புதன், 19 ஜூலை, 2017

சிகரெட்டிற்கு GSTயில் அதிக வரி, பதம் பார்க்கப்பட்ட ITC

GST புயல் அவ்வளவு எளிதில் விடாது போல் தான் தெரிகிறது.


இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்பது நல்ல திட்டம் தான். ஆனாலும் அதனை நடைமுறைப் படுத்தலில் உள்ள குழப்பம் மக்களிடையே எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.



கடைசி நிமிடம் வரை GSTயில் எவ்வளவு வரி போடுவது என்ற குழப்பம் காரணமாக இன்னும் கடைகளுக்கான மென்பொருளே தயாராகவில்லை.

அப்படியே தயாராகி இருந்தாலும் நேற்று வரை வரி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதனை மென்பொருளுக்குள் கொண்டு வருவது என்பது எளிதல்ல.

அதனால் ஒரு பக்கம் வியாபாரிகள் திண்டாட, மறு பக்கம் எவ்வளவு வரி என்று தெரியாமலே பொது மக்களும் காசு கொடுத்து வரும் நிலைமையும் உள்ளது.

இரு நாட்களுக்கு முன்பு கூட ஒரு பிரபல ஹோட்டலில் தவறாக GST வரி பிடிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தன. அதற்கு அரசு விளக்கம் கொடுக்கும் சூழ்நிலையும் உருவானது.

GST என்பது இந்தியா முழுமைக்கும் தான் ஒரே வரி. ஆனால் எல்லா பொருட்களுக்கும் அல்ல.

ஏசி வைத்த ஹோட்டல், ஏசி வைக்காத ஹோட்டல், பிராண்ட் பொருட்கள், பிராண்ட் இல்லாத பொருட்கள், 500 ரூபாய்க்கு மேல் உள்ள செருப்பு, கீழ் உள்ள செருப்பு என்று பல வித குழப்ப சூழ்நிலைகள் உள்ளன.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த குழப்ப சூழ்நிலை இருக்கத் தான் செய்யும்.

அதனால் வாடிக்கையாளராக நாம் ஏமாறாமல் இருக்க எமது நிறுவனம் சார்பில் ஒரு இலவச ஆண்டிராய்டு ஆப்பை உருவாக்கி உள்ளோம்.

பொருளின் பெயர் கொடுத்தால் அதற்கான GST வரி எவ்வளவு என்பது தானாகவே வரும். தமிழிலும் விளக்கங்கள் உள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஏதேனும் திருத்தம் வேண்டும் என்றாலும் சொல்லவும்..

ஆப்  இணைப்பு இங்கே உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.aristattech.onegst





இனி சிகரெட்டிற்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

GSTயின் ஒப்பந்தங்கள் படி, சிகரெட்டிற்கு மேலும் வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது.

GSTக்கு அதிக பட்ச வரியாக 28% என்று விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிகரெட்டிற்கு அதைக் காட்டிலும் 5% அதிக வரியை மத்திய அரசு விதித்து இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் அரசு நேற்று வரியை மேலும் அதிகரித்துக் கொண்டது. சிகரெட்டின் நீளத்திற்கு ஏற்ப இந்த வரி கூட்டப்பட்டு உள்ளது.

இதில் உச்சகட்டமாக அதிக நீளமுள்ள 85mm சிகரெட்டிற்கு GST வரியில் இருந்து மேலும் 36% வரி கூட்டப்பட்டு உள்ளது. அதாவது 36% + 25% = 61% வரி கட்ட வேண்டும்.

இதனால் சிகரெட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த காரணத்தால் ITC நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் மட்டும் 15% சரிந்தது.

சிகரெட் நிறுவன பங்குகளை சமூக எண்ண காரணங்களால் நாம் பரிந்துரை செய்வதில்லை. தற்போதைய நிலையில் ஏற்கனவே வைத்து இருப்பவர்கள் சமயம் பார்த்து வெளியேறுவது நல்லது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக