திங்கள், 28 டிசம்பர், 2015

விடுமுறைக்கு பின்..வளர்ச்சியும் வேண்டா அரசியலும்

ஒரு நீண்ட விடுமுறைக்கு பின் கட்டுரையை தொடர்கிறோம்.

வியாழன், 10 டிசம்பர், 2015

இடைவெளிக்கு வருந்துகிறோம்..!

நன்பர்களே,

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கட்டுரைகள் எமது தளத்தில் வெளிவரவில்லை. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்று தெரிகிறது. அதனால் குறைந்தபட்சம் டிசம்பர் 20 வரை கட்டுரைகள் வெளிவருவதில் சிரமங்கள் உள்ளன. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம்!

வியாழன், 3 டிசம்பர், 2015

சென்னை வெள்ள பாதிப்பிற்கு முதலீடு தள சமூக உதவி

நமது முதலீடு தளத்தில்  போர்ட்போலியோ மற்றும் பிற சேவைகள் மூலம் வருமானத்தில் 5% பகுதியினை சமூக உதவிகளுக்கு தருவதாக உறுதி அளித்து இருந்தோம்.

புதன், 2 டிசம்பர், 2015

விடுமுறை அறிவிப்பு

நண்பர்களே,

தற்போது வெளிநாட்டில் இருந்து முழுமையாக இந்தியா திரும்பும் பயண வேலைகளில் இருப்பதால் கட்டுரை எழுத நேரம் போதுமானதாக தற்போது இல்லை.

சென்னை வெள்ள மீட்பு அவசர உதவி எண்கள்

சென்னை வெள்ள மீட்பு அவசர உதவிகளுக்கு கீழ்க்கண்ட உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

தனியார் மயமாக்கமலால் எகிறும் IDBI பங்கு

இந்திரா காந்தி காலத்தின் போது பல தனியார் வங்கிகள் அரசு உடைமையாக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது எதிர்திசையில் அரசு பயணிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

நேர், எதிர்மறைகள் கலந்து டிசம்பர் மாத பங்குச்சந்தை

கடந்த இரு மாதங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த சந்தை நவம்பர் இறுதியில் சில எதிர்பார்ப்புகளுடன் கொஞ்சம் உச்சத்தில் சென்றது.

வெள்ளி, 27 நவம்பர், 2015

வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?

பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.


எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.

வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.

வியாழன், 26 நவம்பர், 2015

மீண்டும் பார்லிமென்ட் கூட்டம், GST நிறைவேறுமா?

இன்று நாடாளுமன்ற மழை கூட்டத் தொடர் கூடுகிறது.

புதன், 25 நவம்பர், 2015

சென்னை வெள்ளமும், சூழும் பொருளாதார பாதிப்பும்

கடந்த இரு வாரங்களாக சென்னையில் பெய்த மழை படகு, பைக், கார் என்று எல்லாவற்றையும் ஒரே பாதையில் செல்ல வைத்துள்ளது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

டெலிகாம் துறையில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்

அண்மைய அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலங்கள் டெலிகாம் துறையில் பெரிய நிறுவனங்கள் தான் செயல்பட முடியும் என்று காண்பித்து உள்ளன.

திங்கள், 23 நவம்பர், 2015

தனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்? (ப.ஆ - 48)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

பார்க்க: பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)

வியாழன், 19 நவம்பர், 2015

நேரடி மானியத்தால் அதிக பயன் பெறும் சர்க்கரை உற்பத்தி துறை

எம்மிடம் கடந்த வருடம் கட்டண போர்ட்போலியோ பெற்று வந்த நண்பர்களுக்கு சில மாதங்கள் சர்க்கரை பங்குகளையும் பரிந்துரை செய்து இருந்தோம்.

அமெரிக்க எச்சரிக்கையால் அலறும் மருந்து நிறுவனங்கள்

கடந்த ஒரு வாரமாக பார்த்தால் பங்குச்சந்தையில் மருந்து நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன.

புதன், 18 நவம்பர், 2015

எஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு

இன்றும் இந்தியாவில் 40% மக்கள் வங்கி சேவைகளை பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.


அதனால் ரிசர்வ் வங்கி முடிந்த அளவு வேகமாக மக்களுக்கு வேகமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருக்கிறது.



அதன் ஒரு பகுதியாகத் தான் கடந்த சில வருடங்களாக பல புதிய வங்கிகள், பேமென்ட் வங்கி என்று புதிய அனுமதிகளை கொடுத்து வருகிறது.

ஆனாலும் புதிய வங்கிகள் பெரும்பாலும் தனியார் வங்கிகளாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும் நகர்ப்புறங்ளையே குறி வைக்கின்றன. கிராமங்கள் மற்றும் தொலை தூர பிரதேசங்களுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெளிநாட்டு இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

பலரும் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதன் முக்கிய நோக்கம் ஊரில் வீடு கட்டுவது என்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.


ஆனால் நாம் வெளிநாடு சென்று இருக்கும் போது இருபது லட்ச லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடுகள் ஐந்து வருடம் கழித்து திரும்பி வரும் போது ஐம்பது லட்சமாக மாறி இருக்கும்.



அந்த சமயத்தில் நாம் சம்பாதித்து வைத்த தொகையை வீட்டு மதிப்புடன் பார்த்தால் மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகள் வேலை செய்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும்.

இப்படியே கால தாமதம் ஆகி இறுதியில் ஒரு வீடு கட்டுவது ஒரு கனவாகி விடும்.

முதலீடுகளின் மதிப்பு காலத்துடன் சேர்ந்து கணிசமாக கூடுகிறது. ஆனால் நமது சம்பளம் அந்த அளவு கூடுவதில்லை என்பது தான் இங்கு ஒளிந்து இருக்கும் விடயம்.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாரிஸ் தாக்குதலால் பதற்றத்தில் பங்குச்சந்தை

கடந்த வெள்ளி இரவில் நடைபெற்ற பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பத்தாயிரம் ரூபாய்க்குள் சாம்சங் தரும் பட்ஜெட் விலை மொபைல்

மேல்தட்டு மக்களை மட்டும் எண்ணி மொபைல் மாடல்களை தந்து வந்த சாம்சங் இந்திய சூழ்நிலைக்கேற்ப கொஞ்சம் மாறியுள்ளது.

வியாழன், 12 நவம்பர், 2015

அமெரிக்க குடியுரிமையை விடத் தயாராகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைத்து விட்டால் இந்தியர்களுக்கு ஒரு புதிய உலகத்திற்கு சென்றது போல் தான்.

புதன், 11 நவம்பர், 2015

மொபைல் ஆப் மட்டும் என்பதில் பின்வாங்கும் ப்ளிப்கார்ட்

இந்தியாவில் அமேசானுக்கு போட்டியாக நம்பர் ஒன் இடத்தில் இன்னும் இருப்பது ப்ளிப்கார்ட்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு வேகமாக திறக்கப்படும் இந்திய சந்தை

பீகார் தேர்தலில் தோற்றதால் பிஜேபியின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மந்தமாகுமோ என்று எதிர்பார்த்த வேளையில் அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 10 நவம்பர், 2015

பண்டிகைக்கு செலவை குறைக்கும் மக்கள்

நேற்று ஊருக்கு போன் பேசும் போது இந்த வருடம் தீபாவளிக்கு ஊரில் முன்பை போல் சரவெடிகள் அதிகம் இல்லை என்று சொன்னார்கள்.

வரி விலக்கு பேச்சும், சுத்தமாக வைக்க புது வரியும்..

வரும் நவம்பர் 15 முதல் இந்தியாவில் புதிய வரி ஒன்று வருகிறது. இதன்படி, 0.5% அதிகமாக சேவை வரி பிடித்தம் செய்யப்படும்.

திங்கள், 9 நவம்பர், 2015

ஒரே நாளில் 18% உயர்ந்த இண்டிகோ ஐபிஒ பங்கு

நமது தளத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐபிஒ பங்கை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Indigo IPO பங்கை வாங்கலாமா?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

லஷ்மி பூஜைக்காக பங்குச்சந்தையில் முகுரத் வர்த்தகம்

நாளை தென் இந்தியர்களுக்கு தீபாவளி திருநாள். எதிரிகளை வதம் செய்ததற்காக நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்.

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நிதிஷ் வெற்றியும், நாளைய பங்குச்ச்சந்தையும்..

இன்று பீகார் மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

வெள்ளி, 6 நவம்பர், 2015

சந்தையின் எதிர்பார்ப்பை மீறிய எஸ்பிஐ வங்கி

இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட SBI வங்கியின் நிதி அறிக்கை வெளியானது.

வியாழன், 5 நவம்பர், 2015

பீகார் தேர்தல் முடிவை உற்று நோக்கும் சந்தை

கடந்த வாரமே பீகார் தேர்தல் முடிவுகள் சந்தையில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று எழுதி இருந்தோம்.

புதன், 4 நவம்பர், 2015

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு பத்திரங்களை பயன்படுத்துவது எப்படி?

இன்று பிரதமர் மோடி அவர்கள் தங்க பத்திரங்கள் மற்றும் தங்க நாணயங்கள் தொடர்பான திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.


இந்த திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் திட்டமிடுதல் மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறுதல் போன்ற காரணங்களால் தற்போது நடைமுறைக்கு வருகிறது.



இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வீட்டில் பயன்படாமல் இருக்கும் தங்கத்தை முதலீடு முறைக்கு கொண்டு வருதல் மற்றும் தங்கத்தை உலோகமாக வாங்கி வைப்பதை குறைப்பதும் ஆகும்.

இதனால் தங்க இறக்குமதி குறைந்து பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகலாம் என்பது அரசின் கணிப்பு.

பங்குச்சந்தையில் புழங்கும் தங்க ETF போன்ற பத்திரங்களை போல் அரசும் தங்க பத்திரங்களை வெளியிட உள்ளது.

செவ்வாய், 3 நவம்பர், 2015

பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)

திங்கள், 2 நவம்பர், 2015

ஏன் விமான பங்குகளை பெரிய தலைகள் வாங்கி குவிக்கிறார்கள்?

சில மாதங்கள் முன்பு வரை விமானத் துறை பங்குகளை யாரும் சீண்டாமல் தான் இருந்தனர். ஆனால் திடீர் என்று பெரிய தலைகள் எல்லாம் விமான பங்குகள் பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பங்குச்சந்தையில் இருந்து சன் டிவி விலகுமா?

கலாநிதி மாறன் தலைமையில் இயங்கும் சன் டிவியின் பங்கு மிகவும் மலிவான விலையில் சென்று கொண்டிருக்கிறது.

சனி, 31 அக்டோபர், 2015

மோடியின் ஆட்சிக்கு மூடி தரும் எச்சரிக்கை

தினசரிகளில் வரும் முக்கிய செய்திகளை பார்த்தால்  மாட்டுக் கறியைப் பற்றியதாகத் தான் உள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

முதலீடு செய்தி மடல் சேவை தொடர்பாக..

நண்பர்களுக்கு,

நவம்பர் மாதத்தில் இருந்து செய்தி மடல்(News Letter) சேவையை நமது தள வாசகர்களுக்கு தரவிருக்கிறோம்.

வியாழன், 29 அக்டோபர், 2015

ஏசிக்கு மாறும் இந்தியர்களால் குஷியில் ஏசி நிறுவனங்கள்

ஒரு செய்தி வெளியாகும் போது ஒவ்வொருவர் பார்வையில் வெவ்வேறு விதத்தில் உள்வாங்கப்படுகிறது.

புதன், 28 அக்டோபர், 2015

வரி சலுகை பெற உதவும் REC கடன் பத்திரங்கள்

அதிக பாதுகாப்பான முதலீடை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களும் ஒரு நல்ல வாய்ப்பு என்று ஏற்கனவே எழுதி இருந்தோம்.

பார்க்க: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்


அந்த வரிசையில் NTPC, PFC போன்ற அரசு நிறுவனங்களின் பத்திரங்களையும் பரிந்துரை செய்து இருந்தோம்.



பொதுவாக இந்த கடன் பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் வெளியிடப்படுவதுண்டு. அதனால் மேலே சொன்ன கடன் பத்திரங்களை தவறியவர்கள் REC கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

REC என்பதன விரிவாக்கம் Rural Electrification Corporation. இது ஒரு மத்திய அரசு நிறுவனம். கிராமப்புறங்களுக்கு மின்சார விரிவாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிதி நிலைமையும் நன்றாக உள்ளது.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பீகார் தேர்தலால் சரிவிற்கு காத்திருக்கும் சந்தை

சில வாரங்களுக்கு முன்பு 25,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு அருகில் சென்ற சந்தை 27,800க்கு அருகிலும் உயர்ந்து சென்றது.

இனி விளம்பரம் இல்லாமல் யுட்யூப் வீடியோ பார்க்கலாம்

இணைய உலகில் மட்டும் அல்லாமல் சமூக அளவிலும் யுட்யூப் ஏற்படுத்திய மாற்றம் மிகவும் அதிகம்.

திங்கள், 26 அக்டோபர், 2015

4G மொபைல் போனுக்கு மாறும் காலம் இது..

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு அல்லது மூன்று செய்தி குறிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

எதிர்பார்ப்பை மிஞ்சிய ஏர்டெல் நிதி முடிவுகள்

இந்திய டெலிகாம் துறையில் முதல் இடத்தில இருக்கும் பாரதி ஏர்டெல் இன்று நிதி நிலை முடிவுகளை அறிவித்தது.

Indigo IPO பங்கை வாங்கலாமா?

இந்திய விமானத்துறை நிறுவனங்களில் தொடர்ந்து லாபம் ஈட்டித் தரும் நிறுவனங்களில் ஒன்று Indigo.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த நிறுவனங்களுக்கு லாபம்

சில சமயங்களில் ஒருவரது பிரச்சினைகள் மற்றவர்களுக்கு சாதகமாக அமையும். அதிலும் வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இது சாலப் பொருந்தும்.

வியாழன், 22 அக்டோபர், 2015

சாதகமான காரணிகளால் தொடர் உயர்வில் இந்திய சந்தை

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த ஒரு தொய்வு நிலை தற்போது சந்தையில் இல்லை என்றே சொல்லலாம்.

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராதம் தவிர்க்க சில டிப்ஸ்

கிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கலாம்.


வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை இல்லாவிட்டால் நாம் போட்டு வைத்து இருந்த தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஒரு கட்டத்தில் நெகடிவ் பேலன்ஸ் தொகைக்கும் சென்று விடும். ஆமாம். அபராதமாக பிடித்து விடுவார்கள்.



ஆர்பிஐ இந்த மினிமம் பேலன்ஸ் தொடர்பாக எந்த பொது விதி முறையும் வைத்து இருப்பதில்லை.

அதனால் வங்கிகளுக்கிடையே இந்த மினிமம் பேலன்ஸ் தொகையும் அபராதமும் மாறுபடுகிறது.

அரசு வங்கிகள் என்றால் குறைந்த தொகை வைத்துக் கொண்டால் போதும். தற்போது ஆயிரம் ரூபாய் மினிமம் வைத்துக் கொண்டால் போதும்.

புதன், 21 அக்டோபர், 2015

1.25 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் கம்பெனி

நேற்று வெளியாகிய இந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஒரே துறையில் கடுமையான போட்டி கொடுத்து வந்த இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

மீண்டும் வரும் மேகி, என்ன சோதனைகளோ?

நெஸ்லே நிறுவத்தின் மேகி ஆறு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக வேதியியல் பொருட்கள் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது.

திங்கள், 19 அக்டோபர், 2015

மொபைல் போன் கால் கட்டானால் ஒரு ரூபாய் கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாகவே Call Drop என்ற பிரச்சினை இருந்து வந்தது. அதாவது நாம் மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் கட்டாகும் அந்த நிமிடத்திற்கும் சேர்த்து நாம் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏமாற்றம் கொடுத்தாலும் தடுமாறாத HCL பங்கு

கடந்த சில வாரங்கள் முன்பு HCL நிறுவனம் கிளின்ட் மற்றும் நாணய பிரச்சினைகளால் தங்கள் லாபம் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்து இருந்தது.

சனி, 17 அக்டோபர், 2015

பண்டிகை காலத்தில் அதிரடி தள்ளுபடி கொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்

ஆயுத பூஜை, தீபாவளி என்று பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் ஆன்லைனில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

சுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்

இந்த பதிவு எழுதும் முன் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் வரும் சந்தானம் டயலாக் தான் நியாபகம் வருகிறது.

அந்த வசனம் "லோன் கேட்டு வருபவர்களை லோ லோ என்று லொங்களிக்கும் ஐயா அவர்களே..." என்று ஆரம்பிக்கும்.



காமெடியாக இருந்தாலும் நமது ஊரில் நடக்கும் மிகவும் பொதுவான நிகழ்வு தான்.

கார்பரேட்களுக்கு லோன் கொடுக்கும் போது சலுகை அல்லது கரிசனம் காட்டும் வங்கிகள் தனி நபர்களாக சென்றால் எல்லாம் சரியாக இருந்தாலும் எளிதில் லோன் கொடுப்பதில்லை.

அப்படியே எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் செக்யூரிட்டி என்ற பெயரில் சொத்து பத்திரங்கள் கேட்கப்படும்.

வியாழன், 15 அக்டோபர், 2015

எரிபொருள் விலை குறைவால் உச்சத்தில் விமான பங்குகள்

இந்திய விமான நிறுவனங்களை நடத்துவது என்பது மிகவும் சிரமம்.

புதன், 14 அக்டோபர், 2015

SIP முறையில் ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்ய எளிய வழி

இதற்கு முன்னர் SIP முறையில் முதலீடு செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க: SIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது?


இந்த SIP முறை வைப்பு நிதிகளுக்கு பொருந்துவதை விட, ரிஸ்க் அதிகமுள்ள பங்குச்சந்தை முதலீடுகளுக்கும், ம்யூச்சல் பண்ட்களுக்கும் தான் அதிகம் பொருந்துகிறது.



ஏனென்றால், இவற்றில் பங்கு விலைகளோ அல்லது ம்யூச்சல் பண்டில் NAV விலையோ தொடர்ந்த மாற்றத்திற்கு உட்பட்டவை.

ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும் இந்த விலைகளை உற்றுப் பார்த்து முதலீடு செய்வது என்பது எளிதான காரியமல்ல.

இந்த சமயத்தில் தான் Systematic Investment Plan(SIP) என்ற முறை முக்கியத்துவம் பெறுகிறது.

செவ்வாய், 13 அக்டோபர், 2015

சந்தையின் எதிர்பார்ப்பில் வந்த TCS நிதி முடிவுகள்

கடந்த ஒரு வருடமாக TCS பங்குகள் ஒன்றும் பெரிதளவு மாற்றம் காணவில்லை.

தி மார்சியன் - திரைப்பட பார்வை

இது பொருளாதாரத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒரு பதிவு. அண்மையில் ரசித்து பார்த்த ஒரு திரைப்படத்தை பற்றி எழுதுகிறோம்.

திங்கள், 12 அக்டோபர், 2015

நல்ல அறிக்கை கொடுத்தும் மந்தமாக இன்போசிஸ் பங்குகள்

இன்று இன்போசிஸ் நிறுவன நிதி அறிக்கை வெளியிடப்பட்டது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Coffee Day IPOவை வாங்கலாமா?

சிறிது நாட்கள் இடைவெளியின் பிறகு ஒரு IPOவை பற்றி பார்ப்போம்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரலாம்.


சிட்டியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாயாவது தேவையாக உள்ளது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த தொகையை மொத்தமாக தருவது என்பது இயலாத காரியம்.



அதனால் தான் வங்கி கடனுக்கு செல்கிறார்கள். ஆனால் வங்கியில் உள்ள விதி முறைகள் படி அதிக பட்சம் 80% தான் வங்கி கடன் தருவார்கள். மீதி 20% என்பதை நாம் கையில் இருந்து தான் போட வேண்டும். இதனை வங்கி பாசையில் Loan-To-Value என்று சொல்வார்கள்.

அப்படி என்றாலும் நாம் கையில் இருந்து போட வேண்டிய காசை பார்த்தால் 30 லட்ச ரூபாய் பிளாட்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2015

கச்சா எண்ணெய் விலை உயர்வால் மாற்றம் காணும் ஆயில் பங்குகள்

நேற்று ONGC, Cairn போன்ற நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.

புதன், 7 அக்டோபர், 2015

பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.


ஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.



ஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.

இதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.

வரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

சந்தையில் திருத்தங்களை எதிர்பார்க்கலாம்..

ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைத்த பிறகு பல வங்கிகள் தொடர்ச்சியாக வட்டிக் குறைப்புகளை அறிவித்து வருகின்றன.

புவி வெப்பமயமாதல் தாக்கம் பங்குகளில் எப்படி எதிரொலிக்கலாம்?

அவ்வளவு சீரியசாக எடுக்கப்படாத ஒரு செய்தியின் தாக்கம் பங்குகளில் எப்படி எதிரொலிக்கலாம் என்பதை பார்ப்போம்.

திங்கள், 5 அக்டோபர், 2015

இன்ஜினியரிங் படிக்காதவர்களை தேடும் விப்ரோ

இதனை ஐடி துறையில் வந்த புது மாற்றம் என்று தான் சொல்ல முடியும்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

டெபாசிட்களுக்கு உண்மையான வட்டி என்பது என்ன?

இரு வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு பத்து சதவீத அளவு வட்டி தந்து கொண்டிருந்தன.

ஆனால் கடந்த ஓரிரு வருடத்தில் வட்டி குறைந்து ஏழரை சதவீதத்திற்கும் அருகில் வந்து விட்டது. தற்போது ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக வந்து விட்டது.



இதனால் ஒரு லட்ச ரூபாய் பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்து இருப்பவர்களுக்கு முன்பு மாதம் 833 ரூபாய் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது  400 ரூபாய் அளவு தான் கிடைக்கும்.

சனி, 3 அக்டோபர், 2015

வரி விலக்கு தரும் PFC அரசு நிறுவன கடன் பத்திரம்

தற்போது சந்தையில் நிலவும் அதிரடி ஏற்ற, இறக்கங்கள் காரணமாகவும், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி குறைக்கப்பட்டதாலும் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்கள் அதிக தேவையில் உள்ளன.


நிலையான வருமானம் தேவைப்படுபவர்கள் இந்த கடன் பத்திரங்களை நாடி செல்கின்றனர்.



நாம் கடந்த வாரம் NTPC நிறுவனத்தின் கடன் பத்திரங்களை வாங்குமாறு கூறி இருந்தோம்.

பார்க்க: அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்

வியாழன், 1 அக்டோபர், 2015

சாதகமாகும் உள்நாட்டு பொருளாதார காரணிகள், மீட்சிக்கு வாய்ப்பு

கடந்த இரண்டு மாதங்களாக கரடியின் பிடியில் இருந்த சந்தை பலருக்கு முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

மோடியின் கருப்பு பண திரட்டல் நடவடிக்கை பலன் தரவில்லை

இந்த தேர்தலில் பிஜேபி அரசு ஜெயித்த பிறகு கருப்பு பணத்தை மீட்போம். மீட்ட பிறகு ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

புதன், 30 செப்டம்பர், 2015

HCL நிறுவனத்தின் எச்சரிக்கையை எப்படி அணுகுவது?

நாம் இலவசமாக பரிந்துரை செய்த போர்ட்போலியோவில் உள்ள ஒரு முக்கிய நிறுவனம் HCL Technologies. பரிந்துரை செய்த இரண்டு வருடங்களில் 76% லாபம் கொடுத்துள்ளது.

பார்க்க: முதலீடு போர்ட்போலியோ

PPF, அரசு சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரேபோ வட்டி விகிதத்தைக் குறைத்தார்.

பார்க்க: ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்

இதன் தொடர்ச்சியாக SBI, ஆந்திரா வங்கி போன்றவை வட்டியைக் குறைத்துள்ளன. ஆனாலும் பல வங்கிகள் இன்னும் வட்டியைக் குறைக்கவில்லை.



இந்த வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 1.25% அளவு குறைத்துள்ளது. ஆனால் பல வங்கிகள் இதில் பாதியளவு கூட தங்களுக்கான கடன் வட்டியைக் குறைக்கவில்லை.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தை பற்றி நேற்றே எழுதி இருந்தோம். ஆர்பிஐ வட்டியைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தோம்.

பார்க்க: ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிர்பார்ப்பிற்கு முன் என்ன செய்வது?

திங்கள், 28 செப்டம்பர், 2015

கடன் சுமையால் ஒதுங்கும் பெரிய கட்டுமான நிறுவனங்கள்

கடந்த சில வருடங்களில் காங்கிரஸ் அரசு செய்த சுணக்கத்தின் காரணமாக பல அரசு திட்டங்கள் முடங்கி போயிருந்தன.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிர்பார்ப்பிற்கு முன் என்ன செய்வது?

நாளை ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு தொடர்பான கொள்கைகளை வகுக்கும் குழு கூடுகிறது. இதில் செய்யப்படும் மாற்றங்கள் நாளைய சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சனி, 26 செப்டம்பர், 2015

500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)

'பங்குச்சந்தை ஆரம்பம்'  என்ற இந்த தொடரின் முந்தையபகுதியை இங்கு காணலாம்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

25,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதிய வங்கிகள்

கடந்த வருடம் ஒரு பதிவில் வங்கித் துறை அதிக அளவு வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் வாய்ப்புகள் பற்றி எழுதி இருந்தோம். அது நிதர்சனமாகும் வாய்ப்பு கூடி உள்ளது.

பார்க்க: வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்

வியாழன், 24 செப்டம்பர், 2015

சீனாவால் தடுமாறும் டாடா கார் விற்பனை

டாடா குழுமத்தின் ஒரு முக்கியமான அங்கம் டாடா மோட்டோர்ஸ்.

செபியின் புதிய விதி முறைகளும், முதலீடு கட்டண சேவையும்

பங்குச்சந்தையில் பரிந்துரை செய்பவர்களுக்கு செபி சில விதி முறைகளை அறிவித்துள்ளது.

புதன், 23 செப்டம்பர், 2015

அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்

தற்போது பங்குச்சந்தையில் ஓரளவு நிலவும் நிலையற்றத் தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடுகளை தேடுவது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் வழக்கம்.


அவர்களுக்காக கடன் பத்திரங்களை பற்றி ஏற்கனவே விவரித்து இருந்தோம்.

பார்க்க:  பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்



சில கடன் பத்திரங்களை பரிந்துரை செய்யுமாறு எமக்கு மின் அஞ்சல்கள் வந்திருந்தன. ஆனால் பாதுகாப்பான நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்காக காத்திருந்தோம்.

காரணம் இல்லாமல் சரியும் சந்தை

நேற்று காலை இந்திய பங்குச்சந்தை 500 புள்ளிகள் வரை உயர்வை சந்தித்து இருந்தது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

காணக் கிடைக்காத மோடியின் மினிமம் அரசு கொள்கை

மோடி அரசு அமைந்த பிறகு தனது அரசின் முக்கிய கொள்கையை வெளியிட்டார்.

கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை தவிர்ப்பது நல்லது

இந்திய பங்குச்சந்தை கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.


ஆனால் இந்த வளர்ச்சி பல துறைகளிலும் இன்னும் பரவலாக செல்லவில்லை என்பதே உண்மை.



பங்குச்சந்தையில் நுகர்வோர், ஐடி, பர்மா, ஆட்டோ போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் தான் சந்தையை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

திங்கள், 21 செப்டம்பர், 2015

மதர்சன் சுமி பங்கை மறு பரிசீலனை செய்யும் நேரம்

கடந்த காலாண்டு வரை 62% அதிக லாபம் கொடுத்து மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனம் மதர்சன் சுமி.

1300 கோடி GST டீலை இன்போசிஸ் பெற்றது

இந்திய அரசு GST வரி விதிப்பை கொண்டு வருவதில் மும்மரமாக இருப்பது தெரிந்ததே.

பார்க்க:  GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கடனைக் குறைக்க ஹோட்டல்களை விற்கும் லீலா பேலஸ்

பெங்களூரில் இருக்கும் போது லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வாறு குறைக்கப்பட்டது?

தற்போது சீனா நாணய மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வியாழன், 17 செப்டம்பர், 2015

அமெரிக்க வட்டி விகிதங்களில் மாற்றமில்லை


அமெரிக்க வேலை வாய்ப்பு மற்றும் ஜிடிபி தரவுகள் சாதகமாக இருந்ததால் வட்டி விகிதங்களைக் கூட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு திட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி?

கொள்கை அளவில் தயாராக இருந்த தங்கத்திற்கு வட்டி தரும் அரசு திட்டத்தைப் பற்றி ஏற்கனவே விவரித்து இருந்தோம்.

பார்க்க:  தங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்


அந்த திட்டம் தற்போது அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட்டி எவ்வளவு கொடுக்கலாம்? என்பது போன்ற விடயங்களை தீர்மானிக்க ஆர்பிஐ பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



சும்மா தூங்கி கொண்டிருக்கும் தங்கத்தை பணப்புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதன், 16 செப்டம்பர், 2015

பத்து சிறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுமதி

கடந்த சில நாட்கள் முன்பு தான் Payment Bank என்று சொல்லப்படும் வணிகத்துடன் இணைந்து செயல்படும் வங்கிகளை அறிமுகப்படுத்தியது.

பார்க்க: Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?

பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்

தற்போது சந்தையைப் பார்த்தால் ஒரு நாளில் 200 புள்ளிகள் கூடுகிறது. மற்றொரு நாளில் அதே அளவில் சரிகிறது.


உலக அளவில் வரும் பிரச்சனைகளும், உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.



இரண்டு, மூன்று வருட கால முதலீட்டிற்கு சந்தை ஏற்றதாக உள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெரிய அளவில் பங்குச்சந்தைகளிலே லாபம் பார்ப்பது கடினம் என்பதே தற்போதைய நிலவரம்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

பணவாட்டமாக மாறும் பணவீக்கம், வட்டி குறைய வாய்ப்பு

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்க தரவுகள் நேற்று சந்தையைக் குளிர செய்தது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

துவண்ட சந்தைக்கு சாதகமாக வந்த தொழில் துறை தரவுகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சாதகமான உள்நாட்டுக் காரணி வந்துள்ளது. அதனால் இந்த வாரம் சந்தை கொஞ்சம் உற்சாகத்திலே இருக்கலாம்.

சந்தை சரிவுகளை தாண்டி 220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

நமது தளம் சார்பில் அக்டோபர் 2013ல் இலவசமாக போர்ட்போலியோ பரிந்துரை செய்யப்பட்டது.

சனி, 12 செப்டம்பர், 2015

ஆம்டேக் ஆட்டோவை விற்க வேண்டிய தருணம்

பங்குச்சந்தையில் கடந்த ஒரு மாதமாக AMTEK AUTO என்ற ஒரு பங்கு மேல், கீழ் போக்கு காட்டி வருகிறது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஊழலால் பொருளாதார சிக்கல்களில் நிற்கும் பிரேசில்

நேற்று நிதி நிறுவனம் ஒன்று பிரேசிலின் மோசமான நிதி நிலைமையால் மோசம் என்பதில் இருந்து Junk என்ற நிலைக்கு தரம் கொடுத்தது. இதனால் சந்தையில் ஒரு வித பதற்றம் இருந்தது.

வியாழன், 10 செப்டம்பர், 2015

அரசியல் காரணங்களால் இப்போதைக்கு GST வராது..

சரிய வைக்கும் உலகக் காரணிகளின் பின்னால் இரண்டு உள்நாட்டு விடயங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தன.

புதன், 9 செப்டம்பர், 2015

செப்டம்பர் போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு

செப்டம்பர் மாத கட்டண போர்ட்போலியோவை செப்டம்பர் 19 அன்று தரவிருக்கிறோம்.

அதிக எதிர்பார்ப்புகளுடன் முதல் தமிழக முதலீட்டாளர் மாநாடு

இது வரை மாநாடு ஏதும் நடத்தாமலே தமிழ்நாடு அதிக அளவில் முதலீடுகளை பெற்று வந்தது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி

புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)

ஏன் ருபாய் வீழ்ச்சி ஐடி நிறுவனங்களுக்கு பெரிய பயன் தரவில்லை?

கடந்த ஒரு மாத நிகழ்வுகளால் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீத அளவு வீழ்ந்துள்ளது. இது இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

மதுரை கிச்சனும், கம்மங் கூழும் - புதிய முயற்சி

இந்தக் கட்டுரை டெல்லியில் ஸ்பானிஷ் உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு.பிரபு அவர்களால் எழுதப்பட்டுள்ளது. மிகவும் விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி!

சினிமாவில் விக்ரமன் படத்தில் வருவது போல வித்தியாசமான முயற்சி செய்து வெற்றி பெற்ற மதுரை கிச்சன் தம்பதியினர்...சென்னைவாசிகள் ட்ரை பண்ணுங்க...



வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் மாத்தி யோசி அனுபவம் (#‎மாத்தி_யோசி)

சென்னை புரசைவாக்கம் அபிராமி மால் ஃபுட் கோர்ட்டில் ‪#‎மதுரைகிச்சன் என்ற புதிய கடை ஆரம்பித்துள்ளார் என் மனைவி. 

கடந்த மாதமே திறப்புவிழா என்ற போதிலும் இது பற்றி எழுத ஒரு மாதம் எடுத்துக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து எழுதக் காத்திருந்தேன்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வாய்மொழி உத்தரவுகளால் ஒரே ரேங்க், ஒரே பென்சனில் குழப்பம்

ராணுவ வீரர்களின் கோரிக்கையான ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் கொள்கை ரீதியாக அரசு ஏற்றுக் கொண்டது.

சனி, 5 செப்டம்பர், 2015

எதிர்பார்ப்பு அளவு இல்லாத அமெரிக்க வேலை வளர்ச்சி

இன்று சந்தை சரிந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு தான்.

பார்க்க:  அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பங்குச்சந்தை சரிவுகளில் மீடியாக்கள் ஏற்படுத்தும் பதற்றங்கள்

இன்றைய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் தான் லாபத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பங்குகளை விற்றதாக தெரிகிறது.

வியாழன், 3 செப்டம்பர், 2015

அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை

இன்று சந்தை காலையிலே 500 புள்ளிகள் குறைவுடன் ஆரம்பித்துள்ளது.

வெறும் நம்பிக்கைக்காக மட்டும் முதலீடு செய்ய முடியாது - ஜிம் ரோகர்ஸ்

தற்போது இந்திய சந்தை 13 மாதத்தில் இல்லாத அளவு தாழ்வு நிலையை அடைந்துள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2015

புதிய ஐபிஒக்களைத் தவிர்ப்பது நல்லது

கடந்த வாரம் சந்தை சரிவின் போதே ஐபிஒக்களின் டிமேண்ட் குறைய வாய்ப்புள்ளது என்று எழுதி இருந்தோம்.

பார்க்க:  நேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு

முதலீடு கட்டுரைகளை நகல் எடுக்கும் முன்..

நண்பர்களே!

எமது தளத்தின் கட்டுரைகள் நகல் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களில் பயன்படுத்தப்படுவதை நண்பர்கள் மூலம் அறிகிறோம்.

பங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி? (ப.ஆ-45)

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஏமாற்றம் தரும் GDP தரவுகள், சரிவில் சந்தை

நேற்று வெளியான இந்தியா தொடர்பான GDP தரவுகள் சந்தைக்கு சோகத்தையே அளித்தன.

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வட்டி விகிதக் குறைப்புக்கு ராஜன் தரும் குறிப்பு

கடந்த வாரம் சீனா ஏற்படுத்திய பாதிப்பால் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீத அளவு வீழ்ச்சி அடைந்தது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ராணுவத்தில் ஒரே ரேங், ஒரே பென்சன் - ஒரு விரிவான பார்வை

இந்தக் கட்டுரை இந்திய ராணுவத்தில் பணி புரியும் வேலூரை சேர்ந்த திரு.ராஜா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவரது துறை சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் விரிவாக பகிர்ந்ததற்கு நன்றி!

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

ரசகுல்லாவிற்காக சண்டை போடும் இந்திய மாநிலங்கள்

இந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.

LIC போனஸ் அறிவித்தது, எவ்வளவு கிடைக்கும்?

எல்ஐசி 2015ம் ஆண்டிற்கான வருடத்திற்கான போனசை அறிவித்துள்ளது. அதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.


நம்மிடம் வரும் இன்சுரன்ஸ் ஏஜெண்ட் இறந்தால் இவ்வளவு தொகை கிடைக்கும் என்று சொல்வதில்லை. அதனை நாம் அபசகுனமாக கருதுவதால் இருபது வருடம் கழித்து இவ்வளவு தொகை கட்டினால் இவ்வளவு கிடக்கும் என்று முதலீடாகத் தான் கூறுவார்.

அதனால் தான் பொதுவாக இந்தியாவில் காப்பீடுடன் முதலீடும் இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படுகிறது.



இவ்வாறு வரும் போது இரண்டு வித பதங்கள் நமக்கு பின்னால் கிடைக்கும் தொகையைப் பற்றி பாலிசியில் குறிப்பிடப்படுகின்றன.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மேற்கிலிருந்து நல்ல செய்தி, நாளை சந்தை உயர வாய்ப்பு

ஒரு வாரமாக சீனா என்ற புயல் தொடர்ந்து அடித்து வந்ததால் சந்தை துவண்டு போய் கிடந்தது. இந்த சூழ்நிலையில் மேற்கில் இருந்து வரும் தென்றல் போன்ற செய்தி நாளை சந்தையை சிறிது மீள வைக்கலாம்.

யுவான் வீழ்ச்சியால் நஷ்ட பயத்தில் டயர் நிறுவனங்கள்

இந்தியாவில் ஆட்டோ துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

புதன், 26 ஆகஸ்ட், 2015

ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா

ஒரு பக்கம் சீனாவால் என்னென்ன நடக்கலாம் என்று உலக நாடுகள் கவலையில் இருக்க, மறு பக்கம் வட கொரியா அதிபர் ஸ்பீக்கர் செட்டால் கடுப்பாகி உள்ளார்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சீனா வட்டி விகிதத்தைக் குறைத்தது, எவ்வளவு பயனளிக்கும்?

உலக சந்தைகளுக்கு சவாலாக இருந்து வரும் சீனா அடுத்து ஒரு நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.

நேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு

சீனர்களால் நேற்று இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஐபிஒக்களின் தேவையைக் கணிசமாக குறைக்கும் என்றே தெரிகிறது.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சீனாவின் காட்டாற்று வெள்ளத்தில் மீள்வதற்கு சில டிப்ஸ்

ஒரே நாளில் 1500 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு மேல் சரிவு.

சீனாவால் ரத்த வெள்ளத்தில் இந்திய சந்தை, என்ன செய்வது?

இன்று சந்தை ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

Navkar IPOவை வாங்கலாமா?

வரும் ஆகஸ்ட் 24 முதல் Navkar Corporation IPO வரவிருக்கிறது. அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பதற்றத்தில் இந்திய சந்தை

இந்த முறை உலக காரணிகளின் சரிவை சீனா ஆரம்பித்து வைத்துள்ளது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?

நேற்று ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்கு Payment Bank என்ற புது விதமான வங்கி முறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

புதன், 19 ஆகஸ்ட், 2015

ம்யூச்சல் பண்ட் வாங்கும் போது கமிசன் செலவைக் குறைக்க ஒரு டிப்ஸ்

ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது Expense Ratio என்பதும் ஒரு நிதியை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.


Expense Ratio என்பது அந்த பண்டை நிர்வாகம் செய்வதற்காக ம்யூச்சல் பண்ட் நிறுவனம் செலவழிக்கும் தொகை.



இது பொதுவாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் பண்ட் லாபம் அல்லது நஷ்டத்தில் சென்றால் கூட பிடித்தம் செய்யப்படும்.

இந்த சதவீதம் என்பது நம்மை சேர்த்து விடும் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்படும் கமிசன் தொகையும் சேர்த்து தான். நாம் முதலீடு செய்யும் தொகையில் ஒரு சதவீதம் வரை ஏஜெண்ட்களுக்கு கமிசனாக வழங்கப்படுகிறது.

ஆனால் 2013 முதல் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் இந்த கமிசனை குறைக்கும் பொருட்டு அவர்களது ஒவ்வொரு பண்ட்டிலும் Direct Plan என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன? (ப.ஆ - 44)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா?

கடந்த வாரம் மத்திய அரசு சில சீர்த்திருத்த முடிவுகளை பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவித்தது. அதனால் இந்த வங்கி பங்குகள் நல்ல தேவையில் இருந்தன.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பழைய வாகனங்களை மாற்றினால் அரசு தரும் ஊக்கத் தொகை

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மோடி அரசு ஒரு திட்டத்தினைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஸ்பெக்ட்ரத்தை பகிர்வதால் மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாமை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் என்பது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

GSTயும், யுவானும் சந்தையை கீழே இழுக்கிறது. என்ன செய்வது?

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தை வெறும் ஒரு சதவீத லாபத்தை தான் கொடுத்துள்ளது என்றால் நம்புவது கஷ்டமாக இருக்கும்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -2

சீனாவின் யுவான் மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளது. அது எவ்வாறு இந்தியாவைப் பாதிக்கும் என்பது பற்றி எழுதப்படும் இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.

சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -1

சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -1

சீனா தனது நாணய மதிப்பை இரண்டு சதவீத அளவு குறைத்துள்ளதாக நேற்று செய்தி வந்த பிறகு உலக சந்தையில் அதன் அதிர்வு அதிக அளவில் உணரப்பட்டது.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கூகிள் நிறுவனத்திற்கு புதிய தாய் நிறுவனம்

1999ல் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் இன்டர்நெட் துறையில் இன்னும் ஒற்றை ஆளாக கோலோச்சிக் கொண்டிருப்பது அறிந்ததே.

26% உயர்ந்த SYNGENE IPO பங்கு

பயோகான் நிறுவனத்தின் துணை நிறுவனமான SYNGENE நிறுவனத்தின் ஐபிஒவை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க:  SYNGENE IPOவை வாங்கலாமா?

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? - புத்தக விமர்சனம்

Guest Blogging, By Raja, Vellore

நண்பர் ராஜா அவர்கள் பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? என்ற புத்தகத்தை படித்து விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!

                                                             



சமீபத்தில் "பணத்தை இழக்க சிறந்த இடம் பங்குசந்தை" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. பிரமாதம். ஒவ்வொரு பக்கங்களிலும் சுவராசியம்.

பங்கு சந்தையில் அள்ள அள்ள பணம் என நினைத்து பங்கு சந்தைக்கு வருபவர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்.

பங்குச்சந்தையை பற்றிய அறிமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து பங்குச்சந்தை, F&O, currency trading, commodities, hedging போன்ற பலவற்றை விவரிக்கிறது.

ஜூஸ் தயாரிக்க போகும் கோகோ கோலா

மக்கள் உடல் நலத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இந்த டீல் சாட்சியாக இருக்கும்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

PF பணத்தை பங்குச்சந்தையில் போடுவதால் நமக்கு எவ்வளவு பலன் கூடும்?

மாதந்தோறும் நமது சம்பளத்தில் ஒரு தொகை PF என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.


இதற்கு முன்னர், ஒன்பதரை வருடங்களில் அந்த தொகையை எடுத்து வேறு ஏதாவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது. இதனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி எடுத்து வந்தனர்.



தற்போது அரசு குறிப்பிட்ட சதவீத தொகையினை மட்டுமே எடுக்கலாம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரவுள்ளது. இது போக, அந்த தொகையினை எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகளும் வந்து விட்டன.

பார்க்க:  PF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

IPO பரிந்துரை தொடர்பாக..

இன்று SYNGENE IPOவிற்கான பங்குகள் ஒதுக்கப்பட்டன.பங்கு ஒதுக்கீடை டிமேட் கணக்கில் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இல்லாததால் எமக்கு பங்குகள் கிடைக்கவில்லை.

ஏட்டிக்கு போட்டி அரசியலால் தாமதமாகும் வளர்ச்சி

கடந்த இரு வாரமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அப்படியே முடங்கி போய் உள்ளது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கச்சா எண்ணெய் விலை சரிவிற்கு காரணம் என்ன?

தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஐம்பது அமெரிக்க டாலர்களுக்கும் கீழே வந்து விட்டது.

புதன், 5 ஆகஸ்ட், 2015

ம்யூச்சல் பண்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கணக்கிடுவது எப்படி?

இந்தக் கட்டுரையில் ம்யூச்சல் பண்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கணக்கிடுவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.

மேகி பாதுகாப்பானதாக மாறியதால் 10% உயர்ந்த நெஸ்லே

சில சமயங்களில் இந்தியாவில் என்ன நடக்குகிறது என்றே தெரியவில்லை. தானும் குழம்பி மக்களையும் குழப்பும் அரசைத் தான் நாம் பெற்றுள்ளோம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இந்திய பங்குச்சந்தையில் ஒரு ரகசிய வெற்றியாளர்

இந்தக் கட்டுரையில் இந்திய பங்குச்சந்தையில் ஒரு முதலீட்டாளராக வெற்றி கண்ட ஒருவரைப் பற்றி பார்ப்போம்.


நமது சந்தையில் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை தவிர மற்றவர்கள் அறியப்படுவதில்லை.

அதற்கு ஜூன்ஜூன்வாலா அளவு மற்றவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்னொன்று, பல வெற்றிகரமான முதலீட்டாளர்கள் மீடியா வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.



கடந்த ஒரு கட்டுரையில் ஒரு ரகசிய பேராசிரியரைப் பற்றி பார்த்தோம்.

பார்க்க: பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

அவரைத் தொடர்ந்து இன்னொரு முதலீட்டாளரும் ரகசியமாக வெற்றி பெற்றுள்ளார்.

RBI வட்டிக் குறைப்பு எதுவும் செய்யவில்லை

இன்று வட்டிக் குறைப்பு தொடர்பான முடிவுகளை RBI எடுக்கும் நாள்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

POWER MECH IPOவை வாங்கலாமா?

இந்த வாரம் Power Mech Projects என்ற நிறுவனம் ஐபிஒவாக வரவிருக்கிறது. அதனை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

சிகரெட் படுப்பதால் நுகர்வோர் துறையில் கவனம் செலுத்தும் ஐடிசி

இந்தியாவில் நூற்றாண்டு கடந்த நிறுவனங்களுள் ஒன்று ஐடிசி. பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வளர்ச்சிக்காக செலவுகளை கூட்டிய மத்திய அரசு, மகிழ்ச்சியில் வங்கிகள்

பொதுவாக பொருளாதார மந்தம் ஏற்படும் போது ஒரு துறையை மட்டும் பாதிக்காமல் வலை போல் எல்லா இடங்களுக்கும் பரவி விடும்.

வெள்ளி, 31 ஜூலை, 2015

இறுதிக் கட்ட அமலாக்கத்தை நெருங்கும் GST வரி

ஏற்கனவே GST வரி விதிப்பின் பலன்கள் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.

பார்க்க:  GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

வியாழன், 30 ஜூலை, 2015

மேகி தடையால் முதல் முறையாக நஷ்டம் கொடுத்த நெஸ்லே

இந்த காலாண்டில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி அறிக்கை நெஸ்லே நிறுவனத்தின் முடிவுகள் தான்.

ஷேர்கானை வாங்கிய பரிவாஸ்

இந்தியாவில் டிமேட் சேவை கொடுக்கும் நிறுவனங்களில் ஷேர்கானும் ஒன்று. (ShareKhan)

புதன், 29 ஜூலை, 2015

32 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெற்ற Syngene IPO

கடந்த வாரம் ஒரு பதிவில் Syngene IPOவிற்கு விண்ணப்பிக்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

நெஞ்சைத் தொடும் கலாமின் இளமைப் பருவம்

Tamil.oneindia.என்ற இணையதளத்தின் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களின் கட்டுரைகளுக்கு நாம் பரம ரசிகர்.

சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

சஹாரா நிறுவனத்தை பற்றி தெரிந்து இருக்கும். ஓகோவென்று இருந்து மோசடி புகார்களால் ஒன்றுமில்லாமல் போனவர்கள். பொது மக்களின் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை ஸ்வாகா செய்தவர்கள்.


அதனை பற்றிய விவரமான கட்டுரையை இங்கு காணலாம்.
சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி



சஹாரா நிறுவனம் ம்யூச்சல் பண்ட் சேவையும் கொடுத்து வருகிறது. 24 பரஸ்பர நிதிகள் மூலம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயை ம்யூச்சல் பண்ட் மூலம் திரட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ சேவையில் ஈடுபட சஹாரா நிறுவனத்திற்கு தகுதி இல்லை என்று செபி அறிவித்து உள்ளது.

செபியின் உத்தரவின் படி,
  • புதிதாக எந்த பயனாளிகளையும் சேர்க்க கூடாது.
  • அடுத்த ஐந்து மாதங்களுக்குள் சஹாரா ம்யூச்சல் பண்ட் சேவையை வேறொரு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
  • அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் ஆறாவது மாதத்தில் மக்களிடம் சேகரித்த பணத்தை எந்த வித கட்டணமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது.

சஹாரா நிறுவனம் செய்த பிற மோசடிகளின் எதிர்விளைவாகவே இந்த அனுமதி ரத்தை பார்க்க வேண்டி உள்ளது.

செவ்வாய், 28 ஜூலை, 2015

பங்குச்சந்தை ரகசியங்கள் - புத்தக விமர்சனம்

பங்குச்சந்தை மற்றும் தனி நபர் மேம்பாடு பற்றி அதிக அளவில் எழுதி வந்துள்ள திரு,சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை படித்த அனுபவத்தை பதிவு செய்கிறோம்.


முதலில் ஆசிரியர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றி சொல்லி விடலாம்.



பல நிறுவனங்களில் மேலாண்மை துறைகளில் பணிபுரிந்து தற்போது அதிக அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார். இதைப் போல் மீடியாக்களிலும் தனிநபர் மேம்பாடு பற்றிய கருத்தரங்குகளிலும் காண முடிகிறது.

அவரது எளிய எழுத்து நடை எதனையும் எளிதாக புரிய வைத்து விடும் என்பதை அவரது அணைத்து புத்தகங்களிலும் காணலாம். இந்த புத்தகமும் விதி விலக்கல்ல..

P-Notes என்றால் ஜெட்லி இவ்வளவு பயப்படுவதேன்?

நேற்று சந்தை 500 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது. அதற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்பட்டது P-Notes என்பதாகும்.

திங்கள், 27 ஜூலை, 2015

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!

இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மேகாலாயா மாநிலத்தில் சொற்பொழிவு நடக்குமிடத்தில் காலமானார்.

ரியல் எஸ்டேட் விலைகள் இறங்குவதற்கு ஒரு வாய்ப்பு..

இந்தியாவில் மற்ற எல்லாத் துறைகளையும் விட ரியல் எஸ்டேட் துறை தான் மட்டமான வளர்ச்சியில் உள்ளது என்று சொல்லலாம்.


தற்போதைய நிலவரப்படி, கட்டிப் போட்டு காலியாக கிடக்கும் அபார்ட்மென்ட்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.



அதாவது இந்த காலியாக கிடக்கும் அபார்ட்மென்ட்களை விற்க மட்டும் இன்னும் ஒன்றரை வருடம் தேவைப்படுமாம்.

இதனால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் புதிய ப்ராஜெக்ட்கள் தொடங்குவதையே நிறுத்தி விட்டார்கள். இருப்பதை முதலில் விற்று விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

மீண்டும் சாதகமாக திரும்பும் பங்குச்சந்தை காரணிகள்

கடந்த வாரம் பங்குச்சந்தைகளில் திருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எழுதி இருந்தோம்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

ரிசர்வ் வங்கிக்குள் அரசியல் புகும் அபாயம்

இந்தியாவில் சில அரசு அமைப்புகளான ரிசர்வ் வங்கி, இஸ்ரோ, செபி, உச்ச நீதி மன்றம், ஐஐடி, தேர்தல் கமிசன் போன்றவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதற்கு ஒரே காரணம் அங்கு அரசியல் புகாமல் இருப்பதே.

வியாழன், 23 ஜூலை, 2015

SYNGENE IPOவை வாங்கலாமா?

கடைசியாக ஏப்ரல் மாதத்தில் தான் VRL IPOவைத் தான் பரிந்துரை செய்து இருந்தோம். அதுவும் 40% அளவு லாபம் கொடுத்து இருந்தது.

பார்க்க: VRL Logistics IPOவை வாங்கலாமா?

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது எவ்வளவு கடினமாகிறது?

தற்போது இந்தியா Start-up என்று சொல்லப்படும் சுயதொழில் முனைவோர் காலத்திற்குள் நுழைந்துள்ளது.


கடந்த இரண்டு வருடங்களில் மிக அதிக அளவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.



சிலர் பெரிய நிறுவனங்களில் கிடைத்த அனுபவங்களைப் பெற்ற பிறகு அதனைத் தங்கள் சுயதொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த செய்திகள் மிக நல்ல மாற்றம் என்று சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் சில யதார்த்தங்களையும் மற்றொரு பக்கமாக பார்க்கலாம்.

புதன், 22 ஜூலை, 2015

வேலை தேட ஒரு அரசு இணைய தளம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மோடி அரசு தேசிய அளவில் ஒரு வேலை வாய்ப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியாவால் நஷ்டக்கணக்கு எழுதும் மைக்ரோசாப்ட்

ஒரு காலக்கட்டத்தில் மொபைல் வியாபாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த நோக்கியா கீழே வீழ்ந்தது என்பது மிகக் குறுகிய காலத்தில் நடந்து விட்டது.

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஐந்து வருட குறைவு விலையில் தங்கம், வாங்கலாமா?

கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.


அதற்கு இரு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகிறது.



ஒன்று, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் கூட்டலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

திங்கள், 20 ஜூலை, 2015

எதிர்பார்ப்புகளையும் மீறிய இன்போசிஸ் நிதி அறிக்கை

இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை வெளியானது.

சாம்சங் நிறுவனத்தை கைக்குள் கொண்டு வர கஷ்டப்படும் நிறுவனர்

சாம்சங் நிறுவனத்தை பற்றி அறிந்து இருப்போம்.அதனை நாம் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாகவே அறிந்து இருப்போம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

இந்திய பங்குச்சந்தை திருத்தமடைய வாய்ப்பு

சீனா, கிரீஸ் என்று ஆடிக் கொண்டிருந்த உலகக் காரணிகள் எல்லாம் தற்போது அமைதியாகி உள்ளன.

வியாழன், 16 ஜூலை, 2015

இந்தியாவில் எந்த கண்டுபிடிப்பும் இல்லை - யார் காரணம்?

நேற்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த 60 ஆண்டுகளாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார்.

ஜூலையில் மழை அளவு குறைந்தது

இந்த வருடம் பருவமழை குறைவாக இருக்கும் என்று தான் பரவலாக அறியப்பட்டது.

இனி வாட்ஸ்ஆப்பில் பேச காசு கொடுக்க வேண்டும்?

ஏர்டெல் ஆரம்பித்து வைத்த நெட் ஜீரோ என்ற திட்டம் இணைய சமநிலை பற்றி பல விவாதங்களை தோற்றுவித்தது.

ஒரு சிறு உதவி வேண்டுதல்..

நண்பர்களுக்கு,

ஜூலை 18ந் தேதி  தரவுள்ள போர்ட்போலியோவில் ஆர்வமாக இணைந்ததற்கு நன்றி!

புதன், 15 ஜூலை, 2015

மொபைல் டவர் பரிமாற்றங்களில் ஏர்டெல், வோடபோன், ஐடியா

இந்த சந்தேகம் பல நாட்களாக இருந்ததுண்டு.

ஸ்பெக்ட்ரம் ஏலம் அடிக்கடி நடக்கிறது. சில நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன. சில ஸ்பெக்ட்ரத்தை இழந்து விடுகின்றன.

விவேகமும் பொறுமையும் சுயதொழிலில் எவ்வளவு அவசியமாகிறது?

இணையத்தில் எமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக திரட்டிய தகவல்களை கட்டுரை வடிவத்தில் பகிர்கிறோம்,


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை பார்த்தால் சிறு நிறுவனங்களை ஆரம்பிப்பவர் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.



அதற்கு இ-காமெர்ஸ் துறையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் என்று சாதரணமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாகி விட்டன. இந்த நிறுவனங்கள் பல மடங்கு தன்னம்பிக்கையை மக்களிடம்  விதைத்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

மற்றொரு பார்வையில் பார்த்தால்,
முன்பு போல் இல்லாமல் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப கட்ட முதலீடு என்பதை விட நல்ல ஐடியாக்களும், அதனை செயல்படுத்தும் திறமையுமே தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

செவ்வாய், 14 ஜூலை, 2015

ULIP முதலீடுகள் ரிடர்ன் அதிக வீழ்ச்சியடைய வாய்ப்பு

நமது ஊரில் இன்சுரன்ஸிற்கும் முதலீட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லாததால் வந்த ஒரு வித்தியாசமான பண்ட் தான் ULIP.


இதைப் போல் ஒரு மோசமான முதலீடு திட்டம் எந்த நாட்டிலும் இருக்காது.



உறவுக்கார ஏஜெண்ட் ஒருவர் தொல்லையால் ULIPல் முதலீடு செய்து ஒரு மோசமான அனுபவத்தை பெற்று இருந்தோம்.

அந்த அனுபவத்தால் ஏற்கனவே ஒரு எதிர்மறை விமர்சனம் கொடுத்து இருந்தோம்.

ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு லாபம் கொடுத்த DION

இது ஒரு மகிழ்வான செய்தி...

திங்கள், 13 ஜூலை, 2015

பகுதி நேர வேலைக்கு வருமான வரி செலுத்துவது எப்படி?

தற்போது இணைய உலகம் பிரபலமாகிய பிறகு பகுதி நேர வேலைகளும் அதிகரித்து விட்டது. அதிக அளவு வருமானம் தருமளவு பகுதி நேர வேலைகளும் மாறி விட்டது.


Freelancers, ப்ளாக் எழுதுவது என்று பல வழிகள்  மூலம் சம்பாதிப்பது என்பது இன்று மிக அதிகமாகி விட்டது. நல்ல விசயமும் கூட...

சில இந்திய ப்ளாக்கர்கள் மாதத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக இணையத்தில் பார்த்து இருக்கிறோம். கண்டிப்பாக நாம் அந்த பட்டியலில் இல்லை...:)



இவ்வாறு அதிகமாக வரும் வருமானத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும். வருமான வரியும் செலுத்த வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

தற்போது வரை யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதே உண்மை. ஏனென்றால் நமது வங்கி கணக்குகள் மேலை நாடுகளை போல் வருமான வரி அலுவலகத்துடன் இது வரை இணைக்கப்படவில்லை.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

LIC வேதாந்தாவை எதிர்த்து ஓட்டளிக்கிறது

வேதாந்தா குழுமம் Cairn நிறுவனத்தை எப்படி அடிமாட்டு விலைக்கு ஆட்டையை போட நினைக்கிறது என்பதை பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருந்தோம்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

கடுமையாக விலை குறைக்கப்பட்ட Redmi மற்றும் iPhone4 மொபைல்கள்


ஒரு பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை தளத்தில் பார்ப்போம்.

வியாழன், 9 ஜூலை, 2015

ஓரளவு எதிர்பார்ப்புடன் ஒன்றி வந்த டிசிஎஸ் முடிவுகள்

பொதுவாக ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் முடிவுகள் அதிகம் எதிர்பார்க்கப்படும்.

புதன், 8 ஜூலை, 2015

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன? - 2

சீனாவில் பொருளாதார தேக்கம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறோம். முந்தைய பாகத்தை இங்கே படித்து தொடரவும்..

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சீனாவின் பங்குச்சந்தை 30% சரிந்துள்ளது. இதனைத் தடுக்க சீன அரசு எவ்வளவோ முயன்றும் அது சக்திக்கு மீறிய விடயமாக மாறி உள்ளது.

ஜூன் காலாண்டு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து சென்செக்ஸ்...

கடந்த வாரம் உலக எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தை தாங்கி பிடித்த சந்தை இந்த வாரம் அதிக அளவில் திருத்தத்தை எதிர் கொள்கிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

கிரீஸால் விவாதத்திற்கு வரும் ஐரோப்பிய யூனியனின் ஸ்திரத்தன்மை

கிரீஸ் நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் 61% வாக்குகள் சர்வதேச மற்றும் ஐரோப்பிய நிதியகங்களின் முடிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளன.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா - 2

அலிபாபா நிறுவனர்  ஜாக் மா அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பற்றிய இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தினை இங்கு படிக்கலாம்.
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா


மீதி இரண்டிற்கும் அந்த சமயத்தில் எந்த நிறுவனங்களுமே இல்லை. ஜாக் மாவிற்கு வாய்ப்பும் அந்த புள்ளியில் தான் கிடைத்தது.

சீனாவை பொறுத்த வரை அப்பொழுது தான் ஏற்றுமதி பொருளாதரத்திற்கு மாறி இருந்தது. அதாவது அதிக அளவில் சீனாவின் குறுந்தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தன.



இது தான் வாய்ப்பு என்று ஜாக் மா நினைத்தார். சீனாவில் இருக்கும் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களையும், உலகம் முழுவதும் அவர்களுக்கு இருக்கும் நுகர்வோர் நிறுவனங்களை மறு முனையில் இணைத்து ஒரு இணையதளத்தை திட்டமிட்டார்.

இந்த B2B என்ற முறையை மையமாக வைத்து தான் அலிபாபா தொடங்கப்பட்டது.

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா

தோல்விகள் எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அதில் துவண்டு விடாமல் படிப்பினைகளே என்று நினைத்து அடுத்த நிலைக்கு சென்றவர்கள் வாழ்வில் பெருவெற்றியை பெற்றிருக்கின்றனர்.


அதில் ஒருவர் தான் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்த ஜாக் மா. (Jack Ma)



அவரது தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சீனாவின் கிழக்கு மாகாணம் ஒன்றில் தான் ஜாக் மா பிறந்தார். அவர் பிறந்த போது சீனா தீவிர கம்யூனிசம் காரணமாக பிற நாடுகளில் இருந்து விலகி ஒரு தனி உலகத்திலே இருந்தது.

வெள்ளி, 3 ஜூலை, 2015

இலங்கை இனப்படுகொலை விசாரணைக்காக இணைய வாக்கெடுப்பு

நமது தளம்  பொருளாதாரம் சார்ந்ததாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்காக இந்த வேண்டுகோளை வைக்கிறோம். 

ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உதவும் டிஜிட்டல் லாக்கர் திட்டம்

இந்த வாரம் பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.

வியாழன், 2 ஜூலை, 2015

மீட்சியில் இந்திய பொருளாதாரம், ராஜன் பேட்டி தரும் முக்கிய குறிப்புகள்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் முன்னால் இருந்தவர்களை விட அதிகம் வெளிப்படையானவர் என்றே சொல்லலாம்.

ஒரு வழியாக விவசாயத்தைக் கண்டு கொண்ட மோடி

ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடயம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்தையும் சேர்த்து தான் வளர்ச்சி என்று சொல்கிறார் நினைத்து இருந்தோம்.

புதன், 1 ஜூலை, 2015

வாய்ப்புகளை வீணாக்கி பதவி இழந்த ராகுல் யாதவ்

வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. சிலருக்கு தான் கிடைக்கிறது. அதில் சிலர் வலிய வந்த வாய்ப்புகளை வீணாக்கி விடுகின்றனர்.

பத்தாயிரம் கோடியை திரட்ட வரிசையில் நிற்கும் முன்னணி IPO பங்குகள்

இந்திய பங்குச்சந்தை தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

செவ்வாய், 30 ஜூன், 2015

மே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட தொழில் துறை

இந்த செய்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும்.

மூன்றாவது வருடத்தில் முதலீடு தளம் ...

நாட்கள் செல்லும் வேகத்தில் நமது முதலீடு தளம் இரண்டு வருடங்கள் நிறைவு செய்து நாளை மூன்றாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.

திங்கள், 29 ஜூன், 2015

அரசியல் காரணங்களால் முடிவெடுக்காமல் திணறும் கிரீஸ்

பலரும் கிரீஸ் பொருளாதார சிக்கலுக்காக நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு ஏற்படும் என்று தான் நம்பி இருந்தனர்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன? -2

இந்த சிறிய தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படித்த பிறகு தொடரலாம்.
ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

இப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விலை போகாமல் அப்படியே தொழிற்சாலைகளில் முடங்கின.

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தரங்கில் 1930ல் நடந்த பொருளாதார சீர்குலைவு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.

வெள்ளி, 26 ஜூன், 2015

முதலீடு மென் புத்தகங்கள் தொடர்பாக அறிவிப்பு

நண்பர்களுக்கு,

வணக்கம்!

கடந்த ஆண்டு எமது தளம் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வையொட்டி எமது தளத்தின் தொடர்களாக வரும் முக்கிய கட்டுரைகளை ஒரு மென் புத்தக வடிவில் தருவதாக சொல்லி இருந்தோம்.



இது தொடர்பாக நண்பர் ராஜா அவர்கள் மின் அஞ்சலில் இவ்வாறு கேட்டு இருந்தார்.

"இன்று நம் தளத்தில் உள்ள பழைய கட்டுரைகளை படித்தேன் . ஆனால் பலரிடம் 2g மொக்கை இணைப்பு இருப்பதால் படிக்க கடினமாக உள்ளது. இந்த கட்டுரைகளை எல்லாம் ஒருங்கிணைத்து pdf file ஆக தரலாமே."

கருத்துக்களை பகிர்ந்த ராஜாவிற்கு நன்றி!

உண்மையில் நாமும் இதனை மறந்து விட முடியவில்லை. ஆனால் அதிக வேலைப்பளு காரணமாக அந்த புத்தகத்தை தொகுக்க முடியவில்லை. இது தவிர இன்னும் கொஞ்சம் கட்டுரைகள் வந்தால் ஒரு முழுமையான புத்தகமாக மாறலாம் என்று நினைத்தோம்.

அதனால் முதல் கட்டமாக எமது "பங்குச்சந்தை ஆரம்பம் தொடர்" ஐம்பது பாகங்களை கடந்த பிறகு அதிலுள்ள கட்டுரைகளை, தொடர்ச்சி தவறாதவாறு தொகுத்து தருகிறோம். (தற்போது 43வது பாகத்தில் நிற்கிறது.)

அதோடு நின்று விடாமல் மற்ற பிரிவுகளில் உள்ள முக்கிய கட்டுரைகளையும் ஒவ்வொரு கால இடைவெளியில் தொகுத்து தருகிறோம்.

இந்த மென் புத்தகங்களை எமது தள கட்டுரைகளை மின் அஞ்சலில் Subscribe செய்தவர்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம்.

அதனால் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி Subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே Subscribe செய்தவர்கள் மீண்டும் இணைய தேவையில்லை.

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற


தங்கள் ஆதரவை தொடர கேட்டுக் கொள்கிறோம்!

நன்றியுடன்,
முதலீடு



கிரீஸ் பொருளாதார தேக்கம் எந்த அளவு இந்திய சந்தையை பாதிக்கும்?

கடந்த இரு நாட்களாக இந்திய பங்குச்சந்தை எதிர்மறையில் கீழே வந்துள்ளது.

வியாழன், 25 ஜூன், 2015

அதிக எதிர்பார்ப்புகளுடன் வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்

நேற்று பிரதமர் மோடி மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட்டை துவக்கி வைத்துள்ளார்.

புதிய வருமான வரி படிவங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

காலங்காலமாக தொடர்ந்து வந்த கடினமான வருமான வரி படிவங்கள் இந்த நிதி ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது.


இதில் தேவையில்லாத தகவல்கள் தவிர்க்கப்பட்டு படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.



மொத்தத்தில் நான்கு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நமக்கு வரும் வருமானத்திற்கு ஏற்ப படிவங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த படிவத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

புதன், 24 ஜூன், 2015

மாத சம்பளத்தில் PF பிடித்த தொகை உயர்கிறது

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கட்டுரை பயனாக இருக்கும்.


தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு வரியை மிச்சம் செய்வதற்காக BASIC சம்பளத்தை குறைத்து மற்றவற்றை அலொவன்ஸ் போல் வழங்கி வந்தன. இதனால் பாதிக்கும் குறைவான சம்பளமே அடிப்படை சம்பளமாக இருந்து வந்தது.





ஆனால் நமது PF தொகை BASIC சம்பளத்தை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 12% மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

வரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை

தற்போது பங்குச்சந்தைகளில் முக்கிய பேச்சுக்களில் ஒன்றாக இருப்பது கிரீஸ் நாட்டிற்கு கடன் கொடுத்த நாடுகள் நடத்தும் பஞ்சாயத்து தான்.

செவ்வாய், 23 ஜூன், 2015

இனி கார்டு பயன்படுத்துபவர்கள் வரிப் பலன்களை பெறலாம்

நமது நாட்டில் தான் பணப் பரிவர்த்தனைகளுக்கு எலெக்ட்ரானிக் மீடியம் அவ்வளவாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

எதிர்மறை விடயங்கள் சாதகமாவதால் உற்சாகத்தில் சந்தை

கடந்த ஏழு நாட்களாக சந்தை உயர்ந்து கொண்டே உள்ளது. தற்போது சந்தை தாழ்வில் இருந்து 1500 புள்ளிகள் வரை உயர்ந்து 27,800க்கு அருகில் வந்து நிற்கிறது.

சீனாவில் கம்யூனிச சுற்றுலா அனுபவங்கள்..

கடந்த நான்கு நாட்களாக சீனாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம். இந்த சிறிய விடுமுறைக்கு பிறகு மீண்டும் சீனம் தொடர்பான கட்டுரையுடன் தொடர்கிறோம்.

வியாழன், 18 ஜூன், 2015

எமது விடுமுறை அறிவிப்பு

வாசகர்களுக்கு,

நாளை முதல் நான்கு நாட்கள் சீனாவிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறோம்.

புதன், 17 ஜூன், 2015

மெர்ஸ் வைரஸால் மெர்சலாகி நிற்கும் கொரியா

பொதுவாக கொரியா என்றாலே வட கொரியா தான் நியாபகம் வரும். அங்கு இருக்கும் சங்கி மங்கி ஆட்சியாளர்கள் பண்ணும் அட்டூழியங்களே இதற்கு முதற்காரணம். பசி, பட்டினி இருந்தாலும் குண்டு தான் முதலில் தயாரிப்பார்கள்.

5000 ரூபாய் நிரந்தர பென்ஷன் பெற ஒரு அரசு திட்டம்

புதிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பென்சன் திட்டம் "அடல் பென்சன் யோஜனா". இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பென்சனுக்காக பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பிரிமியம் தொகை அதிகம். அதே நேரத்தில் அரசு சாராத நிறுவனங்கள் என்பதால் நம்புவதும் கடினம்.



இந்த சூழ்நிலையில் அரசின் அடல் பென்சன் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பழைய லேப்டாப்புகளை மாற்றுவதற்கு அமேசான் மூலம் ஒரு வழி

தற்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஆயுட்காலம் குறுகி கொண்டே செல்கிறது. இது லேப்டாப்புகளுக்கும் பொருந்தும்.

செவ்வாய், 16 ஜூன், 2015

வேதாந்தாவிடம் கூடுதல் டிவிடென்ட் கேட்கும் LIC

நம்மிடம் இன்சுரன்ஸ் என்று பெறப்படும் பணத்தை தான் LIC பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது.  இப்படி நம்மிடம் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை Cairn நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளது.

விவசாய வருமானத்தில் வரியை எப்படி சேமிப்பது?

நமது அரசியல் வாதிகள் வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கு உபோயோகிக்கும் ஒரு முக்கிய ஆயுதம் விவசாய வருமானம் என்று சொல்லலாம்.


கடந்த முறை, சரத் பவார் அவர்களது மகள் 10 ஏக்கர் நிலத்தில் 114 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதாக தேர்தல் கமிசன் அறிக்கையில் கூறி இருந்தார்,

அவ்வளவு வருமானம் கிடைக்க அப்படி என்னது தான் பயிர் செய்தார் என்று தெரியவில்லை? சொன்னால் நன்றாக இருக்கும்.



இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அரசின் கொள்கைப்படி விவசாயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு வரி கிடையாது. அதனால் தான் அரசியல் வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளாக மாறி விடுகின்றனர்.

உண்மையிலே முழுவதுமாக வரி இல்லை என்று சொல்ல முடியாது. Back Door என்ற முறை கணக்கு படி சிறிது வரி கட்ட வேண்டும். அது உங்களது மற்ற வருமானங்களை சார்ந்தும் இருக்கிறது. இருந்தாலும் அதிக அளவு பயன் உள்ளது.

மகிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்த மிக முக்கிய ஏர்பஸ் ஆர்டர்

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்கள் என்று ஏர்பஸ் மற்றும் போயிங் என்ற இரண்டைத் தான் சொல்லலாம்.

திங்கள், 15 ஜூன், 2015

பங்குச்சந்தையில் நம்பிக்கை தரும் முக்கிய நல்ல செய்திகள்

கடந்த ஒரு மாதமாக பார்த்தால் பங்குச்சந்தை சில விடயங்களை மட்டும் மையமாக வைத்து எதிர்மறையில் இயங்கி வருகிறது.

ஞாயிறு, 14 ஜூன், 2015

Cairn-Vedanta இணைப்பு மூலம் பகல் நேரக் கொள்ளையில் அணில் அகர்வால்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களுள் ஒன்று பிரிட்டிஷ் நிறுவனமான Cairn India. ONGCயை தவிர்த்து மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிறுவனங்களுள் Cairn நிறுவனமும் ஒன்று.

வியாழன், 11 ஜூன், 2015

வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)

193% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

சில சமயங்களில் நல்ல பங்குகள் சந்தை கீழே வரும் போது கரெக்ட்சன் நிலைக்கு வரும்.

புதன், 10 ஜூன், 2015

டம்மி ஜுன்ஜுன்வாலாவால் ஏற்றி இறக்கப்பட்ட சுரானா பங்கு

நேற்று காலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சுரானா பங்குகளில் முதலீடு செய்கிறார் என்று ஒரு செய்தி வந்தது.

பரிந்துரையில் 25% லாபம் கொடுத்த SpiceJet விரிவாக்கம் செய்கிறது

கடந்த டிசம்பரில் Spice Jet நிறுவனம் மாறன்கள் கையில் இருந்தது. மாறன்களுக்கு விமான தொழிலில் சரியான முன் அனுபவம் இல்லாததால் ஒரு கட்டத்தில் கடுமையான நஷ்டங்களை சந்தித்தது.

சர்க்கரை நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன், போதுமா?

அரசு சர்க்கரை நிறுவனங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.

செவ்வாய், 9 ஜூன், 2015

பப்பெட் பொன்மொழிக்குள் மலிவாக வரும் Nestle பங்கு

கடந்த இரு வாரங்களாக Nestle பங்கு சந்தையில் துவைத்து எடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 25% வீழ்ச்சி அடைந்துள்ளது.

முதலீடு தள இணைப்பு சரி செய்யப்பட்டது

நாம் பயன்படுத்தும் DNS சர்வர் சில பிரச்சினைகளை சந்தித்ததால் இன்று மாலையில் இருந்து நமது தளம் சரிவர இயங்காமல் போனது.

தவறாக புரிந்து அடி வாங்கும் சன் டிவி பங்கு

நேற்று ஒரே நாளில் மட்டும் சன் டிவி பங்கு 30% அளவு சரிந்தது.

திங்கள், 8 ஜூன், 2015

ஓய்வில் கிடைக்கும் Gratuity பற்றிய முக்கிய குறிப்புகள்

தற்போதைய தனியார் மாயா சூழ்நிலையில் யாரும் அதிக காலம் ஒரு நிறுவனத்தில் இருப்பதில்லை என்பதால் Gratuity பற்றிக் கண்டு கொள்வதில்லை.


ஒரு தலைமுறைக்கு முன்னால் சென்று பார்த்தால் Gratuity என்பது ஒரு முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற விடயங்களுக்கு அதிக  பயன்பட்டு வந்தது.

இன்று கூட தமிழர்கள் அவ்வளவாக நிறுவனங்களை மாறுவதில்லை என்பது பல நிறுவனங்களில் ஒரு பேச்சாகத் தான் இருக்கிறது.



அவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் Gratuity பற்றிய இந்த கட்டுரை பயனாக இருக்கும்.

ஞாயிறு, 7 ஜூன், 2015

நல்ல நிதி அறிக்கையைக் கொடுத்த DION பங்கு

இதற்கு முன்னால் DION Global Solutions என்ற நிறுவனத்தின் பங்கை பரிந்துரை செய்து இருந்தோம்.

வெள்ளி, 5 ஜூன், 2015

500% லாபம் கொடுத்த AEGIS நிறுவனம்

எமது தளத்தில் நவம்பர் 22, 2013 அன்று AEGIS Logistics என்ற நிறுவனத்தை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: AEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?

குமரி நில நீட்சி - புத்தக விமர்சனம்

தமிழில் ஆய்வு கட்டுரை தொடர்பான புத்தகங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை என்ற குறையை நீக்கிய ஒரு புத்தகம் "குமரி நில நீட்சி " என்று சொல்ல முடியும்.


ப்ளைட்டில் பயணிக்கும் போது செல்லும் பாதையை குறிப்பிடுவதற்காக ஒரு மேப் டிவியில் காட்டுவார்கள்.



அது சாட்டிலைட் மேப் என்பதால் வரைபடங்கள் இயற்கையானதாகவும் நேர்த்தியாக இருக்கும். அந்த மேப்பில் கடலின் ஆழ விவரங்கள் கூட வெவ்வேறு நிறங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த நிறத்தை அடிப்படையாக வைத்து பார்த்தால் கடல் வழியாக தமிழ்நாடு ஒரு பாதையில் ஆஸ்திரேலியாவையும், ஆப்ரிக்காவையும் இணைத்து இருக்கும்.

வியாழன், 4 ஜூன், 2015

மழையைக் கண்டு சந்தை அவ்வளவு பயப்பட வேண்டுமா?

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் சந்தை எதிர்மறை விடயங்களை மட்டுமே இது வர எடுத்து வருகிறது.

புதன், 3 ஜூன், 2015

ஏன் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தது?

நேற்று மட்டும் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தன. 574 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு 120 ரூபாயில் நாள் முடிவில் கீழ் இறங்கியது.

மைக்ரோமேக்ஸ் முதல் பத்து இடங்களுக்குள் வந்தது

இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது.

பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

இந்திய பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவித்தவர் என்று பார்க்கும் போது ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தான் நினைவுக்கு வருவார்.


ஆனால் அவரையும் தாண்டி சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். சிலர் அவர்களாகவே மீடியா என்பதற்குள் வராமல் உள்ளனர்.



அதில் ஒருவர் தான் மாங்கேகர் என்ற கல்லூரி பேராசிரியர். இவரைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் யாருக்கும் அவ்வளவாக தெரியாததால் Prof M என்றே சந்கேதத்தில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் 80களிலே சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தாலும் 2003ல் தான் வெளிச்சத்துக்கு தெரிய வர ஆரம்பித்தார்.

செவ்வாய், 2 ஜூன், 2015

கடனுக்கான வட்டியைக் குறைத்த வங்கிகள்

நேற்று RBI வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியைக் குறைத்தது.


அதனால் வங்கிகளும் நமக்கு தரும் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும் வாய்ப்புகள் இருப்பது பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க:  ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை




இதன் தொடர்ச்சியாக நேற்று இரவே சில வங்கிகள் தங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டன.

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை

இன்று ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைத்தது.

திங்கள், 1 ஜூன், 2015

ஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்

சிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் பொருட்டு செபி சில ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.


இதனைப் பற்றி மிக விரிவாக இங்கு எழுதி இருந்தோம்.
இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்



அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் இந்த அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு சில முக்கியமான மாற்றங்கள் இந்த நிதி திரட்டலில் செய்யப்பட்டு இருந்தன.

மே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட உற்பத்தி துறை

கடந்த வாரம் வெளியான GDP தரவுகளில் உற்பத்தி துறை நல்ல வளர்ச்சி கண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தட்டச்சு தெரிந்தால் இந்திய அரசின் பகுதி நேர வேலை வாய்ப்பு

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின் கீழ் ஒரு வரவேற்கத்தக்க அறிவிப்பு வந்துள்ளது.

ஞாயிறு, 31 மே, 2015

புதிய சூத்திரத்தில் குழப்பத்தை தந்த இந்திய GDP தரவுகள்

கடந்த வெள்ளியன்று வெளியான இந்திய GDP தரவுகள் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

நமது தளத்தில் கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையும் கொடுத்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

வெள்ளி, 29 மே, 2015

பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
பென்னி ஸ்டாக் என்றால் பயந்து ஓடுவதன் காரணங்கள் (ப.ஆ - 41)

வியாழன், 28 மே, 2015

மைக்ரோமேக்ஸ் வழங்கும் டூ இன் ஒன் பட்ஜெட் விலை லேப்டேப்

நீண்ட நாட்களாக எமது தனிப்பட்ட தேவையாக இருந்து வந்தது தான் இந்த பதிவாக மாறி உள்ளது.

கமல் ஸ்டைலில் ஆந்த்ராக்சை உயிரோடு நாடு கடத்திய அமெரிக்கா

பொதுவாக கமல் படங்களை வெளிவந்த சமயத்தில் பார்த்தால் ஒன்றும் புரியாது.

புதன், 27 மே, 2015

பொய்த்த நிதி அறிக்கைகளால் டல்லாக பங்குச்சந்தை

ஒரு வாரமாக பங்குச்சந்தையைப் பார்த்தால் அப்படியே ப்ளாட்டாக உள்ளது. 10, 15 புள்ளிகளே கூடி இறங்கி வருகிறது.

மேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE

கடந்த வாரம் தான் மேகியில் கண்டுபிடிக்கப்பட்ட சில சத்து குறைபாடுகள் கணிசமான அளவில் NESTLE பங்கை பாதிக்கலாம் என்று எழுதி இருந்தோம்.

கற்றதும், பெற்றதும் ஒரு புத்தக விமர்சனம்

சுஜாதாவை தெரியாமல் இருக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் அறிமுகம் செய்யும் அவசியம் நமக்கு இல்லை.


அவர் எழுதிய ஒரு புத்தகம் தான் கற்றதும், பெற்றதும். அதனை படித்த அனுபவங்களை பகிர்கிறோம்.



பணம், பங்குச்சந்தை என்று அலைந்து கொண்டால் புத்தி பேதிலித்து விடும். அதனால் அதையும் தாண்டிய ஒரு பதிவை பார்ப்போம்.

முந்தைய காலத்தில் அனிதாவின் காதல்கள் என்று சுஜாதாவின் நாவல்களை தான் படித்தது உண்டு.

அந்த எதிலும் இல்லாத ஒன்று அவரது கற்றதும், பெற்றதும் புத்தகத்தில் காண முடிந்தது.

சில்லறை முதலீட்டாளர்களின் அதீத ஆர்வத்தில் இந்திய பங்குச்சந்தை

பொதுவாக இந்திய பங்குச்சந்தை அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டாளர்களை சார்ந்து இருக்கும்.

செவ்வாய், 26 மே, 2015

வொடபோன் மிகப்பெரிய IPOவாக இந்திய பங்குச்சந்தையில்..

VODAFONE என்பது பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த டெலிகாம் நிறுவனம்.

PF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..

ஒரு தலைமுறைக்கு முன்னர் சென்று பார்த்தால் அலுவலகங்களில் சேமிக்கப்படும் PF பணத்தை அவ்வளவு எளிதில் எடுக்க மாட்டார்கள்.


அந்த தொகை அந்த காலக் கட்டத்தில் பெரிது என்பதால் குழந்தைகள் கல்யாணம், படிப்பு, ஓய்விற்கு என்று பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதனால் நீண்ட காலம் ஒரு சேமிப்பாகவே செய்து வருவார்கள்.



ஆனால் தற்போது தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் கூடி வரும் சூழ்நிலையில் இளைஞர்கள் அடிக்கடி நிறுவனங்களை மாற்றி வருகிறார்கள்.

திங்கள், 25 மே, 2015

பிக்ஸ்ட் டெபாசிட் எதிர்மறை வட்டி தந்தால் எப்படி எதிர் கொள்ளலாம்?

பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் மாதந்தோறும் வட்டி தருவார்கள்.

இதனை வட்டி என்று சொல்வதை விட நாம் போடும் பணத்தின் மதிப்பு எவ்வளவு குறைகிறதோ அதனை ஈடு கட்டி தருகிறார்கள் என்று சொல்லலாம்.




அதாவது எவ்வளவு பணவீக்கம் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு இந்த வட்டி விகிதங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

ஓமன் அரசால் வேலை இழப்பு பயத்தில் இந்தியர்கள்

ஓமன் அரசு கொண்டு வரும் ஒமானியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை பல லட்சம் இந்தியர்கள் தாய் நாடு திரும்பும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

ஞாயிறு, 24 மே, 2015

NRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது

இதற்கு முன் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி?  என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.

வெள்ளி, 22 மே, 2015

பங்குச்சந்தைக்கு நம்பிக்கை தரும் SBI நிதி முடிவுகள்

SBI வங்கியின் நிதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

பிரிட்டானியாவின் லாபம் 55% உயர்ந்தது

இந்திய நுகர்வோர் துறையில் பிஸ்கட் மற்றும் பண்டங்கள் தயாரிக்கும் பிரிட்டானியா (BRITANNIA) நிறுவனத்தின் நிதி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

வியாழன், 21 மே, 2015

மேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு

NESTLE நிறுவனம் தான் குறுகிய நேரத்தில் தயாராகும் மேகி நூட்லஸ் தயாரித்து வருகிறது.

குழந்தைகளுக்காக LICயின் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு திட்டமிடுபவர்களுக்காக ஒரு முதலீட்டு முறையைப் பற்றி பார்ப்போம்.


இந்த பதிவை எழுத காரணமாக இருந்த நண்பர் தண்டபாணி அவர்களுக்கு நன்றி!



இந்த திட்டம் LICயால் வழங்கப்படுகிறது. திட்டத்தின் பெயர் Child Fortune Plus Plan.