வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க நகைகள் மீதான வரி விதிப்பு பற்றிய முழு விளக்கம்

இன்று வீடுகள் மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கும் வரி விதிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் பாமர மக்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.


ஆனால் அதனை தெளிவு படுத்த வேண்டிய மீடியாக்கள் மேலும் குழம்பிய குட்டையிலே மீன் பிடித்துக் கொண்டிருந்தது என்பது ஒரு வேதனையான விடயம் தான்.



செய்தியாக அறியப்பட்டது என்பது இது தான்.

ஒரு வீட்டில் மணமான பெண்ணுக்கு 500 கிராம் தங்க நகைக்கு மேலும், மணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் நகைக்கும் மேலும், அதே நேரத்தில் ஒரு ஆணுக்கு 100 கிராம் மேலும் வைத்து இருந்தால் அந்த தொகைக்கு வரியாக 85% கட்ட வேண்டும் என்பது தான் பரப்பப்பட்டது.


ஆனால் இது ஏதோ புதிதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அல்ல. 1978லே ஹரக் க்ஷந்த் ஜெயின்என்ற வருமான வரித்துறை கமிஷனரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என்பது தான் உண்மை.

அப்பொழுதே இதே அளவிற்கு மேல் தங்கம் வைத்து இருந்தால் அதற்குரிய வருமான கணக்கை காட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய அரசு முன்பு கணக்கில் வராத தங்க மதிப்பிற்கு 30% வரி கட்டினால் போதும் என்று இருந்ததை 60% அபராதத்துடன் வரி மற்றும் 25% சேவை வரி என்று கூட்டி உள்ளது.

இது தான் தற்போது வந்துள்ள முக்கியமான மாற்றம்.

அதே நேரத்தில் நமது முன்னோர்கள் வைத்து இருந்த தங்க நகைகளுக்கும், நமது வருமான கணக்கில் வந்து வாங்கப்பட்ட நகைகளுக்கும் பாதிப்பில்லை.

பெரும்பான்மையாக 500, 1000 ரூபாய் ஒழிப்பின் பின் கருப்பு பணம் முழுமையாக ஒழிந்து விடும் என்று நம்புகிறார்கள். ஆனால் நமது பொருளாதரத்தில் வெறும் 12% மட்டுமே பணம் மூலமாக புழங்கி வருகிறது.

அதனால் இந்த ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பினால் இருக்கும் கருப்பு பணத்தில் 12% அளவிற்கு தான் ஒழிக்க முடியுமே தவிர முழுமையாக ஒழிக்க முடியாது.

மீதி கருப்பு பணங்கள் தங்கம், ரியல் எஸ்டேட், வெளிநாடு முதலீடுகள் என்று ஒளிந்து கிடைக்கின்றன.

அதில் ஒரு பங்கை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியாகவே இந்த தங்க நகை மீதான நடவடிக்கையும் கருதலாம். அதுவும் முன்பு காகிதத்தில் மட்டும் இருந்த ஒரு விதி முறையை நமக்கு நியாபகப்படுத்தி உள்ளார்கள்.

என்ன தான் பண்ணினாலும் நூறு சதவீத அளவு கருப்பு பணத்தை ஒழித்து விட முடியாது. ஆனால் இதில் நாற்பது முதல் ஐம்பது சதவீதம் வெளிவந்தாலே அரசிற்கும் நாட்டின் பொருளாதரத்திற்கும் ஒரு நல்ல வெற்றி தான்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக