புதன், 11 அக்டோபர், 2017

புதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா?

கடந்த ஒரு கட்டுரையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்திய அரசு தயாரவதால் முதலீடு செய்ய கிடைக்கும் பங்கு வாய்ப்புகளை பற்றி எழுதி இருந்தோம்.



இது புதிதாக வாகனங்கள் வாங்கவிருப்பவர்களுக்கு எவ்வளவு பாதிக்கும்? என்பதையும் பார்ப்போம்.



இந்திய அரசு வரும் 2030க்குள் அணைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் முறையில் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

இது கார் தயாரிக்கும் நிறுவனங்களை நேரடியாக கட்டுப்படுத்தாவிட்டாலும், எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் மற்றும் வரி ஊக்கங்கள் இனி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.

அந்த சூழ்நிலையில் மறைமுகமாக கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வரலாம்.

டாட்டா,மகிந்திரா,மாருதி போன்ற அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் ஏற்கனவே பெருமளவு முதலீடு செய்ய துவங்கி விட்டன.

இதில் மகிந்திரா ஒரு படி மேலே போய், SUV போன்ற வாகன மாடல்களில் கூட எலெக்ட்ரிக் என்ஜின்களை கொண்டு வருவதாக கூறி உள்ளது.

NTPC, Tata Power போன்ற நிறுவனங்கள் அதிக அளவு பெட்ரோல் பங்குகளுக்கு பதிலாக சார்ஜிங் ஸ்டேசன்கள் அமைக்க விருப்பம் காட்டி உள்ளன.

அதே போல், EXIDE, AMARON போன்ற நிறுவனங்கள் லித்தியம் சார்ந்த பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவன திட்டமிட்டுள்ளன.

இந்த வேகத்தை பார்த்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 20% முதல் 30% வாகனங்கள் எலெக்ட்ரிக் முறைக்கு மாற வாய்ப்புள்ளது.

இதனால் வரும் காலங்களில் பெட்ரோல்,டீஸல் வாகன தேவைகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலையில் நாம் பெட்ரோல்,டீஸல்  வாகனங்களை புதிதாக வாங்கினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மறு விற்பனை மதிப்பு என்பது மிகக் குறைவாக இருக்கும்.

ஆதலால் புதிதாக பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருள் சார்ந்த வாகனங்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

அதே நேரத்தில் தற்காலிகமாக பழைய பெட்ரோல் கார்களை வாங்கி விட்டு, இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்ற  சூழ்நிலை முழுமையாக வரும் போது மாறி விடலாம்.

வாகன கடன் வாங்கி கார்களை வாங்கும் நடுத்தர வருமானம் உடைய குடும்பங்கள் இதனை கருத்தில் கொள்வது நல்லது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: