செவ்வாய், 11 ஜூன், 2024

மீண்டும் முதலீடு தளத்தில்..

சில தனிப்பட்ட மற்றும் அலுவலக வேலை பளு காரணமாக முதலீடு தளத்தில்  எழுத முடியாமல் போனது. வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலீடு தளத்தில் எழுதுகிறோம். 

இது ஒரு நீண்ட இடைவெளி. ஆனாலும் தொடர்பில் இருந்து விசாரித்த நண்பர்களுக்கு நன்றி!


பொதுவாக Muthaleedu.IN தளத்தில் Stock Fundamentals என்பதை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதி வந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் Stock Technical என்பதிலும் அதிக அளவு அனுபவம் கிடைத்தது. அதையும் கலந்து இனி வரும் கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறோம்.

இடைப்பட்ட காலத்தில் நிறைய நிகழ்வுகள் நடந்து விட்டன. கொரோனாவில் பங்குகள் வீழ்ந்து மேலும் ஏற்றம் கண்டன. 

அடுத்து தேர்தல்.


Exit Poll என்ற ஒன்றை வெளியிட்டு நமது மீடியாக்கள் குழப்பி விட, கடந்த திங்களில் சந்தை உயர்ந்தது.  அடுத்து தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வர சந்தை 5%க்கும் மேல் சரிந்தது. அதன் பிறகு மீண்டும் சந்தை ஏறிக் கொண்டிருக்கிறது.

பொதுவான ஒன்றை கவனித்தால் கொரோனா காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை சந்தையின் அடிப்படைகள் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை என்பதை கவனிக்கலாம். 

வட்டி விகிதங்கள் அதிகமாகி விட்டது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. GDP வளர்ச்சி என்பது கொரோனா காலக்கட்டத்தின் Base Effect என்பதில் இருந்து தான் அதிகமாக காட்டப்படுகிறது. உண்மையான வளர்ச்சி என்பதை கொரோனா முந்தைய காலக்கட்டத்தில் இருந்து பார்த்தால் பெரிதளவு இல்லை.

ஆனாலும் சந்தை உயர்ந்து கொண்டே செல்கிறது.

கடந்த டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பிஜேபி வென்ற பிறகு நிலையான அரசு அமைந்து விடும் என்ற நம்பிக்கையில் சந்தை உயர்ந்தது. ஆனால் தற்போது மைனாரிட்டி அரசு அமைந்து இருக்கும் சூழ்நிலையிலும் சந்தை உயர்கிறது. 

ஒரு பக்கம் வெளிநாட்டு FDI முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று விடுகிறார்கள். மறு பக்கம் Retail Investors தொடர்ந்து வாங்கி வருகிறார்கள். 'mutual fund sahi hai' என்ற முழக்கம் மூலம் அதிக அளவில் சிறு முதலீட்டாளர்கள் பணம் உள்ளே வர DIIகளும் வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

இங்கு பார்த்தால் அடிப்படைகள் என்பதை தாண்டி Demand-Supply என்பது தான் அதிகமாக இருக்கிறது. அதிகமான காசு புழக்கத்தில் இருக்கிறது. அதை எங்கு கொண்டு வைக்க என்ற பணம் தான் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது . அதனால் இந்திய சந்தை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும். 

கீழே உள்ளது Nifty Technical Chart. அதில் ஒன்றை கவனித்தால் 20,500 புள்ளிகளுக்கு அருகே ஒரு இடைவெளி(Gap) உருவாகி உள்ளது. Technical என்பதில் உள்ள Gap Theory அடிப்படையில் பார்த்தால் இடைவெளி என்பது நிரப்பப்பட வேண்டும். அதாவது புள்ளிகள் அதே அளவிற்கு கீழே வந்து மீண்டும் மேலே எழும். ஆனால் இங்கு நிரப்பபடாமல் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க.

அதனால் 20,500 புள்ளிகள் கீழே வரும் வரை காத்திருந்து முதலீடுகளை தொடர்வது நல்லது. அது வரை பாதுகாப்பான துறைகள் சார்ந்த பங்குகளை வைத்து விட்டு மற்ற பங்குகளை தவிர்த்தல் தற்போதைக்கு நலம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் நண்பர்கள் தங்களது கருத்துக்கள் அல்லது எதிர்பார்ப்புகளை muthaleedu@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்கவும். பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம்!« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக