நேற்றைய பதிவில் கர்நாடகா தேர்தல் முடிவுகளில் என்ன செய்வது? என்று எழுதி இருந்தோம்.
அதில் சொன்னவாறு கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ இல்லையோ பிஜேபிக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பது தான் சந்தைக்கு வேண்டிய விடை.
அது கிடைத்து விட்டது.
பிஜேபி நூறு இடங்களுக்கு மேல் பெற்று விட்டது.
இடையில் பிஜேபி 120 இடங்களுக்கு மேல் சென்ற போது சந்தையும் மேல் நூறு நிப்டி புள்ளிகளுக்கு மேல் உயர்வைக் காட்டியது.
இறுதியில் 104 இடங்களில் நின்ற போது சந்தையும் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ப்ளாட்டாக முடிந்து விட்டது.
நிதர்சனத்தில் பொதுவில் பழகி பார்க்கும் போது மோடிக்கு எதிராக அலை இருப்பதை பார்க்க முடிந்தது.
ஆனால் அது தமிழ்நாடு, கேரளா, வங்காளம் என்று சில மாநிலங்களில் மட்டும் தான் என்பதை கர்நாடகா தேர்தல் உணர்த்தி விட்டது.
அதனால் சந்தையில் அடுத்த லோக்சபா தேர்தலில் மோடி ஜெயிப்பார் என்ற நம்பிக்கை மிகுந்த அளவில் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.
மோடி பெரும்பான்மை பெறுவாரோ இல்லையா என்பது தெரியாது. ஆனால் லோக்சபா தேர்தலில் 200 இடங்களைத் தாண்டி விடுவார் என்று உறுதியாக சொல்லலாம்.
அதன் பிறகு இருக்கிற கூட்டணி கட்சிகளை வைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பது கூட கடினமல்ல.
அரசியல் குழப்பத்தில் இருந்து சந்தை விடை பெற்ற சூழ்நிலையில் இன்னும் கச்சா எண்ணெய் விலை தான் சந்தையை படுத்திக் கொண்டு இருக்கிறது.
இனி 80$ அளவுக்கு சென்றால் சந்தையில் ஒரு திருத்தத்தை எதிர்பார்க்கலாம்.
நீண்ட கால நோக்கில் இந்த விலை உயர்வு நிற்காது என்று சொன்னாலும், குருகிய காலத்தில் ட்ரம்ப் செய்த இரான் தடை போன்ற அடாவடிகளால் மேல் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதே போல், இது வரை வந்த இந்த காலாண்டு முடிவுகள் ஒன்றும் பெரிய அளவு இனிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதிலும் பொது துறை வங்கிகள் கொடுக்கும் முடிவுகள் படு மோசமாக உள்ளது.
நுகர்வோர் நிறுவன முடிவுகள் மட்டும் தப்பி உள்ளது.
இன்னும் கட்டுமான நிறுவனங்கள், ஆட்டோ நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், மிட் கேப் நிறுவனங்கள் போன்றவை முடிவுகளை தெரிவிக்கவில்லை.
அவற்றில் நல்ல மாற்றங்கள் இருப்பின் சந்தையிலும் உயர்வுகளை பார்க்கலாம்.
அது வரை மந்தமான சந்தையில் பொறுமையாக பங்குகளை தேடுங்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக