ஞாயிறு, 3 டிசம்பர், 2017

BITCOIN எவ்வாறு வேலை செய்கிறது? (2)

கடந்த பதிவில் ஏன் BITCOIN நாணயத்தின் தேவை ஏற்பட்டது? என்பது பற்றி பார்த்தோம்.


இந்த பகுதியில்  BITCOIN எவ்வாறு வேலை செய்கிறது? என்பது பற்றியும் விவரமாக பார்ப்போம்.



கணினி அறிவியலில் பிட்(BIT) என்னும் பதம் அதிக அளவில் பிரபலம். கணினி என்பதே 0,1 என்பதை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது. இதனை பிட் வடிவத்தில் குறிப்பிடுவார்கள். ஒரு பிட் என்பது பூஜ்யமாகவும் இருக்கலாம். ஒன்றாகவும் இருக்கலாம்.

BITCOIN நாணயமும் கணினியின் மிகக் கடினமான கணித தன்மைகள் அடிப்படையில் இயங்குவதால் BITCOIN என்று பெயரிடப்பட்டது.

இந்த நாணயம் முழுக்க திறந்த வெளி மென்பொருளை (Open Source) அடிப்படையாக வைத்து இயங்குகிறது.

இந்த மென்பொருள் சதொசி நகமொடோ (Satoshi Nakamoto) என்றும் ஜப்பானியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர் மென்பொருள், பொருளியல், Crpyptography போன்றவை அறிந்த வல்லுனராக அறியப்படுகிறார். ஆனால் பிட்காயினை வடிவமைத்த பிறகு தான் யார்? என்பதை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து விட்டார்.

டாலர், ரூபாய் போன்ற காகித வடிவ நோட்டுக்கள் ஒருத்தரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறும் போது அந்த நோட்டு கொடுப்பவரிடம் இருந்து வாங்குபவருக்கு மாறி இருக்கும்.

ஆனால் பிட்காயின் நாணயத்தில் ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதாக இருந்தால் இந்த மாதிரியான Physical வடிவிலான பொருள் பரிமாற்றம் எதுவும் இருக்காது.

அதற்கு பதிலாக ஒவ்வொருவரிடம் பொதுவாக இருக்கும் கணினி புத்தகத்தில்(Ledger) இந்த பரிமாற்றம் குறித்து வைக்கப்படும்.

குழப்பமாக இருக்கிறது என்பதால் ஒரு உதாரணத்துடனே பார்ப்போம்.

அன்பு என்பவரிடம் 4 பிட்காயினும், ஆதவன் என்பவரிடம் 2 பிட்காயினும், இன்பன் என்பவரிடம் 1 பிட்காயினும் இருப்பதாக கருதிக் கொள்வோம்.

இவர்கள் அனைவரிடமும் இந்த பரிமாற்றங்களுக்கான பொதுவான புத்தகத்தின் நகல் இருக்கிறது.

கீழே உள்ள படம் இதனை எளிமையாக விளக்கும்.


இப்பொழுது அன்பு  1 பிட்காயினை  ஆதவனுக்கு கொடுக்கிறார். இந்த நிலையில் அன்புவிடம் இருக்கும் பிட்காயின் எண்ணிக்கை 3 என்றும், ஆதவனிடம் இருக்கும் பிட்காயின் 2 என்றும் மாறி இருக்கும்.

இந்த பரிமாற்றம் பிட்காயின் நெட்வொர்க்கில் இருக்கும் ஒவ்வொருவருடைய புத்தகத்திலும் மாற்றம் செய்யப்படும். அதனால் பரிமாற்றம் இல்லாத இனியன் புத்தகத்திலும் இது எதிரொலிக்கும்.

இதே போல், ஆதவன் இனியனுக்கு ஒரு பிட்காயின் கொடுப்பதாக இருந்தால் சம்பந்தமில்லாத அன்புவின் புத்தகத்திலும் இது பதிவு செய்யப்படும்.

ஏதேனும் ஒருவரது லெட்ஜர் புத்தகம் தன்னிச்சையாக மாற்றம் செய்யப்பட்டாலும் அது மற்றவர்களுடன் ஒத்து போகாததால் அதில் இருக்கும் தகவல்கள் தகுதியற்றதாகி  விடும்.

இதனால் தான் BITCOIN என்பதை முழுக்க முழுக்க பொதுவானது. பரவலானது என்று சொல்லலாம். ரிசர்வ் வங்கிகள் போன்று ஒரு அமைப்பை மட்டும் சார்ந்து இருக்காது. Paypal போன்று ஓரிடத்தில் இருக்கும் சர்வரை சார்ந்தும் இருக்காது.

இப்பொழுது ஒவ்வொருவர் பரிமாற்றமும் எப்படி பதிவு செய்யப்படுகிறது? என்ற கேள்வியும் வரலாம்.

அதற்கு தான் Bitcoin Miner என்று பலர் இருப்பர்.

இவர்களின் வேலை இந்த பரிமாற்றங்களை சரி பார்ப்பதும், அதனை ஒவ்வொருவர் புத்தகத்திலும் பதிவு செய்வதும் ஆகும். இவை அனைத்துமே கணினி வழியே தான் நடக்கும்.

சரி. இவர்கள் பார்க்கும் வேலைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் அல்லவா..

அந்த ஊதியம் தான் புதிதாக உற்பத்தி செய்யப்படும் பிட்காயின்கள். அதனால் தான் இவர்களை பிட்காயின் சுரங்கம் தோண்டுபவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் தான் பிட்காயின் நாணயத்தின் ஒரே மூலங்கள் என்றும் சொல்லலாம். அதனால் ரிசர்வ் வங்கி போன்று இஷ்டத்திற்கு பணம் அடிப்பது இந்த வழியாக தடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இந்த பதிவு செய்யும் வேலை பார்க்கப்படும். இதில் கிடைக்கும் தகவல்கள் ஒவ்வொரு Block என்று கோர்க்கப்படும். பல Blockகளின் தொகுப்பு BlockChain என்று அழைக்கப்படும்.

ஒரு ப்ளாக் தகவல்களை தொகுப்பவர்களுக்கு 12.5 பிட்காயின்கள் வழங்கப்படும்.

12.5 பிட்காயின்கள் என்பது இன்றைய மதிப்பில் 1.25 லட்சம் அமெரிக்க டாலர்கள். பெரிய தொகை. அதனால் போட்டியும் அதிகமாக இருக்கும்.

அதற்கு கணினி வழியாக கொடுக்கப்படும் மிக கடினமான ஒரு புதிரை இவர்கள் தீர்க்க வேண்டும். யார் முதலில் செய்கிறார்களோ அவர்களுக்கு அடுத்த ப்ளாக்கிற்கான வேலை கொடுக்கப்படும்.

இவர்கள் உலகம் முழுவதும் பிட்காயின்கள் வைத்து இருப்பவர்களின் லெட்ஜர் புத்தகங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

அதனால் அவ்வளவு எளிதான வேலையும் கிடையாது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பிட்காயின்களை வெளியில் உள்ள கரன்சி எக்ஸ்சேஞ்களை பயன்படுத்தி, அமெரிக்க டாலர்கள், யூரோ, ரூபாய் போன்ற இதர நாணயங்களைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.

அதே போல் உலகம் முழுவதும் இணையத்தில் பொருட்கள் வாங்குவதற்கு இந்த நாணயங்களை பயன்படுத்திக் கொள்ளலாம், இதற்கான  பரிமாற்றக் கட்டணம் என்பது விசா, மாஸ்டர், பேபால் போன்றவற்றை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. அந்த வகையில் BITCOIN அதிக அளவு பிரபலமாக உள்ளது.

மேலே சொன்னவற்றில் கொஞ்சம் டெக்னிகல் விடயங்கள் அதிகமாக இருப்பதால் புரிந்தவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

அடுத்தக் கட்டுரையில் பிட்காயினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

  1. எப்படி முதலீடு செய்வது?

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில் வருகின்ற தகவல் தொடர்.... பிட்காயின் முதலீடு செய்யலாமா? இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? பற்றியும் வரும் தொடர்களில் எழுதுங்கள் ஜயா..

    பதிலளிநீக்கு