சில சமயங்களில் சிலரது சுய வரலாறு நமது தன்னம்பிக்கையை பல மடங்கிற்கு முன் இழுத்து செல்லும். அப்படியொரு வரலாறுடைய கியூபா அதிபர் பெடல் காஸ்ட்ரோ அவர்களின் புத்தகத்தை அண்மையில் படிக்க நேரிட்டது. புத்தகத்தின் பெயர் சிம்ம சொப்பனம்.
உலகம் முழுவதும் கம்யூனிச கொள்கைகளை பின்பற்றிய நாடுகள் என்று ரஷ்யா, சீனா, வட கொரியா என்று பல நாடுகள் இருந்து வந்தன.
அவற்றில் ரஷ்யா பல துண்டுகளாக பிரிந்து விட்டது. சீனா பெயருக்கு தான் கம்யூனிசம் என்று சொல்லி வருகிறதே தவிர கொள்கைகள் எல்லாம் முதலாளித்துவத்தை நோக்கி நகர ஆரம்பித்து விட்டன.
வட கொரியா கேட்க வேண்டாம். வளர்ச்சி எல்லாம் வேண்டாம், ராணுவம் மட்டும் போதும் என்ற வித்தியாசமான கம்யூனிச கொள்கையை பின்பற்றி வருகிறது.
இப்படி பல நாடுகளில் முழு வெற்றி அடையாத கம்யூனிச கொள்கை கியூபா என்ற தென் அமெரிக்கா நாட்டில் மட்டும் தான் முழு வெற்றியடைந்துள்ளது. 98% கல்வி அறிவு, நவீன மருத்துவ வசதிகள் என்று முதலாளித்துவ நாடுகளே ஆச்சர்யப்படும் வகையில் இன்று வளர்ந்துள்ளது. இதற்கு யார் காரணம் என்று பார்த்தால் பெடல் காஸ்ட்ரோ தான் முன் வந்து நிற்கிறார்.
வெறும் பதினெட்டு பேருடன் ஆரம்பித்த புரட்சி படை இன்றைக்கு அமெரிக்காவை நடுங்க வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ராணுவத்தை மட்டும் பார்க்காமல் கல்வி, சுகாதாரம் என்று வளர்ச்சி பாதைகளிலும் கியூபா வளர்ந்திருப்பதை பார்க்கும் போது பெடல் காஸ்ட்ரோவின் தொலை நோக்கு கொண்ட பார்வை நன்கு தெரிகிறது.
ஒரு கம்யூனிச ஆட்சியாளர் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் எப்படி சரிசம விகிதத்தில் பார்க்க வேண்டும் என்பதற்கு பெடல் காஸ்ட்ரோ நல்ல உதாரணம்.
அவரது கொரில்லா படை வளர்ந்த முறையை விவரிக்கும் பொது ஈழம் நினைவுக்கு வருகிறது. சே குவேராவுடன் ஏற்பட்ட நட்பு, அமெரிக்கா கொடுத்த டார்ச்சர் என்ற பல விஷயங்களை புத்தகம் வாயிலாக அறிய முடிகிறது. ரஸ்யா கியூபாவிற்கு கொடுத்த உதவிகள் முதல் அதன் பின் அமெரிக்கா நெருக்கடி காரணமாக பின் வாங்கியது வரை உள்ள அரசியல் நிகழ்வுகள் விரிவாக தரப்பட்டுள்ளது.
இறுதியாக, புத்தகத்தை படித்து முடிக்கும் போது நாமும் ஏதாவது பண்ண வேண்டும் என்ற உணர்வு வருவது ஒரு நெகிழ்வான விடயம்.
மருதன் அவர்கள் எழுதி உள்ளார். நேர்த்தியான தொகுப்பு. மண வாழ்வில் காஸ்ட்ரோவின் பொறுப்பின்மையும் குறிப்பாக காட்டுவதன் மூலம் எதிர்மறையான விமர்சனத்தையம் பகிர்ந்து உள்ளார்.
பாடப் புத்தக அளவில் இந்த புத்தகம் சேர்க்கப்பட்டால் கூட மாணவர்களுக்கு பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும். ஆனால் வலதுசாரி, முதலாளித்துவ கொள்கையுடைய நம் நாட்டில் அதற்கு வாய்ப்பு குறைவு தான். நமது வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம்.
அமேசானில் 195 ரூபாய்க்கு கிடைக்கிறது. இணைப்பு இங்கே.
Amazon: Simma Soppanam Tamil Book
எமது மற்ற புத்தக விமர்சனங்கள்:

- பங்குச்சந்தை ரகசியங்கள் - புத்தக விமர்சனம்
- குமரி நில நீட்சி - புத்தக விமர்சனம்
- கற்றதும், பெற்றதும் ஒரு புத்தக விமர்சனம்
- அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம்
- வரலாற்றை வேகமாக திருப்பி பார்க்கும் "கி.மு, கி.பி"
- பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? - புத்தக விமர்சனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக