வியாழன், 30 அக்டோபர், 2014

உண்மையான காரணத்தில் உயர்ந்து காணப்படும் சந்தை..

கடந்த ஒரு ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தையைப் பார்த்தால் 20,000 புள்ளிகளில் இருந்து 27,000 வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை உயர்விற்கும் மோடி என்ற பெயர் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு முறை உயர்வின் போதும் ஒரு பயம் இருக்கும்.

புதன், 29 அக்டோபர், 2014

பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்

கடந்த வாரம் 'கத்தி' திரைப்படம் பார்த்து முடியும் போது ஒரு வித சமூக அக்கறையை நமக்குள் கொடுத்தது. படத்தில் வருவது போல் கார்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. அவர்களை அவர்கள் வழியில் சென்று தான் எதிர்க்க வேண்டி உள்ளது.

வேலை நிறுவனங்களில் கிடைக்கும் பங்குகளை என்ன செய்வது? (ப.ஆ - 32)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

இந்த வாரத்தில் நாம் பணிபுரியும் நிறுவனமான Samsung SDS நாளை மறுநாள் கொரிய பங்குச்சந்தையில் IPOவாக வருகிறது.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி? (ப.ஆ - 31)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகம்
பங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)

நேற்றும் ஒரு என்ஆர்ஐ தொடர்பான பதிவு தான் எழுதி இருந்தோம். (வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு). இன்றும் அவர்களுக்கான ஒரு கட்டுரை தான் வருகிறது.

திங்கள், 27 அக்டோபர், 2014

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு

வரி விதிப்பதில் இந்திய அரசை விட்டால் ஆள் கிடையாது. இருந்தால், நின்றால், காற்றுக்கு, தண்ணீருக்கு என்று அனைத்திற்கும் வரி விதிப்பார்கள் போல.. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒரு புது வரி வித்தியாசமாக கண்டுபிடிப்பார்கள்.

புதன், 22 அக்டோபர், 2014

காப்புரிமை போரில் விழி பிதுங்கும் மொபைல் நிறுவனங்கள்

தமது கண்டுபிடிப்புகளுக்காக பெறும் ஒரு உரிமையே காப்புரிமை என்று அழைக்கப்படுகிறது. இது பல காலங்கள் ஆராய்ச்சிக்காக செலவிட்டதன் பயனை திரும்பி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதனால் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு காப்புரிமை வழிவகுத்தது.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்களுடன் ஒரு பங்கு பரிந்துரை

இந்த வருடம் எமக்கு சிறப்பு தீபாவளியாக அமைந்தது. முகம் தெரியாத பல நண்பர்கள் மெயிலில் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அதற்கு 'முதலீடு' தளமே முதற்காரணம். நண்பர்களுக்கு நன்றி!

திங்கள், 20 அக்டோபர், 2014

புது நிலக்கரிக் கொள்கையால் யார் யாருக்கு லாபம்?

நேற்று அருண் ஜெட்லி அவர்கள் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான அரசின் கொள்கையை வெளியிட்டு உள்ளார். இது ஓரளவு ஆதரவும் எதிர்ப்பும் கலந்ததாக காணப்படுகிறது. சந்தையில் சில நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிலவற்றிக்கு பாதகமாகவும் அமையும்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பங்குச்சந்தைக்கு சாதகமாகும் பிஜேபி தேர்தல் வெற்றி

கடந்த ஒரு மாதமாக  பல வித உலகக் காரணிகளின் காரணமாக பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்கி இருந்தது. இதற்கு ஹாங்காங் அரசியல் சிக்கல்கள், ஜப்பான், யூரோ நாடுகளின் பொருளாதார பிரச்சினைகள் போன்றவை கூட்டுக் காரணமாக அமைந்தன.

வியாழன், 16 அக்டோபர், 2014

இரட்டை இலக்க வருமானத்தில் ஒரு அரசு ஓய்வூதிய திட்டம்

அருகி வரும் கூட்டுக் குடும்ப கலாச்சார வாழ்க்கையில் ஓய்வூதியத்திற்கும் திட்டமிடப்படுவதும் தேவையான ஒன்று.

புதன், 15 அக்டோபர், 2014

உலகக் காரணிகளால் மந்தமாக இயங்கும் இந்திய சந்தை

மோடி பதவியேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகியுள்ளதால் அவர் மேல் இருத்த ஒரு அதிக பட்ச எதிர்பார்ப்பு தற்போது வழக்கமான நிலைக்கு வந்துள்ளது. இதனால் ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த சந்தை தற்போது நிதானமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கடினமான காலக்கட்டத்தில் DLF நிறுவனம்

நேற்று DLF நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட மூன்று வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மட்டும் DLF நிறுவன பங்குகள் 28% சரிவை சந்தித்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல வித காரணங்களால் 170ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு தற்போது 100ல் வந்து நிற்கிறது.

திங்கள், 13 அக்டோபர், 2014

இன்ப அதிர்ச்சியில் இன்போசிஸ்

நேற்று உலக சந்தைகள் கடுமையான வீழ்ச்சியில் இருக்க, இந்திய சந்தை மட்டும் மென்பொருள் மற்றும் மிட்கேப் பங்குகளின் தயவால் ஓரளவு தப்பித்தது.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

போர்ட்போலியோ பெறுபவர்களுக்காக 'அறிவிப்பு' வசதி

நாம் முன்னர் ஒரு பதிவில் அறிவிப்பு என்ற பகுதியினை தளத்தில் இணைப்பதாக சொல்லி இருந்தோம். அதனை தற்போது தளத்தில் இணைத்து உள்ளோம். இதனை இங்கு பார்க்கலாம்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதி..
Stock Split: பங்கினை ஏன் பிரிக்கிறார்கள்? (ப.ஆ - 29)

நண்பர் முத்துசுவாமி அவர்கள் பங்குச்சந்தை முதலீடுகளைப் பற்றிய சில ஒப்பீடுகளை பற்றி மின்அஞ்சலில் கேட்டு இருந்தார். இது ஒரு பொதுவான விடயம் என்பதால் இங்கு சுருக்கமான கட்டுரையாக பகிர்கிறோம்.

ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை?

உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் "ஒரு நாடு இரு கொள்கை" பிரச்சினை.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

திருவிழாவை நடத்தி அதிருப்தியை சம்பாதித்த ப்ளிப்கார்ட்

நேற்று முன்தினம் Big Billion Day என்று ஒரு திருவிழாவை ப்ளிப்கார்ட் நடத்தியது. ப்ளிப்கார்ட் 6-10 என்ற இலக்கமுடைய பிளாட்டில் ஆரம்பிக்கப்பட்டதன் நினைவாக அக்டோபர் 6 தேதியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

திங்கள், 6 அக்டோபர், 2014

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் பங்குச்சந்தை...

தசரா விடுமுறைக்கு பின் ஐந்து நாள் அடைக்கப்பட்ட பங்குச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது..நமது திருப்திக்காக அதிமுகவினர் கலகத்தினால் அடைக்கப்பட்ட பங்குச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது என்றும் கருதிக் கொள்ளலாம்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

5000 கோடியை தானமாக கொடுக்கும் ஜூன்ஜூன்வாலா

இரண்டு நாள் முன் தினமலரில் ஒரு செய்தி பார்க்க நேரிட்டது. ஒவ்வொரு முறையும் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்போகும் போது இந்தியாவிலிருந்து ஏன் புதியவர்கள் அதிகம் பட்டியலுக்குள் வரவில்லை என்பதை அழகாக எழுதி இருந்தார்கள்.

புதன், 1 அக்டோபர், 2014

பங்குச்சந்தையில் மோடியின் கவர்ச்சி குறைகிறது...

தேர்தல் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள், மோடி மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இந்திய பங்குச்சந்தை ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது.