ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அரசாங்கம் என்னும் அட்டை பூச்சி

நீண்ட ஒரு நெடிய மௌனத்திற்கு பிறகு ஒரு பதிவு.

இந்த முறை தனிப்பட்ட விடயங்கள் பெரிய அளவு இல்லை.




ஆனால் இந்திய பொருளாதாரம் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை என்றே சொல்ல முடியும்.

எந்த ஒரு குறிப்பிட்ட காரணியில் இருந்து கூட நல்ல செய்தி கிடைக்காத சூழ்நிலையில் சந்தை ஏறி ஏமாற்று வித்தையைக் காட்டிக் கொண்டு இருந்தது.


குமிழ் வெடிக்கும் முன் பெரிதாக ஊதும். அது தான் சந்தையில் நடந்து  இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.

இதனை நிர்மலா மேடம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு சந்தை புரிந்து கொண்டு இருக்கலாம்.

இந்த பட்ஜெட்டில் பெரிதாக ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் கீழே கமெண்ட் செய்யுங்கள்.

3.5% அளவிற்கு நிதி பற்றாக்குறை என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவும்
சாத்தியமா என்று தெரியவில்லை. நான்கு சதவீதத்திற்கும் மேல் செல்ல வாய்ப்புள்ளது.

இது தவிர அம்மையார் தனிப்பட்ட நபர்களுக்கு  வரி குறைப்பு அளித்ததாக செய்திகள் வந்த போது நன்றாக இருந்தது. ஆனால் கடைசியில் அப்படி வரி குறைப்பு வேண்டும் என்றால் வரி விலக்குகள் எதுவும் கிடையாது என்ற ஒரு ஆப்பை சொருகிய போது போதுமடா சாமி என்ற நிலைக்கே சென்று விட்டோம்.

வரி விகிதங்களை எளிமை படுத்துவது நன்று தான். ஆனால் எளிமைப்படுத்தும் போது முந்தைய வரிகளில் இருந்து கொஞ்சமாவது பலன் இருக்க  வேண்டும். இங்கு ஒன்றுமே இல்லை.

ஆறு மாதத்திற்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரியை குறைத்து ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டது. அதில் பத்து பைசா கூட இன்னும் பொருளாதாரத்திற்கு  நன்மை ஏற்படவில்லை.ஆனால் தனி நபர்களுக்கு அட்டை பூச்சி உறிஞ்சுவது போல் வரியை வசூலிப்பது மிகவும் கவலையான விடயம் தான்.

தற்போதைய நிலையில் புது தலைமுறை தான் வீடு அல்லது இன்சூரன்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.அதற்கு வரி விலக்கு என்ற ஒன்று இல்லாத சூழ்நிலையில் தொய்வில் இருக்கும் இந்த துறைகள் மேலே எழ எந்த வாய்ப்பும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே நேர்மறை சிந்தனைகளுடன் முதலீட்டு நோக்கங்களை தருவது தான். ஆனால் இப்படி கழுவி கழுவி ஊற்றி கொண்டே இருந்தால் எதிர்மறை சிந்தனைகள் தான் வரும்.

அதனால்  இனி முதலீடு கட்டுரைகளை பங்குச்சந்தை என்பதையும் தாண்டி பயனுள்ள கட்டுரைகள் எழுத முயலுகிறோம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

  1. அருமை... உங்களது பதிவுகள் நீண்ட நாட்களாக வராதது வருத்தமளிக்கிறது.தயவுசெய்து மீண்டும் தங்கள் ஆலோசனைகளை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உண்மையை சொல்வதில் தயக்கம் வேண்டாம்.

    தற்போதிய நிலையில் LIC பாலிசிகளை தொடரலாமா?

    பதிலளிநீக்கு
  3. பங்குச் சந்தையில் LIC:குழப்பம் வேண்டாம்.

    LIC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு, பங்குச் சந்தையில் LIC நிறுவனம் பட்டியலிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

    குழம்ப வேண்டாம்.

    STATE BANK OF INDIA, ONGC, INDIAN BANK, BHEL, SAIL&GAIL போன்ற அரசு நிறுவனங்கள் மாதிரி LIC யும் பங்கு வெளியிடுகிறது.

    நீங்களும் (பொதுமக்களும் ), ஒரு முதலீட்டாளராக LIC யில் பங்குகள் வாங்கி பயன் பெறலாம்.

    நிர்வாகம் LIC யின் வசமே இருக்கும்.லாபத்தில் பங்குதாரருக்கு ஈவுத்தொகை கிடைக்கும்.

    தற்போது எல்.ஐ.சி யின் லாபம், பாலிசிதாரர்களுக்கு 95 சதவீதமும், 5 கோடி முதலீடு செய்த மத்திய அரசுக்கு 5 சதவீதமும் பிரித்து தரப்படுகிறது.

    இன்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி மத்திய அரசு தனது 5% பங்கை விற்கப் போவதாக நிதி அமைச்சர் தனது உரையில் சொல்லி உள்ளார்.

    ஆகையால், பாலிசிதாரர்களோ, முகவர்களோ இதனால் பயப்படத் தேவையில்லை.

    எல்.ஐ.சி யின் லாபத்தில் வழக்கம் போல் 95% பாலிசிதாரர்களின் காப்புத்தொகைக்கு தகுந்தபடி போனசாக வழங்கப்படும்.

    மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய 5% லாபப்பங்கில் ஒருப் பகுதி தனியாருக்கு வழங்கப்படும்.

    பதிலளிநீக்கு