புதன், 7 நவம்பர், 2018

இன்று முஹுரத் ட்ரேடிங் ...

நமக்கு நேற்றே தீபாவளி கோர்ட் உத்தரவுடன் சுபமாக நடந்து விட்ட சூழ்நிலையில் இன்று வட இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.


நாம் நரகாசுரனை அழித்ததற்காக மட்டன் சாப்பிட்டு வெடியோடு கொண்டாடுகிறோம் என்றால்,வட இந்தியர்கள் லக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை போன்று சுத்த சைவ தீப ஒளியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு இந்தியா, ஒரே மத பண்டிகை ஆனால் எத்தனை வேறுபாடுகள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா வாழ்க..!

இன்று பங்குசந்தையில் ஒரு விசேச தினம்.


மற்ற எந்த பங்குசந்தையிலும் இப்படியொரு நிகழ்வு இருக்குமா என்று தெரியவில்லை.

இன்று லட்சுமிக்கான தினம் என்பதால் பண வரவு வேண்டி கொண்டாடப்படும் நாள்.

அதனால் விடுமுறையாக இருந்தாலும் சந்தையை ஒன்றரை மணி நேரம் மட்டும் திறந்து வைப்பார்கள்.

அதில் குஜராத் ஷேட்டுகள், மார்வாடிகள் சில நல்ல பங்குகளை வாங்கி வைப்பது வழக்கம்.

அதனை தங்கள் குழந்தைகளுக்கு, பேரன்கள் பெயரில் ஒரு நீண்ட கால முதலீடாக வைத்து விடுவார்கள்.

இது போன்று நிகழ்வுகள் தான் மார்வாடிகளுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே வியாபர நோக்கம் வரவும் காரணமாகி விடுகிறது.

இன்று பங்குகளை வாங்க மட்டுமே செய்வார்கள். விற்க மாட்டார்கள்.

விற்க கூடாது என்பதால் ட்ரேடர்கள் கூட சந்தையில் இருந்து ஒதுங்கி விடுவார்கள்.

அதனால் ஒரு வேளை சந்தை கூடும். அல்லது சில புள்ளிகள் உயர்வில் ப்ளாட்டாக மேலே எழும். ஆனால் கீழே வர வாய்ப்புகள் மிகவும் குறைவே.

எழும்பிய ஆயில் விலை அடங்கி விட்டது. ரூபாய் மதிப்பும் ஓரளவு நிலை பெற்று வருகிறது.

அடுத்து தேர்தல் முடிவுகள் மட்டும் சாதகமாக அமைந்தால் அடுத்த தீபாவளியில் இழந்த இழப்புகள் அணைத்தும் மறைந்து லாபங்களை கூட காணும் வாய்ப்புகள் அதிகம்.

அதனால் இது முதலீடுகளுக்கான சரியான நேரம் என்றே தோன்றுகிறது.

பிக்ஸ்ட் டெபாசிட் அளவு நம்பிக்கையானதாக இருக்கும் HDFC Bank, L&T, HUL, Asian Paints போன்ற பங்குகளை இந்த முஹுரத் ட்ரேடிங்கிற்காக பரிந்துரை செய்கிறோம்.

பாதுகாப்பானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக