வியாழன், 23 மே, 2019

வலுவான எதிரி இல்லாத இந்திய அரசியல் களம்

இன்று இந்திய பொது தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன.


காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ள 95 தொகுதிகளில் 60 தொகுதிகள் தமிழ்நாடு, கேரளாவிற்குள்ளே வந்து விடுகின்றன.



அப்படி என்றால், மற்ற இந்திய பகுதிகளில் தோல்வியிலும் மட்டமான தோல்வி என்று சொல்லலாம்.

இவ்வாறு காங்கிரஸ் வலுவில்லாத வரை பபிஜேபியின் வெற்றியும் தவிர்க்க முடியாத ஒன்றே.

பிஜேபி கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் வெற்றி. தனித்தே ஆட்சி அமைக்கும் சூழ்நிலை கூட...

இதைத் தான் பங்குசந்தையும் எதிர்பார்த்தது.

செவ்வாய், 21 மே, 2019

Exit Poll முடிவுகளை நம்ப மறுக்கும் சந்தை

கடந்த பதிவில் Exit Poll முடிவுகள் உண்மையாகுமா? என்பது பற்றி எழுதி இருந்தோம்.


அதன் படியே இன்றைய சந்தை 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இருக்குமா?' என்று கமல்ஹாசன் பாணியில் குழம்பி நிற்கிறது.



தந்தி டிவியின் எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் 12,000 நபர்களிடம் தரவுகளை பெற்றோம் என்று சொல்லி இருந்தார்கள்.

அப்படி என்றால், நாற்பது தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 300 என்ற வீதத்தில் எடுக்கப்பட்டு இருந்தது.

ஒரு தொகுதியில் சராசரியாக பத்து லட்சம் வாக்குகள் இருக்கும் பட்சத்தில் 300 என்பது மிக குறைவே.

சனி, 18 மே, 2019

நாளை Exit Poll முடிவுகள், உண்மையாகுமா?

நாளையுடன் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.


தேர்தல் ஆணைய விதிப்படி தேர்தல் நடக்கும் போது கருத்து கணிப்புகளை சொல்லக்கூடாது என்பதால் நாளை மாலை பல டிவிக்கள் Exit Poll கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன.



இதில் ஒன்றை பார்த்தால்,

கருத்துக் கணிப்புகளை  பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பது தான் விதி முறை.

கருத்துக் கணிப்புகள் நடத்தும் நிறுவனங்களிடம் நாளை நடக்கும் 60 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான கணிப்புகள் தற்போது கூட கையில் இருக்கத் தான் செய்கிறது.

வெள்ளி, 17 மே, 2019

நுகர்வோர் துறையில் பெரிய அளவில் நுழையும் டாடா

இந்தியாவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு குழுமம் டாடா.


டாடா சன்ஸ் என்ற பெயரில் நூறுக்கும் மேலளவு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது.



இந்த நிறுவனங்களில் இருந்து டிவிடென்ட் மூலம் கிடைக்கும் வருமானம் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

ஆனால் முதன்மையான வருமானம் என்று பார்த்தால் TCS மூலமாகத் தான் வருகிறது. கிட்டத்தட்ட 70% அதிலிருந்து தான் வருகிறது.

டாட்டாவின் ஆரம்ப கால நிலையில் பார்த்தால் ஸ்டீல், ஆட்டோ, நுகர்வோர் சந்தை போன்ற்றில் இருந்து கணிசமான வருமானம் கிடைத்து வந்தது.

புதன், 15 மே, 2019

கம்பெனி மீதான காதலும், தடுமாற்ற முடிவுகளும் ...

பெங்களூரில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்கிய ஒருவரிடம் அண்மையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.


IIMல் முடித்த அவர் 12 நிறுவனங்களை  உருவாக்கி, அதில் ஏழு நிறுவனங்களை நஷ்டத்தில் விட்டு ஐந்து நிறுவனங்களில் வெற்றி பெற்றவர்.





அவர் சொன்ன முக்கிய வரிகள்...Don't love your company.

இது நிறுவனத்தை நடத்துபவராக இருக்கட்டும் அல்லது முதலீடு செய்தவராக இருந்தாலும் நிதர்சனம் என்பதை அதிகம் யோசிக்க வேண்டும்.

தேவையான நேரத்தில் விட்டு விட்டு அல்லது விற்று விட்டு வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும்.

அது Jet Airways நிறுவனத்தின் தற்போதைய நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

செவ்வாய், 14 மே, 2019

அடுத்து யார்? தடுமாற்றத்தில் சந்தை...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.

அதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருந்த நேரத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தால் ஏனோ தானோ என்று தான் இருக்கும்.


அதனால் தான் அமைதியாக இருந்து விட்டோம். மன்னிக்க!





இந்த வருட தொடக்கம் முதல் எதிர்மறையாகவே சந்தை இருந்து வந்தது.

மோடி வர மாட்டார். கஷ்டம். வர்த்தக போர் என்று எக்க சக்க எதிர்மறை காரணங்கள்.

திடீர் என்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கூடவே வந்தன. மோடி வந்து விடுவார் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டினர்.