ஞாயிறு, 30 ஜூலை, 2017

SIS India ஐபிஒவை வாங்கலாமா?

இந்திய பங்குசந்தையில் SIS என்ற நிறுவனம் பட்டியலிடப்படுகிறது.


இந்த நிறுவனத்தின் ஐபிஒ பங்குகளுக்காக நாளை ஜூலை 31 முதல் விண்ணப்பிக்கலாம்.SIS நிறுவனத்தின் முழு விவரிப்பு Security and Intelligence Services India என்பதாகும்.

டெல்லியை தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம் கார்பரேட் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்தியாவில் வளர்ந்து வரும் துறையான Cash Logistics என்று சொல்லப்படும் வங்கிகளுக்கு தேவையான பண பரிமாற்ற பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 630 மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவிலிலும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் முதல் இடத்திலும், இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நிதி நிலை அறிக்கையை பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது. வருமானம் 2650 கோடியில் இருந்து 4500 கொடியாக உயர்ந்துள்ளது. வருடத்திற்கு சராசரியாக 30% அளவில் உயர்ந்து உள்ளது.

இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தி வருவது இந்த நிறுவனத்திற்கு சாதகமான விடயம்.

புதிதாக உருவாக்கப்படும் வங்கிகள், அதிக அளவிலான ATM விரிவாக்கங்கள் போன்றவை SIS நிறுவனத்தின் Cash Logistics பிரிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

நிறுவனத்தின் அனுபவம் மற்றும் பரவலான விரிவாக்கம் போன்றவை நேர்மறை விடயங்களாக உள்ளது.

இனி எதிர்மறை விடயங்களையும் பார்ப்போம்.

நிறுவனத்தின் லாப மார்ஜின் என்பது இரண்டு சதவீத அளவிலே உள்ளது. பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் இதர செலவுகள் ஏற்படின் இந்த மார்ஜின் பாதிக்கப்படலாம்.

இதே துறையில் அதிக அளவில் உருவாகும் புதிய நிறுவனங்கள் கடுமையான போட்டி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

ஆனாலும் அதிக அளவிலான நம்பிக்கை மற்றும் அனுபவம் கொண்டு இருக்கும் SIS நிறுவனம் இதனை சமாளிக்கும் என்று நம்பலாம்.

ஒரு பங்கின் விலை 805 முதல் 815 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உச்ச வரம்பில் பார்த்தால் P/E மதிப்பு 62க்கு அருகில் உள்ளது.

இது அதிகம் என்று தோன்றினாலும், இதே துறையில் உள்ள Quess நிறுவனத்தின் P/E மதிப்பு 95 என்ற அளவில் உள்ளதால் ஒப்பீட்டு அளவில் குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதனால் குறுகிய காலத்தில் 10 முதல் 20 சதவீதம் அளவு உயர வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த ஐபிஒ பங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.

எம்மிடம் Angel Broking டிமேட் சேவையில் இணைந்தவர்கள் ஐபிஒ பங்கில் விண்ணப்பிக்க தனிப்பட்ட முறையில் அணுகவும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக