ஞாயிறு, 29 ஜூலை, 2018

மீண்டும் பலன் தரத் தயாராகும் சுற்றுலாத் துறை

தற்போது சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகளை எழுதுவதை விட முதலீடு பார்வையில் கட்டுரைகள் எழுதுவது எமக்கும் உற்சாகமாக இருக்கிறது.

வியாழன், 26 ஜூலை, 2018

ம்யூச்சல் பண்ட் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நேரமிது

தற்போது டிவியை திறந்தால் 'Mutual Fund Sai Hai' என்று வரும் விளம்பரங்கள் ம்யூச்சல் பண்ட் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கின்றன.


ஆனால் அதே பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் விளம்பரங்களாகவே காட்டப்படுகின்றன.அதிலும் விளம்பரத்தில் இறுதியில் 'ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை' என்பதும் சிறிதளவில் கவனிக்கபடாத ஒன்றாகவே தான் இருக்கிறது.

அதனால் மக்களும் நம்பி முதலீடுகளை போடுவதும் அதிகரித்து வருகிறது.

ம்யூச்சல் பண்ட் என்பதே நமது சார்பாக மற்றொருவர் பங்குசந்தைகளில் முதலீடு செய்து லாபம் கொடுக்கிறார் என்பது தான்.

செவ்வாய், 24 ஜூலை, 2018

HDFC AMC IPOவை வாங்கலாமா?

நாளை ஜூலை 25 முதல் HDFC AMC நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.


அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.HDFC AMC என்பது HDFC குழுமத்தின் ஒரு பிரிவு தான். HDFC Asset Management Company என்பதன் சுருக்கம் தான் இந்த நிறுவனம்.

அதாவது மக்களின் சேமிப்பிற்கு தேவையான ம்யூச்சல் பண்ட், இன்சுரன்ஸ் போன்றவற்றில் நிதி மேலாண்மை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் Standard Life நிறுவனமும் குறிப்பிட்டத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளது.

திங்கள், 23 ஜூலை, 2018

சமச்சீர் இல்லாத நிப்டி உயர்வு, சரியான அளவுகோலா?

எமக்கு வரும் கேள்விகளில் முக்கிய ஒன்று...நிப்டி மட்டும் உயர, தாங்கள் வைத்து இருக்கும் பங்குகள் ஏன் கூடவில்லை என்பது தான்.


இது உண்மை தான்.நிப்டி என்பது ஐம்பது பெரிய இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பை குறிக்க பயன்படுத்தும் குறியீடு.

இந்திய பங்குசந்தையை மதிப்பிட உதவும் ஒரு முக்கிய அளவுகோல் தான் நிப்டி.

ஆனால் தற்போதைய  ஏற்ற, இறக்கங்கள் நிப்டியை ஒரு சமசீரான அளவோலாக கருத முடியாத நிலையில் தான் வைக்கின்றன.

வெள்ளி, 20 ஜூலை, 2018

பெற்றோரை கவனிக்கவில்லை? சொத்தை திருப்பிக் கொடுக்க..

ஒரு சமுதாயத்தில் பெண், வயதானனவர்கள், குழந்தைகள் போன்றோர் வலுவற்றவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. 

வியாழன், 19 ஜூலை, 2018

TCNS Clothing IPOவை வாங்கலாமா?

நேற்று ஜூலை 18 முதல் TCNS Clothing நிறுவனத்தின் விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன.


இந்த ஐபிஒவினை வாங்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.TCNS Clothing நிறுவனமானது பெண்களுக்கு தேவையான ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

இதனுடைய பிராண்ட்கள் W, Aurelia மற்றும் Wishful என்ற பெயர்களில் அறியப்படுகிறது.

இதில் W என்பது நகரங்களில் பிரபலமானதே.மேல் உள்ள லோகோவை பார்த்தால் தெரிய வரும்.

புதன், 18 ஜூலை, 2018

ஓவர்லோட் குழப்பத்தால் பதறும் ஆட்டோ நிறுவனங்கள்

மோடி அரசுக்கு எல்லோரையும் பதற்றத்தில் வைத்து இருப்பது பிடித்த வேலை போல.

திங்கள், 16 ஜூலை, 2018

ட்ரேட் மார்க்கில் பாடம் கற்பிக்கும் சரவண பவன்

கடந்த நான்கு நாட்களாக திருப்பதி பயணம். கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணம். அதனால்  பதிவுகள் எழுத முடியவில்லை.


எங்கும் கூட்டம், எதிலும் தமிழ் என்று ஆந்திர மாநிலத்தில் இருந்தது போலவே தோன்றவில்லை.திருப்பதிக்கு அண்மையில் உள்ள காளகஸ்தியில் கூட இதே அனுபவம் தான்.

மதராஸ் மனதே என்று கேட்டவர்களுக்கு திருப்பதி அமைந்திருக்கும் சித்தூர் மாவட்டத்தை கொடுத்து விட்டோம். ஆனால் தமிழின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது என்றே சொல்லலாம்.

திருப்பதியில் கிடைத்த ஒரு அனுபவத்தை நிர்வாக ரீதியாக பார்ப்போம்.

புதன், 11 ஜூலை, 2018

அபராதம் தவிர்த்து வருமான வரி பதிவு செய்க..

ஒவ்வொரு வருடமும் ஜூலை 31க்குள் வருமான வரி பதிவு செய்ய வேண்டும்.

இந்த வருடமும் வருமான வரி பதிவு செய்வதற்கான கடைசி தேதி நெருங்குகிறது.ஆனால் இந்த வருடம் முதல் அரசு கட்டாய அபராதம் நிர்ணயித்துள்ளது.

ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு பதிவு செய்தால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அதே நேரத்தில் டிசம்பர் 31க்கு மேல் பதிவு செய்தால் 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.

ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

MSP விலை விவசாயிகளுக்கு எவ்வளவு பலன் தரும்?

கடந்த வாரம் மத்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச விலைகளை உயர்த்தியுள்ளது.

வியாழன், 5 ஜூலை, 2018

பாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்

நமக்கு இன்சுரன்ஸ் பாலிசி என்றாலே முன் வருவது LIC தான்.


அரசு நிறுவனமான LICயில் போட்ட பணத்திற்கு என்றுமே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இதற்கு காரணம்.
ஆனால் அரசு வங்கிகள் நலிந்த பிறகு எல்ஐசியை ஒரு பகடை காயாகத் தான் மத்திய அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

நஷ்டத்தில் ஓடும் மத்திய அரசு நிறுவன பங்குகளை வாங்க ஆட்கள் இல்லையா? உடனே எல்ஐசியிடம் ஒப்படைத்து விடு.

அரசிடம் 24% பங்குகள் வைத்து இருக்க வேண்டும் என்ற கொள்கையால் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை வாங்க யாரும் வரவில்லை.

புதன், 4 ஜூலை, 2018

ஒரு வழியாக ஐரோப்பிய டீலை கொண்டாடிய டாடா ஸ்டீல்

டாடா குழுமத்தை பொறுத்தவரை சந்திரசேகர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

திங்கள், 2 ஜூலை, 2018

பங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்!

இருபது வருடங்களுக்கு முன்னர் பங்குசந்தையில் முதலீடு என்பது இப்போது உள்ளது போல் கணினி முறைகளில் இல்லை.


அதனால் ஏகப்பட்ட அசௌகரியங்கள் இருந்தன.நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாது. அப்படியே ஆர்டர் செய்தாலும் எதிர்பார்த்த பங்கு விலைகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.