வெள்ளி, 9 நவம்பர், 2018

தேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை அடி மட்டத்தில் இருந்து எழுந்து 10,600 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது என்பது மகிழ்வான செய்தி தான்.

ஒரு புறம் உலக காரணிகள் மிக சாதகமாக இந்தியாவிற்கு அமைந்துள்ளது.



85 டாலருக்கு சென்ற கச்சா எண்ணெய் இன்று 70$ அளவை தொட்டு விட்டது.

கச்சா எண்ணெய் 70 டாலரில் நிலை பெறும் என்பது அதிக கணிப்பாகவும் உள்ளது.

அதன் பக்க விளைவாக இந்திய ரூபாய் மதிப்பும் ஓரளவு உயர்வை கண்டு வருகிறது.

ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்குவது என்பது இன்னவும் நடக்கவில்லை.

புதன், 7 நவம்பர், 2018

இன்று முஹுரத் ட்ரேடிங் ...

நமக்கு நேற்றே தீபாவளி கோர்ட் உத்தரவுடன் சுபமாக நடந்து விட்ட சூழ்நிலையில் இன்று வட இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.


நாம் நரகாசுரனை அழித்ததற்காக மட்டன் சாப்பிட்டு வெடியோடு கொண்டாடுகிறோம் என்றால்,



வட இந்தியர்கள் லக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை போன்று சுத்த சைவ தீப ஒளியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு இந்தியா, ஒரே மத பண்டிகை ஆனால் எத்தனை வேறுபாடுகள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா வாழ்க..!

இன்று பங்குசந்தையில் ஒரு விசேச தினம்.