வெள்ளி, 21 ஜூன், 2013

பங்குச்சந்தை: இப்ப என்ன செய்யலாம்?

நிறைய பங்குகள் 52 வார குறைவு நிலையை அடைந்துள்ளன. பங்குசந்தையில் நீண்ட கால முதலீட்டில் (குறைந்தது 1 வருடம்) ஆர்வம் உள்ளவர்கள் தற்போது முதலீடு செய்யலாம்.


டாலர் மதிப்புயர்வால் பலன் பெரும் நிறுவனங்களும்,இறக்குமதியை சாராத நிறுவனங்களும் கரடியின் பிடியில் தப்ப வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் மென்பொருள், மருந்து போன்ற ஏற்றுமதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

இந்தியாவில் பருவமழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனால் உணவு, சர்க்கரை நிறுவனகளின் லாபமும் உயரும். கடந்தவருடம் பருவ மழை பொய்த்ததால் இந்த பங்குகள் அடிமாட்டு  விலைக்கு கிடைக்கின்றது. டிராக்டர் போன்ற விவசாய வாகனங்கள் விற்பனையும் உயரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த பங்குகளில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


அடுத்த தேர்தலில் நிலையற்ற அரசு அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அரசின் கொள்கை முடிவுகளும் தெளிவற்ற நிலையிலே அமையும். அரசு, வங்கி  பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.

English Summary:
What can do in share market?
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக