வியாழன், 10 நவம்பர், 2016

ட்ரம்பின் அதிர்ச்சி தரும் வெற்றியை சமாளிப்பது எப்படி?

நேற்று ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் இந்திய சந்தையை பாதித்தது.


ஒரு பக்கம், மோடி கருப்பு பண வேட்டையை நடத்த முயல,மறு பக்கம் அமெரிக்க வாக்காளர்கள் நமக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.



ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று அவரே நம்பி இருக்க மாட்டார் போல..அதனால் தான் தேர்தலை ரத்து செய்து விட்டு தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூட சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால் ஒபாமா அளவிற்கு ஹிலாரி மீது கவர்ச்சியும், நம்பிக்கை இல்லாதது என்பது ட்ரம்ப்பிற்கு சாதகமாக மாறிப் போனது.

அதனால் இருப்பதில் எது பெஸ்ட் என்ற முறைக்கு அமெரிக்க ஆட்கள் மாற ட்ரம்ப் ஜெயித்து விட்டார்.

அவரைப் பொறுத்த வரை இது வரை அடாவடித் தனமான ஆள் என்ற இமேஜ் தான் உள்ளது.

அதனை மாற்றி பொறுமையான முறையில் அமெரிக்க பொருளாதரத்தை மேம்படுத்துவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு அவரது கொள்கைகளை கூறியுள்ளதை பார்த்தால் கண்டிப்பாக நமது மென்பொருள் நிறுவனங்கள் சிக்கி திணற வேண்டிய சூழ்நிலை வரும் போலவே தெரிகிறது.

ஏற்கனவே பிரிட்டன் யூரோ வெளியேற்றம், நிதி துறை நிறுவனங்களின் குறைவான மென்பொருள் ஒதுக்கீடு போன்றவற்றின் காரணமாக எட்டு சதவீத வளர்ச்சி பார்த்தாலே அதிசியம் போல் தெரிகிறது.

இந்த நிலையில் விசா கட்டணத்தை கூட்டி விடுவேன், வேலைய வெளியே விட மாட்டேன் என்று சொல்லும் ட்ரம்ப் கையில் அதிகாரம் சென்று விட்டது.

அதனால் எட்டு சதவீதம் இன்னும் குறைந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

ஒரு பக்கம் வளர்ச்சி இல்லை, இன்னொரு பக்கம் சாதகமான சூழ்நிலைகள் இல்லை என்ற நிலையில் ஏன் ஐடி பங்குகளை சுமக்க வேண்டும் என்ற கேள்வி வரவே செய்கிறது.

அதனால் ஐடி பங்குகளில் உள்ள தொகையை வேறு எங்காவது திருப்பி விடுவது நல்லது.

அடுத்தது, ட்ரம்ப் வெற்றி பெற்றதில் இன்னொரு சாதகமான சூழ்நிலை மருந்து நிறுவனங்கள் மூலம் வந்துள்ளது.

குறைந்த தொகையில் மருத்துவம் பார்த்தல் என்பது ஒபாமாவின் ஒரு கனவு திட்டம். அவ்வாறு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒபாமா கேர்.

அதனால் அவர் கட்சி சார்ந்த ஹிலாரி மீண்டும் வெற்றி பெற்றால் மருந்துக்களின் விலையை குறைக்க முற்படுவார் என்ற ஒரு பேச்சு சந்தையில் இருந்து வந்தது.

ஐடி நிறுவனங்களைப் போல் இந்திய மருந்து நிறுவனங்களின் முக்கிய சந்தையே அமெரிக்கா தான். அப்படி மருந்து விலைகள் குறைந்தால் இந்த நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறைய வாய்ப்பு இருந்தது.

ஆனால் ஹிலாரி தோற்று விட, தப்பித்து விட்டோம் என்று இந்த மருந்து நிறுவனங்கள் கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில் குறைவான விலைகளில் கிடைக்கும் மருந்து நிறுவன பங்குகளை வாங்கி வைத்தால் கணிசமாக ரிடர்ன் கிடைக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் முதலீட்டாளர்களுக்கு ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் சந்தையில் பங்குகள் ஏதாவது ரூபத்தில் கிடைக்க தான் செய்கிறது.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. ஏதேனும் பங்கு பரிந்துரை உள்ளன வா????
    holding உள்ள எந்த பங்கு விற்க வேண்டும் ,

    பதிலளிநீக்கு
  2. ஏதேனும் பங்கு பரிந்துரை உள்ளன வா????
    holding உள்ள எந்த பங்கு விற்க வேண்டும் ,

    பதிலளிநீக்கு