வெள்ளி, 16 ஜனவரி, 2015

விடுமுறையில் செல்கிறோம்

நண்பர்களே,

நாளை (ஜனவரி 17 ) முதல் பிப்ரவரி 8 வரை மூன்று வார இடைவெளியில் அலுவலக விடுமுறையில் இந்தியா செல்கிறோம்.

வியாழன், 15 ஜனவரி, 2015

ஸ்பைஸ் ஜெட்டை மாறன் விற்று விட்டார்

நாம் இரண்டு நாள் முன்னர் எழுதிய பதிவில் ஸ்பைஸ் ஜெட் கை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தோம்.

ஜெட் ஏர்வேஸ் பங்குகள் அடமானத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 5000 கோடி அளவு உள்ளது. ஆனால் அதன் கடன் மதிப்பு 9000 கோடிக்கும் மேல் உள்ளது.

புதன், 14 ஜனவரி, 2015

சந்தை கணிப்பை மீறிய YES BANK நிதி முடிவுகள்

YES BANK வங்கியின் நிதி அறிக்கை முடிவுகள் இன்று வெளிவந்தன. இது சந்தை எதிர்பார்ப்பையும் மீறி நன்றாக இருந்தது.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பொங்கல் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் குடும்பத்தினருக்கும் முதலீடு தளத்தின் இதயங்கனிந்த பொங்கல் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்திய ஐடி நிறுவனங்களின் பணி நீக்க ரகசியம்

நஷ்டத்தால் இயங்கும் நிறுவனங்களில் பணி நீக்கங்கள் என்பது தவிர்க்க முடியாது என்று சொல்லலாம்.  ஆனால் லாப விகிதத்தைக் கூட்டுவதற்கு கொத்து கொத்தாக பணியாளர்களை நீக்குவது கொடுமையானதே. இது தான் TCS நிறுவனத்தில் நடந்து வருகிறது.

திங்கள், 12 ஜனவரி, 2015

விலையில்லா பெட்ரோல் திட்டத்திற்கு தயாராகும் கச்சா எண்ணெய்

இன்று கச்சா எண்ணெய் விலை பரேல்லுக்கு 47$ என்பதை விடவும் கீழே சரிந்தது. பரேல்லுக்கு 30$ வரை செல்லும் என்றும் கணித்துள்ளார்கள்.

விஸ்தாரா வரவால் ஏர் இந்தியா டிக்கெட் 50% சலுகையில்

ஒரு பக்கம் இந்திய விமான நிறுவனங்கள் திவாலாக மறு புறம் புதிய வரவுகள் வந்து கொண்டு இருக்கின்றன.

வெளிநாட்டு முதலீடுகள் 1800 கோடிக்கு அனுமதி

மத்திய அரசு நேற்று 1800 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது,

முதலீட்டாளர்களை வெளிப்படையாக ஏமாற்றும் வேதாந்தா

நாம் இதற்கு முன்னரே வேதாந்தா குழுமம் நடத்தும் Cairn நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சித்து இருந்தோம்.

SIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது?

எந்தொவொரு முதலீட்டிலும் ரிஸ்கை தவிர்ப்பதற்கு இரண்டு அடிப்படை வழிமுறைகள் இருப்பதை உணரலாம்.


முதலாவது,
நம்மிடம் இருக்கும் பணம் அனைத்தையும் ஒரே முதலீட்டில் போட்டு வைப்பது ஆபத்தானது. இதனால் அந்த ஒரு முதலீட்டுத் தன்மையில் ஏற்படும் பாதிப்பானது நம்மில் இருக்கும் மொத்த செல்வதையும் ஒரே நேரத்தில் அடித்து சென்று விடும்.

பார்க்க: முதலீடை பிரிப்பது எப்படி?




இரண்டாவது வழிமுறை ஒரே நேரத்தில் எல்லா பணத்தையும் ஒரு முதலீட்டில் போடுவதும் அதிக ரிஸ்கை கொடுக்கும்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

கப்பலில் பதுக்கப்படும் கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் அரசியல் மற்றும் எண்ணெய் சப்ளையில் ஏற்ற மாற்றங்களால் அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தற்போது 50$ க்கும் குறைவாக வந்துள்ளது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50% அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இன்போசிஸ் நிதி முடிவுகள்

இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்போசிஸ் நிதி அறிக்கை வெளியானது. சந்தையில் கணிக்கப்பட்டதை விட நல்ல நிதி அறிக்கையை கொடுத்து இன்போசிஸ் ஆச்சர்யமளித்தது.

வியாழன், 8 ஜனவரி, 2015

Spice Jet - கைவிட்ட மாறன், கைகொடுக்கும் அஜய் சிங்

Spice Jet நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் இருப்பது அறிந்ததே. அடுத்த King Fisher போல் மாறி விடுமோ என்று கூட நினைக்கப்பட்டது.

தெரியுமா? TITAN என்பது ஒரு தமிழக அரசு நிறுவனம்

TITAN என்பது இந்தியாவில் பிரபலமான கடிகாரங்கள் மற்றும் வாட்ச் தயாரிக்கும் நிறுவனம் என்று நமக்கு தெரிந்து இருக்கும்.

புதன், 7 ஜனவரி, 2015

கோடக் - இங்க் வங்கி இணைப்பிற்கு ஒப்புதல் கிடைத்தது

கோடக் மகிந்திரா வங்கியும் இங்க் வைஸ்யா வங்கியும் இணைவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தன. இதன் மூலம் கோடக் மகிந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டது.

எண்ணெய் விலை குறைவு ஆயில் நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்?

தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 47$ க்கு அருகில் வந்து விட்டது. இது செயற்கையான மாற்றம் தான். அதனால் விரைவில் மேல் வரும் வாய்ப்பு உள்ளது.

ஹயுண்டாய் கார்கள் விலை கூடியது

ஏற்கனவே சில வரி விதிப்புகளால் கார்கள் விலை கூடும் என்று சொல்லி இருந்தோம்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் கோல் இந்தியா ஸ்ட்ரைக்

நிலக்கரி துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் முக்கியத்துவதை மத்திய அரசு குறைத்து வருகிறது. கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் அரசின் பங்கை குறைப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 800 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்

நேற்று தான் காரணமில்லாமல் கூடிக் குறையும் பங்குச்சந்தை என்று எழுதி இருந்தோம்.

திங்கள், 5 ஜனவரி, 2015

காரணமில்லாமல் கூடிக் குறையும் பங்குச்சந்தை

நேற்று ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் வரை கூடிய சென்செக்ஸ் பின்பு எதிர்மறையில் இறங்கி ஆச்சர்யமளித்தது.

டாடா சன்ஸ் மீது DOCOMO புகார்

இந்திய டெலிகாம் துறையில் டாடாவும் DOCOMOவும் இணைந்து சேவைகளை அளித்தது அனைவரும் அறிந்ததே.

Micromax நிறுவனம் பங்குசந்தைக்குள் நுழைகிறது

கடந்த வருடம் மொபைல் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த Micromax நிறுவனம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

லாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு

TCS தனது 35,000 பணியாளர்களை நீக்க, செய்யவிருப்பதாக ஒரு உறுதிபடுத்தப்படாத செய்தி உலவி வருகிறது. TCS நிறுவனத்தின் சார்பிலும் மறுப்பு ஏதும் இல்லாததால் செய்தி உண்மையாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.

வெள்ளி, 2 ஜனவரி, 2015

ஜனவரி போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

முதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

வியாழன், 1 ஜனவரி, 2015

மாருதி கார் விற்பனை கணிசமாக கூடியது

கடந்த டிசம்பர் 2015ல் வெளியான கார் விற்பனை தரவுகளில் மாருதி நிறுவனத்தின் விற்பனை கணிசமாக கூடியுள்ளது.

பெட்ரோலுக்கு வரி கூட்டப்பட்டு விட்டது

நேற்று தான் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதால் கார் விலைகள் கூடுகிறது என்று கூறி இருந்தோம்.

இன்று பெட்ரோல், டீஸல் போன்றவற்றிற்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது Excise Duty. லிட்டருக்கு 2 ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது.



இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பயன் கிடைக்கப் போவதில்லை. இதன் மூலம் 6000 கோடி ரூபாய் வருமானம் அரசிற்கு கூடுதலாக கிடைக்க உள்ளது.

இந்த பணம் சாலை போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களின் அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

English Summary:
Petrol, Diesel excise duties increased  and fund goes to Govt for infrastructure development .


PACL மோசடி - ஏமாறுபவர்கள் இருக்க ஏமாற்றங்களும் தொடர்கின்றன

சஹாரா, சாரதா என்று சிட் பண்ட் நிறுவனங்களின் மோசடிகள் தொடருகின்றன. பலமான அரசியல் பின்புலங்களின் தொடர்பால் அவர்களுடைய ஏமாற்று வேலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன.