புதன், 30 மே, 2018

வேதாந்தாவிடம் என்றும் இல்லாத நம்பகத்தன்மை

பங்குசந்தையில் நம்மைப் போன்ற சிறு முதலீட்டார்களுக்கு இருக்கும் நம்பிக்கையே நிறுவனங்களை நடத்துபவர்கள் தான்.


அதில் செபியோ, அரசோ எந்த ரூபத்தில் சட்டங்களும் விதிகளும் போட்டாலும், ஓட்டையை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிறைய வெளிகள் இருக்கத் தான் செய்கின்றன.



மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்திலே ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் எப்படி எண்ணெய் நிறுவனமான CAIRN நிறுவனத்தை ஆட்டையை போட்டது என்று எழுதி இருந்தோம்.

பார்க்க: முதலீட்டாளர்களை வெளிப்படையாக ஏமாற்றும் வேதாந்தா

எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருக்கும் போது உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான CAIRN வீழ்ந்து இருந்தது.

அந்த சமயத்தில் வேதாந்தா குழுமத் தலைவர் அணில் அகர்வால் தம்மிடம் இருந்த மைனாரிட்டி பங்குகளை வைத்துக் கொண்டு எண்ணெய்க்கும் உலோகத்துக்கும் சம்பந்தம் இல்லாத வேதாந்தா குழுமத்துடன் இணைத்துக் கொண்டார்.

இதற்கு CAIRN நிறுவனத்திடம் அதிகமாக கையில் இருந்த இருந்த பத்தாயிரம் கோடி ரூபாயும் காரணம். அது எல்லா பங்குதாரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் வேதாந்தாவிற்கு முறைகேடாக திருப்பி விட்டு விட்டார்.

வெளிப்படை இல்லாத மேலாண்மையைக் கொண்ட அதே அணில் அகர்வால் தான் இன்று தூத்துக்குடியில் ஜனநாயாகம் தப்பாக பயன்படுத்தப்படுகிறது என்று கூச்சலிடுகிறார்.

போபால் கோர விபத்திற்கு பிறகும் நமது அரசுகள் யாரும் பாடம் கற்றதாக தெரியவில்லை.

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை Copper Smelter பணியை செய்து வருகிறது. அதாவது அலுமினிய மூலப் பொருளை உயர்ந்த வெப்பநிலையில் கொண்டு சென்று அதில் இருந்து பிற உலோக பிரிவு பொருட்களை தயாரிப்பது தான்.

இந்த உயர்ந்த பட்ச வெப்ப நிலை தான் தூத்துக்குடியில் காற்று மாசுபாட்டிற்கும் காரணமாக உள்ளது.

கடந்த இருபது வருடங்களில் அனுமதி இல்லாமல் பல முறை ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டுள்ளது. சுற்று சூழல் விதிகள் முறையாக அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

தமிழக அரசும் இது வரை மூன்று முறை ஆலை இயக்கத்தை தடை செய்து உள்ளது. இதே போல் சென்னை ஐகோர்ட்டும் தடை செய்துள்ளது.

ஆனால் டெல்லி சுப்ரீம் கோர்ட்டோ ஒரே உத்தரவில் எல்லா தடையும் விலக்க செய்து விடுகிறது.

தற்பொழுது தமிழக அரசு தடை செய்தாலும் அது இனி கோர்ட்டில் எந்த அளவிற்கு நிற்கும் என்பது கேள்விக் குறி தான். 

இதிலும் தமிழக அரசு தெளிவாக எந்த காரணங்களை கூறாமல் மொட்டையாக தடை செய்து உள்ளது. சுற்று சூழல் பாதிப்பு என்றால் எவ்வளவு காற்று மாசுபாடு போன்ற தரவுகள் தந்ததாக தெரியவில்லை.

இது மறைமுகமாக வேதாந்தாவிற்கு நீதி மன்றத்தில் வாதாட உதவும் வகையிலே உள்ளது.

வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கொடுத்து வரும் இந்த ஆலையை அணில் அகர்வாலும் எளிதில் மூடுவதாக இல்லை.

டெல்லியில் அவரது லாபியை எந்த அளவிற்கும் பயன்படுத்த முனைவதாகவே தெரிகிறது.

என்னவாக இருந்தாலும், உள்ளூர் மக்களின் ஆதரவில்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதையும் அவர் உணர வேண்டும்.

ஒரு ரீடைல் முதலீட்டாளராக நாம் வேதாந்தா பங்கை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

அப்பொழுது தான் நம்பிக்கையான நிறுவன மேலாண்மையின் முக்கியத்துவத்தை மற்ற நிறுவனங்களும் உணர முடியும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. விளக்கமாகவும் சரியாகவும் உரைத்தீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. சரியான விளக்கம்.அரசியல்வாதிகளுக்கு இறைத்தப்பணத்தில் ஒழுங்கான மாசுக்கட்டுப்பாடு முறையையை செய்திருக்கலாம்.பிசினஸ்லைனோ மனித உயிர்களைக் கண்டு கொள்ளாமல் தாமிரம் பற்றாக்குறையாகிவிடுமே எனக் கவலைப்படுகிறது் ஸ்டெர்லைட் வரும் முன் என்ன செய்தாம்?.இன்று தூத்துக்குடியில் புற்றுநோய் 60%

    பதிலளிநீக்கு