வெள்ளி, 3 ஜனவரி, 2014

HCLன் வினீத் நாயர் விலகல் எந்த அளவு பாதிக்கும்?

HCL Technologies நிறுவனத்தின் முன்னாள் CEO வினீத் நாயர் நிர்வாகக் குழு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.


கிட்டத்தட்ட 20 வருடங்களாக HCL நிறுவனத்தின் உயர் பதவிகளில் பணிபுரிந்து வருபவர் வினீத் நாயர். இவரது தலைமையில் இருக்கும் போது தான் HCL நிறுவனம் அசுர வளர்ச்சி கண்டது.

இவரது பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 'employees first, customers second' என்ற கொள்கை அதிக அளவில் பலன் கொடுத்தது.

கடந்த வாரம் நிர்வாகக்குழுவில் இருந்து விலகியுள்ளார். தற்போது ஆலோசனைக் குழுவில் மட்டும் இடம் பெறுவார் என்று தெரிகிறது. மேலும் தன்னிடமுள்ள 134 கோடி மதிப்புள்ள பங்குகளையும் விற்று தமது sampark நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 


இதனை இவர் நிறுவனத்தை விட்டு முழுவதுமாக விலக விரும்புவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.இது எந்த அளவுக்கு HCL நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சரியாகத் தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் HCL நிறுவனம் இந்த வருடம் ஆரம்பம் முதலே இளைய தலைமுறையை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. உயர் பதவிகளில் புதிய தலைமுறையை அமர்த்தும் பொறுப்பை ஏற்கனவே தொடங்கி விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை HCL நிறுவனம் சமாளித்து விடும் என்றே எண்ணுகிறேன்.

மேலும், இன்போசிஸ் நிறுவனம் அளவு தொடர்ச்சியான விலகல்கள் HCL நிறுவனத்தில் இல்லை. இதன் நிதி நிலை மிக நன்றாக உள்ளது.

அதனால் நமது போர்ட்போலியோவில் உள்ள இந்த பங்கில் மேலும் ஏதேனும் எதிர் மறை செய்திகள் வராத வரை நாம் தொடருவோம்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக