புதன், 28 டிசம்பர், 2016

சிம்ம சொப்பனம் - புத்தக விமர்சனம்

சில சமயங்களில் சிலரது சுய வரலாறு நமது தன்னம்பிக்கையை பல மடங்கிற்கு முன் இழுத்து செல்லும். அப்படியொரு வரலாறுடைய கியூபா அதிபர் பெடல் காஸ்ட்ரோ அவர்களின் புத்தகத்தை அண்மையில் படிக்க நேரிட்டது. புத்தகத்தின் பெயர் சிம்ம சொப்பனம்.


உலகம் முழுவதும் கம்யூனிச கொள்கைகளை பின்பற்றிய நாடுகள் என்று ரஷ்யா, சீனா, வட கொரியா என்று பல நாடுகள் இருந்து வந்தன.அவற்றில் ரஷ்யா பல துண்டுகளாக பிரிந்து விட்டது. சீனா பெயருக்கு தான் கம்யூனிசம் என்று சொல்லி வருகிறதே தவிர கொள்கைகள் எல்லாம் முதலாளித்துவத்தை நோக்கி நகர ஆரம்பித்து விட்டன.

வட கொரியா கேட்க வேண்டாம். வளர்ச்சி எல்லாம் வேண்டாம், ராணுவம் மட்டும் போதும் என்ற வித்தியாசமான  கம்யூனிச கொள்கையை பின்பற்றி வருகிறது.

சனி, 24 டிசம்பர், 2016

பட்ஜெட் வரை நம்பிக்கை இல்லாத சந்தை


அதிக அளவில் நண்பர்களிடம் சந்தையின் தாழ்வு நிலை குறித்து மின் அஞ்சல்கள் வந்ததால் இந்த கட்டுரையை  எழுதுகிறோம்.

செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஏற்றம் காணும் எண்ணெய் விலையால் சந்தையில் என்ன மாறலாம்?

இந்தக் கட்டுரை தொடங்கும் முன்பு மாண்பு மிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் அகால மரணத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க நகைகள் மீதான வரி விதிப்பு பற்றிய முழு விளக்கம்

இன்று வீடுகள் மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கும் வரி விதிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் பாமர மக்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.


ஆனால் அதனை தெளிவு படுத்த வேண்டிய மீடியாக்கள் மேலும் குழம்பிய குட்டையிலே மீன் பிடித்துக் கொண்டிருந்தது என்பது ஒரு வேதனையான விடயம் தான்.செய்தியாக அறியப்பட்டது என்பது இது தான்.

ஒரு வீட்டில் மணமான பெண்ணுக்கு 500 கிராம் தங்க நகைக்கு மேலும், மணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் நகைக்கும் மேலும், அதே நேரத்தில் ஒரு ஆணுக்கு 100 கிராம் மேலும் வைத்து இருந்தால் அந்த தொகைக்கு வரியாக 85% கட்ட வேண்டும் என்பது தான் பரப்பப்பட்டது.