ஞாயிறு, 9 ஜூலை, 2017

IDFC - ஸ்ரீராம் வங்கி இணைப்பு, யாருக்கு லாபம்?

இந்தியா ஒரு வேகமான போட்டி பொருளாதரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.


அதனால் தான் அண்மைய காலமாக பல நிறுவனங்கள் தங்களுக்குள்ளே இணைப்புகளை அறிவித்து பாதுக்காக்க முனைகின்றன.கடந்த வாரம் இது போல, அண்மையில் வங்கி உரிமம் பெற்ற IDFC வங்கியும், வங்கி சாராத கடன் துறையில் இருக்கும் ஸ்ரீராம் கேபிடல் நிறுவனமும் தாங்கள் இணைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளன.

இதனைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

IDFC வங்கியை பொறுத்தவரை வங்கி உரிமத்தை பெற்று விட்டாலும் நிதி நிலைமை சரி இல்லாததால் உடனடியாக வங்கி நடவடிக்கைகளை துவக்க தவித்து வரும் ஒரு நிறுவனம்.

இது போக, மத்திய இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே பரவி இருக்கும் நிறுவனம்.

ஸ்ரீராம் குழுமத்தை பார்த்தால் வங்கி போல் அல்லாத NBFC முறையில் செயல்படும் ஒரு நிதி நிறுவனம். அதிக அளவில் வாகனங்கள் வாங்குவதற்கு கடன் அளித்து வரும் நிறுவனம்.

இந்தியா முழுமைக்கும் இதன் கிளைகள் வியாபித்து உள்ளது.

அந்த வழியில் பார்த்தால் IDFC குழுமம் இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்திக் கொள்ள இந்த இணைப்பு உதவும்.

அதே நேரத்தில் ஸ்ரீராம் குழுமத்திற்கு என்ன பயன்? என்ற கேள்வி எழலாம்.

இதற்கு முழுக்க உள்கூட்டு குழப்பங்களே காரணம் என்று சொல்லலாம்.

ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் தியாகராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரமல் நிறுவனத்தை தம்முடன் இணைத்துக் கொண்டார்.

அந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் தான் தற்போது ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் சிஇஒவாக உள்ளார். மெஜாரிட்டி பங்குகள் தியாகராஜனிடம் தான் உள்ளது. ஆனாலும் நிர்வாகம் என்பது அஜய் பிரமல் தான் கையில் உள்ளது.

நிர்வாக ரீதியாக தியாகராஜன் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் தான் வங்கி உரிமம் வாங்க தகுதி இருந்தும் ஸ்ரீராம் குழுமம் விலகி கொண்டது.

அதனால் அவசர ரீதியாக தியாகராஜன் கிடைத்தது போதும் என்ற ரீதியில் விற்க அல்லது இணைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதில் தான் IDFCயும் ஒன்று.

இன்னும் பங்கு மாற்று விகிதங்கள் ஏதும் தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் இந்த இணைப்பு வெற்றி பெற்று விட்டால் IDFCக்கு நிதி மற்றும் விரிவாக்க ரீதியாக லாபம் தான்.

ஆனாலும் ஒரு வங்கி இல்லாத நிதி நிறுவனம் வங்கித் துறை சார்ந்த நிதி நிறுவனத்துடன் இணைக்கப்படும் போது அதிக அளவில் ஒப்புதல்கள் வாங்கப்பட வேண்டும்.

அதனால் இந்த இணைப்பு முடிவதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆனாலும் ஆச்சர்யமில்லை.

அது வரை IDFC நிறுவனம் ஸ்ரீராம் குழும பணியாளர்களை தக்க வைத்து கொள்வது என்பது சவால் தான்.

ஆனாலும் ஸ்ரீராம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அப்படியே IDFCக்கு கிடைப்பது என்பது ஒரு பெரிய நேர்மறையான விடயம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக