இந்த தளத்தில் இது வரை Fundamental Analysis என்பதனை அடிப்படையாக வைத்து முதலீடுகளை எவ்வாறு செய்வது? என்பது பற்றி எழுதி இருக்கிறோம்.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற தொடராக Muthaleedu.IN தளத்தில் வந்த கட்டுரைகளை கவனிக்க.
பங்குச்சந்தை ஆரம்பம் - முதலீடு தள தொடர்
Fundamentals அடிப்படையில் பார்த்தால் P/E, P/B, Debt Ratio என்று பல விகிதங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க உதவுகிறது.
ஆனால் பெரும்பாலும் சந்தையில் Forward Earning Ratio என்பது தான் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம். அதாவது இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து பங்கு சரியான விலையில் இருக்குமா? என்பதை அடிப்படையாக வைத்து முதலீடுகள் செய்யப்படுகின்றன. .
அதாவது அடுத்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து தோராயமாக Price-To-Earning, Price-To-Book போன்றவை கணக்கிடப்படுகின்றன.
இதில் நிறுவனத்தின் Guidance, சில Inside நிகழ்வுகள் போன்றவை அதிக பங்கு வகிக்கின்றன.
சிறு முதலீட்டாளர்களாகிய நமக்கு இந்த தரவுகள் அவ்வளவு எளிதில் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் என்ன செய்வது? இந்த பங்குகளை அடையாளம் காணுவது எப்படி?
அதற்கு நாம் Smart Investors என்று சொல்லப்படும் பெரிய முதலீட்டாளர்களை தொடர்வது நல்ல பலனளிக்கும்.
இங்கு Technical Analysis என்பது உதவி செய்கிறது. கிட்டத்தட்ட Reverse Engineering என்றும் சொல்லலாம்.
உதாரணத்திற்கு ஒரு பங்கு இன்று மிக அதிக அளவில் உயர்கிறது. அப்பொழுது பங்கின் Trading Volume என்பதை கவனிக்க. அது கடந்த சில நாட்களின் சராசரியை விட இரண்டு, மூன்று மடங்குகள் அதிகமாக இருந்தால் ஏதோ பெரிய முதலீட்டாளர் உள்ளே வந்திருக்கிறார் என்று அர்த்தமாகிறது.
அடுத்த நாளும் அந்த பங்கினை கவனிக்க. மேலும் உயர்ந்தாலோ அல்லது பெரிய அளவில் சரியாமல் இருந்தால் பங்கினை விற்பவர்களை விட வாங்குபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கருதலாம். அதாவது ட்ரேடிங் செய்பவர்களை விட முதலீடு செய்பவர்கள் உள்ளே வருகிறார்கள். இது பங்கிற்கு அதிக அளவு டிமாண்ட் இருப்பதை காட்டுகிறது. முதலீடு செய்வதற்கும் ஏற்றது.
அதே நேரத்தில் அடுத்த நாள் பங்கு அதிக அளவில் சரிந்தால் ட்ரேடிங் செய்பவர்கள் விற்று விட்டு வெளியே செல்லுகிறார்கள் என்று கருதலாம். அதே போல் எப்படா இந்த பங்கினை விட்டு வெளியே செல்லலாம் என்று முதலீடு செய்தவர்களும் வெளியேறுவார்கள். அந்த நிலையில் அந்த பங்கினை தவிர்ப்பது நல்லது.
அதே நாளில் அல்லது இரண்டு நாட்களில் செய்திகளை தேடினால் சில நேர்மறை செய்திகளை கூட காண முடியலாம்.
இனி முன்பு சொன்னவாறு Fundamental Analysis அடிப்படையாக வைத்து நிறுவனம் நல்ல நிறுவனமா? P/E, P/B மதிப்புகள் மூலம் பங்கின் விலை மலிவாக உள்ளதா? Debt Ratio மூலம் நிதி நிலைமை சரியாக உள்ளதாக போன்றவற்றையும் ஆய்வு செய்க..இவ்வாறு இரண்டு நிலைகளில் பங்கினை அடையாளம் கண்டு விடலாம்.
ஆனால் இப்பொழுது, எந்த விலையில் பங்கில் Entry, Exit செய்யலாம் என்ற வினா வரும். அதற்கும் technical analysis என்பதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..தொடர்க..
தொடர்பான பதிவுகள்:
P/E விகிதத்தால் பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)
புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? (ப.ஆ - 15)
பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - (ப.ஆ - 20)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக