இணையத்தில் எமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக திரட்டிய தகவல்களை கட்டுரை வடிவத்தில் பகிர்கிறோம்,
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை பார்த்தால் சிறு நிறுவனங்களை ஆரம்பிப்பவர் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.
அதற்கு இ-காமெர்ஸ் துறையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் என்று சாதரணமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாகி விட்டன. இந்த நிறுவனங்கள் பல மடங்கு தன்னம்பிக்கையை மக்களிடம் விதைத்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது.
மற்றொரு பார்வையில் பார்த்தால்,
முன்பு போல் இல்லாமல் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப கட்ட முதலீடு என்பதை விட நல்ல ஐடியாக்களும், அதனை செயல்படுத்தும் திறமையுமே தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.