செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இரண்டு செய்திகள், உயர்ந்த நிப்டி

நேற்று வரை நான்கு நாட்கள் இந்திய சந்தை கடுமையான வீழ்ச்சியில் தான் இருந்தது. ஒரு கட்டத்தில் 10,850 நிப்டி என்ற புள்ளிகளில் 200 நாள் சராசரியையும் தொட்டு வந்தது. ஆனால் அதில் கடுமையான தடை இருந்ததால் அதற்கு கீழ் செல்லவில்லை.

அதே நேரத்தில் INDIA VIX என்ற Volatility குறியீடும் 25 என்ற அளவில் கட்டுக்குள் இருந்ததால் இதற்கு கீழ் உடனே செல்லும் என்று தோன்றவில்லை.ஆனால் மேலே ஏற்றி செல்லும் காரணிகளும் குறைவாகவே இருந்ததன. அதனால் சந்தை உடனே மேல் செல்வது கடினம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில் இன்று காலை வந்த இரண்டு செய்திகள் இந்திய பங்குசந்தைகளை நல்ல அளவில் மேலே கொண்டு சென்றது.


ஒன்று, HDFC BANK


HDFC வங்கிககு நீண்ட காலமாக அடுத்த தலைமை யார் என்பதில் கேள்விகள் இருந்தது. கடந்த 25 வருடங்களாக பூரி அவர்கள் தலைமையில் HDFC BANK மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது. 

கடந்த 25 வருடங்களில் HDFC BANK நிறுவன பங்கு 25000% வளர்ச்சியை கொடுத்துள்ளது. 100 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இன்று 2500000 ரூபாய் வளர்ச்சி கண்டிருக்கும் என்றால் பெரிய வளர்ச்சி தான்.

ஒரு வீட்டுக் கடன் வழங்கும் HDFC என்ற நிறுவனம் வங்கியாக மாறி காட்டிய இந்த அசுர வளர்ச்சி என்பது பிரமிக்கத்தக்கது. ஒரு கட்டத்தில் எமது நியாபகத்தில் HDFC,  ICICI என்ற இரண்டு தனியார் வங்கிகளும் ஒரே நிலையில் தான் இருந்தன. ஆனால் ICICI வங்கியில் இருந்த வாராக் கடன் அளவு HDFC வங்கியை விட பின்னுக்கு தள்ளியது.

கபூர் போன்ற ஆட்கள் மிதமிஞ்சிய வளர்ச்சியை காட்டுவதற்காக கொடுத்த கடன்களை வாராக் கடன்களாக மாற்றி YES BANK வங்கியை ஒன்றும் இல்லாமல் செய்தார். 

ஆனால் அப்படி அல்லாமல் ஆதித்ய பூரி 25 வருடங்கள் தொடர்ந்து வளர்ச்சி, வாராக்கடன் என்ற இரண்டையும் சமநிலையில் கொண்டு கொண்டு சென்று சாதித்து காட்டினார். தற்போது வயது முயற்சியால் அவரால் தொடர முடியாத நிலைமை. ஆனால் அதே திறமையுடன் ஒருவரை கண்டுபிடிப்பது HDFC நிறுவனத்திற்கு மிகவும் சிரமாக இருந்து வந்தது.

வெளியில் இருந்து ஆள் எடுப்பதா? அல்லது ஏற்கனவே வங்கியில் வேலை பார்த்த ஒருவரை போடுவதா? என்ற ஒரு குழப்பத்தில் HDFC BANK இருந்து வந்தது. இந்த நிலையில் தான் சசிதர் ஜெகதீசன் என்பவரை அடையாளம் செய்து ரிசர்வ் வங்கிககு பரிந்துரை செய்தது. ரிசர்வ் வங்கியும் இன்று ஏற்றுக் கொண்டது.

சசிதர் ஜெகதீசன் HDFC வங்கியில் ஆதித்ய பூரிக்கு அடுத்த நிலையில் இருந்து வந்தார். வங்கி துறையில் நன்கு பரிச்சயமானவர் என்று அறியப்படுகிறது. 25000% வளர்ச்சியை கொடுப்பது கடினம் தான் என்றாலும் 20% வளர்ச்சி, இதே அளவிலான NPA என்ற இரண்டையும் கொண்டு சென்றாலே சாதனை தான்.

இந்த செய்தியை சந்தை நேர்மறையாக எடுத்துக் கொண்ட காரணத்தால்  HDFC வங்கி பங்குகள் 4% அளவு இன்று மேல் உயர்ந்தன.

இரண்டாவது, RELIANCE


ரிலையன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது நிப்டியை கீழே விழாமல் தாங்கி கொண்டிருக்கும் நிறுவனம். பல Strategic Deals தொடர்ந்து கடந்த நான்கு,ஐந்து மாதங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்பு கீழே விழாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். மிக அதிக அளவில் அந்நிய பணம் உள்ளே நுழைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனமானது ஜியோவை டெலிகாம் நிறுவனம் என்பதில் இருந்து ஒரு டிஜிட்டல் நிறுவனமாக மாற்ற முற்படுகிறது. அதில் இ -காமர்ஸ் சேவைகளும் அடங்கும். 


அதற்கு ரீடைல் துறையில் இருக்கும் நிறுவனங்களையும் கையடக்கம் செய்வததும் அவசியமாகிறது. பல முக்கியமாக இடங்களில் Big Bazaar என்ற பெயரில் கடைகளை வைத்து இருக்கும் Future Retail நிறுவனத்தை இன்று வாங்குவதாக அறிவித்து உள்ளார்கள். 

இதன் விளைவு RELIANCE நிறுவன பங்குகள் இன்று 6%க்கும் மேல் உயர்வு பெற்றன.

இன்னும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மீடியா துறையில் இருக்கும் சீர்திருத்தம் மீதி இருக்கிறது. Network18 நிறுவன பங்குகளையும் கவனித்து வருக.

ஒரு வித்தியாசமான அனுபவம் என்னவென்றால் 

தற்போது NIFTYயில் இருக்கும் 50 பங்குகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் விகித மதிப்பு 14% ஆகும். HDFC நிறுவனத்தின் இரட்டை பங்குகள் 10% அளவு மதிப்பை கொண்டிருக்கின்றன.இது போக TCS நிறுவனமும் சேர்ந்தால் இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே 35% நிப்டியின் மதிப்பை கொண்டிருக்கின்றன.

இன்று BANKNIFTY, NIFTY யில் இருக்கும் பங்குகளை பார்த்தால் முதல் ஐந்து பங்குகளை தவிர மற்ற எல்லாமே எதிர்மறையில் இருக்கின்றன.

அதனால் பெரும்பாலான நிலையை இந்த பங்குகள் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் நிப்டியின் உயர்வு என்பது பரவலாக இந்திய சந்தையின் தன்மையை காட்டும் என்பது சரியாக இருக்காது. இன்னும் மிட் கேப் நிறுவன பங்குகளில் பெரிய முன்னேற்றத்தை பார்க்க முடியவில்லை. நிப்டியை நம்பி கீழே இறங்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறுதலாக அகற்றப்பட்டு விட்டது. மறு பிரசுரிக்கும் வசதி இல்லை. வருந்துகிறோம்!

   நீக்கு
 2. இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பதமாக சென்று கொண்டு இருக்கிறது, நாட்டில் வேலைவாய்ப்பு சுத்தமாக மங்கிவிட்டது, மக்கள் எதற்கு ஓடுகிறார்கள் என்றே தெரியாமல் வெளியில் ஓடிக்கொண்டு வயிற்று பிழைப்புக்காக ஒரு நூறு இருநூறு சம்பாதித்தித்துக்கொண்டு இருக்கிறார்கள் காய்கறி கடைகளில் காய்கறி வாங்க சென்றால் பசிக்கிறது சாப்பாட்டிற்கு காய்கறிவங்கி கொடுங்கள் என்று குழைந்தைகளும் சில தாய்மார்களும் பிச்சை எடுக்கும் நிலையில் வந்துவிட்டார்கள் இப்படி ஒரு நிலை என்வாழ்வில் எங்குமே பார்க்காதது. அவர்கள் பணத்தை பிச்சை கேட்கவில்லை காய்கறியையும் சாப்பாட்டையும் பிச்சை கேட்கிறார்கள் அவர்களுக்கு கூட தெரிந்துவிட்டது மக்களின் கைகளில் பணம் இல்லை என்று. ஆனால் பல பணக்காரர்கள் கொரோனாவிற்கு பயந்து இரண்டு கார்கள் வாங்குகிறார்கள். ஸ்கூட்டர் விற்பனையும் கூடிவிட்டது. ஆனால் சந்தை மட்டும் இந்த பாழாப்போன 10 கம்பெனிகளின் மதிப்பை மேலே வைத்துக்கொண்டு கீழே இறங்கவைக்காமல் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மேலே என்ற எந்த ஒரு விஷயமும் கீழே வந்து தான் ஆகவேண்டும் இது தான் இயற்கையின் விதி இதை யாராலும் மாற்றமுடியாது எந்த ஒரு விஷயமும் மேலேயே இருந்துவிடமுடியாது பார்க்கலாம் எவ்வளவு தான் முட்டு கொடுக்கிறார்கள் என்று?

  பதிலளிநீக்கு