கடுமையான வேலைப் பளுவால் அடிக்கடி பதிவுகளை எழுத முடியவில்லை. அதிலும் இந்த மாதம் ரொம்ப மோசம் தான். அதனால் மன்னிப்பு வேண்டுதலுடன் கட்டுரையைத் தொடர்கிறோம்.
கடந்த கட்டுரையில் Equitas IPOவை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். அது முதல் நாளிலே 35% அளவு உயர்ந்து மகிழ்ச்சியைக் கொடுத்தது. நமது வாசகர்களும் பயன் அடைந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்த பங்கினை விற்று லாபத்தை உறுதி செய்ய பரிந்துரை செய்கிறோம்.
வாழ்த்துக்கள்!
பல மாதங்களுக்கு பிறகு சந்தை நேர்மறை திசையில் சென்று கொண்டிருக்கிறது.
அதற்கு பல காலாண்டுகளாக சோபிக்காமல் இருந்த Blue Chip நிறுவனங்கள் என்று சொல்லப்படும் பெரிய நிறுவனங்கள் தற்போது நல்ல நிதி அறிக்கையைக் கொடுத்தது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. TCS, Infosys, Airtel போன்ற நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும்.
ஆனாலும் 25,600 என்ற சென்செக்ஸ் புள்ளிகளை ஒரு வித அச்சம் கலந்தே பார்க்க வேண்டியுள்ளது.
சென்செக்ஸ் அல்லது நிபிட்டி நிறுவனங்களை பார்த்தால் அவற்றின் லாப விகிதங்களை Price-To-Earning என்ற முறை மூலம் பார்க்கும் அவை வரலாற்று சராசரியின் மேலே தான் வருகின்றன.
இது போக, உலக அளவிலான பொருளாதார காரணிகளில் கூட மேலே எடுத்து செல்லும் அளவு ஒரு உந்து சக்தி இருப்பதாக தெரியவில்லை.
அதனால் ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் அளவிலான திருத்தங்களை ஒரு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் இதே அளவில் வரும் காலாண்டுகளில் நிறுவனங்கள் நிதி அறிக்கைகளை கொடுத்தால் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இந்திய பங்குசந்தையில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
அதனால் நீண்ட கால நோக்கில் சரிவுகள் வரும் போது பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக