வெள்ளி, 26 அக்டோபர், 2018

வரியை வாரி வழங்க தொடங்கும் இந்தியர்கள்

மத்திய அரசின் செலவுகளுக்கு வரி மூலமே பிரதான வருமானம்.


இது பல வழிகளில் பெறப்பட்டாலும் மூன்றை முக்கியமாக கருதலாம்.



ஒன்று , 
தனிப்பட்ட நம்மை போன்றவர்கள் மாத சம்பளத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு கட்டும் Personal Income Tax.

இரண்டாவது, 
தனிப்பட்ட வியாபாரம் செய்து கிடைத்து வரும் வருமானத்தில் கட்டும் Personal Income Tax.

மூன்றாவது,
நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் கட்டும் Corporate Tax.

இந்த மூன்றும் சேர்ந்து தான் Direct Tax என்று அழைக்கப்படுகிறது.


ஆனால் உண்மையாக வந்து  Direct Tax கட்டுபவர்கள் என்பது இந்தியாவில் மிக குறைவு.

130 கோடி பேர் வாழும் நாட்டில் 50 கோடி பேராவது வருமானம் ஈட்டுகிறார்கள் என்று கருதிக் கொள்வோம். இதில் பாதி பேராவது மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கலாம்.

அப்படி என்றால், 25 கோடி பேராவது வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஆனால் இது வரை வெறும் 3 கோடி நபர்கள் தான் வருமான வரி கட்டி வந்துள்ளார்கள்.

அதனால் தான் அரசு வேறு வழியை நாட ஆரம்பிக்கிறது.

அது தான் Indirect Tax.

விற்கும் பொருட்களில் நம்மை அறியாமல் வரியை கட்ட செய்யும் முறை. தற்போது அது முழுக்க GST வடிவில் மாறி விட்டது.

இது போக, பெட்ரோலிய பொருட்களுக்கு பாதிக்கும் அருகில் என்று உச்சக் கட்டத்தில் உள்ளது.

இந்தியாவில் ஏன் பெட்ரோல் விலை அதிக விலைக்கு விற்கிறது என்று காரணத்தை பார்த்தால் இதுவும் ஒரு முக்கிய காரணம்.

வருமானம் வருபவர்கள் ஒழுங்காக கட்டாததால் அரசு எல்லோர் தலையிலும் அந்த சுமையை இறக்கி வைக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மோடி அரசு எடுத்து வந்த Demonetization, GST போன்ற நடவடிக்கைகள் ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்று சொல்லலாம்.

மோடி அரசு ரூபாய் ஒழிப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை மீது எடுப்பதற்காக என்று தான் சொன்னார்கள்.

ஆனால் மீதும் அணைத்து பணமும் ரிசர்வ் வங்கி கைக்கு வந்து விட்டது. அதனால் கருப்பு பணம் மீட்டு எடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில் வங்கிக்கு வந்த அணைத்தும் வெள்ளையாக மாறி விட்டதால் இனி அதன் பரிவர்த்தனைகளுக்கு வரி கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு மக்களை தள்ளி விட்டது.

அதே போல் ஆதார் வழியாக அணைத்து வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படுவதால் வருமான வரிக்கு அணைத்து கணக்கையும் காட்ட வேண்டிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

இறுதியாக, GST வந்து விட்டதால் நாடு முழுவதும் ஒரே வரி என்பது வியாபாரம் செய்பவர்களையும் எளிதில் கண்காணிக்க உதவுகிறது.

அதனால் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை 3.85 கோடி ரூபாய் வருமானம் வரி கட்டி வந்துள்ளனர். அது தற்போது ஆறு கோடியாக உயர்ந்துள்ளது.

முந்தைய வருடத்தை விட நேரடி வரி வசூல் 18% உயர்ந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இது, நாட்டின் மொத ஜிடிபி வருமானமான 130 லட்சம் கோடியில் ஆறு சதவீதம் என்பது கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவு சாதனையாகும்.

ஒரு நாடு வளரும் நிலையில் இருந்து வளர்ந்த நிலைக்கு மாறும் போது ஏற்படும் ஒரு முக்கிய அறிகுறி இந்த வருமான வரி மாற்றமாகும்.

இந்த நல்ல மாற்றத்தை வரவேற்க வேண்டிய ஒன்றாக நாம் பார்க்க வேண்டும்.

அடுத்து இந்த வருமானத்தை எடுத்து செலவு செய்பவர்கள் அரசியல் வாதிகள். அவர்கள் ஊழல் இல்லாமல் முறையாக செய்ய தொடங்கினால் நாட்டின் பொருளாதார நிலையில் நல்ல மாற்றத்தை நாம் பார்க்கலாம்.

வாழ்த்துகள் இந்தியா!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக