தற்போதைய பங்குச்சந்தை உயர்விற்கு எமது முந்தைய சந்தேகத்தில் நிற்கும் சந்தை கட்டுரையில் Liquidity Driven Market என்பதையும் குறிப்பிட்டு
இருந்தோம்.
அதன்படி பார்த்தாலும் கடந்த ஜூனில் நிகரமாக 2500 கோடி அளவு FIIகள்
வாங்கியுள்ளனர். தற்போதைய ஜூலையில் நேற்று வரை 3500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர்.
Bull Market என்பதில் கடந்த கால வரலாற்றை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய
தொகையல்ல. ஆனாலும் சந்தை ஏன் உயர்கிறது என்று பார்த்தால் அங்கு Robinhood
Investors என்று சொல்லப்படும் புதிய முதலீட்டாளர்கள் வந்து நிற்கின்றனர்.
முதலில் Robinhood Investors யார் என்று பார்ப்போம்.
அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தை முதலீடு என்பது மிகவும் காஸ்டிலியானது.
ஆமாம். ஒரு 50$மதிப்புடைய பங்கு வாங்குவதற்கு 10$ புரோக்கர் கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. நமது முதலீட்டில் 20% அளவு கமிஷனாக போகும்
போது ஆரம்பத்திலே முதலீட்டின் ஒரு பகுதி சென்று விடுகிறது. அதனை மீட்டு எடுப்பதே
ஒரு பெரிய வேலை.
இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் 2014ம் வருடத்தில் Robinhood என்ற Stock
Brokerage நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இருப்பவர்களிடம்
இருந்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான்
பிரபலமான ராபின்ஹூட் அவர்களது வேலை. அது போல் இந்த நிறுவனத்தில் Retail Investors
என்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு மலிவாக பங்கு வாங்கும் வசதியை உருவாக்குவதே
இதன் முக்கிய நோக்கம். இந்தியாவில் நமது Zerodha புரோக்கர் நிறுவனத்திற்கு முன்னோடி என்றும் சொல்லி கொள்ளலாம்.
Robinhood நிறுவனத்தில் ப்ரோக்கர் கமிஷன் என்ற எதுவுமே கிடையாது.
எல்லாம் இலவசம் தான். இது போக Fractional Shares என்ற முறையில் பங்கையும் பங்கு
போட்டு வாங்கி கொள்ளலாம். அதாவது Amazon நிறுவனத்தின் ஒரு பங்கு 2500$க்கும் மேல்
என்றால் சில்லறை முதலீட்டாளாளர்கள் வாங்க முடியாது. அதனை 1$ அளவிற்கு பிரித்து
போட்டு வாங்கும் வசதியும் உண்டு. இதனால் புதிய முதலீட்டாளர்களின் சொர்க்க பூமி என்று Robinhood நிறுவனத்தை
சொல்வார்கள்.
எப்பொழுதுமே ராபின்ஹூட்டில் 50%க்கும் மேற்பட்ட மொத்த வாடிக்கையாளர்கள் புதியவர்கள் தான். அதனால் இவ்வாறான புதிய முதலீட்டாளர்களை Robinhood Investors
என்றும் குறிப்பிடுவார்கள்.
இப்படியான ராபின்ஹூட் முதலீட்டாளர்களை பார்த்தால் முதலீடு என்பதை விட ட்ரேடிங்
என்பதில் தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள். ட்ரேடிங் முறையில் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதித்து விட்டு வெளியே வருவது.
அவர்களுக்கு மார்ஜின் முறையில்
பங்குகளை வாங்குவதற்கு கடன் தேவைப்படும். அதில் பெறப்படும் வட்டியில் ஒரு பகுதி ராபின்ஹூட் நிறுவனத்திற்கு கமிஷனாக கிடைத்து விடும். அதற்கு நிதி நிறுவனங்களுடன் கூட்டு
சேர்ந்திருப்பார்கள்.
இது தவிர நமது டெலிவெரியில் இருக்கும் பங்குகள் புரோக்கர் கணக்கில் இருந்தால்
அதுவும் Collateral Margin என்பதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனை Margin
Lending முறையில் வாடகை கொடுப்பதிலும் பணம் கிடைக்கும். இப்பொழுது Discount Brokers நிறுவனங்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்பதும் புரிந்து இருக்கும்.
இனி Robinhood முதலீட்டாளர்களுக்கு வருவோம்.
இந்தியாவிலும் கடந்த ஐந்து
மாதங்களில் புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை கணிசமாக கூடி விட்டது. கிட்டத்தட்ட
35 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் இணைந்துள்ளனர்.
அநேகமாக எல்லாவற்றையும் இலவசமாக வழங்கும் Zerodha, 5paisa போன்ற நிறுவனங்கள் தான் இதற்கு காரணமாக இருக்கும் என்று
நினைக்கிறோம். கட்டணங்கள் எதுவும் கிடையாது. எளிதான முறையில்
எங்கிருந்தாலும் டிமேட் கணக்கை திறந்து கொள்ளலாம் என்ற சூழ்நிலை லாக்-டவுன் நிலையில் இணைய வசதி இருக்கும் இளைய தலைமுறைக்கு சாதகமாக அமைந்து விட்டது.
நிறைய வேலை இழப்புகள் கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட சூழ்நிலையில் ஏதேனும்
வருமானத்தை பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.வெளியே சென்றால் வேலை கிடைக்காது
என்ற சூழ்நிலையில் பங்குச்சந்தை தான் தீர்வு என்ற எண்ணமும் பலருக்கு
வந்துள்ளது.
எமது
Facebook குழுமத்தில்
கூட "Lock-Down சூழ்நிலையில் வருமானம் வேண்டுமா? நாங்கள் உதவி செய்கிறோம்" என்று பல மெஸேஜ்கள் வருகின்றன. வாசகர்கள் முதலீடு பாதுகாப்பு கருதி நாம்
அனுமதிப்பதில்லை.
பொதுவாக இவ்வாறு பங்குச்சந்தைக்கு புதிதாக வருபவர்களுக்கு பெரிதளவு
Fundamentals, Technical தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் ஏற்கனவே
இருக்கும் Technical Platforms போன்றவற்றை நம்பி தான் ட்ரேடிங்
செய்வார்கள். Technical Platforms மென்பொருட்கள் போன்றவற்றை பார்த்தால் வெளிப்புறத்தில் இருக்கும்
புறக்காரணிகளை பெரும்பாலும் கருத்தில் கொள்வது கிடையாது.
கொரோனா வந்ததா?, அதற்கு
மருந்து கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பன போன்றவை அங்கு கணக்கில் வருவதில்லை.
வழக்கமான சூழ்நிலையில் கூட இந்த Technical Platforms வேலை செய்யும். ஆனால்
தற்போதைய கொரோனா சூழ்நிலையில் ட்ரேடிங் செய்ய உதவும் மென்பொருட்களை பெரிதளவு நம்ப முடியாது.
அது தான் சந்தையிலும் தற்போது எதிரொலிக்கிறதோ? என்று நினைக்கிறோம். கடந்த இரு மாதங்களில் ஒவ்வொரு வாரமும் நிப்டி 300 புள்ளிகளாவது
உயர்ந்துள்ளது. 100 நாள் சராசரி கடந்து விட்டோமா? அடுத்து 150 நாள் சராசரி என்று
தற்போது 200 நாள் சராசரியை கூட தாண்டி விட்டோம். அது தான் 11200 NIFTY புள்ளிகள் வரை உயர்வு.
ஆனால் Fundamentals என்பதில் பெரிய மாற்றமில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை, தடுப்பு மருந்தும் எப்பொழுது
வரும் என்ற தகவல் இல்லை. WHOவின் படி அடுத்த வருடம் தான் வரும் என்றால் சில
செய்திகள் செப்டம்பரில் வரும் என்று தெரிவிக்கின்றன. குழப்பமாக தான் உள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் சீனாவுடன் இன்னும் சண்டை போட்டுக் கொண்டு தான்
இருக்கிறார்கள். இப்படி அடிப்படை நிலைகள் அப்படியே இருக்கும் போது சந்தை மட்டும்
உயர்ந்து கொண்டே செல்கிறது.
எப்பொழுதுமே பங்குசந்தையில் Retail Investors பணம் ஈட்டுவதில்லை. பெரிய முதலைகள்
தான் அள்ளுவார்கள். இந்த பெரிய முதலைகள் சூழ்நிலை சரி இல்லை என்றால் வெளியே
வருவதற்கு காத்து இருப்பார்கள். அப்படி இதற்கு மேல் காத்திருக்க வேண்டாம் என்றால்
விற்க தொடங்குவார்கள். அந்த சூழ்நிலையில் சரிவுகள் அதிகமாக இருக்கும். இந்த சரிவுகள் சில நாட்களிலே நடந்து முடிவதால் சிறு முதலீட்டாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
பங்குசந்தையில் FOMO என்றதொரு பதம் உண்டு. Fear Over Missing Out என்பதன்
சுருக்கம். அதாவது வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமா? என்ற எண்ணம் மனதில் வந்து
விட்டால் இருக்கிற பணம் முழுவதையும் சந்தையில் போடுவது தான். இது ராபின்ஹூட் முதலீட்டாளர்களுக்கு அதிகமாக வரும்.அந்த சமயத்தில் வந்த பணத்தில் பெரிய முதலைகள் அழகாக
வெளிவந்து விடுவார்கள்.தற்போதும் சந்தை FOMO
நிலையில் இருப்பதாக தான் கருதுகிறோம்.
exactly reflected...good understanding..but one more thing..most of the fiis are having both long and short so as to manage their stand now. further, US stimulus is the main source to this FIIS. but our DIIs are cleverly booking profits. hence, we may not expect the same 7500 but big fall is SURE..again small bounce and zigzag..until the vaccine and sign of recovery in economic growth...
பதிலளிநீக்குanyhow..good analysis
Generally shares are deposited in depositary services like cdsl and nsdl. Zerodha is linked with cdsl. So even if zerodha goes bankrupt our shares are safe in cdsl. Thumb rule is you have to monetize the shares in cdsl. Also zerodha doesn't use to lend your shares without your permission. There is no safe in full time brokers. Look at karvy. They also one of the full time brokers. But what happened.
பதிலளிநீக்குஅப்ப என்ன செய்யலாம் என்று சொல்லுறிங்க...
பதிலளிநீக்குதற்சமயம் காந்தியின் வழிமுறையை பங்குசந்தையில் பின்பற்றுவது தான் சாலச்சிறந்தது. பங்குச்சந்தையை பார்க்காதே பங்குச்சந்தையை பற்றி பேசாதே பங்குச்சந்தையை பற்றி கேட்காதே. நிபிட்டி 7800 புள்ளிகள் சரிந்தபோது MONEYCONTROL, எகனாமிக் TIMES, பிசினஸ் ஸ்டாண்டர்ட், NDTV, bloomberg போன்ற அத்தனை பங்குச்சந்தை செய்தி நிறுவனங்களும் DONT CATCH THE FALLING KNIFE அதாவது மேலிருந்து விழும் கத்தியை பிடிக்க முயற்சி செய்யாதீர்கள் என்று கூறினார்கள், ஆனால் அவர்களின் பினாமிகள் பங்குகளை வாங்கி குவித்தார்கள். தற்சமயம் அவர்கள் எல்லோரும் மிகப்பெரும் லாபத்தில் இருப்பார்கள் ஆனால் பொதுமக்கள் இவர்கள் பேச்சை கேட்டு யாருமே இன்வெஸ்ட் செய்யவில்லை. தற்போது நண்பர் கூறியது போல FOMO நிலையில் இருக்கிறார்கள் தற்சமயம் கையில் உள்ள அனைத்து பணத்தையும் நன்றாக மேலே வந்துவிட்ட பங்குகளில் முதலீடு செய்வார்கள். உதாரணம், RELIANCE, HUL PEL BRITANNIA போன்ற நிறுவனங்கள். இன்னும் ஆறுமாத காலத்தில் சந்தை மீண்டும் அதாலா பாதாளத்திற்கு செல்லும் அப்போது நல்ல பங்குகளில் முதலீடு செய்து கொள்ளலாம். பொறுமை கடலினும் பெரிது, தூண்டில் போட்டு காத்திருந்தாள் தான் மீன் மாட்டும். பொறுமையற்றவர்களுக்கு மீன் கிடைக்காது அது போலத்தான் சந்தையும், பொறுமையாக இருந்து தக்க தருணத்திற்காக காத்திருந்தாள் ஜிலேபி என்ன சாலமன் மீன் கூட மாட்டும். தற்போது 20200727 அன்று YES BANK விலை RS.12.30 இன்னும், தற்போதைய நிலையில் வாங்கிவிட்டு இன்னும் ஆறு மாதம் காத்திருந்தாள் எஸ் வங்கியின் விலை RS.30 ரூபாயை தொட்டிருக்கும். warren buffett கூறியது எல்லோரும் வேண்டாம் வேண்டாம் என்று விற்கும்போது நாம் தைரியமாக வாங்கவேண்டும் எல்லோரும் வேண்டும் வேண்டும் என்று மேலும் மேலும் வாங்கும் பொது நாம் விற்றுவிட்டு வரவேண்டும்.
பதிலளிநீக்கு