வெள்ளி, 15 ஏப்ரல், 2016

நேர்மறை எதிர்பார்ப்புகளுடன் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்

சிறிது நாள் கழித்து சந்தைக்கு அடிப்படை தொடர்பாக சில நல்ல நிகழ்வுகளை பார்க்கலாம் என்று தெரிகிறது.


கடந்த மூன்று காலாண்டுகளாக பார்த்தால் சென்செக்ஸ் நிறுவனங்களின் சராசரி வருமானமும், நிகர லாபமும் கடந்த வருடத்தை விட குறைவாகவே சென்று கொண்டிருந்தது.



அதனால் சந்தை கூடுதலும், குறைதலும் ஒரு வித எதிர்பார்ப்புகளுடனும், சில நேரங்களின் சம்பந்தமில்லாத நிகழ்வுகளின் அடிப்படையிலே நடந்தன.

ஆனால் தற்போது நிறுவனங்களின் அடிப்படைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றே கணிப்புகள் கூறுகின்றன.

இதனை நேற்று இன்போசிஸ் நிறுவனம் தொடங்கி வைத்தது என்று சொல்லலாம்.

வருமானம், லாபம் என்ற இரண்டுமே கடந்த காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தது.

அதிலும் நிகர லாபம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 23% அதிகரித்தது என்பது ஒரு முக்கியமான நேர்மறை அறிகுறி.

இதனால் இன்போசிஸ் பணியாளர்களுக்கு 12% வரை ஊதிய உயர்வு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எச்சிஎல், டிசிஎஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் கூட நல்ல நிதி அறிக்கைகளை கொடுக்கலாம் என்று தெரிகிறது.

இந்த மாற்றம் என்பது அமைதியாக நடந்து கொண்டிருந்தாலும், நீண்ட கால நோக்கில் நமக்கு முதலீட்டிற்கான வாய்ப்பை தருகிறது.

அதே நேரத்தில் இந்த லாப முன்னேற்றத்தை கட்டமைப்பு, சுரங்க நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கடனைக் குறைத்தால் அதுவே பெரிது என்பதே இன்றைய நிலை.

இன்னும் 25,000 சென்செக்ஸ் புள்ளிகள் என்பதில் சில திருத்தங்கள் ஏற்படலாம். அதனால் ஒவ்வொரு தாழ்வின் போது வாங்கி போடுவது நல்ல பலனைத் தரும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக