சனி, 31 அக்டோபர், 2015

மோடியின் ஆட்சிக்கு மூடி தரும் எச்சரிக்கை

தினசரிகளில் வரும் முக்கிய செய்திகளை பார்த்தால்  மாட்டுக் கறியைப் பற்றியதாகத் தான் உள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

முதலீடு செய்தி மடல் சேவை தொடர்பாக..

நண்பர்களுக்கு,

நவம்பர் மாதத்தில் இருந்து செய்தி மடல்(News Letter) சேவையை நமது தள வாசகர்களுக்கு தரவிருக்கிறோம்.

வியாழன், 29 அக்டோபர், 2015

ஏசிக்கு மாறும் இந்தியர்களால் குஷியில் ஏசி நிறுவனங்கள்

ஒரு செய்தி வெளியாகும் போது ஒவ்வொருவர் பார்வையில் வெவ்வேறு விதத்தில் உள்வாங்கப்படுகிறது.

புதன், 28 அக்டோபர், 2015

வரி சலுகை பெற உதவும் REC கடன் பத்திரங்கள்

அதிக பாதுகாப்பான முதலீடை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களும் ஒரு நல்ல வாய்ப்பு என்று ஏற்கனவே எழுதி இருந்தோம்.

பார்க்க: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்


அந்த வரிசையில் NTPC, PFC போன்ற அரசு நிறுவனங்களின் பத்திரங்களையும் பரிந்துரை செய்து இருந்தோம்.



பொதுவாக இந்த கடன் பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் வெளியிடப்படுவதுண்டு. அதனால் மேலே சொன்ன கடன் பத்திரங்களை தவறியவர்கள் REC கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

REC என்பதன விரிவாக்கம் Rural Electrification Corporation. இது ஒரு மத்திய அரசு நிறுவனம். கிராமப்புறங்களுக்கு மின்சார விரிவாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிதி நிலைமையும் நன்றாக உள்ளது.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பீகார் தேர்தலால் சரிவிற்கு காத்திருக்கும் சந்தை

சில வாரங்களுக்கு முன்பு 25,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு அருகில் சென்ற சந்தை 27,800க்கு அருகிலும் உயர்ந்து சென்றது.

இனி விளம்பரம் இல்லாமல் யுட்யூப் வீடியோ பார்க்கலாம்

இணைய உலகில் மட்டும் அல்லாமல் சமூக அளவிலும் யுட்யூப் ஏற்படுத்திய மாற்றம் மிகவும் அதிகம்.

திங்கள், 26 அக்டோபர், 2015

4G மொபைல் போனுக்கு மாறும் காலம் இது..

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு அல்லது மூன்று செய்தி குறிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

எதிர்பார்ப்பை மிஞ்சிய ஏர்டெல் நிதி முடிவுகள்

இந்திய டெலிகாம் துறையில் முதல் இடத்தில இருக்கும் பாரதி ஏர்டெல் இன்று நிதி நிலை முடிவுகளை அறிவித்தது.

Indigo IPO பங்கை வாங்கலாமா?

இந்திய விமானத்துறை நிறுவனங்களில் தொடர்ந்து லாபம் ஈட்டித் தரும் நிறுவனங்களில் ஒன்று Indigo.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த நிறுவனங்களுக்கு லாபம்

சில சமயங்களில் ஒருவரது பிரச்சினைகள் மற்றவர்களுக்கு சாதகமாக அமையும். அதிலும் வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இது சாலப் பொருந்தும்.

வியாழன், 22 அக்டோபர், 2015

சாதகமான காரணிகளால் தொடர் உயர்வில் இந்திய சந்தை

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த ஒரு தொய்வு நிலை தற்போது சந்தையில் இல்லை என்றே சொல்லலாம்.

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராதம் தவிர்க்க சில டிப்ஸ்

கிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கலாம்.


வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை இல்லாவிட்டால் நாம் போட்டு வைத்து இருந்த தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஒரு கட்டத்தில் நெகடிவ் பேலன்ஸ் தொகைக்கும் சென்று விடும். ஆமாம். அபராதமாக பிடித்து விடுவார்கள்.



ஆர்பிஐ இந்த மினிமம் பேலன்ஸ் தொடர்பாக எந்த பொது விதி முறையும் வைத்து இருப்பதில்லை.

அதனால் வங்கிகளுக்கிடையே இந்த மினிமம் பேலன்ஸ் தொகையும் அபராதமும் மாறுபடுகிறது.

அரசு வங்கிகள் என்றால் குறைந்த தொகை வைத்துக் கொண்டால் போதும். தற்போது ஆயிரம் ரூபாய் மினிமம் வைத்துக் கொண்டால் போதும்.

புதன், 21 அக்டோபர், 2015

1.25 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் கம்பெனி

நேற்று வெளியாகிய இந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஒரே துறையில் கடுமையான போட்டி கொடுத்து வந்த இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

மீண்டும் வரும் மேகி, என்ன சோதனைகளோ?

நெஸ்லே நிறுவத்தின் மேகி ஆறு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக வேதியியல் பொருட்கள் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது.

திங்கள், 19 அக்டோபர், 2015

மொபைல் போன் கால் கட்டானால் ஒரு ரூபாய் கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாகவே Call Drop என்ற பிரச்சினை இருந்து வந்தது. அதாவது நாம் மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் கட்டாகும் அந்த நிமிடத்திற்கும் சேர்த்து நாம் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏமாற்றம் கொடுத்தாலும் தடுமாறாத HCL பங்கு

கடந்த சில வாரங்கள் முன்பு HCL நிறுவனம் கிளின்ட் மற்றும் நாணய பிரச்சினைகளால் தங்கள் லாபம் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்து இருந்தது.

சனி, 17 அக்டோபர், 2015

பண்டிகை காலத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்

ஆயுத பூஜை, தீபாவளி என்று பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் ஆன்லைனில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

சுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்

இந்த பதிவு எழுதும் முன் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் வரும் சந்தானம் டயலாக் தான் நியாபகம் வருகிறது.

அந்த வசனம் "லோன் கேட்டு வருபவர்களை லோ லோ என்று லொங்களிக்கும் ஐயா அவர்களே..." என்று ஆரம்பிக்கும்.



காமெடியாக இருந்தாலும் நமது ஊரில் நடக்கும் மிகவும் பொதுவான நிகழ்வு தான்.

கார்பரேட்களுக்கு லோன் கொடுக்கும் போது சலுகை அல்லது கரிசனம் காட்டும் வங்கிகள் தனி நபர்களாக சென்றால் எல்லாம் சரியாக இருந்தாலும் எளிதில் லோன் கொடுப்பதில்லை.

அப்படியே எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் செக்யூரிட்டி என்ற பெயரில் சொத்து பத்திரங்கள் கேட்கப்படும்.

வியாழன், 15 அக்டோபர், 2015

எரிபொருள் விலை குறைவால் உச்சத்தில் விமான பங்குகள்

இந்திய விமான நிறுவனங்களை நடத்துவது என்பது மிகவும் சிரமம்.

புதன், 14 அக்டோபர், 2015

SIP முறையில் ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்ய எளிய வழி

இதற்கு முன்னர் SIP முறையில் முதலீடு செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க: SIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது?


இந்த SIP முறை வைப்பு நிதிகளுக்கு பொருந்துவதை விட, ரிஸ்க் அதிகமுள்ள பங்குச்சந்தை முதலீடுகளுக்கும், ம்யூச்சல் பண்ட்களுக்கும் தான் அதிகம் பொருந்துகிறது.



ஏனென்றால், இவற்றில் பங்கு விலைகளோ அல்லது ம்யூச்சல் பண்டில் NAV விலையோ தொடர்ந்த மாற்றத்திற்கு உட்பட்டவை.

ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும் இந்த விலைகளை உற்றுப் பார்த்து முதலீடு செய்வது என்பது எளிதான காரியமல்ல.

இந்த சமயத்தில் தான் Systematic Investment Plan(SIP) என்ற முறை முக்கியத்துவம் பெறுகிறது.

செவ்வாய், 13 அக்டோபர், 2015

சந்தையின் எதிர்பார்ப்பில் வந்த TCS நிதி முடிவுகள்

கடந்த ஒரு வருடமாக TCS பங்குகள் ஒன்றும் பெரிதளவு மாற்றம் காணவில்லை.

தி மார்சியன் - திரைப்பட பார்வை

இது பொருளாதாரத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒரு பதிவு. அண்மையில் ரசித்து பார்த்த ஒரு திரைப்படத்தை பற்றி எழுதுகிறோம்.

திங்கள், 12 அக்டோபர், 2015

நல்ல அறிக்கை கொடுத்தும் மந்தமாக இன்போசிஸ் பங்குகள்

இன்று இன்போசிஸ் நிறுவன நிதி அறிக்கை வெளியிடப்பட்டது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Coffee Day IPOவை வாங்கலாமா?

சிறிது நாட்கள் இடைவெளியின் பிறகு ஒரு IPOவை பற்றி பார்ப்போம்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரலாம்.


சிட்டியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாயாவது தேவையாக உள்ளது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த தொகையை மொத்தமாக தருவது என்பது இயலாத காரியம்.



அதனால் தான் வங்கி கடனுக்கு செல்கிறார்கள். ஆனால் வங்கியில் உள்ள விதி முறைகள் படி அதிக பட்சம் 80% தான் வங்கி கடன் தருவார்கள். மீதி 20% என்பதை நாம் கையில் இருந்து தான் போட வேண்டும். இதனை வங்கி பாசையில் Loan-To-Value என்று சொல்வார்கள்.

அப்படி என்றாலும் நாம் கையில் இருந்து போட வேண்டிய காசை பார்த்தால் 30 லட்ச ரூபாய் பிளாட்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2015

கச்சா எண்ணெய் விலை உயர்வால் மாற்றம் காணும் ஆயில் பங்குகள்

நேற்று ONGC, Cairn போன்ற நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.

புதன், 7 அக்டோபர், 2015

பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.


ஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.



ஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.

இதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.

வரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

சந்தையில் திருத்தங்களை எதிர்பார்க்கலாம்..

ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைத்த பிறகு பல வங்கிகள் தொடர்ச்சியாக வட்டிக் குறைப்புகளை அறிவித்து வருகின்றன.

புவி வெப்பமயமாதல் தாக்கம் பங்குகளில் எப்படி எதிரொலிக்கலாம்?

அவ்வளவு சீரியசாக எடுக்கப்படாத ஒரு செய்தியின் தாக்கம் பங்குகளில் எப்படி எதிரொலிக்கலாம் என்பதை பார்ப்போம்.

திங்கள், 5 அக்டோபர், 2015

இன்ஜினியரிங் படிக்காதவர்களை தேடும் விப்ரோ

இதனை ஐடி துறையில் வந்த புது மாற்றம் என்று தான் சொல்ல முடியும்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

டெபாசிட்களுக்கு உண்மையான வட்டி என்பது என்ன?

இரு வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு பத்து சதவீத அளவு வட்டி தந்து கொண்டிருந்தன.

ஆனால் கடந்த ஓரிரு வருடத்தில் வட்டி குறைந்து ஏழரை சதவீதத்திற்கும் அருகில் வந்து விட்டது. தற்போது ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக வந்து விட்டது.



இதனால் ஒரு லட்ச ரூபாய் பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்து இருப்பவர்களுக்கு முன்பு மாதம் 833 ரூபாய் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது  400 ரூபாய் அளவு தான் கிடைக்கும்.

சனி, 3 அக்டோபர், 2015

வரி விலக்கு தரும் PFC அரசு நிறுவன கடன் பத்திரம்

தற்போது சந்தையில் நிலவும் அதிரடி ஏற்ற, இறக்கங்கள் காரணமாகவும், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி குறைக்கப்பட்டதாலும் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்கள் அதிக தேவையில் உள்ளன.


நிலையான வருமானம் தேவைப்படுபவர்கள் இந்த கடன் பத்திரங்களை நாடி செல்கின்றனர்.



நாம் கடந்த வாரம் NTPC நிறுவனத்தின் கடன் பத்திரங்களை வாங்குமாறு கூறி இருந்தோம்.

பார்க்க: அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்

வியாழன், 1 அக்டோபர், 2015

சாதகமாகும் உள்நாட்டு பொருளாதார காரணிகள், மீட்சிக்கு வாய்ப்பு

கடந்த இரண்டு மாதங்களாக கரடியின் பிடியில் இருந்த சந்தை பலருக்கு முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

மோடியின் கருப்பு பண திரட்டல் நடவடிக்கை பலன் தரவில்லை

இந்த தேர்தலில் பிஜேபி அரசு ஜெயித்த பிறகு கருப்பு பணத்தை மீட்போம். மீட்ட பிறகு ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.