செவ்வாய், 22 அக்டோபர், 2019

நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund

எம்முடைய தெரிவை விட வாசகர்களின் வேண்டுதலுக்கிணங்க கட்டுரைகள் எழுதும் போது அந்த கட்டுரை மிக பிரபலமாகி விடுகிறது.

அந்த வகையில் நண்பர் ராஜா கேள்விக்கேற்ப  Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

அது அதிக அளவு பார்வையாளர்களை ஈர்த்து இருந்தது.அதன் விளைவு Quoraவில் கேள்வி பதில்களுக்கு கூட தமிழில் பதிலளிக்க ஆரம்பித்தோம்.

நான்கு நாட்களில் நான்காயிரம் பார்வைகளை பெற்று நல்ல ஆதரவு கிடைத்து இருந்தது.

எமது பதில்களை இங்கு பார்க்கலாம். MUTHALEEDU.IN Quora கேள்வி பதில்கள்

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரையில் Comment பகுதியில் நண்பர் சந்துரு அவர்கள் Gilt Fund பற்றி எழுதுமாறு கேட்டு இருந்தார்.

திங்கள், 21 அக்டோபர், 2019

BREXIT - சந்தையின் மிகை நடிப்பு?

பங்குசந்தைகள் மும்பையை மையமாக வைத்து செயல்படுவதால் இன்று மகராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய பங்குசந்தைக்கு விடுமுறை.

நாளை பல விளைவுகளையும் சந்தையில் காண முடியும்.கடந்த வாரத்தின் கடைசி இறுதி இரண்டு நாட்களிலும் BREXIT என்பது சந்தையில் எதிரொலித்தது.

ஐரோப்பியன் யூனியனில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் பிரதமர் ஒரு புதிய டீலை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

அதனால் இந்திய சந்தையும் நேர்மறையாக மேலே சென்றது.

ஒரு வித்தியாசமாக FIIகளிடம் வாங்கும் முயற்சியை பார்க்க முடிந்தது.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா? - Video

PMC வங்கி ஊழல்கள் வந்திருந்த போதே எழுதி  வேண்டிய கட்டுரை.

நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை.அதன் பிறகு Fixed Deposits குறித்து மக்களிடம் ஒரு பதற்றம் வந்த போதே வீடியோ வடிவத்தில் கொடுக்கலாம் என்று கருதினோம் .

தற்போது கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா?  என்ற தலைப்பில் வீடியோ வடிவத்தில் பகிர்கிறோம்.


இதில் PMC வங்கி ஊழல், கூட்டுறவு வங்கியில்  முதலீடு செய்யலாமா?, திவாலானால்  எவ்வளவு கிடைக்கும்? போன்றவை குறித்து உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

அடுத்து ரியல் எஸ்டேட் தேக்கம் ?

இது வரைக்கும் உற்பத்தி மற்றும் தொழில் துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் தான் வங்கிகளுக்கு தண்ணி காட்டி வந்தன.

அதனால் தான் வங்கிகளின் வாராக் கடன் விகிதமும் அதிகரித்து இருந்தது.அரசு இந்த பிரச்சினை எல்லாம் குறைந்து இந்த வருடம் சரியாகி வரும் என்று எதிர்பார்த்து இருந்தது.

ஆனால் பிரச்சினை தற்போது வேறு வடிவத்தில் வந்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் வங்கிகளிடம் கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் பில்டர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா?

நண்பர் ஒருவர் Liquid Funds நிதியில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? என்று கேட்டு இருந்தார்.

அதனை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.தற்போது நம்மிடம் இருக்கும் முதலீடு சூழ்நிலை என்பது வித்தியாசமானது.

இந்தியாவில் இது வரை பார்த்து இராத நிலையாக கூட இருக்கலாம்.

பங்குகளில் முதலீடு செய்தால் கொட்டும் அருவி போல் வீழ்கின்றன.

வங்கிகளில் FDயில் வைத்தால் வட்டி குறைவு. போதா குறைக்கு கூட்டுறவு வங்கிகளே திவாலாகி வருகின்றன.

LIC முதலீடுகள் மீது கூட தற்போது சந்தேகம் வைக்கப்படுகிறது.

புதன், 2 அக்டோபர், 2019

நம்பிக்கை இல்லா சமூகம்

நண்பர்கள் நிறைய பேர் IRCTC ஐபிஒவை வாங்கலாமா? என்று கேட்டு இருந்தார்கள்.

தற்போது நிறைய எழுதுவதற்கு தலைப்புகள் ஏகப்பட்ட வந்து கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு வந்திருப்பதால் சில வேலைகள் காரணமாக அமைதியில் இருந்தோம்.

ஒரே வரியில், IRCTC ஐபிஒவை வாங்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.

இந்தியன் ரயில்வேயின் எதிர்காலமே IRCTCவை நம்பி தான் இருக்கிறது.

அதே போல் நிர்ணயித்த பங்கு விலையும் மலிவானது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

வரிகுறைப்பு, யாருக்கு லாபம்? - Video

கடந்த பதிவில் வரிகுறைப்பும், கொண்டாட்டங்களும் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.அது தொடர்பாக விரிவாக எழுதுமாறு நண்பர்கள் கேட்டு இருந்தார்கள்.

அதனை Video வடிவில் YouTube வழியாக பகிர்கிறோம்.

இதில் வரிகுறைப்பு தொடர்பான சில கணக்கீடுகளும் உள்ளன. அதனால் பங்கின் விலையில் ஏன் இவ்வளவு மாற்றமடைகிறது ?என்பதையும் அறியலாம்.

சில சமயங்களில் விரிவான விளக்கத்திற்கு எழுத்து வடிவத்தை விட Video அதிகம் பயனாக இருக்கும் என்று உணர்கிறோம்.

அதனால் எமது YouTube Channel Subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Video வடிவம் கீழே உள்ளது.திங்கள், 23 செப்டம்பர், 2019

அவதார புருஷர்கள்

கடவுளின் மனித ரூபமே அவதார புருஷர்கள்!

ஆனால் இன்று ஊருக்கு ஊரு, மாநில அளவில், நாடு அளவில் அவதார புருஷர்கள் புகழ் பாடுவது என்பது மிக அதிகமாகி விட்டது.நேற்று பிகில் திரைப்படத்தின் இசை விழாவை சன் டிவியில் பார்க்க முடிந்த்தது.

நொடிக்கு நொடி, விஜயை புகழ்ந்து கொண்டே இருந்தது மிகப் பெரிய சலிப்பை தான் கொடுத்து இருந்தது.

திரைப்படங்களை ப்ரொமோட் செய்வதற்கு கதையை பற்றி சொல்லாமல் விழா முழுவதும் அவர் அப்படி, இப்படி என்று தேவலோகத்தில் இருந்து குதித்தவர் ரேஞ்சிற்கு மேலே கொண்டு வைக்கிறோம்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

வரிக்குறைப்பும், கொண்டாட்டங்களும்

இன்று நமது பங்குச்சந்தை பத்தாண்டுகளில் இல்லாத அளவு குத்தாட்டம் போட்டது.

எல்லாம், நிர்மலா சீதாராமன் அவர்களது ஒரு பேட்டி தான்.கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை 30% அளவு லாபத்தில் வரி கட்டி வந்தார்கள். இனி இது 25% என்ற நிகர அளவில் குறையும்.

அதே போல், புதிதாக துவங்கும் ப்ராஜெக்ட்களுக்கு 15% அளவு வரி கட்டினால் போதுமானது.

அதனைத் தான் இன்று சந்தையின் பங்குகள் கொண்டாடி தீர்த்தன.

என்றாலும், அளவுக்கு மிஞ்சிய கொண்டாட்டம் போலே தெரிகிறது.

புதன், 18 செப்டம்பர், 2019

புலி வரும் கதை

கடந்த சில நாட்களாக சந்தை 11000 மற்றும் 10800 புள்ளிகளுக்கு இடையே தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலைமைக்கு இன்னும் கீழே தான் செல்ல வேண்டும்.ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏதாவது சலுகையுடன் வருவார் என்று சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

அம்மையாரும் இது வரை நான்கு தடவை மீட்டிங் வைத்துள்ளார்கள்.

அதனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்தம்.

அதாவது எல்லாமே நிர்வாக ரீதியான பிரச்சினைக்கான தீர்வுகள். பொருளாதார தேக்கத்திற்கான தீர்வுகள் அல்ல.

என்னிடம் ஒரு நிர்வாக பிரச்சினை இருந்தால் ஊரை கூட்டி தீர்த்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அடக்கமாகவே செய்யலாம்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க..

கடந்த வாரத்தில் IndiaBulls தொடர்பாக வெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல் என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

நீதிமன்றத்தில் IndiaBulls நிறுவனத்தில் நடந்த சில மோசடி பண வர்த்தனைகள் தொடர்பாக தொடரப்பட்ட பொது வழக்கு பற்றி எழுதி இருந்தோம்.கடந்த வெள்ளியன்று டெல்லி நீதிமன்றம் IndiaBulls தொடர்ந்த வழக்கில் கீழ் உள்ளவாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.

"சுப்ரமணிய சுவாமி அவர்களோ அல்லது இணையதளம், ட்விட்டர், பேஸ்புக் வழியாகவோ IndiaBulls நிறுவனத்திற்கு எதிராக எழுத கூடாது.

ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளும் நீக்கப்பட வேண்டும்"

புதன், 11 செப்டம்பர், 2019

OLA, UBER மட்டும் தான் காரணமா? - Video

நேற்று நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை கூறும் போது, ஆட்டோ துறையின் வீழ்ச்சிக்கு OLA, UBER போன்றவை காரணம் என்று கூறி இருந்தார்.

அவர் கூறியது போல் ஒலாவும் ஊபரும் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதுவே முக்கிய காரணமாக இருக்க முடியாது.நாமும் பல வளர்ந்த நாடுகளில் பார்த்து இருக்கிறோம்.

இந்த அளவிற்கு Taxi Aggregators நிறுவனங்களுக்கு எங்கும் வரவேற்பு இருந்ததில்லை.

சாலையில் நிற்க, டாக்ஸிக்கு கை நீட்டினால் மீட்டர் கட்டணத்தில் சொல்லும் இடத்திற்கு சென்று விடுவார்கள். அதனால் OLA, UBER தேவையும் குறைவு தான்.

ஆனால் இங்கு நிலைமை வேறு.

இப்பொழுதும் ஆட்டோவில் செல்லும் போது உங்களது வருமானத்தில் 30%, 40% இழப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று டிரைவர்களிடம் சொல்வதுண்டு.

சனி, 7 செப்டம்பர், 2019

வெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்

பொது மக்கள் பணம் எப்படி தனியார் நிறுவனங்களால் சூறையாடுப்படுகிறது என்பதை இந்த கட்டுரை விளக்கும்.

IndiaBulls நிறுவனம் வங்கி சாராத கடன்களை அளிக்கும் ஒரு நிறுவனம்.நண்பர் ஒருவர் IndiaBulls நிறுவனத்திடம் வீட்டுக் கடன் வாங்குவதற்கு Approval இல்லாததால் எண்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து கடன் வாங்கி இருந்தார்.

அப்பொழுதே நாம் SBIக்கு லோ லோ என்று அலைந்து கடன் வாங்கும் சூழ்நிலையில் IndiaBulls போன்ற நிறுவனங்களுக்கு இந்தக் கடன் எப்படி லாபமாக இருக்கும் என்று நினைத்தது உண்டு.

ILFS, DHFL போன்ற நிறுவனங்கள் கூட இதே முறையில் தான் மக்கள் பணத்தை ஆட்டையை போட்டுள்ளன.

நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

நாளைக்கு என்னவோ?

நாளை வெள்ளிக்கிழமை. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நல்ல நாள்.

நிதி அமைச்சராக பதவி ஏற்ற பிறகும் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகும் இவர் பேட்டி கொடுக்க மாட்டார்களோ என்று பத்திரிகையாளர்கள் அலைந்தனர்.ஆனால் ஒரு சில வாரங்களில் நடந்த மாற்றங்கள் வாரந்தோறும் பிரஸ் மீட் வழியாகவே மினி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக வெள்ளிக் கிழமை தோறும் நான்கு மணிக்கு பேட்டிக்கு வந்து விடுகிறார்.

அந்த செய்தி வரும் சூழ்நிலையில் நிப்டி ஒரு சதவீதமாவது ஏறி விடுகிறது.:)

ட்ரேடிங் செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

எந்த பக்கம் வழி இருக்கிறது?

கடந்த வெள்ளியன்று எழுதியது போல் இன்று சந்தை பெரு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜிடிபி குறைவு, ஆட்டோ விற்பனை வீழ்ச்சி போன்று பல எதிர்மறை விடயங்களை கடந்த வார இறுதி நாட்கள் சேர்த்து வைத்து இருந்தன.ஆனாலும் ET போன்ற சில மீடியாக்கள் Mild Start எதிர்பார்க்கலாம் அல்லது மேலே போகலாம் என்று சொன்னது ஆச்சர்யமே அளித்தது.

இவ்வளவுக்கும் நேற்று சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் நேற்றே ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிந்து இருந்தது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

உறுதிப்படுத்தப்பட்ட வீழ்ச்சி

கடந்த வெள்ளியன்று நிர்மலா சீதாராமன் அவர்கள் கொடுத்த பேட்டி காரணமாக மேலே சென்ற சந்தை இன்று காலை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.


மீண்டும், இன்று வெள்ளி மாலை அடுத்த பேட்டி என்று அறிவிப்பு வந்தது.இதையடுத்து மீண்டும் கடந்த வெள்ளி மாலை நிலையான 11000 நிப்டி புள்ளிகளுக்கும் மேல் சென்றது.

ட்ரேடர்களுக்கு கொண்டாட்டம் தான்.

செய்தி அடிப்படையில் கண்ணா பின்னா என்று மாற்றங்களை காணும் சந்தையில் பணம் பண்ணும் நேரம் அவர்களுக்கு.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சில செயற்கை மாயைகள்

ஒரு மாதத்திற்கு முன்பு பழமை வாய்ந்த HDFC வங்கி முதல் பார்லி பிஸ்கட் நிறுவனங்கள் வரை பொருளாதரத்தில் எதோ நடக்கிறது என்று சொல்லி வந்தன.


திடீர் என்று கடந்த வெள்ளியன்று HDFC வங்கி அப்படி எல்லாம் பொருளாதார தேக்கத்தை பார்க்கவில்லையே என்றது.அதன் தொடர்ச்சியாக பார்லி பிஸ்கட் நாங்கள் 10000 ஆட்களை வேலையை விட்டு தூக்குவதாக சொல்லவில்லையே என்று சொல்லியது.

அதே நாள் முடிவில் சீதாராமன் பிரஸ் கூட்டத்தை வைத்து இருந்தார். இப்படி தொடர்ச்சியாக எல்லாம் திட்ட்மிடுதலாகவே தோன்றியது.

அவர் சொன்னவற்றில் முக்கியம்சம் இது தான்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்

இன்று எமது நெருங்கிய நண்பர் அவர்கள் தாம் முதலீடு செய்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்க முடியாமல் இருக்கும் நிலையை கவனத்திற்கு கொண்டு வந்தார்.


என்னவென்று பார்த்தால், அந்த நிறுவனம் கடந்த வருடமே NCLT மன்றத்திற்கு சென்று திவாலான நிலைக்கு சென்று விட்டது.தற்போது ட்ரேடிங்கும் நிறுத்தப்பட்டது.

நிறுவனத்திடம் இருக்கும் சொத்தை கடனில் கழித்து பார்த்தால் எதிர்மறையிலே செல்கிறது.

அதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் மதிப்பில்லாதவை என்றே கருத வேண்டியுள்ளது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

அரசு நிதி உதவியை மட்டும் நம்பும் சந்தை

எமது கடந்த சில பதிவுகள் தமிழ் முதலீட்டாளர்களுக்கு சந்தை மேலே வரும் போது வெளியே வருவதற்கு உதவி இருக்கும் என்று நம்புகிறோம்.


அடுத்த கட்டம் என்னவென்று பார்த்தால், எல்லோர் முகத்திலும் குழப்பம் தான்...தற்போதைய நிலையில் சந்தை ஒன்றை மட்டுமே நம்பியுள்ளது. மற்ற எல்லாமே கவலை தரும் விடயங்கள் தான்.

அந்த நம்பிக்கை, பொருளாதார தேக்கம் நீங்க அரசு என்ன செய்யும்? என்பது தான்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஏற,ஏற அடி வாங்கும் சந்தை

எமது கடந்த பதிவில் திசை மாற்றும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் காஷ்மீர் தொடர்பாக எழுதி இருந்தோம்.


இதற்கு ஆதரவும், எதிர்த்தும் சரி சம விகிதத்தில் இருந்தன.ஒரு சிறு தன்னிலை விளக்கம்.

இந்த தளம் அரசியல் தளமல்ல. நாமும் எந்த கட்சியை சார்தவருமல்ல. பொருளாதார, முதலீடுகள் தொடர்பான தகவல்களை தருவது தான் எமது நோக்கம்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

திசை மாறும் பிரச்சினைகள்

இந்தியாவின் தற்போதைய நிலையில் உண்மை பிரச்சினை என்பதே வேறு.


பிஜேபி அரசு அதனை வேறு கோணத்தில் எடுத்து செல்ல ஆரம்பித்து உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் சிக்கன நடவடிக்கையாக பொது விமானத்தில் பயணித்து தான் அமெரிக்கா சென்று உள்ளார்.

அந்த அளவிற்கு பாகிஸ்தானில் நிதி நெருக்கடி.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் மோதுவது என்பது அடி பட்ட பாம்பை அடிப்பது போல் தான்.

செவ்வாய், 30 ஜூலை, 2019

பொருளாதார மந்த நிலையை நோக்கி இந்தியா?

எமது கடந்த சில பதிவுகளை பார்க்கும் போது ஒரு வித எதிர்மறை நிலைத்தன்மையை கண்டு இருக்கலாம்.


ஒரு விதமாக இலை மறை காயாக சந்தையின் தன்மையை உணர்த்த பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறோம்.கடந்த ஒரு மாத காலமாக பார்த்தால் சந்தையில் ஒரு வித நிசப்தத்தை பார்க்க முடிகிறது.

அரசிடம் இருந்து எந்த வித கவர்ச்சி அறிவிப்புகளும் காணோம்.

பட்ஜெட்டும் ஒரு உப்பு சப்பில்லாத பட்ஜெட் என்பதோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட புதிய வரிகளையும் கொண்டிருந்தது.

புதன், 17 ஜூலை, 2019

YES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது?

இன்று பங்குச்சந்தை முடிவிற்கு பின்னர் YES Bank நிறுவன நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


இன்றைய முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்டதாக அமைந்தது.ஏனென்றால் இதற்கு முன்னர் சிஇஒவாக இருந்த ரானா கபூர் பண்ணிய தகிடுத்தன வேலைகள் ஏராளம்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வித போலி நிதி அறிக்கையே வெளிவந்தது போல.

ஒரு பக்கம் வங்கி வருடத்திற்கு 40% அளவு வளர்ச்சி அடைந்து வந்தது.

புதன், 10 ஜூலை, 2019

வலுவில்லாமல் சரியும் சந்தை, என்ன செய்வது?

நண்பர்கள் பலர் முன்பு போல் எமது பங்கு பரிந்துரை போர்ட்போலியோ சேவை ஏன் கொடுப்பதில்லை? என்று கேட்டு இருந்தனர்.


கடந்த ஒன்பது மாதாங்களுக்கு மேலாக முற்றிலும் நிறுத்தி வைத்து இருந்தோம்.காரணம் இது தான்.

இந்திய சந்தை ஒரு அடிப்படை இல்லாத சந்தையாக மாறி வருவது போல் ஒரு சந்தேகம் இருந்து வந்தது.

எமது பங்குச்சந்தை அனுபவத்தில் இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலானதை கண்டதில்லை.

வெள்ளி, 5 ஜூலை, 2019

இந்த பட்ஜெட்டிற்கு காவல் எதுக்கு?

என்ன தான் அரசியல் கவர்ச்சிகள் உருவாக்கப்பட்டாலும், மக்களின் வாங்கும் வசதி கூடவில்லை. நிருவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. வேலை வாய்ப்புகளும் இல்லை.


இதனால் தான் மோடியின் பெரிய வெற்றியை கூட சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தை அதிகம் எதிர்பார்த்து இருந்தது நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் தான்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ப்யூஸ் கோயல் ஒரு தேர்தல் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டதால் நிர்மலா அவர்களுக்கு பெரிதளவு வேலை இல்லாமல் பொய் விட்டது.

சந்தை எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

சனி, 29 ஜூன், 2019

FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?

FundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.


சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.இது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.

நாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.

தற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.

செவ்வாய், 25 ஜூன், 2019

IndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா?

நேற்று ஜூன் 24 முதல் IndiaMart நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளையுடன் முடிவடைகிறது.


அதனை வாங்கலாமா? என்பது பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.ப்ளிப்கார்ட், அமேசான் போல் இணைய வழியாக பொருட்கள் விற்கும் நிறுவனம் தான் IndiaMart.

ஆனால் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோர்களை விற்பவர்களுடன் இணைக்கிறது.

IndiaMart நிறுவனமானது மொத்த விற்பனையாளர்களுடன் சில்லறை விற்பனையாளர்களை இணைக்கிறது.

செவ்வாய், 18 ஜூன், 2019

கார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்?

தற்போதைய சந்தையின் சரிவிற்கு மிக முக்கிய காரணமாக சுட்டிக் காண்பிப்பது பொருளாதார தேக்கம்.


அதிலும் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களில் பத்து வருடங்களில் இல்லாத அளவு ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தேக்கம் என்று சொல்வதை விட, வாடிக்கையாளர்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு தற்போது சிட்டியில் கார் வாங்கும் ஒருவர் யோசிப்பது.

ட்ராபிக்கில் எப்படி வண்டி ஓட்டுவது? அப்படியே புதிய இடத்திற்கு சென்றாலும் எங்கு வண்டியை பார்க் செய்வது? என்பது தான்.

திங்கள், 17 ஜூன், 2019

முன்சுவடுகள் - புத்தக விமர்சனம்

பொதுவாக எமது சொந்த ஊர் கன்னியாகுமரியில் பேசுவது தமிழா, மலையாளமா? என்று தெரியாது.


நாம் கொரியாவிற்கு புதிதாக சென்ற போது எமது பேச்சு நண்பர்களால் கேலிப்பேச்சானதும் நினைவிற்கு வருகிறது. வெங்காயத்தை உள்ளி என்று சொல்வதை இன்னும் எம்மால் மறக்க முடியவில்லை.
ஆனால் அங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமே இருக்காது.

சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், க்ரூஸ் என்று பிரபல எழுத்தாளர்கள் அதிகம். அதில் இருவர் சாகித்ய அகாடமி விருது கூட வாங்கி இருக்கிறார்கள்.

கேரளாவுடன் இருந்ததால் என்னவோ, கலையுணர்வும் அது தொடர்பான தர்க்கங்களும் அதிகமாவே இருக்கும்.

தர்க்கம் என்றால் எத்தகைய எல்லைக்கும் செல்லும் என்பதற்கு நேற்று முன்தினம் ஜெயமோகன் புளித்த இட்லி மாவிற்காக வாங்கிய அடியே உதாரணம்.

வெள்ளி, 14 ஜூன், 2019

ஆடிட்டர்களின் நம்பிக்கையிழப்பு, ஏஜென்சிகளின் போலி ரேட்டிங்

கடந்த சில நாட்களாக YES BANK பங்கு அருவி நீர் போல் கீழே விழுந்து கொண்டு இருக்கிறது.


DHFL கடன் பத்திரங்களுக்கு வட்டி கூட கொடுக்க முடியவில்லை.

ILFS 90,000 கோடி அளவிற்கு கடன்.
ஆனால் இவை எல்லாவற்றிகும் பொதுவான ஒன்றாக பார்த்தால்,

ஒரு வருடம் முன்பு வரை ஏஜென்சிகளின் ரொம்ப பாதுகாப்பான நிறுவனம் என்று தரம் கொடுத்து இருந்தார்கள்.

ஆடீட்டர்கள் உத்தம புத்திரன் என்று வருட சான்றிதழ் கூட கொடுத்து இருந்தார்கள்.

ஆனால் இன்று எல்லாவற்றிலும் வீழ்ச்சி, இன்னும் எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை.

வெள்ளி, 7 ஜூன், 2019

எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறும் ஓலா, உபர்...முதலீட்டிற்கு சில பங்குகள்

சில சமயங்களில் செய்திகளின் தாக்கங்களை முன்பே யூகித்து கொண்டால் பங்கு முதலீட்டில் லாபம் அதிகம் பெற முடியும்.


அப்படியான செய்தி ஒன்றை பகிர்கிறோம்.அரசு ஒரு புதிய விதி முறையை கொண்டு வருவதாக சில யூகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதன்படி, வரும் 2026ம் ஆண்டிற்குள் ஓலா, உபர் போன்ற கால் டேக்ஸி நிறுவனங்கள் தங்களிடம் ஓடும் 40%க்கும் மேற்பட்ட வாகனங்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டுமாம்.

இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்றவற்றால் அதிக அளவில் அந்நிய செலாவணியை இழந்து வருகிறது.

இது போக, பாரிஸ் பருவமழை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதனால் புகையும் அதிக அளவு கட்டுக்கு கொண்டு வரக் கூடிய நிலைமையும் உள்ளது.

புதன், 5 ஜூன், 2019

DHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்

ம்யூச்சல் பண்ட்கள் பல வகைப்படும்.

பெரும்பாலும், பங்குசந்தையில் தான் ம்யூச்சல் பண்ட்கள் முதலீடு செய்யப்படும்.


ஆனால் சில பண்ட்கள் பாதுகாப்பு என்ற போர்வைக்காக கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இவை Debt ம்யூச்சல் பண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த பண்ட்களில் முதலீடு செய்யப்படும் நிதி அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த கடன் செய்யப்படும் முதலீட்டிற்கு ஒரு நிலையான வட்டி வழங்கப்படும்.

கிரெடிட் ஏஜென்சிகள் கொடுக்கும் தரத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களும் மாறுபடும்.

திங்கள், 3 ஜூன், 2019

ஆட்டோ துறையை மீட்கும் ரட்சகர் யார்?

கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்த போது இந்திய பங்குசந்தையை பார்த்தால் மிக குறுகிய காலத்தில் 30% வரை உயர்ந்து சென்றது.


ஆனால் இந்த முறை ஒரு சந்தேகக் கண்ணோடு இருப்பதால் புதிய உச்சத்தை தொடுவதற்கு நிறைய தடுமாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமாக பார்த்தால்,

ஒரு பக்கம், கிராமப்புறங்களில் பணப்புழக்கம் என்பது மிகக் குறைந்து விட்டது.

அதனால் சோப்பு முதல் ஷாம்பூ வரை விற்பனை எண்ணிக்கை குறைந்து விட்டது.

வியாழன், 23 மே, 2019

வலுவான எதிரி இல்லாத இந்திய அரசியல் களம்

இன்று இந்திய பொது தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன.


காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ள 95 தொகுதிகளில் 60 தொகுதிகள் தமிழ்நாடு, கேரளாவிற்குள்ளே வந்து விடுகின்றன.அப்படி என்றால், மற்ற இந்திய பகுதிகளில் தோல்வியிலும் மட்டமான தோல்வி என்று சொல்லலாம்.

இவ்வாறு காங்கிரஸ் வலுவில்லாத வரை பபிஜேபியின் வெற்றியும் தவிர்க்க முடியாத ஒன்றே.

பிஜேபி கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் வெற்றி. தனித்தே ஆட்சி அமைக்கும் சூழ்நிலை கூட...

இதைத் தான் பங்குசந்தையும் எதிர்பார்த்தது.

செவ்வாய், 21 மே, 2019

Exit Poll முடிவுகளை நம்ப மறுக்கும் சந்தை

கடந்த பதிவில் Exit Poll முடிவுகள் உண்மையாகுமா? என்பது பற்றி எழுதி இருந்தோம்.


அதன் படியே இன்றைய சந்தை 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இருக்குமா?' என்று கமல்ஹாசன் பாணியில் குழம்பி நிற்கிறது.தந்தி டிவியின் எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் 12,000 நபர்களிடம் தரவுகளை பெற்றோம் என்று சொல்லி இருந்தார்கள்.

அப்படி என்றால், நாற்பது தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 300 என்ற வீதத்தில் எடுக்கப்பட்டு இருந்தது.

ஒரு தொகுதியில் சராசரியாக பத்து லட்சம் வாக்குகள் இருக்கும் பட்சத்தில் 300 என்பது மிக குறைவே.

சனி, 18 மே, 2019

நாளை Exit Poll முடிவுகள், உண்மையாகுமா?

நாளையுடன் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.


தேர்தல் ஆணைய விதிப்படி தேர்தல் நடக்கும் போது கருத்து கணிப்புகளை சொல்லக்கூடாது என்பதால் நாளை மாலை பல டிவிக்கள் Exit Poll கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன.இதில் ஒன்றை பார்த்தால்,

கருத்துக் கணிப்புகளை  பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பது தான் விதி முறை.

கருத்துக் கணிப்புகள் நடத்தும் நிறுவனங்களிடம் நாளை நடக்கும் 60 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான கணிப்புகள் தற்போது கூட கையில் இருக்கத் தான் செய்கிறது.

வெள்ளி, 17 மே, 2019

நுகர்வோர் துறையில் பெரிய அளவில் நுழையும் டாடா

இந்தியாவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு குழுமம் டாடா.


டாடா சன்ஸ் என்ற பெயரில் நூறுக்கும் மேலளவு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது.இந்த நிறுவனங்களில் இருந்து டிவிடென்ட் மூலம் கிடைக்கும் வருமானம் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

ஆனால் முதன்மையான வருமானம் என்று பார்த்தால் TCS மூலமாகத் தான் வருகிறது. கிட்டத்தட்ட 70% அதிலிருந்து தான் வருகிறது.

டாட்டாவின் ஆரம்ப கால நிலையில் பார்த்தால் ஸ்டீல், ஆட்டோ, நுகர்வோர் சந்தை போன்ற்றில் இருந்து கணிசமான வருமானம் கிடைத்து வந்தது.

புதன், 15 மே, 2019

கம்பெனி மீதான காதலும், தடுமாற்ற முடிவுகளும் ...

பெங்களூரில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்கிய ஒருவரிடம் அண்மையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.


IIMல் முடித்த அவர் 12 நிறுவனங்களை  உருவாக்கி, அதில் ஏழு நிறுவனங்களை நஷ்டத்தில் விட்டு ஐந்து நிறுவனங்களில் வெற்றி பெற்றவர்.

அவர் சொன்ன முக்கிய வரிகள்...Don't love your company.

இது நிறுவனத்தை நடத்துபவராக இருக்கட்டும் அல்லது முதலீடு செய்தவராக இருந்தாலும் நிதர்சனம் என்பதை அதிகம் யோசிக்க வேண்டும்.

தேவையான நேரத்தில் விட்டு விட்டு அல்லது விற்று விட்டு வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும்.

அது Jet Airways நிறுவனத்தின் தற்போதைய நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

செவ்வாய், 14 மே, 2019

அடுத்து யார்? தடுமாற்றத்தில் சந்தை...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.

அதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருந்த நேரத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தால் ஏனோ தானோ என்று தான் இருக்கும்.


அதனால் தான் அமைதியாக இருந்து விட்டோம். மன்னிக்க!

இந்த வருட தொடக்கம் முதல் எதிர்மறையாகவே சந்தை இருந்து வந்தது.

மோடி வர மாட்டார். கஷ்டம். வர்த்தக போர் என்று எக்க சக்க எதிர்மறை காரணங்கள்.

திடீர் என்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கூடவே வந்தன. மோடி வந்து விடுவார் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டினர்.