைந்துள்ளது. 

வெள்ளி, 17 ஜூலை, 2020

ரயில்வே தனியார் மயமாக்கல் IRCTC பங்கை பாதிக்குமா?

நண்பர் தட்சிணா மூர்த்தி எமது muthaleedu@gmail.com முகவரிக்கு மெயில் அனுப்பி இருந்தார். ரயில்வே துறை வேகமாக தனியார் மயமாக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் IRCTC பங்கை வைத்து இருக்கலாமா? என்று கேட்டு இருந்தார்.

சரியான கேள்வி என்றே பார்க்கிறோம்.பொதுவாக வெளியில் இருந்து பார்க்கும் போது IRCTC பங்கிற்கு இந்த தனியார் மயமாக்கல் எதிர்மறை மாற்றமாகவே தோன்றும். ஆனால் உள்ளே சென்றால் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.

IRCTC IPOவாக வரும் போதே நாம் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டது இதன் monopoly தன்மை. ஒரு நிறுவனம் போட்டியே இல்லாமல் செயல்படுகிறது என்றால் அதுவே பாதி வெற்றி தான். பல நண்பர்களுக்கு ஏற்கனவே நல்ல ரிட்டர்ன் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறோம்.

வியாழன், 16 ஜூலை, 2020

மியூச்சல் பண்ட் தேர்ந்தெடுக்க சில அடிப்படைகள்


கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?  என்ற கட்டுரையில் இருக்கும் சாத்தியக்குறைவுகள் பற்றி எழுதி இருந்தோம். நேற்றைய ரிலையன்ஸ் AGM மீட்டிங்கில் முகேஷ் அம்பானி கூகிள் ஜியோவில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார். அதனால் வோடாபோனுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில் இன்று வோடாபோன் பங்கும் 10% விலை குறைந்துள்ளது. 

எமது முந்தைய கட்டுரை வோடாபோன் முதலீட்டில் இருந்து நண்பர்கள் வெளியேற உதவியிருக்கும் என்று நம்புகிறோம். 

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் பழைய கட்டுரைகளை தேடி பிடித்து படிப்பது கடினமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.

அதன் பிறகு தான் ஆயிரம் கட்டுரைகள் இந்த தளத்தில் இருக்கும் போது அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிப்பதில் இருப்பதன் கஷ்டத்தை புரிந்து கொண்டோம். இந்த தளத்தில் உள்ள 70%க்கும் மேற்பட்ட  கட்டுரைகள் பொதுவானது தான். அதாவது படிப்பினை கட்டுரைகள் தான். அதனால் சூழ்நிலை அல்லது தொடர்பான செய்திகள் வரும் போது மேற்கோள் காட்டி எழுதுகிறோம். 

இது போக, சில முக்கியமான கட்டுரைகளை தற்போதை சூழ்நிலைக்கு தக்கவாறு மீள்பதிவு செய்து எழுதி இருக்கிறோம். அதனையும் பகிர்கிறோம்.

அதில் ஒன்று மியூச்சல் பண்ட் தொடரில் இருக்கும் ஐந்து கட்டுரைகளும். 2013ல் மியூச்சல் பண்ட் தொடர்பாக ஒரு தொடரை எழுதி இருந்தோம். அந்த கட்டுரை பயனாக இருந்தது என்பதை அறிந்து கொண்டதால் தற்போதைய சூழ்நிலைககு ஏற்றவாறு மீண்டும் எழுதி இருக்கிறோம்.

திங்கள், 13 ஜூலை, 2020

Rossari Biotech IPO வை வாங்கலாமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO வெளியீடு வந்துள்ளது. 

Rossari Biotech என்ற நிறுவனம் தனது IPO வெளியீட்டின் விண்ணப்பங்களை இன்று ஜூலை 13 முதல் பெற ஆரம்பித்துள்ளது. இதனை பற்றிய ஒரு விரிவான பார்வையை பார்க்கலாம்.இந்த  நிறுவனம் மார்ச் மாதத்திலே IPOவிற்கான அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக IPO நிகழ்வை தள்ளி வைத்து இருந்தது. 

தற்போது கொரோனாவிற்கு பிறகு வெளிவரும் முதல் ஐபிஓவாகும். பங்குசந்தையில் 500 கோடி அளவு பணத்தை திரட்ட உள்ளது. இந்த பணம் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களுக்கு செல்கிறது.

வெள்ளி, 10 ஜூலை, 2020

சந்தேகத்தில் நிற்கும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை 10800 NIFTY புள்ளிகளில் நின்று கொண்டு இருக்கிறது. டெக்னிகலாக இது ஒரு முக்கிய தடை புள்ளி என்று சொல்லலாம்.

கடந்த இரு வாரங்களாகவே NIFTY நிலையானது 10600 புள்ளிகள் முதல் 10800 புள்ளிகள் வரை ஊசலாடி கொண்டே தான் இருக்கிறது.நிப்டியின் 200 DMA என்று சொல்லப்படும் 200 நாள் சராசரி நிலையான 10885 என்பது ஒரு முக்கியமான நிலையாகும். இதனை தாண்டும் போது மேலும் அதிக உயர்வை பார்க்கலாம்.

ஆனால் அந்த நிலையை தாண்டுவது எளிதல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகளில் இருந்து பெருமளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் எங்கிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால் Institution Investors என்ற பெரு முதலைகளிடம் இருந்து தான் வருகிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2020

Kisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி

கிராமப்புறங்களில் தங்க நகைகளுக்கான விவசாய கடன் என்பது பிரபலமான ஒன்று.

தங்க நகையை ஈடாக வைத்து எளிதில் விவசாய கடன் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான வட்டியில் பகுதியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு அளித்து வந்தது. இதனால் வட்டியும் 4% என்ற அளவிலே இருந்தது. அதிக பட்சம் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் அண்மையில் மத்திய அரசு இந்த கடனுக்கான மானியத்தை நீக்கி விட்டது. இதனால் வட்டி என்பது வழக்கமான கடன் போல மீண்டும் 8~9% அளவிற்கு சென்று விட்டது.

வெள்ளி, 3 ஜூலை, 2020

எட்டாவது வருடத்தில் முதலீடு தளம் ...

நண்பர்களுக்கு வணக்கம்!

2013ல் ஆரம்பிக்கப்பட்ட முதலீடு தளம் இந்த ஜூலை மாதத்தில் எட்டாவது வருடத்தை ஆரம்பிக்கிறது. தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!முதலில் muthaleedu.blogspot.com என்ற பெயரில் சிறு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தளம் அதன் பின் Revmuthal.com என்று பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

அதில் இருக்கும் உச்சரிப்பு பிரச்சினை காரணமாக இறுதியில் Muthaleedu.IN என்ற பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.

எல்லா மாற்றங்களிலும் வாசகர்கள் உடன் இருந்த காரணத்தால் வளர்ச்சி என்பதும் மாற்றம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இது வரை 1015 பொருளாதாரம் மற்றும் முதலீடு சார்ந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதனை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பார்க்கப்பட்டுள்ளன. அதில் 1071 கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

அதே போல் 25,000க்கும் மேற்பட்ட நண்பர்கள் Facebook, Twitter, Email போன்றவற்றில் முதலீடு தளத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

PPக்கு VV சிக்கன் ஊட்டுவதை மில்லியன் கணக்கில் பார்க்கும் இந்த காலக்கட்டத்திலும் ஒரு பொருளாதாரம் சார்ந்த தளம் இவ்வளவு வரவேற்பு பெற்றதற்கு உங்கள் வாசிப்பு தரமும் ஒரு முக்கிய காரணம்.