செவ்வாய், 5 ஏப்ரல், 2016

Equitas Holdings ஐபிஒவை வாங்கலாமா?

இன்று முதல் Equitas Holdings என்ற நிறுவனம் சந்தைக்கு வருகிறது.


இந்த நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வங்கி துறையில் ஈடுபட்டு வருகிறது.



முத்தூட் போன்ற வங்கிகள் போல மைக்ரோ வங்கி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் ஐந்து சதவீத அளவு சந்தையை மைக்ரோ வங்கி துறையில் பெற்றுள்ளது.

இது போக,  ஆர்பிஐ கடந்த வருடம் சில வங்கிகளுக்கு Small Finance Banks என்ற பெயரில் அனுமதி அளித்துள்ளது. அதில் Equitas Holdings வங்கியும் ஒன்று.

இது இரண்டு வகைகளில் நிறுவனத்திற்கு பலன் தர முடியும்.

ஒன்று, ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை மக்களிடம் டெபாசிட் முறையிலும் பெற முடியும்.

அடுத்து,  இது வரை மற்ற முதலீட்டு நிறுவனங்களிடம் நிதியை அதிக வட்டிக்கு கடனாக பெற்று தான் Equitas கடன்களை வழங்கி வந்தது.

இதனால் அதிக வட்டிக்கு தான் கடன் கொடுக்க வேண்டி இருந்தது. இனி மக்களிடம் இருந்து நிதி பெறும் போது இந்த வட்டி விகிதம் குறையவும் வாய்ப்பு உள்ளது.

இந்த வங்கி வீடு, வாகனம், தனி நபர் கடன்களை தற்போது அளித்து வருகிறது.  கடந்த வருடத்தில் மட்டும் 50%க்கும் அதிக கடன் கொடுத்தல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் வியாபாரம் நான்கு மடங்கிற்கும் அதிகமாக பெருகியுள்ளது. லாபமும் அதே வேகத்தில் வளர்ந்துள்ளது.

இதெல்லாம் இந்த நிறுவனத்தின் சாதகமான காரணிகள் என்று சொல்லலாம்.

தற்போது பங்குச்சந்தை மூலம் 2200 கோடியை திரட்ட வருகிறது. இந்த நிதி வங்கியின் கணினி கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் ஐந்து முதல் ஏப்ரல் 7 வரை ஐபிஒவிற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு பங்கின் விலை 109 முதல் 110 வரை நிர்ணயித்துள்ளார்கள்.  குறைந்தபட்சம் 135 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஒரு பங்கின் விலையை புத்தக மதிப்பில் பார்த்தால் P/B மதிப்பு  2.5 என்று வருகிறது.  EPS அடிப்படையில் பார்த்தால் P/E மதிப்பு 24.6 என்று வருகிறது.

இந்த இரண்டு விகிதங்களுமே சந்தையில் உள்ள மற்ற சிறு வங்கி நிறுவனங்களான சோழமண்டலம், SKS போன்றவற்றை விட நல்ல விலையில் பங்கினை காட்டுகிறது.

அதனால் உச்ச வரம்பு விலையான 110ல் இந்த பங்கினை வாங்கலாம். குறைந்தபட்சம் பத்து சதவீத லாபம் எதிர்பார்க்கலாம்.

நீண்ட கால நோக்கிலும் இந்த வங்கியின் வளர்ச்சியில் சாதகமான அம்சங்கள் இருப்பதால் முதலீடாகவும் வைத்துக் கொள்ளலாம்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. வணக்கம் 153 உள்ள விலைக்கு sip முறையில் 5 வருடங்கள் வாங்க ஆரம்பிக்கலாமா....

    பதிலளிநீக்கு