ரூபாய் ஒழிப்பு நடவடிககைகளால் நொந்து போய் இருக்கும் ரியல் எஸ்டேட் துறை ஆறுதலுக்க்காக பிரதம மந்திரி மோடி அவர்கள் இந்த வருட புத்தாண்டு நிகழ்வாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் அரசு மானியம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் Pradhan Mantri Awas Yojana 2017 (PMAY).
இந்த திட்டமானது குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்கும் மக்களுக்கு அதிக பலனைத் தரவல்லது.
அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தான். இதில் மூன்று லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், ஆறு லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்.
இந்த திட்டம் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தீட்டப்பற்ற திட்டம். அதனால் தங்களுக்கோ, அல்லது உடனடியான குடும்ப உறவுகளான மனைவி, மணமாகாத மக்கள் பெயரிலோ எந்த வித வீடும் வைத்து இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30 சதுர மீட்டர் வரையம் . குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 60 சதுர மீட்டர் வரை வீடு கட்டிக்க கொள்ளலாம். அதாவது 320 முதல் 700 சதுர அடி அளவு.
மூன்று பிரிவுகளில் இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் சில கணக்கீடுகளை கீழே உள்ள படத்தை பார்க்க..
இந்த திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 15 வருடங்கள் கடன் காலம் இருப்பது அவசியமானது.
மேலும் விவரங்களுக்கு http://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற பின் கிடைக்கும் குறியீட்டு எண்ணை வைத்து SBI, HDFC, ICICI போன்ற வங்கிகளிலோ அல்லது கூட்டுறவு வங்கி, எல்ஐசி போன்றவற்றிலும் கடனை பெற்றுக் கொள்ளலாம்.
குறைந்த பட்ஜெட் வீடு கனவுகளுடன் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு.

- 6 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கு எப்பொழுதும் 6.5% வட்டியில் கடன் அளிக்கப்படும். அதாவது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கூட்டினாலும் வட்டி 6.5%தான் இருக்கும்.
- அடுத்து, 9 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கு அந்த கால கட்டத்தில் இருக்கும் வட்டியில் 4% மானியமாக வழங்கப்படும். அதாவது வட்டி 9% என்று இருந்தால் மானியம் போக, 5% தான் வட்டி வரும்.
- அடுத்து, 12 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கு அந்த நேரத்தில் இருக்கும் வட்டியில் 3% மானியமாக வழங்கப்படும். அதாவது வட்டி 9% என்று இருந்தால் மானியம் போக, 6% தான் வட்டி வரும்.
- இதே போல் வீடு புதுப்பிப்பதற்கும் இரண்டு லட்சம் வரை கடன் வாங்கி கொள்ளலாம். இவர்களுக்கும் 3% மானியமாக வழங்கப்படும். அதாவது வட்டி 9% என்று இருந்தால் மானியம் போக, 6% தான் வட்டி வரும்.
மேலும் சில கணக்கீடுகளை கீழே உள்ள படத்தை பார்க்க..
Total Loan Amount (in Rs.) | 1,500,000.00 |
Rate of Interest | 9.00 |
Total Loan Period (in Months) | 180 |
Number of EMIs | 180 |
Subsidy Amount | 220,187.05 |
இந்த திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 15 வருடங்கள் கடன் காலம் இருப்பது அவசியமானது.
மேலும் விவரங்களுக்கு http://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற பின் கிடைக்கும் குறியீட்டு எண்ணை வைத்து SBI, HDFC, ICICI போன்ற வங்கிகளிலோ அல்லது கூட்டுறவு வங்கி, எல்ஐசி போன்றவற்றிலும் கடனை பெற்றுக் கொள்ளலாம்.
குறைந்த பட்ஜெட் வீடு கனவுகளுடன் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு.
அருமையான திட்டம்
பதிலளிநீக்குVery good information. Thanks
பதிலளிநீக்குஅருமையான திட்டம்
பதிலளிநீக்கு